இரத்த சர்க்கரை அளவு கண்காணிப்பில் உணவுத்திட்டமிடல் செயலி
நீரிழிவுப் பாதிப்பிற்கான சிகிச்சை என்பது நீண்ட நெடியது ஆகும். இந்தப் பாதிப்பிற்கு, சில ஆண்டுகள் தொடர்ந்து மருந்துகளை உட்கொள்ளவேண்டி இருக்கும். நாம் ஆரோக்கியமான வாழ்க்கைமுறை, சரியான உணவு, உடற்பயிற்சி மற்றும் சரியான மருந்துமுறைகளைப் பின்பற்றினால் மட்டுமே, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முடியும்.
அதிகக் கார்போஹைட்ரேட் உணவு, போதாத உடற்பயிற்சி, மருந்து மறதி போன்றவை நீரிழிவு மேலாண்மையில் தோல்விக்குக் காரணமாகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியின் புதுவரவாக உள்ள மொபைல் செயலிகள், , ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்துக் கொள்வதன் மூலமாக, நீரிழிவுப் பாதிப்பைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.
நீரிழிவுப் பாதிப்பு நோயாளிகளின் துயர்துடைக்க உதவும் வகையிலான செயலிகள், இங்கு வகைப்படுத்தப்பட்டு உள்ளன.
Wellthy Diabetes
இது செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான செயலி ஆகும். இரண்டாம் வகை நீரிழிவுப் பாதிப்பு உள்ளவர்களுக்காகத் தனிப்பட்ட முறையில் இது வடிவமைக்கப்பட்டு உள்ளது. இது உட்கொள்ளும் உணவு வகைகள், உடற்பயிற்சி அளவுகள், மருத்துவமுறைகள் குறித்த எதிர்கருத்துகளை உடனடியாகத் தெரிவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது. இத்தகைய தரவுகள் சேகரிக்கப்பட்டு, பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டு, அதனை மருத்துவரிடம் பகிர்ந்து கொள்ள உதவுகிறது.
பயனர்களுக்கு இருக்கும் நீரிழிவுப் பாதிப்பு தொடர்பான சந்தேகங்களுக்கு, முன்னணி மருத்துவர்கள் சான்றளித்த பயிற்சியாளர்கள், பதில் அளிக்கின்றனர்.
Life in control
ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பின்பற்றி, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் நோயாளிகளுக்கும், பயிற்சியாளர்களுக்கும், மருத்துவருக்கும் இடையே ஒரு இணைப்பாக, இந்தச் செயலி விளங்குகிறது. எளிதாகப் பின்பற்றும் வகையிலான உணவுமுறைகள், தினசரி சுகாதார இலக்குகள், பயிற்சியாளர்களின் தொடர்ச்சியான அணுகல்கள், நோயாளியின் HbA1Cயின் அளவு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, மருந்து உட்கொள்ளல், இன்சுலின் செலுத்திக் கொள்ளல் உள்ளிட்ட அத்தியாவசிய நிகழ்வுகளை, மருத்துவர்க் கண்காணிக்கும் வகையில், இந்தச் செயலியானது வடிவமைக்கப்பட்டு உள்ளது.
Diabeto
இந்தச் செயலியானது, நீரிழிவுப் பாதிப்பிற்கான ஒரு முழுமையான தீர்வை வழங்குகிறது. சுமார் 30 வெவ்வேறு வகையான குளுகோமீட்டர்களில் இருந்து, புளூடூத் வழியாக, ஸ்மார்ட்போன்களுக்குத் தரவுகளை மாற்றிக்கொள்ள இந்தச் செயலியானது உதவுகிறது. இந்த அம்சத்தின் மூலம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைச் சுயமாகக் கண்காணித்தலை, எளிமையாக்குகின்றது. இந்தத் தரவுகள். கிளவுட் சேவையகத்துடன் இணைக்கப்பட்டு இருப்பதால், எப்போது வேண்டுமானாலும் அணுகும்வகையில் பாதுகாப்பாக உள்ளது.
மேலும் வாசிக்க : DNA அடிப்படையிலான உணவு மற்றும் ஊட்டச்சத்து முறைகள்
Apollo Sugar
நீரிழிவுப் பராமரிப்பு, அதன் தொழில்நுட்பத்தை, மனிதர்களின் பயன்பாட்டு உடன் இணைப்பதை, இந்தச் செயலி நோக்கமாகக் கொண்டு உள்ளது. இதன்மூலம், பயனர்கள் மருந்துகள் குறித்த விவரங்கள், ஆய்வகச் சோதனை முடிவுகளின் அறிக்கைகள் உள்ளிட்டவைகளை எளிதில் பெற முடியும். தேவைப்படும் நேரத்தில், பயிற்சியாளர்களிடம் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். நீரிழிவுப் பாதிப்பு குறித்த விழிப்புணர்வினைப் பெறலாம். தினசரி அடிப்படையிலான சுகாதார அளவீடுகளைக் கண்காணிப்பதன் மூலம் சிறந்த பலன்களை, நோயாளிகள் பெற உதவுகிறது.
Habits Diabetes Coach
நீரிழிவுப் பாதிப்பிற்கு முந்தைய நிலை, இன்சுலின் தொடர்பான சிகிச்சையைத் துவங்குதல், இரண்டாம் வகை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்தச் செயலியானது உடல் எடையை, மிதமான அளவில் குறைக்க உதவுகிறது. வாழ்க்கைமுறையில் சில மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம், பாதிப்பைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கண்காணிப்பு, மற்றும் ஆரோக்கியமான உணவுமுறைகளைப் பரிந்துரைப்பது மட்டுமல்லாது, 4 மாதகால அளவிலான வழிமுறைகளையும் வழங்குகிறது.
உணவுத் திட்டமிடல் செயலிகளின் உதவிகொண்டு, நீரிழிவுப் பாதிப்பு எனும் அரக்கனை வெற்றிக் கொண்டு, நல்வாழ்க்கை வாழ்வீராக…