மனச்சோர்வு இதய நோய்க்கான ஆபத்தை அதிகரிக்குமா?
சர்வதேச அளவில் பல லட்சக்கணக்கான மக்களைப் பாதிக்கும் சுகாதாரக் குறைபாடுகளாக இதய நோய் மற்றும் மனச்சோர்வு அறியப்பட்டு வருகின்றன. இது உடல், உணர்ச்சி, ஆரோக்கியம் உள்ளிட்ட விவகாரங்களில் வேறுபட்டதாக இருப்பினும், இதுதொடர்பான சமீபத்திய ஆய்வுகள், இவைகளுக்கிடையே, நெருங்கிய தொடர்பு உள்ளதை வெளிக்காட்டி உள்ளன.
மனச்சோர்வு என்பது மனம் சார்ந்த பாதிப்பு ஆகும். இது நாள்பட்ட சோகம், நம்பிக்கையற்ற தன்மை, குறைந்த சுயமதிப்பு எனக் குறிப்பிடப்படுகிறது. இது இதய நோய்ப்பாதிப்பிற்கான ஆபத்துக் காரணியாக வரையறுக்கப்பட்டு உள்ளது. இந்தக் கட்டுரையில் இதய நோய்ப் பாதிப்பிற்கும், மனச்சோர்வுக்கும் இடையிலான உறவுநிலையை விரிவாக விளக்கப்படுகிறது.
இருதரப்பு உறவு
இதய நோய் மற்றும் மனச்சோர்வு தொடர்பான ஆய்வுகள், பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த ஆய்வு தொடர்பான கண்டுபிடிப்புகள், இவற்றிற்கிடையேயான தொடர்பை முழுமையாக வெளிக்காட்டுவனவாக உள்ளன. மனச்சோர்வு பாதிப்பு உள்ளவர்களுக்கு இதய நோய்ப்பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகக் கூடுதலாக உள்ளது.
நாள்பட்ட மன அழுத்தம், ஆரோக்கியமற்ற நடத்தைத் தேர்வுகள், உடலியல், நடத்தை மற்றும் உளவியல் ரீதியிலான கூறுகள், இதயநோய்ப் பாதிப்பிற்கு முக்கியக் காரணமாக அமைகின்றன.
பொதுவான மருத்துவக் காரணிகள்
இதய நோய்ப்பாதிப்பு மற்றும் மனச்சோர்வு என இவ்விரண்டு பாதிப்புகளும் பல்வேறு ஆபத்துக் காரணிகளை உள்ளடக்கியதாக உள்ளது. புகைப்பிடித்தல், உடல் செயலற்ற தன்மை, சாதகமற்ற உணவு நடைமுறைகள், பொருள் துஷ்பிரயோகம் உள்ளிட்ட நடத்தை முறைகள் இதய நோய்ப் பாதிப்பு மற்றும் மனச்சோர்வு பாதிப்புகளுக்குப் பொதுவானதாக உள்ளன.
மனச்சோர்வால் பாதிக்கப்பட்ட மக்கள் பொதுமக்களைவிட கரோனரி தமனி நோய், மாரடைப்பு மற்றும் இதயச் செயலிழப்பு ஆகிய நிலைமைகளுக்கு அதிகமாக உள்ளாகின்றனர்.
மனச்சோர்வு பாதிப்பிற்கான பொதுவான அறிகுறிகள்
தொடர்ச்சியான சோகம் அல்லது உறுதியற்ற மனநிலை
பெரும்பாலான நேரங்களில் மிகுந்த சோக நிலையில் இருத்தல், சில முக்கியமான விஷயங்களில் கூட உறுதியான முடிவுகளை எடுக்க முடியாத மனநிலையில் இருத்தல்.
எதிலும் போதிய ஆர்வம் மற்றும் ஈடுபாடு இன்மை
சமூக நடவடிக்கைகள், பொழுதுபோக்குகள், வேலை உள்ளிட்ட நிகழ்வுகளில் போதிய ஆர்வம் மற்றும் ஈடுபாடு இல்லாத நிலை.
பசியின்மை மற்றும் உடல் எடையில் மாற்றங்கள்
பசியின்மை உணர்வின் மூலம், உடல் எடை இழப்பு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
உறக்கப் பாதிப்பு
போதிய அளவிலான உறக்கம் இல்லாத நிலை அல்லது அதிகப்படியான உறக்க நிகழ்வானது, உங்கள் வழக்கமான உறக்க அட்டவணையில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.
உடலில் போதிய சக்தி இல்லாத நிலை
உடலிற்குப் போதுமான ஓய்வு கிடைத்துவிட்ட போதிலும், தொடர்ச்சியான சோர்வு மற்றும் போதிய அளவிலான சக்தி இல்லாத நிலையே நிலவுதல்.
கிளர்ச்சி அல்லது எரிச்சல் நிலை
மிகச்சிறிய விஷயங்களுக்குக் கூட அதிகளவில் வருத்தப்படுவீர்கள். இது மனதிற்குள் கிளர்ச்சி அல்லது எரிச்சல் நிலையை உருவாக்குவதாக அமையும்.
மரணம் அல்லது தற்கொலைப் பற்றிய எதிர்மறை எண்ணங்கள்
மரணம், இறப்பு, தற்கொலைக் குறித்த எதிர்மறை எண்ணங்கள், மீண்டும் மீண்டும் மனதில் தோன்றுதல். இதன்காரணமாக, எப்போதும் மனதில் இனம்புரியாத பய உணர்வுடன் இருத்தல்.
மனச்சோர்வு பாதிப்பிற்கு மருத்துவரீதியிலான சிகிச்சை என்ன?
மனச்சோர்வு பாதிப்பை நிர்வகிப்பது என்பது ஒவ்வொரு நோயாளிக்கும், சரிசெய்யப்பட்ட பல்வேறு முறைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறைகளை மேற்கொள்வதைக் குறிப்பிடுகிறது. இந்தப் பாதிப்பிற்கான பொருத்தமான சிகிச்சையை அடையாளம் காண மனநல நிபுணரின் ஆலோசனைகளைப் பெறுவது முக்கியம் ஆகும்.
நோயறிதல் மற்றும் தொழில்முறை மதிப்பீடு
மனச்சோர்வு பாதிப்பிற்கான சிகிச்சை என்பது மனநல மருத்துவர், உளவியல் நிபுணர் அல்லது உரிமம் பெற்ற சிகிச்சையாளர் உள்ளிட்ட தகுதிவாய்ந்த மனநல நிபுணரை அணுகுவதன் மூலம் சிகிச்சை நிகழ்வுகள் துவங்குகின்றன.
உளவியல் சிகிச்சை ( பேச்சுச் சிகிச்சை) – அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சை (CBT)
மனச்சோர்வைச் சமாளிப்பதற்கான மிகவும் பயனுள்ள மனோதத்துவ நுட்பங்களில் CBT எனப்படும் அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சையானது முதன்மையானதாகக் கருதப்படுகிறது. இது மக்களுக்கு மனச்சோர்வை உண்டாக்கவல்ல எதிர்மறைச் சிந்தனை முறைகள் மற்றும் அவற்றின் செயல்பாடுகளைக் கண்டறிந்து அதற்குரிய பயிற்சிகளை மேற்கொள்ள உதவுகிறது.
தனிப்பட்ட வகையிலான சிகிச்சை (IPT)
ஒருவருக்கொருவர் இடையிலான தனிப்பட்ட உறவுகள் மேம்படுத்துவதையும் வாழ்க்கையில் ஏற்படும் அழுத்தங்களைச் சமாளிப்பதை இலக்காக, IPT எனப்படும் தனிப்பட்ட வகையிலான சிகிச்சைக் கொண்டு உள்ளது. இது மனச்சோர்வுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. மனோதத்துவ சிகிச்சை, CBT எனப்படும் அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகள் தேவைப்படுபவர்களுக்கு, இந்தச் சிகிச்சைமுறைப் பேருதவி புரிகிறது.
மேலும் வாசிக்க : சைலன்ட் ஹார்ட் அட்டாக் – சிகிச்சை முறைகள்
வாழ்க்கைமுறை மாற்றங்கள்
வழக்கமான உடற்பயிற்சி
நடைப்பயிற்சி, ஜாக்கிங், யோகா உள்ளிட்ட உடற்பயிற்சிகள் மேற்கொள்வதைத் தினசரி வழக்கமாகக் கொள்வதன் மூலம், மனச்சோர்வின் அறிகுறிகளில் இருந்து விரைவில் நிவாரணம் பெற இயலும்.
ஆரோக்கியமான உணவுமுறை
காய்கறிகள், பழ வகைகள், முழுத் தானியங்கள், மெலிந்த புரதங்கள் கொண்ட சரிவிகித உணவுமுறையானது, உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாது, மனச்சோர்வு பாதிப்பிற்கும் உரிய நிவாரணம் அளிக்கிறது.
உறக்கச் சுகாதாரம்
தினசரி உறக்க அட்டவணையை நிறுவுதல், படுக்கை அறைக்குச் செல்வதற்கு முன் தளர்வு முறைகளைச் செயல்படுத்துதல் மற்றும் படுக்கை அறை வசதியாக இருப்பதை உறுதி செய்வதன் மூலம், உறக்கத்தின் தரத்தையும் மனநிலையையும் மேம்படுத்த உதவும்.
ஆல்கஹால் மற்றும் போதை மருந்துகளைத் தவிர்க்க வேண்டும்.
ஆல்கஹால் உள்ளிட்ட மதுப்பழக்கம், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களைத் தவிர்ப்பதன் மூலம், மனச்சோர்வுப் பாதிப்பிற்குத் திறம்பட சிகிச்சை அளிக்க இயலும் இல்லாவிடில், மனச்சோர்வு அறிகுறிகள் மேலும் தீவிரமடையும்.
மனந்தெளிநிலை மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கும் நுட்பங்கள்
மனந்தெளிநிலைத் தியான நடைமுறைகள், உதரவிதான சுவாச நுட்பமுறைகள், தசைத் தளர்வு நடைமுறைகள், மன அழுத்தத்தைக் குறைக்கவல்ல உத்திகள் போன்றவற்றை மேற்கொள்வதன் மூலம், மனச்சோர்வு அறிகுறிகளை எளிமையாக்கும். இது தனிநபர்களுக்கு மன அழுத்தத்தைச் சமாளிக்க உதவுகின்றன.
கண்காணிப்பு செய்தல்
மனநலப் பராமரிப்பு சிகிச்சையின் முக்கிய நோக்கமானது, முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கும், உடல் செயல்பாடுகளுக்கு ஏற்ப சிகிச்சை முறைகளை மேற்கொள்வதற்கு உதவுகிறது. மருந்துகள் ஏற்படுத்தும் மோசமான விளைவுகளையும் அதுதொடர்பான சிக்கல்களையும் களைய, மனநல நிபுணருக்கு உதவுகிறது.
மனச்சோர்வுப் பாதிப்பினை ஏற்படுத்தும் அறிகுறிகளைக் கவனமாகக் கையாண்டு, இதய நோய்ப்பாதிப்பினைத் தவிர்த்து, ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வோமாக..