உடல் ஆரோக்கியம் மேம்பாடு நிகழ்வில் மரபணு சோதனை
மனிதர்களுக்கு, டி.என்.ஏ.வின் அடிப்படையிலான நோய்ப்பாதிப்புகள் ஏற்படுத்துவதற்கான அபாயங்களை முன்கூட்டியே கண்டறிவதற்கு , மரபணுச் சோதனைகள் உதவுகின்றன. மரபணுச் சோதனை மூலம் நமது டி.என்.ஏ. விவரங்களையும், அதன் வழி நமது குணாதிசயங்களையும் அறிய முடியும்.உடல் எடை அதிகரிப்பு அல்லது இழப்பு, வளர்சிதை மாற்றம், உணவு விருப்பங்கள் உள்ளிட்ட தகவல்களை, மரபணுச் சோதனையின் மூலம் அறிய முடியும். மரபணுச் சோதனை மூலம் உணவுமுறை, ஊட்டச்சத்து, தோல் பராமரிப்பு போன்றவற்றில் உங்களுக்கு ஏற்ற தேர்வுகளை அறிய முடியும்.
மரபணுச் சோதனையானது ஏன் தேவை?
உங்கள் உடலில் உள்ள ஜீன்கள் ஒருபோதும் பொய் சொல்லாது என்பதால், மரபணுச் சோதனையின் மூலம் அறியப்படும் தகவல்கள், 100 சதவீதம் உண்மைத்தன்மையுடன் உள்ளன. உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த தகவல்களை, மரபணுச் சோதனையின் மூலம் அறிய முடியும். இதன்மூலம், உங்களது வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக் கொள்வதற்கும், தனிப்பட்ட வாழ்க்கைமுறையை அமைத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை வழங்குகின்றது.
உடல்நலம்
ஊட்டச்சத்து முறைகள்
உடற்தகுதி
பழக்கவழக்கங்கள்
உள்ளிட்ட விவரங்களை, மரபணுச்சோதனையின் மூலம் நாம் அறிந்து கொள்ள முடியும்.
மரபியலின் அறிவியல் பின்னணி
அடினைன், தையமின், குவானைன் மற்றும் சைட்டோசின் உள்ளிட்ட வெவ்வேறு வகையான நியூக்ளியோடைடுகளால், ஜீன்கள் கட்டமைக்கப்பட்டு உள்ளன. இந்த நியூக்ளியோடைடுகளில் ஏதேனும் ஒன்றில் மாற்றங்கள் ஏற்படுமாயின், அது, ஒற்றை நியூக்ளியோடைடு பல்லுருத் தோற்றங்கள் (SNP) என்று குறிப்பிடப்படுகிறது. இந்த மாற்ற நிகழ்வானது, மரபணுக் குறிப்பான் ஆகவும் செயல்படுகிறது. இந்தச் சிறிய அளவிலான வேறுபாடுகள், ஜீனோடைப்பிங் உள்ளிட்ட தொழில்நுட்பங்களின் உதவியுடன் அடையாளம் காணப்படுகின்றன. உங்களது குணாதிசய மாற்றங்களுக்குக் காரணமாக அமையும் இத்தகைய ஜீன் மாறுபாடுகளை, SNP மூலம் அடையாளம் காண உதவும் மரபணுச் சோதனையானது, உமிழ்நீர் மாதிரியில் உள்ள டி.என்.ஏ.வைக் கொண்டு மேற்கொள்ளப்படுகிறது.
மரபணுச் சோதனையை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டுமா?
மரபணுச் சோதனைகள் பல்வேறு வகையினதாக இருப்பினும், அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு நோக்கத்தினைக் கொண்டது ஆகும். மரபணு அடிப்படையிலான முன்கணிப்புகள், கருத்தரிக்கும் காலத்திலேயே தீர்மானிக்கப்பட்டு விடுவதால், பிற்காலத்தில் அது மாற்றம் பெறுவதற்கான வாய்ப்பு அறவே இல்லை. எந்த வகையிலான மரபணுச் சோதனையாக இருந்தாலும், உங்களது மாதிரியை ஒருமுறை அளித்தாலே போதும். ஒரே வகையான மரபணுச் சோதனையை, மீண்டும் மீண்டும் செய்யத் தேவையில்லை.
மரபணுச் சோதனையில் பயன்படுத்தப்படும் மரபணுக் குறிப்பான்களைக் கொண்டு, மீண்டும் மீண்டும் சோதனைச் செய்யும் போது, முடிவுகள் மாற வாய்ப்பில்லை. மரபியல் தொடர்பான ஆராய்ச்சிகளின் விளைவாக, மரபணுக் குறிப்பான்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. மரபணுச் சோதனைக்கான தொழில்நுட்பம், தொடர்ந்து மேம்பாடு அடைந்து வருகிறது.
மேலும் வாசிக்க : இயல்பான மற்றும் அசாதாரண நடத்தைகள்
மரபணு சோதனை எளிதானதா?
மேம்பட்ட தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான மரபணுச் சோதனையானது, உமிழ்நீரின் மாதிரியைக் கொண்டு மேற்கொள்ளப்படும் எளிமையான செயல்முறை ஆகும். பயனர்கள், தங்களது மாதிரிகளை, தாங்களாகவே சேகரித்து அஞ்சல் வழியாகவும் அனுப்ப முடியும். இதற்கு மருத்துவரின் பரிந்துரையானது தேவையில்லை. இருக்கும் இடத்திலேயே உட்கார்ந்து கொண்டு, நோய்ப்பாதிப்புகளுக்குக் காரணமான மரபணுச் சோதனையை மேற்கொண்டு, அதற்கான முடிவுகளை அறிந்து கொள்ள இயலும்.
தனிப்பயனாக்கம் எவ்வாறு சாத்தியமாகின்றது?
மரபணுக்களானது, உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தவல்லதாக உள்ளன. உடல்நலப் பரிசோதனை முறைகள், உகந்த வாழ்க்கைமுறை உள்ளிட்டவைகளை விளக்குவதற்கு, நன்கு பயிற்சி பெற்ற மரபணு ஆலோசகரின் தேவை இன்றியமையாததாக உள்ளது. மரபணுச் சோதனையின் முடிவுகளுக்கு ஏற்ப, வாழக்கைமுறையில் தேவையான மாற்றங்களைச் செயல்படுத்திக் கொள்ளலாம். மரபணுச் சோதனையின் முடிவுகளின் அடிப்படையில், மருத்துவர். ஊட்டச்சத்து நிபுணர், உடற்பயிற்சி நிபுணர்களின் பரிந்துரைக்கு ஏற்ப, வாழ்க்கைமுறையை அமைத்துக் கொள்ள முடியும்.
மரபணுச் சோதனையின் மூலம், எத்தகையப் பாதிப்புகளைக் கண்டறிய முடியும்?
எலும்பு மற்றும் மூட்டு இணைப்புகளில் ஏற்படும் பாதிப்புகள்
கீல்வாதம் மற்றும் முடக்குவாத பாதிப்புகள்
மார்பகப் புற்றுநோய், எண்டோமெட்ரியல் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், புராஸ்டேட் புற்றுநோய் உள்ளிட்ட புற்றுநோய் வகைகள்
கரோனரி தமனி நோய்கள், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, ஹைபர்டிரைகிளிசரைடெமியா, பக்கவாதம்
வளர்சிதை மாற்ற குறைபாடுகள், ஹைப்போதைராய்டிசம், உடல் பருமன், இரண்டாம் வகை நீரிழிவுப்பாதிப்பு
குளுகோமா போன்ற கண் சார்ந்த பாதிப்புகள்
இரைப்பைச் சார்ந்த குறைபாடுகளான செலியாக் நோய், கிரோன் நோய், அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சி
மகப்பேறியல் பாதிப்புகள் சினைப்பை நோய்க்குறி, எண்டோமெட்ரியோசிஸ்
நரம்பியல் சார்ந்த பாதிப்புகள் – அல்சைமர் எனப்படும் மறதி நோய், ஒற்றைத் தலைவலி, பார்கின்சன் நோய்
நுரையீரல் அடைப்பு நோய் உள்ளிட்ட சுவாசப் பாதிப்புகள்
சோரியாசிஸ் உள்ளிட்ட தோல் பாதிப்புகள்
உள்ளிட்ட பாதிப்புகளை, மரபணுச் சோதனையின் மூலம் முன்கூட்டியே அறிய இயலும்.
உங்கள் உடலுக்கு ஏற்ற வகையிலான வாழ்க்கைமுறை மாற்றத்திற்கு, மரபணு பரிசோதனையை உடனடியாக மேற்கொள்வீர். ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வீர்.