யோகா உங்கள் மூளையைச் சாதகமாக மாற்ற உதவுகிறதா?
உங்கள் மூளையை மறுசீரமைக்க அல்லது உங்களுக்குச் சாதகமாக மாற்றி அமைக்க, யோகாப் பயிற்சி உதவும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நீங்கள் அப்படி உணர்ந்தீர்கள் என்றால், அது உங்களுக்கு மகிழ்ச்சி உணர்வை அளிப்பது மட்டுமல்லாது, உங்கள் மூளையிலும் வேதியியல் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. மூளை மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நீங்கள் யோகாப் பயிற்சியில் கைதேர்ந்தவராகத் திகழ வேண்டும் என எவ்வித அவசியமுமில்லை. சில சாதாரணமான, எளிய வகையிலான யோகா ஆசனங்களைச் செய்துவந்தாலே போதுமானது ஆகும்.
யோகாப் பயிற்சியானது, உங்கள் மூளையை எவ்வாறு உங்களுக்குச் சாதகமாக மாற்றி அமைக்கிறது என்பது குறித்து இந்தக் கட்டுரையில் விரிவாகக் காண்போம்.
மூளையின் சாம்பல் நிறப் பகுதியின் பரப்பை அதிகரிக்கும் யோகா
கிரே மேட்டர் / சாம்பல் நிறப் பகுதி
மனிதனின் மூளையில் 60 சதவீதம் வெண்மைநிறப் பகுதியும், 40 சதவீதம் சாம்பல் நிறப் பகுதியும் உள்ளது. இவை இரண்டும் அதற்கே உரித்தான வெவ்வேறு செயல்பாடுகளைத் தன்னகத்தே கொண்டு உள்ளன.
கற்றல் திறன், நினைவுத் திறன் உள்ளிட்டவைகளுக்கு, மூளையின் சாம்பல் நிறப் பகுதியே, முக்கியக் காரணமாக அமைகின்றன. தசைகளின் கட்டுப்பாடு, சுய விழிப்புணர்வு, பார்வை, கேட்டல், வாசனை நுகர்தல், தொடுதல் உணர்வுகளுக்கு, மூளையின் சாம்பல் நிறப்பகுதியின் பங்களிப்பு அளப்பரியது ஆகும்.
மூளையின் செல்களுக்கு இடையிலான இணைப்பே, வெண்மைப் பகுதி ஆகும். இது மூளையில் இருந்து உடலின் மற்ற பகுதிகளுக்குத் தேவையான சிக்னல்களை அனுப்பவும், உடல் பாகங்களில் இருந்து சிக்னல்களைப் பெறுவதற்கான வலையமைப்பாகச் செயல்படுகிறது. மூளையின் வெண்மைப் பகுதியானது, மனதின் எண்ணங்களையும், உடலின் இயக்கங்களையும் ஒருங்கிணைப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது.
யோகா எவ்வாறு சாம்பல் நிறப் பகுதியின் பரப்பை அதிகரிக்கிறது?
உடல் தோரணைகள் மற்றும் சுவாசத்தின் நிலையான ஒத்திசைவு காரணமாக, மூளையின் சாம்பல் நிறப் பகுதியானது தூண்டப்படுகிறது. இதன்மூலம், அதன் அடர்த்தியானது அதிகரிக்கிறது.
மூளையின் சாம்பல் நிறப் பகுதியின் பரப்பு அதிகரிப்பதனால்
- மன ஆற்றல் அதிகரிக்கிறது
- அறிவாற்றல் சக்திகளை மேம்படுத்துகிறது
- மன அழுத்தத்தைக் குறைக்கிறது
- நடத்தையை மேம்படுத்துகிறது
- மூளையின் வலது மற்றும் இடது பக்கங்களை ஒத்திசைக்கிறது
- உளவியல் சமநிலையைப் பேணிக் காக்கிறது
- சிந்திக்கும் திறனை அதிகரிக்கிறது
- படைப்பாற்றலை அதிகரிக்கிறது
- முடிவெடுக்கும் திறனை ஊக்குவிக்கிறது
- ஈடுபாடு, கவனம் மற்றும் செறிவை மேம்படுத்துகிறது
- தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துகிறது உள்ளிட்ட நன்மைகள் விளைகின்றன.
மூளையின் மடிப்புகளை அதிகரிக்கும் யோகா
மூளையின் ஸ்கேன் பட சித்தரிப்பில், நாம் காண்பவையே, மூளையில் உள்ள மடிப்புகள் ஆகும். மடிப்புகள், பார்ப்பதற்குச் சுருக்கங்களைப் போன்று காட்சி அளிக்கின்றன. இந்த மடிப்புகள், கைரி (Gyri) என்று அழைக்கப்படுகின்றன. ஞாபகச் சக்தி, மொழி அறிதல் உள்ளடக்கிய அறிவாற்றல் சார்ந்த நிகழ்வுகளுக்கு, இந்தக் கைரிகளின் பங்கு இன்றியமையாததாக உள்ளது. மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த, மடிப்புகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன.
யோகா எவ்வாறு உதவுகிறது?
யோகாப் பயிற்சியானது, உடல், மனம் சார்ந்த அம்சங்களைத் தனக்குள்ளே உள்ளடக்கியதாக உள்ளது. யோகாப் பயிற்சியில் ஆசனங்கள், சுவாச வீதத்தை அதிகரிக்க உதவும் பிராணாயாமங்கள், தியான பயிற்சிகள் உள்ளிட்டவை அடங்குகின்றன.
நீங்கள் யோகாப் பயிற்சியை மேற்கொள்ளும்போது, அது மூளையைச் சென்றடையும் போது, தியான உணர்வானது, மூளையில் உள்ள மடிப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கிறது. நீண்ட காலமாகத் தியான பயிற்சியை மேற்கொண்டவர்களின் மூளைப்பகுதியின் MRI ஸ்கேன் படத்தை ஆய்வு செய்தனர். இதை தியான பயிற்சி மேற்கொள்ளாதவர்களுடன் ஒப்பிடும்போது, தியானப்பயிற்சி செய்பவர்களின் மூளையில் அதிக மடிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டது. இது மூளையின் நியூரோபிளாஸ்டிசிட்டியின் விளைவாக ஏற்பட்டு இருக்கக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
உங்கள் நரம்பியல் அமைப்பு பல செயல்பாடுகளை நிர்வகிக்கிறது. இதில் மொழி, பகுத்தறிவு, ஞாபகச் சக்தி மற்றும் தன்னிச்சையான செயல்பாடுகள் அடங்கும். கைரிஃபிகேஷனில் ஏற்படும் மேம்பாடு நிகழ்வானது, சிறந்த செயல்பாடு மற்றும் விரைவான செயலாக்கத்தில் முக்கியப்பங்கு வகிக்கிறது.
மேலும் வாசிக்க : மூளையை மறுசீரமைக்கும் நினைவாற்றல் நடைமுறைகள்
மன அழுத்தம், பதட்டத்தைக் குறைத்து மூளையை அமைதிப்படுத்தும் யோகா
நீங்கள் யோகாப் பயிற்சி மேற்கொள்ளும்போது, உங்கள் மூளையின் இரண்டு முக்கியப் பகுதிகளும் அதிகளவில் தளர்த்தப்படுகின்றன. இதன்காரணமாக, நீங்கள் நன்றாக ஓய்வெடுக்க முடிகிறது.
மூளையின் முன்மடல்
மூளையின் முன் மடல் பகுதியானது, மிகவும் மேம்பட்ட பகுதி ஆகும். இந்தப் பகுதியானது, சிந்தனை, திட்டமிடல், பகுத்தறிவு உள்ளிட்ட நிகழ்வுகளுக்குக் காரணமாக அமைகின்றன. இதுமட்டுமல்லாது சுய விழிப்புணர்வு மற்றும் உணர்ச்சிகளின் ஒழுங்குமுறையிலும் முக்கியப்பங்கு வகிக்கிறது. நீங்கள் அசாதாரண சூழ்நிலை அல்லது சங்கடத்தை எதிர்கொள்ளும்போது, மூளையின் இந்தப் பகுதியானது தூண்டப்படுகிறது. யோகாப் பயிற்சி மேற்கொள்ளும்போது, மூளையின் முன் மடல் பகுதிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அது தளர்வுநிலைக்குக் கொண்டு செல்லப்படுகிறது.
உச்சி மண்டையில் உள்ள மடல்
இந்தப் பகுதியானது, பெருமூளை அரைக்கோளத்தின் நடுப்பகுதியாக விளங்குகிறது. மூளையின் இந்தப் பகுதி, உடலின் ஐந்து புலன்களில் இருந்தும் வரும் அனைத்துத் தரவுகளையும் கையாளுகிறது. இது உங்களைச் சுற்றி நிகழும் காட்சிகள், ஒலிகள் உள்ளிட்டவைகளைப் பகுப்பாய்வு செய்கிறது. நாம் மேற்கொள்ளும் செயல்பாடுகளின் அளவை, இந்த மடல் பகுதியே தீர்மானிக்கிறது. இந்த மடலின் செயல்பாட்டை, யோகா எளிதாக்குகிறது.
இந்த மடல் பகுதியானது, உங்களைப் பாராசிம்பேடிக் நரம்பு மண்டலத்தைப் பேணிக்காத்து, அட்ரீனலின் மற்றும் கார்டிசோல் ஹார்மோன்களின் செயல்பாட்டைத் தூண்டி, மன அழுத்தத்தைக் குறைக்கிறது. நீங்கள் மன அழுத்தத்தை உணரும்போது, அது மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் ஹார்மோன்களை வெளியிடுகிறது. இந்த ஹார்மோன்கள், உங்களை எச்சரிக்கையாக இருக்க உதவுகிறது. இதயத்தை வேகமாகத் துடிக்க வைத்து, அதன்மூலம், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. இதன்மூலம், ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது.
மன அழுத்தம் போன்ற உடலுக்கு ஆபத்தான நிகழ்வுகள் ஏற்படும்போது, உங்களைப் பாதுகாத்துக் கொள்ள, இந்த உச்சிமண்டையில் உள்ள மடல் பகுதியானது, உங்களைத் தயார்படுத்துகிறது.
நீங்கள் பரபரப்பான வாழ்க்கைமுறையை மேற்கொள்பவராக இருப்பின், நீங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளன. இதன்காரணமாக, நீங்கள் ஆரோக்கியக் குறைவிற்கு உள்ளாகும் ஆபத்து அதிகம். அட்ரீனலின், கார்டிசோல் போன்ற ஹார்மோன்கள், உடலின் பல பகுதிகளில் வெவ்வேறு நிகழ்வுகளைத் தூண்டி, மன அழுத்த பாதிப்பைச் சமாளிக்க உதவுகிறது. மன அழுத்த பாதிப்பிற்கு உரிய சிகிச்சையை, சரியான நேரத்தில் மேற்கொள்ளாவிடில், அது இதயப் பாதிப்புகள். ஹைபர்டென்சன் எனப்படும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட காரணமாக அமைகின்றன.
இந்த உடல் பாதிப்புகளை மாற்றி அமைக்க, யோகாப் பயிற்சி பேருதவி புரிகிறது. வெறும் 12 நிமிடங்கள் கால அளவிலான யோகாப் பயிற்சியானது, வீக்க உணர்வைக் குறைக்கவும், உயர் ரத்த அழுத்தம், இதயப் பாதிப்புகள், நீரிழிவு நோய்ப்பாதிப்புகள் உள்ளிட்ட வாழ்க்கைமுறைத் தொடர்பான பாதிப்புகளைக் கட்டுப்படுத்த உதவுவதாகக் கண்டறியப்பட்டு உள்ளது.
யோகா மற்றும் பதட்டம்
கவலை, மன அழுத்த பாதிப்புடன் நெருக்கமான தொடர்பு கொண்டது ஆகும். மன அழுத்தம் என்பது அச்சுறுத்தல் நிகழ்வாக, உங்கள் உடல் உருவாக்கும் பதில்வினை ஆகும். இந்தச் சூழலை, நாம் கடந்துவிட்டால், மன அழுத்த பாதிப்பானது கட்டுப்படுத்தப்படும். அதிர்ச்சி, மூளை வேதியியல், சுற்றுச்சூழல் தாக்கங்கள், மரபியல் மாற்றம் உள்ளிட்ட காரணிகளாலும், மன அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
தொடர்ந்து கவலைப்படுதல், அமைதியற்றதாக உணர்தல், அடிக்கடி மற்றும் எளிதாகத் திடுக்கிடுதல், எதிலும் போதிய அளவிற்குக் கவனம் செலுத்த இயலாத நிலைமை, உறக்க நிகழ்வில் குறைபாடுகள் உள்ளிட்டவை, பதட்டத்தின் பொதுவான அறிகுறிகளில் முதன்மையானவைகள் ஆகும்.
பதட்டத்தைத் தணிப்பதில் யோகாவின் பங்கு
யோகாப் பயிற்சியானது, மூளையில் சாம்பல் நிறப் பகுதிகளின் பரப்பை அதிகரிக்கும் அதே நேரத்தில், மூளையின் மற்ற பகுதிகளில் எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்த தவறுவதில்லை. மூளையின் செய்தி செயலாக்க மையமாகத் திகழும் அமிக்டாலா பகுதி, உடலின் பல்வேறு உறுப்புகள் மற்றும் பகுதிகளில் இருந்து செய்திகளைப் பெறுகிறது. பின்னர் அவற்றைச் செயலாக்குகிறது. இது நீங்கள் உங்கள் உணர்ச்சிகளுக்கு எவ்வாறு எதிர்வினை ஆற்றுகிறீர்கள் என்பதில் முக்கியப் பங்கினை வகிக்கிறது. இந்த உணர்ச்சிகளில் மிக முக்கியமானது பயம் அல்லது பதட்ட உணர்வு ஆகும். நீங்கள் மேற்கொள்ளும் செயல்களில் எதிர்கொள்ள இருக்கும் சிக்கல் அல்லது அச்சுறுத்தலை நினைத்தவுடனேயே நீங்கள் பதட்டம் அடைகிறீர்கள் அல்லது பயம் கொள்கிறீர்கள்.
பயம் அல்லது பதட்டத்தை நிர்வகிக்க உதவும் ஆசனங்கள் கீழே பட்டியலிடப்பட்டு உள்ளன.
- உட்கார்ந்த நிலையில் முன்னோக்கி வளைந்து மேற்கொள்ளப்படும் பஸ்சிமோட்டனாசனம்
- தோள்பட்டையை நிலையாகக் கொண்டு செய்யப்படும் சர்வாங்காசனம்
- கலப்பை வடிவத்தில் இருந்தவாறு மேற்கொள்ளப்படும் ஹலாசனம்
- பால வடிவில் நின்று செய்யப்படும் சேது பந்தாசனம்
- தேனீக்களின் சுவாசத்தை ஒத்த பிரமாரி பிராணாயாமம்
- மாற்று நாசி முறையில் சுவாசத்தை மேற்கொள்ளும் அனுலோம் வொலோம் பிராணாயாமம்
யோகாப் பயிற்சியானது, பெரும்பாலும் நீட்சி மற்றும் பிற சிக்கலான செயல்பாடுகளை உள்ளடக்கிய தொடர்ச்சியான ஆசனங்களாகத் திகழ்கின்றன. இந்தப் பயிற்சியின் நன்மைகள் பெரும்பாலும், உடல் நலன் சார்ந்தவைகளாகவே உள்ளன. இருந்தபோதிலும், யோகா மேற்கொள்வதினால் கிடைக்கும் பலன்கள், தொலைநோக்குத் திட்டங்களாக உள்ளன.
யோகாப் பயிற்சியில் இடம்பெற்று உள்ள ஆசனங்கள், சுவாசம் மற்றும் தியான பயிற்சிகள் உள்ளிட்டவைகளின் கலவையானது, மூளையில் கட்டமைப்பு மாற்றங்களை உருவாக்குகின்றன. இது உங்கள் மூளையின் சில பகுதிகளை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ காரணமாகிறது. அறிவாற்றல், உணர்ச்சிகள், மன அழுத்தம், பதட்டம் உள்ளிட்ட காரணிகள், உங்கள் செயலாக்கும் விதத்தைப் பாதிக்கிறது. இவை அனைத்தும் மகிழ்ச்சியாக மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ உதவுகிறது.
மேற்கண்ட வழிமுறைகளைக் கவனமாகப் பின்பற்றி, யோகாப் பயிற்சியானது, மூளையின் கட்டமைப்பை மாற்றி அமைத்து, ஆரோக்கியமான மற்றும் வளமான நல்வாழ்க்கை வாழ வழிவகைச் செய்வோமாக…