கொலஸ்ட்ரால் குறித்த உண்மைகளை அறிவோமா?
கொழுப்புக்கும், கொலஸ்டிராலுக்கும் உள்ள வித்தியாசம் சிறிய அளவு தான் என்றபோதிலும், பெரும்பாலானோர், அதைப் பெரிய அளவில் குழப்பிக் கொள்கின்றனர். கொழுப்பு என்பது உணவின் முக்கியமான அங்கமாக உள்ளது. இது உடல் செயல்பாடுகளுக்கு இன்றியமையாததாக உள்ளது. கொலஸ்ட்ரால் என்பது உடலின் வளர்சிதை மாற்றத்திற்குத் தேவையான ஒரு அத்தியாவசிய கரிம மூலக்கூறு என வரையறுக்கப்படுகிறது.
கொலஸ்ட்ரால் பல நோய்களுக்குக் காரணமாகிறது. இதில் நீரிழிவு, இதய நோய்ப் பாதிப்புகள், உடல் பருமன் ஆகியவை அடங்கும். கொலஸ்ட்ரால் தொடர்பான பல்வேறு எதிர்மறையான கருத்துகள் புழக்கத்தில் உள்ள நிலையில், அதுதொடர்பான உண்மைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இந்தக் கட்டுரையில், கொலஸ்ட்ரால் குறித்த கட்டுக்கதைகள் மற்றும் அதன் உண்மைத்தன்மையை விரிவாகத் தெரிந்து கொள்ள உள்ளோம்.
எல்லாக் கொலஸ்ட்ராலும் உடல்நலத்திற்குத் தீங்கானது
இது முற்றிலும் தவறான தகவல் ஆகும். சில வகைக் கொலஸ்ட்ரால்கள், தீங்கு விளைவிக்கும்போதிலும், சில கொலஸ்ட்ரால்கள், உடல் ஆரோக்கியத்தில் முக்கியப்பங்கு வகிக்கின்றன.
கல்லீரலில் உற்பத்தியாகும் கொழுப்புப் போன்ற பொருளே கொலஸ்ட்ரால் ஆகும். இது உடலின் புதிய செல்கள், வைட்டமின்கள், ஹார்மோன்கள் உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
LDL எனப்படும் குறைந்த அடர்த்தி கொண்ட கொழுப்புப் புரதமானது, ரத்த நாளங்களின் சுவர்களில் அடைப்பு ஏற்படுத்தி ரத்த ஓட்டத்தைத் தடைசெய்வதால், இது கெட்ட கொழுப்பு என்று குறிப்பிடப்படுகிறது.
HDL எனப்படும் நல்ல கொழுப்பானது, ரத்த ஓட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் கெட்ட கொழுப்பை அகற்றி, ரத்த ஓட்டத்தைச் சீராக்குகின்றன. எனவே, நம் உடலுக்குக் கெட்ட கொழுப்பை விட, நல்ல கொழுப்பே அதிகம் தேவைப்படுகின்றன.
கொலஸ்ட்ரால், டிரைகைளிசரைடுகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது ஆகும். டிரைகிளிசரைடுகள் என்பவை, ரத்தத்தில் காணப்படும் ஒரு வகைக் கொழுப்பு ஆகும். இவைகள் உடலின் செயல்பாடுகளுக்குப் போதுமான அளவிற்குப் பயன்படுத்தாதபோது, ரத்தத்தில் இதன் அளவு அதிகரிக்கும். அதிகரித்த இந்த டிரைகிளிசரைடுகள், தமனிகளைக் கடினப்படுத்தி, கொழுப்பு தொடர்பான பாதிப்புகளை உடலில் ஏற்படுத்துகின்றன.
உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பின் நம்மால் நோயை உணர முடியும்
உடலில் ஆரோக்கியமற்ற கொழுப்பின் அளவு அதிகரிப்பதால் மட்டும், அதன் அறிகுறிகள் வெளியில் தெரிந்துவிடுவது இல்லை. மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்வரை, உங்கள் உடலில் ஆரோக்கியமற்ற கொழுப்பு படிந்திருப்பதையே, உங்களால் கண்டறிய முடியாது என்பதே இங்கு சோகமான விஷயம் ஆகும். இதன்காரணமாகவே, அவ்வப்போது, உடலில் கொழுப்பின் அளவைப் பரிசோதனைச் செய்யுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
உடலின் கொழுப்பின் அளவை மாற்ற என்னால் எதுவும் செய்ய இயலாது
இது முற்றிலும் தவறான கூற்று ஆகும். உடலின் கொழுப்பின் அளவைக் குறைக்கச் சரிவிகித உணவுமுறையை மேற்கொள்ள வேண்டும், தினமும் தவறாமல் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். நீங்கள் புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவராக இருந்தால், உடனே அதை நிறுத்த வேண்டும். சிகரெட்டில் உள்ள நிகோட்டின் எனும் வேதிப்பொருளானது, தமனிகளைக் கடினப்படுத்தி, ரத்த ஓட்டத்தைத் தடைசெய்து மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகளுக்குக் காரணமாக அமைகிறது. கொலஸ்ட்ரால் தொடர்பான உடல்பாதிப்புகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன்னர், உங்கள் குடும்ப வரலாறையும் அறிந்துகொள்வது முக்கியமானது ஆகும். ஏனெனில், கொலஸ்ட்ரால் தொடர்பான பெரும்பாலான உடல் பாதிப்புகள், மரபியல் உடன் தொடர்புடையது ஆகும்.
உணவு மற்றும் உடற்பயிற்சியின் மூலம் கொழுப்பின் அளவைக் குறைக்க இயலும்
உடலின் கொழுப்பின் அளவு அதிகமாக இருந்தால் மட்டுமே, ஸ்டாடின் போன்ற மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற தவறான தகவல், மக்களிடம் அதிகம் காணப்படுகிறது. உடலின் கெட்ட கொழுப்பு இருப்பதை, சோதனையின் மூலம் அறிந்துகொண்ட உடனேயே, ஸ்டாடின் போன்ற மருந்துகளை, மருத்துவர்களின் வழிகாட்டுதலின்பேரில் எடுத்துக்கொள்ள வேண்டும். உணவுமுறையில் கட்டுப்பாடுகள் மற்றும் உடற்பயிற்சி பழக்கங்கள் ஒருபோதும் மருந்துகள் முறைக்கு ஈடு ஆகாது.
அதிகக் கொழுப்பு கொண்ட உணவு வகைகளைச் சாப்பிடுவதால், உடலின் கொழுப்பு அளவு அதிகரிக்காது
கொலஸ்ட்ரால் அல்லது கொழுப்பை நாம் நேரடியாக வாங்கிச் சாப்பிட முடியாது என்பதில் முதலில் நீங்கள் தெளிவாக இருக்கவும். நாம் சாப்பிடும் உணவு வகைகளிலேயே, கொழுப்புகள் உள்ளன. அதிலும் அதில் எவ்வளவு சதவீதம் உள்ளது என்பதை நம்மால் அறுதியிட்டுக் கூற இயலாது.
மருத்துவர், உங்கள் உடலில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரித்து இருப்பதாகச் சொல்லும்பட்சத்தில், டிரான்ஸ் கொழுப்புகள் கொண்ட உணவைத் தவிர்ப்பது நல்லது. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் கொட்டை உணவுகளில் நல்ல கொழுப்பு அதிகளவில் உள்ளது. இந்த வகை உணவுகள் நல்லது என்பதற்காக, அதிகமாகச் சாப்பிடக்கூடாது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்ப, நல்ல கொழுப்பு கொண்ட உணவு வகைகளையும் குறைவான அளவிலேயே சாப்பிட வேண்டும்.
வெளியிடங்களில் விற்பனையாகும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைவிட, வீட்டில் சமைக்கப்படும் உணவுகள், உடலுக்கு எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை என்பதே ஊரறிந்த உண்மை.
மேலும் வாசிக்க : இரத்த சர்க்கரை அளவு கண்டறியும் சோதனை அறிவோமா?
நான் ஆரோக்கியமான உடல் எடையைப் பெற்று உள்ளேன். இதன்காரணமாக, எனக்குக் கொழுப்பு பயம் இல்லை
நமது உடலமைப்பிற்கும், உடலில் உள்ள கொழுப்பு அளவிற்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை என்பதை முதலில் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். உடலில் உள்ள கொழுப்பானது, சரியாகப் பயன்படுத்த இயலாத நிலையிலேயே, அது பெரும்பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
ஒருவர்ப் பிறப்பிலேயே, கொலஸ்ட்ரால் பயன்படுத்துதலில் குறைபாடு இருப்பின். அவர் மெல்லிய உடலமைப்பைப் பெற்று இருந்தாலும், அவரது உடலில் உள்ள கொழுப்பானது சரியாக உட்கிரகிப்படாததால், இதுதொடர்பான பாதிப்புகள் வரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
குழந்தைகளுக்குக் கொலஸ்டிரால் குறித்த பயம் தேவையில்லை
இது தவறான கூற்று ஆகும். பெற்றோரிடமிருந்து குழந்தைக்கு மரபியல் ரீதியாகக் கொலஸ்ட்ரால் பாதிப்பு கடத்தப்படும்போது, குழந்தைகளுக்கும் மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகள் வரும் ஆபத்து உள்ளது.
குழந்தைகளுக்கு, அவர்களின் சிறுவயதில் இருந்தே, உடற்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக்க வேண்டும். வெளியிடங்களில் விற்பனைச் செய்யப்படும் உணவு வகைகளை முழுவதுமாகத் தவிர்க்கும் மனப்பாங்கை வளர்த்துக் கொள்ள உதவ வேண்டும்.
நான் ஸ்டாட்டின் மருந்துகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறேன். இதனால் நான் என்ன வேண்டுமென்றாலும் சாப்பிடலாம்?
ஸ்டாட்டின் மருந்துகள், உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளின் அளவைக் கட்டுப்படுத்த மட்டுமே உதவுகின்றன. இந்த மருந்துகளின் செயல்திறன் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே இருக்கும். நாம் விரும்பிய உணவுகளை, எவ்விதக் கட்டுப்பாடின்றிச் சாப்பிடும்பட்சத்தில், அது உடலில் கெட்ட கொழுப்பின் அளவைக் கணிசமான அளவிற்கு உயர்த்திவிடுகிறது. இந்தக் கொழுப்பானது, உடலில் சரியாகப் பயன்படுத்தாத நிலையில், பெரும்பாதிப்புகளை ஏற்படுத்திவிடுகின்றன.
கொலட்ரால் குறித்த கட்டுக்கதைகளைப் புறந்தள்ளி, அதன் உண்மைத்தன்மையை அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். உடலின் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து, நல்ல கொழுப்பின் அளவைக் கணிசமான அளவில் அதிகரித்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவோமாக…