குழந்தைகளுக்குச் செய்ய வேண்டிய ரத்த சோதனைகள்
குழந்தைகளுக்கு ஊசி, சிரிஞ்சு பார்த்தாலோ அல்லது அதுகுறித்த நினைப்பு வந்தாலோ, அதிகமாகப் பயப்படுகின்றனர். இதன்காரணமாக, அவர்களுக்கு, ரத்த பரிசோதனைகள் நடைமுறையை மேற்கொள்வது என்பது மிகுந்த சிக்கலான விஷயமாக மாறி உள்ளது.
குழந்தைகளுக்கு வழக்கமாக மேற்கொள்ளப்படும் மருத்துவச் சோதனைகள்
முழுமையான இரத்த எண்ணிக்கைச் சோதனை (CBC)
முழுமையான இரத்த எண்ணிக்கைச் சோதனை என்பது, ரத்தத்தின் பல்வேறு கூறுகளை மதிப்பிடும் வழக்கமான ரத்த பரிசோதனை ஆகும். குழந்தைநல மருத்துவத்தில். CBC என்பது குழந்தையின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மதிப்பிடுவதற்கும், ரத்த சோகை, தொற்றுப்பாதிப்பு மற்றும் மரபணுப் பாதிப்புகள் உள்ளிட்ட மருத்துவ நிலைமைகளைக் கண்டறிய பயன்படுத்தப்படும் அடிப்படைக் கருவியாகும்.
இரத்த சிவப்பணுக்கள் (RBC), ரத்த வெள்ளை அணுக்கள்( WBC), பிளேட்லெட்டுகள் எனப்படும் ரத்த நுண் தட்டுகள் உள்ளிட்டவைகளின் எண்ணிக்கையைக் கணக்கிட, இந்தச் சோதனை உதவுகிறது. அதுமட்டுமல்லாது, உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு, ஆக்சிஜனைச் சுமக்கும் திறன், உறைதல் திறன் உள்ளிட்ட நுண்ணறிவுகளையும் இந்தச் சோதனை வழங்குகிறது.
குழந்தைகளில் CBC சோதனைக்கான இயல்பான மதிப்புகள் வயது, பாலினம் மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து மாறுபடுகின்றன. குழந்தைகளுக்குப் பொதுவாக ஏற்படும் ரத்த சோகை, ஹீமோகுளோபின், ஹீமோடோக்ரிட் அளவை மதிப்பிடுவதன் மூலம், CBC சோதனை மதிப்பைத் திறம்பட கணக்கிட இயலும்.
இரத்தத்தின் வேதியியல் குழு
இரத்தத்தின் வேதியியல் குழுவானது, அடிப்படை வளர்சிதை மாற்ற குழு (BMP) அல்லது விரிவான வளர்சிதை மாற்ற குழுக்கள் (CMP) என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தச் சோதனையானது, ரத்தத்தில் உள்ள பல்வேறு வேதிப்பொருட்கள் மற்றும் அதன் அளவைக் கண்டறிய உதவுகின்றன.
எலெக்ட்ரோலைட்டுகள், குளுக்கோஸ்கள், சிறுநீரகச் செயல்பாடுகளைக் குறிக்கும் குறிப்பான்கள், கல்லீரல் செயல்பாட்டைக் குறிக்கவல்லக் குறிப்பான்கள் உள்ளிட்டவை, இந்தச் சோதனையில் அடங்குகின்றன.
வளர்சிதை மாற்ற ஏற்றத்தாழ்வுகள், நீரிழிவு நோய், சிறுநீரக நோய், கல்லீரல் பாதிப்புகள் உள்ளிட்டவற்றை அடையாளம் காண, இந்தச் சோதனைகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன.
இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துக் காணப்படும் நிலையே, நீரிழிவு நிலை ஆகும். அதேநேரத்தில், கல்லீரல் என்சைம்கள் (ALD மற்றும் ASD) அசாதாரணமான அளவில் காணப்படின், அது கல்லீரல் செயலிழப்பைக் குறிக்கிறது. நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் விளைவுகளைக் கண்காணிப்பதிலும், குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தை நிர்வகிப்பதில், ரத்த வேதியியல் குழுக்கள், முக்கியப் பங்காற்றுகின்றன.
இரத்தத்தில் காரீயத்தின் அளவு
இரத்தத்தில் காரீயம் இருப்பது, மிகப்பெரிய உடல்நலப் பாதிப்பை ஏற்படுத்திவிடும். அதுவும் குறிப்பாகக், குழந்தைகளிடத்தில் வளர்ச்சி நிகழ்வில் ஏற்படும் தாமதங்கள், கற்றல் குறைபாடுகள், நடத்தைச் சிக்கல்கள் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்திவிடுகின்றன. குழந்தைகளின் ரத்தத்தில் காரீயத்தின் அளவைக் கணக்கிட, இந்தச் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
தைராய்டு செயல்பாடு சோதனைகள்
வளர்சிதை மாற்றம் மற்றும் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த உதவும் ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் தைராய்டு சுரப்பியின் செயல்திறனை மதிப்பிட, தைராய்டு செயல்பாடு சோதனைகள் உதவுகின்றன. குழந்தைகளின் உடல் மற்றும் அறிவாற்றல் வளர்ச்சியைப் பாதிக்கும் ஹைப்போ தைராய்டிசம் மற்றும் ஹைப்பர்த் தைராய்டிசம் போன்ற தைராய்டு பாதிப்புகளைக் கண்டறிய இந்தச் சோதனைகள் பயன்படுத்தப்படுகின்றன.
தைராய்டு செயல்பாடு சோதனைகளில், பொதுவாக, தைராய்டு தூண்டுதல் ஹார்மோன் (TSH), தைராக்ஸின் (FT4), டிரிஅயோடோதரோனைன் (FT3) உள்ளிட்டவைகளின் அளவீடுகள் இதில் அடங்கும். ஹார்மோன்களின் அளவில் மாற்றங்கள் ஏற்படும்போது, பொருத்தமான மருத்துவத் தலையீடு என்பது அவசியமாகிறது.
சிறுநீர்ப் பகுப்பாய்வுச் சோதனை
சிறுநீரகப் பகுதியில் ஏற்படும் பாதிப்புகள், சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்றுக்கள் (UTIs) மற்றும் நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பாதிப்புகளைக் கண்டறிய சிறுநீர்ப் பகுப்பாய்வுச் சோதனை உதவுகிறது.
சிறுநீரின் நிறம், தெளிவு, pH அளவு, புரதம் , குளுக்கோஸ், கீட்டோன்கள், செல்கள், பாக்டீரியாக்களின் இருப்பு உள்ளிட்டவைகளின் மதிப்பீடுகள் அளவிடப்படுகின்றன. இந்த அளவுருக்களில், அசாதாரண நிலை இருக்குமேயானால், அது குழந்தைகளிடம் முன்னமே கண்டறிந்து உரிய சிகிச்சையினை வழங்க, சுகாதார நிபுணர்களுக்கு உதவுகின்றன.
ஒவ்வாமைப் பாதிப்பைக் கண்டறிய உதவும் சோதனை
குழந்தைகளுக்கு, ஒவ்வாமைச் சோதனையானது மிகவும் முக்கியமானது ஆகும். மகரந்தம், தூசிப் பூச்சிகள், விலங்குகளின் ரோமம், சில உணவுகள் போன்றவைகளின் மூலம், குழந்தைகளுக்கு ஏற்படும் ஒவ்வாமைப் பாதிப்பைக் கண்டறிய தோல் பரிசோதனைகள் அல்லது ரத்த பரிசோதனைகள் (குறிப்பாக IgE) உதவுகின்றன.
குழந்தைகளிடையே நிகழும் ஒவ்வாமைகளைப் புரிந்துகொள்வதன் மூலம், பயனுள்ள சிகிச்சைத் திட்டங்களை உருவாக்குவதற்கும், சுவாசம், தோல், இரைப்பைக் குடல் பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கும் உதவுகிறது. ஆஸ்துமா பாதிப்பின் குடும்ப வரலாற்றைக் கொண்ட குழந்தைகளுக்கு, ஒவ்வாமைச் சோதனை மிகவும் முக்கியமானது ஆகும்.
மரபணுச் சோதனை
குழந்தைகளின் வாழ்வின் துவக்கத்திலேயே, மரபணுப் பாதிப்புகளை அடையாளம் கண்டறிய, மரபணுச் சோதனைகளில் நிகழ்ந்துள்ள முன்னேற்றங்கள் உதவுகின்றன. புதிதாகப் பிறந்த பச்சிளங் குழந்தைகளிடம் ஃபீனைல்கீட்டோய்யூரியா (PKU), சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ், சிக்கிள் செல் அனீமியா போன்ற பாதிப்புகளைக் கண்டறிய, மரபணுச் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மரபணுச் சோதனைகள் மூலம் குழந்தைகளின் வளர்ச்சித் தாமதம், அறிவுசார்க் குறைபாடுகள், பிறவி முரண்பாடுகள் ஆகியவற்றைக் கண்டறியலாம்.
இந்த வகைச் சோதனைகள், குழந்தைகளின் தனித்துவமான மரபணு ஒப்பனையின் அடிப்படையில், சிகிச்சைத் திட்டங்களை உருவாக்க, சுகாதார நிபுணர்களுக்கு உதவுகிறது.
10 வயதிற்கு உட்பட்ட இளம் குழந்தைகளிடையே, ஆய்வகச் சோதனைகள் மீதான பயத்தைக் குறைக்க, அவர்களின் பெற்றோர்கள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள்
இரத்த பரிசோதனைகளின் போது, குழந்தைகளை அமைதியாக வைத்துக் கொள்வதற்கான வழிமுறைகள்
இரத்த பரிசோதனைகளின் போது, குழந்தைகளுக்கு வலி மற்றும் அசவுகரியம் ஏற்படும். இதனைப் பார்க்கும் பெற்றோர்க் கண் கலங்குவது இயல்பானது. இந்தத் தற்காலிக வலி உணர்வை, நம்மால் தவிர்க்க முடியாது என்றபோதிலும், குழந்தைகளுக்கு, அவர்களின் பெற்றோர்கள் உணர்ச்சிப்பூர்வமான ஆதரவை வழங்குவதன் மூலம், ரத்த மாதிரி சேகரிப்பு நடவடிக்கைகளின் போது, குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்க இயலும்.
பெற்றோர்கள் தான், குழந்தைகளின் முதன்மையான ஆறுதல் வழங்குநர்களாக இருப்பதால், அவர்களால், மட்டுமே, குழந்தையை உடனடியாக, ரத்த பரிசோதனைக்குத் தயாராகச் செய்வது மட்டுமல்லாது, ரத்த மாதிரி சேகரிப்பை, எளிமையான நிகழ்வாகவும் மாற்ற இயலும்.
ஆழ்ந்த சுவாசம், ஊசி போடுவதைத் தவிர்ப்பது உள்ளிட்ட நுட்பங்கள், ரத்த பரிசோதனையின் போது, குழந்தைக்கு மன அழுத்த பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்க உதவுகின்றன.
குழந்தையின் கவனத்தைத் திசைதிருப்ப வேண்டும்
ஊசி மற்றும் சிரிஞ்சு உதவியுடன் குழந்தையின் ரத்த மாதிரி சேகரிக்கும்போது, அவர்களின் கவனத்தைத் திசைதிருப்புவதன் மூலம், ஊசி குத்தும் போது ஏற்படும் அசவுகரியத்தைக் குறைக்க முடியும். அவர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையிலான நிகழ்வுகளைக் கண்டறியவும், குறைந்தது 30 விநாடிகள் வரை அவர்களுடன் பேசவோ அல்லது விளையாடவோ செய்ய வேண்டும். இந்த நடவடிக்கைகளின் மூலம், அவர்களின் கவனத்தைத் திசைதிருப்பும்போது, ரத்த மாதிரி சேகரிப்பு நிகழ்வின்போது, அவர்களுக்குக் குறைந்த அளவிலேயே மன அழுத்தம் ஏற்படுகின்றது.
வீட்டில் குழந்தைகள் விரும்பி விளையாடும் பொம்மைகள், அவர்களுக்குப் பிடித்த நொறுக்குத் தீனிகள், பானங்கள் உள்ளிட்டவைகளைக் கூடவே எடுத்துச் செல்லுங்கள். இரத்த மாதிரி சேகரிப்பு நிகழ்வின்போது, இத்தகைய பொருட்கள், குழந்தைகளைச் செளகரியமாக உணர வைப்பதோடு மட்டுமல்லாது, ஊசி குத்தும் போது ஏற்படும் வலியையும் மறக்கடிக்கச் செய்யும். இரத்த மாதிரி நிகழ்வின் போது, குழந்தைகளை அமைதியாக வைத்திருக்கும் பொருட்டு, அவர்களுக்கு, சாத்தியமில்லாத எவ்வித வாக்குறுதிகளையும் அளிக்க வேண்டாம்.
அமைதியான நடத்தையைப் பராமரிக்க வேண்டும்
குழந்தைகள் மன அழுத்த பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கும்போது, அவர்கள் பெற்றோரின் அமைதியான முகத்தைப் பார்ப்பதன் மூலம், அவர்களுக்கு அதுவே ஆறுதலாக அமைந்து, அசவுகரியத்தைத் தாங்கிக்கொள்ள உதவுகிறது. இரத்த பரிசோதனைகளின் போது, குழந்தைகள், பராமரிப்பாளர்களின் அருகிலேயே இருக்கும் சூழல் உள்ளது. இது குழந்தைகளின் உணர்ச்சிகளில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கக் கூடும். அந்த நேரத்தில், குழந்தைகளின் பெற்றோர்களும், மன அழுத்தத்துடனும், பயத்துடனும் இருந்தால், குழந்தைக்கு, அது பீதி உணர்வை மேலும் அதிகரித்துவிடும்.
பெற்றோர்கள், குழந்தைகளுக்கு இனிமையான வார்த்தைகளைச் சொல்லலாம் அல்லது, அவர்களுக்குப் பிடித்த பாடல்களை முணுமுணுப்பதன் மூலம், கவலைகளைத் தள்ளிப்போடலாம். இரத்த பரிசோதனைக்குப் பிறகு, குழந்தைகளுக்குப் பிடித்தமானவற்றை மேற்கொள்ள அவர்களிடம் உறுதியளிக்கலாம். இது குழந்தைகளுக்கு, விரும்பத்தகாத நிகழ்வுகளை எதிர்கொள்ள உதவும் எண்டோர்பின் ஹார்மோன்களின் சுரப்பை அதிகரிக்கச் செய்கிறது.
மேலும் வாசிக்க : பச்சிளம் குழந்தைகளுக்குச் செய்யப்படும் NBS சோதனை
இரத்த பரிசோதனையின் போது என்ன நிகழ்வுகளை எதிர்பார்க்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு விளக்க வேண்டும்
மருத்துவ ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படும் சோதனைகளின் போது எப்படி நடந்துகொள்ள வேண்டும், என்ன எதிர்பார்க்க வேண்டும் என்று வளர்ந்த பெரியவர்களுக்கே முழுமையாகத் தெரியாத நிலையில், குழந்தைகள் அதுபற்றி அறிந்திருக்க வாய்ப்புகள் மிகக் குறைவு தான். இதுவே, அவர்களுக்கு மன அழுத்த பாதிப்பை ஏற்படுத்துவதாய் அமைந்துவிடுகிறது. இரத்த பரிசோதனை மேற்கொள்ள, ரத்த மாதிரியைச் சேகரிக்க, பயன்படுத்தப்படும் ஊசியே, அவர்களுக்கு அதிகப் பயம் ஊட்டுவதாக உள்ளது. இரத்த பரிசோதனைச் செயல்முறை எவ்வாறு நடைபெறுகிறது என்பதைக் குழந்தைகளுக்கு விளக்க வேண்டும். இதுதொடர்பாக, குழந்தைகளுக்கு ஏற்படும் சந்தேகங்களைத் தெளிவுபடுத்த, வீடியோ வாயிலாகவும், குழந்தைகளுக்கு, பெற்றோர்கள் உதவ முடியும்.
இரத்த பரிசோதனைக்கென, குழந்தைகளிடம் இருந்து ரத்த மாதிரி சேகரிக்கப்பட்ட பின்னர், அவர்களுக்கு ஆரோக்கியமான உணவினை வழங்கி, நன்கு ஓய்வெடுக்க வைக்க வேண்டும். இரத்த மாதிரி சேகரிப்பு நிகழ்வின் போது, அவர்கள் தளர்வான உடைகளை உடுத்தி இருப்பது நல்லது. நீண்ட கைச் சட்டைகள், தோல் வெடிப்புகளை ஏற்படுத்தும் வகையிலான இறுக்கமான ஆடைகளைத் தவிர்ப்பது நல்லது.
குழந்தையுடனே தொடர்ந்து இருத்தல்
இரத்த பரிசோதனை நிகழ்வின் போது, குழந்தையின் அருகில் இருத்தலே, அவர்களுக்குப் பெற்றோர்ச் செய்யும் சிறந்த விஷயம் ஆகும். இரத்த மாதிரி சேகரிக்கப்படும் போது, குழந்தைக்கு அருகிலேயே பெற்றோர் இருப்பின், அது அவர்களுக்கு வலியைத் தாங்கிக் கொள்ளும் சக்தியை அளிக்கிறது. இதன்மூலம், அவர்களின் மனதில் விரும்பத்தகாத நிகழ்வுகள் அகற்றப்படுகின்றன.
குழந்தைக்கு நிகழும் அசவுகரியங்களைக் கண்காணிக்க வேண்டும்.
இரத்த பரிசோதனை முடிந்தவுடனேயே, பெற்றோரின் பங்கு முடிந்து விடுவதில்லை. இரத்த மாதிரி சேகரித்து 72 மணிநேரங்கள் கடக்கும்வரை, குழந்தைக்கு, எவ்வித அசவுகரியமும் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உடலில் ஏற்படும் திடீர் மாற்றங்கள், விவரிக்க இயலாத வீக்க உணர்வு, சொறிதல் உள்ளிட்ட அறிகுறிகள், குழந்தைகளால் வெளிப்படுத்த இயலாத போது, பெற்றோரே அதை அறிந்துகொண்டு, உடனடியாக மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
மேற்குறிப்பிட்ட வழிமுறைகளைக் கவனமாகப் பின்பற்றி, குழந்தைகளுக்கு, ரத்த பரிசோதனைக் குறித்த பயத்தை அகற்றி, அவர்களின் நல்வாழ்வு சிறக்கும் நடவடிக்கைகளில், நாமும் நமக்கான பங்களிப்பைச் செலுத்துவோமாக…