குழந்தைகளிடையே காணப்படும் நரம்பியல் பாதிப்புகள்
மனித உடலில் உள்ள முக்கியமான உறுப்புகளில் முதன்மை இடத்தில் மூளை உள்ளது. மன இறுக்கம், கை, கால் வலிப்பு, தலைவலி, ADHD உள்ளிட்ட நரம்பியல் பாதிப்புகள் நரம்பு மண்டலத்தைப் பாதிப்பதோடு மட்டுமல்லாது, மூளையின் செயல்பாடுகளையும் வெகுவாகப் பாதிக்கின்றன. இதன்காரணமாக, மனிதர்கள் உளவியல்ரீதியாகவும் பெரும்பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.
தாயின் கருப்பையில் குழந்தையின் உடலும், உள் உறுப்புகளும் வடிவம் பெற துவங்கும் நேரத்திலேயே மூளையின் வளர்ச்சியும் துவங்கிவிடுகிறது. இந்த வளர்ச்சியானது, குழந்தைப்பருவம் முதல் இளமைப்பருவம் வரைத் தொடர்கிறது. மனித மூளையின் வளர்ச்சி பிறப்பிலேயே துவங்குகிறது. நரம்பு இணைப்புகள் முழுமையாக வளர்ந்த பின்னரே மூளையின் செயல்பாடுகள் முழுமை அடைகின்றன.
நரம்பியல் பாதிப்புகள், பரந்த அளவிலான அறிகுறிகள், சிக்கல்கள் மற்றும் கடுமையான விளைவுகளைத் தன்னகத்தே கொண்டு உள்ளன. நரம்பியல் தொடர்பான நிகழ்வுகள் அனைத்தும், மூளை மற்றும் முதுகெலும்புகளை உள்ளடக்கிய நரம்பு மண்டலத்திற்குக் கட்டுப்பட்டது ஆகும். நரம்பு மண்டலமானது உடலின் இயக்கம், கண் பார்வை, காது கேட்கும் திறன்களைக் கட்டுப்படுத்தும் அமைப்பாக உள்ளது. மூளையின் ஏதேனும் ஒரு பகுதி சேதத்திற்கு உள்ளாகும்பட்சத்தில், நரம்பியல் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
குழந்தைகளின் நரம்பு மண்டலம் – ஒரு பார்வை
மனிதர்களின் நரம்பு மண்டலம் என்பது உடலில் உள்ள சிக்கலான அமைப்பு ஆகும். இது உடலின் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் இன்றியமையாததாக உள்ளது. நரம்பு மண்டலம் மத்திய நரம்பு மண்டலம் மற்றும் புற நரம்பு மண்டலம் உள்ளிட்ட பகுதிகளை உள்ள்டக்கி உள்ளது.
மத்திய மற்றும் மைய நரம்பு மண்டலம்
மத்திய நரம்பு மண்டலம், மூளை மற்றும் தண்டுவடத்தை உள்ளடக்கி உள்ளது.
புற நரம்பு மண்டலம்
உடலின் அனைத்துப் புற நரம்புக் கூறுகளும், இந்த நரம்பு மண்டலத்திலேயே உள்ளது.
மூளை மற்றும் முதுகெலும்பு தவிரப் பல உறுப்புகள் உள்ளன. இவற்றில் காதுகள், கண்கள், சுவை மற்றும் வாசனை உணர் உறுப்புகள் அடங்கும். மேலும் மூட்டுகள், தசைகள், தோல் மற்றும் பிற பகுதிகளில் உள்ள உணர்ச்சி ஏற்பிகளும் முக்கியமானவை. இவை அனைத்தும் நரம்பு மண்டலத்தின் முக்கிய உறுப்புகளாகச் செயல்படுகின்றன.
நரம்பு மண்டலத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் நிகழ்வுகள்
மனித உடலில் நரம்பு மண்டலமானது
- நோய்த்தொற்றுகள்
- அதிர்ச்சி
- கட்டமைப்புக் குறைபாடுகள்
- இரத்த ஓட்ட பாதிப்பு ஏற்படுதல்
- நோயெதிர்ப்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்படுதல்
- மரபணுக் குறைபாடுகள் அல்லது வளர்சிதை மாற்ற குறைபாடுகள்
- மருந்து மற்றும் உடலில் இருந்து நச்சு வெளிப்பாடுகள் உள்ளிட்ட காரணிகளின் மூலம், நரம்பு மண்டலம் கடும் பாதிப்பிற்கு உள்ளாகின்றன.
நரம்பு மண்டல பாதிப்புகளின் பொதுவான அறிகுறிகள்
நரம்பு மண்டலம் தொடர்பான வெவ்வேறு பாதிப்புகள், மற்றவர்களுடன் தொடர்பில்லாத பல்வேறு அறிகுறிகளை ஏற்படுத்துகின்றன.
நரம்பு மண்டலப் பாதிப்பின் பொதுவான அறிகுறிகள்
- குழந்தைகளின் வளர்ச்சி நிகழ்வில் தாமதங்கள்
- குழந்தையின் தலைப்பகுதியின் வளர்ச்சியில் குறைதல் மற்றும் அதிகரித்தல்
- குழந்தைகளின் செயல்பாடு மற்றும் இயக்கங்களில் விவரிக்கப்படாத நிலையிலான மாற்றங்கள்
- உடல் செயல்பாடுகளில் போதிய அளவிலான ஒருங்கிணைப்பு இல்லாமை
- மனநிலை மற்றும் உளவியல் ரீதியிலான மாற்றங்கள்
- நடுக்க உணர்வு, வலிப்புத் தாக்கங்கள் மற்றும் தசைகளில் விறைப்பு அதிகரிப்பு
- பேச்சில் தெளிவற்ற நிலை
- தலைவலி உணர்வு
- உணர்ச்சி இழத்தல் அல்லது கூச்ச உணர்வு
- காட்சி மாற்றங்களை அனுபவித்தல்
குழந்தைகளில் ஏற்படும் நரம்பு மண்டல பாதிப்பின் அறிகுறிகளும், மற்ற மருத்துவ நிலைமைகளைப் போலவே தோன்றும். பாதிக்கப்பட்டவர்கள், நரம்பியல் நிபுணரை அணுகி, முழுமையான நோய் அறிதலுக்காக, அவர்களின் சுகாதார வழங்குநரைப் பார்ப்பதன் அவசியத்தை உறுதிப்படுத்துகிறது.
மேலும் வாசிக்க : மூட்டு ஆரோக்கியத்தில் உடல் எடையின் தாக்கம்
குழந்தைகளுக்கு ஏற்படும் பொதுவான நரம்பியல் பாதிப்புகள்
குழந்தைகளுக்கு, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட நரம்பியல் பாதிப்புகள் உள்ளன. குழந்தைகளைப் பாதிக்கவல்ல மன இறுக்கம், கை, கால் வலிப்பு, மூளைக் காயங்கள், தலைவலி, பெருமூளை வாதம் உள்ளிட்ட நிலைமைகள், மிகவும் பொதுவான நரம்பியல் பாதிப்புகள் ஆகும்.
மன இறுக்கம்
குழந்தைகளுக்கு ஏற்படும் பொதுவான நரம்பியல் பாதிப்பாக, மன இறுக்கம் உள்ளது. இது வாய்மொழி மற்றும் சொற்கள் அல்லாத தகவல்தொடர்புகளின் குறைபாடாக, இது கருதப்படுகிறது. மன இறுக்கப் பாதிப்பால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பேசுவதில் குறைபாடு, சவாலான தகவல்தொடர்பு திறன்கள், உணர்ச்சிக் குறைபாடுகள், மோசமான சமூகத் திறன்களுடன் பாதிக்கப்படுகின்றனர்.
ADHD எனப்படும் கவனக்குறைவு ஹைபராக்டிவிட்டி பாதிப்பு
இந்தப் பாதிப்பானது, குழந்தைப் பருவத்தில் இருந்து பெரியவர்கள் வரைத் தொடர்கிறது. இந்த நிலைக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாவிடில், சிறு பணிகளையும் அவர்களைச் செய்ய இயலாத அளவிற்குக் கடினமானதாக மாற்றும்.
கை, கால் வலிப்பு
இது எல்லா வயதினரிடையே காணப்படும் பொதுவான நரம்பியல் பாதிப்பு ஆக வரையறுக்கப்படுகிறது. கை,கால் வலிப்பு என்பது நாள்பட்ட மருத்துவ நிலை ஆகும். இது வலிப்புத் தாக்கங்களின் நிகழ்வால் வகைப்படுத்தப்படலாம். கடுமையான வலிப்புத் தாக்கங்கள் மற்றும் வாழ்க்கைமுறைத் தலையீடுகள், பொதுவான அறிகுறிகளாக விளங்குகின்றன.
டிஸ்லெக்ஸியா
குழந்தைகளின் கற்றல் திறன்களைப் பாதிக்கும் வகையிலான குறைபாடாக, டிஸ்லெக்ஸியா வரையறுக்கப்படுகிறது. இந்தப் பாதிப்பிற்கு உள்ளான குழந்தைகள் சரியாகப் படிக்கவோ, எழுதவோ, வார்த்தைகளை உச்சரிக்கவோ, தாங்கள் கற்றுக்கொண்டதைப் புரிந்துகொள்ளவோ மிகவும் கஷ்டப்படுவார்கள். இந்தப் பாதிப்பிலான குழந்தைகளை, பிரச்சினையின் துவக்கத்திலேயே கண்டறிந்தால், முழுமையான தீர்வை விரைந்து கண்டறிய இயலும்.
மேற்குறிப்பிட்ட அறிகுறிகளைத் துவக்கத்திலேயே கண்டறிந்து, உரிய சிகிச்சையைச் சரியான நேரத்தில் அளிப்பதன் மூலம், ஆரோக்கியமான மற்றும் வளமையான நல்வாழ்க்கை வாழ்வோமாக…