கீல்வாத பாதிப்புக்கும், மன ஆரோக்கியத்திற்கும் தொடர்பு
கீல்வாத பாதிப்பு என்பது நாள்பட்ட மருத்துவ நிலை ஆகும். இது மூட்டுப்பகுதிகளில் வீக்கம், அதனைத் தொடர்ந்து மூட்டுவலி, வீக்கம் மற்றும் மூட்டுகளின் சில குறைபாடுகளுடன் விறைப்பு உள்ளிட்ட நிகழ்வுகளால் வகைப்படுத்தப்படுகிறது.
கீல்வாத பாதிப்பானது மன ஆரோக்கியத்தையும் பாதிக்கும். நாள்பட்ட வலி, சோர்வு மற்றும் தூக்கக் குறைபாடு ஆகியவை நோயாளியின் மனநிலையைப் பாதிக்கின்றன. அவை நோயாளியின் வாழ்க்கைத் தரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
கீல்வாத பாதிப்பு உள்ளவர்களுக்குக் கவலை, மன அழுத்தம், சோகம் மற்றும் மனச்சோர்வு பொதுவான அறிகுறிகளாக உள்ளன. மூட்டுவலியால் அவதிப்படுபவர்களுக்கு, பயனுள்ள சிகிச்சைகள் பல உள்ளன. இதனால், மூட்டுவலியால் பாதிக்கப்பட்டவர்கள், இவை அனைத்தையும் கடந்து மகிழ்ச்சியாக வாழ முடியும்.
கீல்வாத பாதிப்பானது, உணர்ச்சிரீதியாக எண்ணற்ற விளைவுகளை ஏற்படுத்துகிறது. இது வயதானவர்கள் மட்டுமல்லாது, குழந்தைகள் மற்றும் பெரியவர்களையும் அதிகளவில் பாதிக்கிறது. இந்தப் பாதிப்பிற்கு உள்ளான நோயாளிகள், எதிர்மறையான சிந்தனைகள் மற்றும் உணர்ச்சிகளைக் கொண்டு இருக்கலாம். கீல்வாத பாதிப்பானது, மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு உள்ளிட்டவைகள் ஏற்பட வழிவகுக்கிறது. கீல்வாத பாதிப்பை நிர்வகிக்க உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியம் முக்கியமானது ஆகும். இல்லையெனில். நீங்கள் இந்தப் பாதிப்பில் இருந்து மீள்வது கடினம் ஆகும்.
- உறங்குவதில் சிக்கல்
- கவனம் செலுத்துவதில் சிரமம்
- வெறுமை மனநிலை
- எரிச்சல் அல்லது சோர்வு மனநிலை
- அமைதியற்ற மனநிலை
உள்ளிட்டவைப் பதட்டத்தின் பொதுவான அறிகுறிகள் மற்றும் தாக்கங்கள் ஆகும்.
- சோகம் மற்றும் வெறுமை உணர்வு
- எதிலும் நம்பிக்கையற்று இருத்தல்
- குற்ற உணர்ச்சி
- எதிலும் ஈடுபாடு மற்றும் ஆர்வமின்மை
- தற்கொலை எண்ணம் மேலோங்குதல்
- செரிமான பிரச்சினைகள்
- வலி உணர்வு
உள்ளிட்டவை, மனச்சோர்வு பாதிப்பின் அறிகுறிகள் மற்றும் அடையாளங்களாக உணரப்படுகின்றன.
கீல்வாத பாதிப்பு கொண்ட நோயாளிகளில் 5 பேரில் ஒருவருக்குக் கவலை மற்றும் மனச்சோர்வின் அறிகுறிகளை அனுபவிக்கும் வாய்ப்பு உள்ளது. கீல்வாத பாதிப்பின் தாக்கம், ஆண்களைவிட பெண்களுக்கே அதிகமாக உள்ளது என ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில் 54 மில்லியன் அமெரிக்கர்களில் சுமார் 20 சதவீதத்தினர்க் கவலை மற்றும் மனச்சோர்வின் அறிகுறிகள் தொடர்பாகப் புகார் அளித்து உள்ளனர். கீல்வாத பாதிப்பிற்கு உள்ளானவர்களுக்கு, மனநிலைத் தொடர்பான பாதிப்புகள் மற்றும் மனநிலை மாற்றங்களுக்கு உள்ளாவதாக, மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
கீல்வாத பாதிப்பு உள்ளவர்களுக்கு மனநலம் மோசமாக இருப்பது ஏன்?
கீல்வாதம் என்பது உடல் பாகங்கள் மற்றும் மூட்டுகளில் ஏற்படும் குறைபாடு, விறைப்பு, வலி மற்றும் வீக்கங்களை உள்ளடக்கிய குறைபாடு ஆகும். இது பாதிக்கப்பட்ட நபரின் தினசரி நடவடிக்கைகள் மற்றும் அவர்களின் பொழுதுபோக்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இடையூறு செய்கிறது. இந்தப் பாதிப்பால் சிலர் இரவில் சரியாக உறங்க முடிவதில்லை. இதன்விளைவாக, அடுத்தநாள் காலை மயக்கம் மற்றும் உறக்க நிலையை உணர்கிறார்கள். இதன்காரணமாக, பிறரைச் சார்ந்து வாழும் நிலை ஏற்படுகிறது. அவர்கள் தாங்கள் அனுபவிக்கும் வலி உணர்வால், மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதால், மகிழ்ச்சி குன்றிக் காணப்படுகின்றனர். அவர்களால், குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருக்க முடியாத சூழல் உருவாகிறது. குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபர், இத்தகைய பாதிப்பால் பாதிக்கப்பட்டு இருப்பின், அவர்த் தன்னம்பிக்கையை இழக்கும் அபாயம் உருவாகிறது.
இந்தப் பாதிப்பு கொண்டவர்களால், அவர்களின் அந்தரங்க விஷயங்களையே, சுயமாகச் செய்ய முடியாத நிலை உள்ளதால்,இவர்கள் உதவியற்றதாக உணர்கிறார்கள். இதனால், இவர்கள் மனச்சோர்விற்கு உள்ளாகின்றனர். இதன்காரணமாக, அவர்கள் எப்போதும் விரக்தி நிலையிலேயே காணப்படக் கூடும்.
கீல்வாத பாதிப்பிற்கு உள்ளானவர்களுக்கு உரிய கவனிப்பு வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படும் நேரத்தில், உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிகிச்சைகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தச் சிகிச்சைகளில் சுய நிர்வாகம், உடற்பயிற்சி போன்ற நிகழ்வுகள் அதிகமாக இடம்பெற வேண்டும். ஏனெனில், இந்தச் சுய நிர்வாகம் உள்ளிட்ட நிகழ்வுகள், பாதிக்கப்பட்ட நபரின் மனநிலையை மேம்படுத்துவதாக, நிரூபணம் செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம், ஆற்றல் ஊக்குவிக்கப்படுவது மட்டுமல்லாது, கீல்வாத பாதிப்பின் அறிகுறிகளும் சிறந்த முறையில் நிர்வகிக்கப்படுகின்றன.
மேலும் வாசிக்க : பணியிடங்களில் கீல்வாதத்தை நிர்வகிப்பதற்கான வழிகள்
கீல்வாத பாதிப்பில் வலி மேலாண்மை
கீல்வாத பாதிப்புச் சிகிச்சையின் முக்கிய அம்சமாகத் திகழ்வது வலி மேலாண்மை உத்தியை வகுப்பது தான் ஆகும். இதில் மருந்துமுறையானது முக்கியப்பங்கை வகிக்கிறது. மருத்துவர்ப் பரிந்துரைத்த மருந்து அட்டவணையைப் பின்பற்ற வேண்டும். கீல்வாத பாதிப்பின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த வாழ்க்கைமுறையில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் இதுமட்டுமல்லாது, எல்லா வலி மேலாண்மை நுட்பங்களைப் பின்பற்ற வேண்டும்.
கீல்வாத பாதிப்பினால் ஏற்படும் விறைப்புத் தன்மையைப் போக்க, வெப்பச் சிகிச்சைகள் பல்வேறு அதிசயங்களை மேற்கொண்டு வருகிறது. அழற்சி பாதிப்பு அதிகரிக்கும்போது, குளிர்ச் சிகிச்சை ஆபாந்பாந்தவனாக விளங்குகிறது. குளிர் மற்றும் வெப்பச் சிகிச்சை முறைகளை எப்போதும் அருகில் வைத்திருப்பது அவசியம் ஆகும்.
இந்தச் சிகிச்சைமுறைகளோடு, உங்கள் உடல் மற்றும் மனம் சமநிலைப்படுத்தலை மேற்கொள்ள முயற்சிக்கவும். சுவாசப் பயிற்சிகள்,டை சி, எளிய தியானம் உள்ளிட்ட பயிற்சிகள், உங்களை மன அமைதியாக இருக்க உதவும். இதன்மூலம், நீங்கள் வலி உணர்வைச் சிறப்பாக நிர்வகிக்க இயலும்.
கீல்வாத பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்கள், அதிக வேலை அல்லது உடற்பயிற்சிகள் உள்ளிட்டவைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். தினமும் இரவு குறைந்தபட்சம் 7 முதல் 8 மணிநேரம் கண்டிப்பாக உறங்க வேண்டும். சரியான ஓய்வும், கீல்வாத பாதிப்பைத் திறம்பட நிர்வகிக்கும்.
மன ஆரோக்கியம் மற்றும் உடல் ஆரோக்கியத்தைப் பேணிக்காப்பதன் மூலம், கீல்வாத பாதிப்பின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தி, ஆரோக்கியமான மற்றும் வளமான நல்வாழ்க்கை வாழ்வோமாக…