A complete Indian meal served on a big banana leaf.

சாப்பிடுவதில் கவனம் அவசியமா?

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில், உணவுமுறை மற்றும் ஊட்டச்சத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதை நிறுத்தி உள்ளோம்.நாம் இப்போதெல்லாம், உணவை நன்றாக மென்று சாப்பிடாமல், ஏதோ கடனுக்கு என்று அவசரகதியில் சாப்பிட்டு வருகிறோம். பசி உணரவைக் கட்டுப்படுத்த ஆரோக்கியமான உணவு வகைகளைச் சாப்பிடாமல், துரித உணவுகள், இனிப்புகள் உள்ளிட்டவற்றை ஆர்டர்ச் செய்து சாப்பிடுகிறோம். ஆர்டர்ச் செய்யும் உணவு வகைகளின் தரம் மற்றும் சுகாதார அம்சங்களில் போதிய அக்கறைக் காட்டுவது இல்லை. தற்போது இது பிரச்சினையாகத் [...]

A young couple having a happy conversation while enjoying healthy food at home.

உணவுடனான உங்கள் உறவைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள்

உங்கள் உணவுமுறையுடன் ஆரோக்கியமான உறவைக் கொண்டிருப்பது முக்கியம். இது உங்கள் உடலுக்கு எது உகந்தது, எது பொருத்தமற்றது என்பதை அடையாளம் கண்டறிய உதவும். உணவுடனான உறவுமுறையை எவ்வாறு புரிந்துகொள்வது? உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் சரியான நேரத்தில் கிடைப்பது அவசியமாகும். அதனடிப்படையிலான ஆரோக்கியமான உணவுமுறையை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் மேற்கொள்ளும் உணவுமுறையானது, உங்கள் உடல்நலத்திற்கு நன்மைபயப்பனவாக இருக்க வேண்டும். உங்கள் உடலுக்கு என்ன தேவை என்பதை நீங்கள் உணரும்போதுதான், உங்களால் [...]

A boy is bending down and eating instant noodles with his mouth, without using a spoon.

உடல் மன ஆரோக்கியத்தில் ஊட்டச்சத்து முறையின் பங்கு

உணவுமுறை என்பது சுவை உணர்வுகளின் எல்லைக்கு அப்பாற்பட்டவை ஆகும். இன்றைய நவீன உலகில், நாம் உண்ணும் உணவு நம் பசியைக் கட்டுப்படுத்துவதோடு, உடல் மற்றும் மன ஆரோக்கியத்திலும் முக்கியப் பங்காற்றுகிறது.அவசர உணவுமுறை மனநிலை, வாழ்க்கைத் தரம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை வெகுவாகப் பாதிக்கிறது. இத்தகைய மகத்தான உணவுமுறையை, மதிப்பிடுவதும், அங்கீகரிப்பதும் முக்கியமானதாக உள்ளது. ஆரோக்கியமான உணவுமுறையின் முக்கியத்துவம் உடலியல் செயல்பாடுகளான வளர்ச்சி, வளர்சிதை மாற்றம், உள்ளிட்ட நடைமுறைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை [...]

Image of students sitting on the floor having mid day meal at school.

ஊட்டச்சத்து இடைவெளி- அடையாளம் காண்பது எப்படி?

நமது உடலில் உள்ள உறுப்புகள் மற்றும் திசுக்கள் செயல்படுவதற்குத் தேவையான வைட்டமின்கள், மினரல்கள் உள்ளிட்ட மற்ற ஊட்டச்சத்துகள் கிடைக்காத நிலையையே, ஊட்டச்சத்துக் குறைபாடு என்கிறோம். இந்தியாவில் ஊட்டச்சத்துக் குறைபாடு பிரச்சினை, மிக முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இது குறிப்பாக இளம்குழந்தைகளிடையே அதிகம் காணப்படுகிறது. இக்குறைபாடே இளம் குழந்தைகள் மரணத்திற்கு முக்கிய காரணமாகிறது. ஊட்டச்சத்துக் குறைபாடு பிரச்சினைக்குத் தீர்வு காண, அரசும் பல்வேறு வகையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. எனினும், போதிய [...]

Vector image of healthy food and junk food kept on a table for comparison.

இந்தியாவின் பாரம்பரிய vs நவீன உணவுமுறைகள்

இந்தியர்களின் உணவுமுறை பாரம்பரியம் மற்றும் நவீனம் என இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில், இந்தியப் பாரம்பரிய உணவுமுறைக்கு என்று நீண்ட மற்றும் நெடிய வரலாறு உள்ளது. இந்த வகை உணவுமுறையினை, மக்கள் நீண்டகாலமாகப் பின்பற்றி வருகின்றனர். நவீன உணவுமுறையில், மக்களின் பயன்பாட்டிற்காக உணவு வகைகள் உருவாக்கப்படுகின்றன அல்லது பல்வேறு செயல்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன.குளிரூட்டப்பட்ட உணவு வகைகள், மைக்ரோவேவ் ஓவனில் செய்யப்பட்ட பாப்கார்ன், பேக்கிங் செய்யப்பட்ட குக்கீஸ் வகைகள் உள்ளிட்டவை, நவீன [...]

A table full of fruits and vegetables and other healthy food kept inside a kitchen and a woman writing diet plan for herself or a family member.

சரிவிகித இந்திய உணவுமுறையைத் திட்டமிடுதல்

பெரும்பாலான இந்தியர்கள் 30 வயதிற்கு முன்பே பல்வேறு உடல்நலக் குறைபாடுகளுக்கு ஆளாகின்றனர். இதற்கு முக்கிய காரணம் இன்றைய உணவுப் பழக்கமுறை என உறுதியாகக் கூறலாம்.. உடற்பருமன் அதிகம் உள்ள இளைய தலைமுறையினர் அதிகம் உள்ள முதல் 5 நாடுகளில், இந்தியா 3வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் 30 மில்லியன் அளவில் உடற்பருமன் கொண்டவர்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டு உள்ளது. இது மும்பை, டெல்லி மற்றும் பெங்களுரு நகரங்களின் மக்கள்தொகைக்குச் சமம் ஆகும். [...]

A healthy and fit woman in sport clothes with chocolate raw protein bar in one hand filling her meal plan.

ஆரோக்கியமான உணவை மதிப்பீடு செய்வது எப்படி?

நாம் சாப்பிடும் உணவுமுறை ஆரோக்கியமானதா என்பதைக் கண்டறிவது எளிதானது அல்ல. நாம் உட்கொள்ளும் உணவு வகைகள், அவற்றின் சத்துக்கள், மற்றும் உடலால் உட்கிரகிக்கப்படும் விதம் ஆகியவற்றை அறிய மதிப்பீடு முறைகள் அவசியம். ஒருவர் சாப்பிட்ட உணவின் அளவைத் துல்லியமாக அளப்பது நடைமுறையில் சாத்தியமில்லை. அவர் என்ன சாப்பிட்டார், எந்த அளவு சாப்பிட்டார் என்பதுடன், சாப்பிட்ட சூழ்நிலையையும் கணக்கில் எடுத்துக் கொள்வது அவசியம். குறிப்பிட்ட நபர் ஏதாவது உணவுமுறையைப் பின்பற்றுகிறாரா என்பதையும் [...]

Fruits, vegetables, dairy products, eggs, seeds, healthy fats and grains arranged on a wooden table depicting a Ovo-lacto vegetarian diet concept.

உடல் ஆரோக்கியம்: இந்திய உணவுமுறைச் சிறந்ததா?

இந்தியர்களிடையே அதிகரித்து வரும் உடற்பருமன், நீரிழிவு பாதிப்பு உள்ளிட்ட வாழ்க்கைமுறை நோய்கள் ஏற்படுவதற்கு உணவு வகைகளே முக்கிய காரணமா? இக்கேள்விக்கு ‘ஆம்’ என்ற பதிலே சாலப் பொருந்தும். இந்தியா தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் சர்வதேச அளவில் வளர்ச்சி அடைந்து வரும்போதிலும், ஃலைப்ஸ்டைல் நோய்கள் பாதிப்புகளிலும், நாம் மற்ற நாடுகளைவிட முன்னணியிலேயே உள்ளோம் என்பதே மறுக்கமுடியாத உண்மை. சர்வதேச அளவில் அதிக உடற்பருமனான இளம்வயதினர் உள்ள நாடுகளின் பட்டியலில், முதல் 5 [...]

Copyright © 2024 Health Design | All Rights Reserved.