கீல்வாத பாதிப்பின் ஆரம்ப கால அறிகுறிகளை அறிவோமா?
கீல்வாத பாதிப்பு என்பது, மருத்துவ நிலைமைகளில் இருப்பது ஒன்றாகும். பெரும்பாலான மக்கள் கீல்வாத பாதிப்பை அலட்சியப்படுத்துகிறார்கள். அவர்கள் பாதிப்புக்கு உள்ளாகும் வரை, அதன் முக்கியத்துவத்தை உணர்வதில்லை. ஆனால் பாதிப்பின் தீவிரம் அதிகரிக்கும்போது, அவர்கள் கடுமையான சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். கீல்வாத பாதிப்பை நிர்வகிப்பது என்பது நோயறிதல் காலத்தைப் பொறுத்து அமைகிறது. ஆரம்பக்கால நோயறிதல் நிகழ்வானது இங்கு இன்றியமையாததாகிறது. இதற்குக் கீல்வாத பாதிப்பின் ஆரம்பகால அறிகுறிகளைக் கூர்ந்து கவனம் செலுத்துவது அவசியம் ஆகும்.
ஆர்த்ரைட்டிஸ் எனப்படும் கீல்வாத பாதிப்பு
கீல்வாத பாதிப்பு என்பது மூட்டுகளின் அழற்சி நிலையாகக் கருதப்படுகிறது. இது மூட்டுகள் மற்றும் பிற இணைப்புத் திசுக்களைச் சுற்றி உள்ள திசுக்களைப் பாதிக்கிறது. இதனால், உங்கள் மூட்டுப்பகுதிகளில் வலி உணர்வு மற்றும் விறைப்பு ஏற்படுகிறது. கீல்வாத பாதிப்பானது, 100க்கும் மேற்பட்ட வகைகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளன. இதில் மிகவும் பொதுவானது முடக்கு கீல்வாதம் மற்றும் கீல்வாத பாதிப்பு ஆகும்.
கீல்வாத பாதிப்பு என்பது கீல்வாதத்தின் பொதுவான வகையானதாக உள்ளது. இது சர்வதேச அளவில், மில்லியன் கணக்கான மக்கள், இந்தப் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். மூட்டுப்பகுதிகளில் உள்ள குருத்தெலும்புகளில் நிகழும் தேய்மானமே, கீல்வாத பாதிப்பிற்குக் காரணமாக அமைகிறது. இந்தப் பாதிப்பானது முழங்கால்கள், இடுப்பு, கைகள் மற்றும் முதுகெலும்புப் பகுதிகளில் உள்ள மூட்டுகளைக் கடுமையான அளவிற்குப் பாதிக்கிறது. தற்போதைய நிலையில், இந்தப் பாதிப்பானது சர்வசாதாரணமாக, அனைத்து வயதினருக்கு ஏற்படும் பொதுவான பாதிப்பாக மாறிவிட்டது.
மூட்டு வலி பாதிப்பிற்கு என்று தனிப்பட்டதொரு சிகிச்சைகள் என்று எதுவும் இல்லை. ஆனால், பாதிப்பின் எச்சரிக்கை அறிகுறிகளை, முன்கூட்டியே அடையாளம் கண்டு, அதற்கேற்ற வகையிலான நடவடிக்கைகளைத் துரிதமாக எடுப்பதன் மூலம், அதன் தீவிரத்தை நம்மால் கட்டுப்படுத்த இயலும்.
கீல்வாத பாதிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்
மூட்டுப்பகுதிகளின் எலும்பு முனைகளில் உள்ள குருத்தெலும்புகள் சிதைவு ஏற்படுவதனாலேயே, கீல்வாத பாதிப்பு ஏற்படுகிறது. இதன்காரணமாக. எலும்புகள் மற்றும் இணைப்புத் திசுக்களில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.
சில காரணிகள், கீல்வாத பாதிப்பின் அபாயத்தை அதிகரிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன.
முதுமை
வயது அதிகரிக்க, அதிகரிக்கக் கீல்வாத பாதிப்பின் அபாயமும் தொடர்ந்து அதிகரிக்கிறது.
உடல் பருமன்
உடல் எடைத் தொடர்ந்து அதிகரிப்பதன் மூலம், எடையைத் தாங்கும் மூட்டுகள், அதிக அழுத்தத்தைச் சந்திக்கின்றன. மூட்டுப் பகுதிகளில் உள்ள கொழுப்புத் திசுக்கள், புரதங்களை ஒருங்கிணைத்து, மூட்டுப்பகுதிகளைச் சுற்றி வீக்கத்தை ஏற்படுத்துகின்றன.
பாலினம்
கால்சியம் குறைபாடு, பெண்களிடத்தே அதிகம் காணப்படுவது போல், கீல்வாத பாதிப்பும் அவர்களிடத்தே அதிகம் ஏற்படுகிறது.
மூட்டுக் காயங்கள்
விளையாட்டு அல்லது விபத்து நிகழ்வுகளின் போது ஏற்படும் காயங்கள், கீல்வாத பாதிப்பின் அபாயத்தைக் கணிசமாக அதிகரிக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டு, அது குணமடைந்த போதிலும், அது கீல்வாத பாதிப்பை அதிகரிக்கச் செய்வதாக உள்ளன.
மரபியல் மாறுபாடு
மரபியல் மாறுபாட்டின் காரணமாகவும், சிலருக்குக் கீல்வாத பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
மூட்டுப் பகுதிகளில் மீண்டும் மீண்டும் அழுத்தம்
மூட்டுப் பகுதிகளில் மீண்டும் மீண்டும் அழுத்தம் ஏற்படும்பட்சத்தில், அது உங்களுக்குக் கீல்வாத பாதிப்பிற்கு வழிவகுக்கும்
எலும்புகளில் குறைபாடுகள்
குருத்தெலும்புகளில் குறைபாடுகள் அல்லது மூட்டுகளின் அமைவில் ஏதேனும் தவறுகள் இருப்பின் அவைக் கீல்வாதம் ஏற்படுவதற்குக் காரணமாக அமைகின்றன.
வளர்சிதை மாற்ற நோய்ப்பாதிப்புகள்
நீரிழிவு மற்றும் ஹீமோகுரோமோட்டோசிஸ் உள்ளிட்ட வளர்சிதை மாற்ற நோய்ப்பாதிப்புகள், கீல்வாத பாதிப்பிற்குக் காரணமாக அமைகின்றன.
கீல்வாத பாதிப்பின் ஆரம்பகால எச்சரிக்கை அறிகுறிகள்
மூட்டு வலி (Joint Pain)
கீல்வாத பாதிப்பின் முதன்மையான அறிகுறியாக, மூட்டு வலி உள்ளது. இந்த வலிப் பாதிப்பின் தீவிரம் நபருக்கு நபர் மாறுபடும். மூட்டுப்பகுதிகளில் நிகழும் தேய்மானம், தசை இறுக்கம் உள்ளிட்ட நிகழ்வுகளின் காரணமாக, வலி உணர்வு ஏற்படுகிறது. வயது அதிகரிக்க, அதிகரிக்க, குருத்தெலும்புகள் மெல்லியதாகவும், வறண்டு, கடினமான தன்மையுடையதாக மாறும்.
மூட்டுகளின் இயக்கம் குறைதல்
கீல்வாத பாதிப்பானது, மூட்டுகளின் இயக்கங்களைக் கடுமையான அளவிற்குப் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. இதன்காரணமாக, உங்கள் முழங்கால்களின் இயக்கங்களிலும் பாதிப்புகள் ஏற்பட்டு, அதன் செயல்பாடுகள் குறைகின்றன.
காலை அசவுகரியம்
நாம் இரவில் உறக்கத்தில் இருக்கும்போது, மூட்டுகளுக்கு வேலை இல்லை. இந்த நிலையில், அவை வறண்டு, கடினமானதாக மாறுகிறது. இதனால், நீங்கள் காலையில் உறக்கத்தில் இருந்து எழுந்திருக்கும் போது, விறைப்பின் காரணமாக, மூட்டுகளில் வலி உணர்வு இருப்பதை உணர முடியும். சிறிதுநேரம் மூட்டுகளை அசைந்து கொடுக்கும்போது, அந்த விறைப்பு உணர்வு நீங்கி, திரவம் மூட்டுக் குழிக்குள் வரும்போது, வலி உணர்வானது குறையத் துவங்கும்.
ஓய்வுக்குப் பின் மூட்டுப்பகுதிகளில் விறைப்பு
ஓய்வுக்குப் பின் மூட்டுப்பகுதிகளில் விறைப்பு உணரு இருப்பின், அது கீல்வாத பாதிப்பின் அறிகுறியாகக் கருதப்படுகிறது. மூட்டுகளில் உள்ள சினோவியல் திரவம், அப்பகுதியில் ஏற்படும் உராய்வினைக் குறைக்கிறது. இந்தத் திரவம், மூட்டுகள் ஓய்வுநிலையில் இருக்கும்போது, ஜெலாட்டின் ஆக மாறுகிறது. இதன்காரணமாக, மூட்டு விறைப்பு உணர்வு ஏற்படுகிறது. நாம் மூட்டுகளை அசைக்கத் துவங்கிய உடன், கெட்டியாக இருந்த சினோவியல் திரவம், அதன் இயல்புத்தன்மையை அடைந்து விடுகிறது. இதனால், மூட்டு விறைப்பு நீங்குகிறது.
மூட்டுப்பகுதிகளில் இருந்து ஒலி எழும்புதல்
சிலருக்கு நீண்ட நாட்களுக்கு முன்பு மூட்டுப்பகுதியில் ஏற்பட்ட காயங்கள் குணமடைந்த போதிலும், தற்போது அந்தப் பகுதியில் வலி உணர்வு ஏற்படும். இது அப்பகுதி அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளது என்று அர்த்தம். இந்த அதிர்ச்சி நிகழ்வானது, கீல்வாத பாதிப்பின் அபாயத்தை மேலும் அதிகரிக்கச் செய்வனவாக உள்ளது. இது நாளடைவில், குருத்தெலும்பு அழிவிற்கு வழிவகுக்கிறது.
இடுப்பு வலி
இடுப்பு மூட்டுப் பகுதிகளில் ஏற்படும் வலு உணர்வானது, கீல்வாத பாதிப்பு ஏற்படுவதற்கான எச்சரிக்கை மணியாகக் கூட இருக்க வாய்ப்பு உள்ளது. கீல்வாத பாதிப்பானது, மேல் இடுப்பு அல்லது வெளிப்புறத் தொடைப்பகுதியில் வலி உணர்வை ஏற்படுத்துகின்றன.
ஒருபக்கத்தில் மட்டும் மூட்டு வலி
உடலின் ஒருபக்கத்தில் மூட்டு வலி இருப்பது கீல்வாத பாதிப்பிற்கான பொதுவான அறிகுறி ஆகும். மூட்டுகளில் உள்ள திரவம், வழவழப்புத்தன்மை, ஒரேமாதிரியாக இல்லாததன் காரணத்தினால், கீல்வாத பாதிப்பிற்கு உள்ளானவர்கள் ஒருபக்கத்தில் மட்டுமே மூட்டு வலியை அனுபவிக்கின்றனர்.
மேலும் வாசிக்க : கீல்வாதம் – சாப்பிட மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள்
கீல்வாத பாதிப்பின் அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?
கீல்வாத பாதிப்பின் அறிகுறிகளைக் கட்டுப்படுத்த, சில எளிய வழிமுறைகள் கீழே தொகுக்கப்பட்டு உள்ளன.
முட்டிகளை அதிகளவில் மடக்குதல், மூட்டுப் பகுதிகளை முறுக்குதல், அதீத நடைப்பயிற்சி உள்ளிட்டவற்றைத் தவிர்க்கவும்.
உடல் எடைப் பராமரிப்பு, மூட்டுகளில் விறைப்பு நீக்கம், வலி மற்றும் சோர்வு உணர்வைக் குறைத்தல், தசை மற்றும் எலும்புகளின் வலிமையை அதிகரித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு, குறைந்த தாக்க அளவிலான உடற்பயிற்சிகள் பேருதவி புரிகின்றன.
அதிக உடல் எடை நிலையானது, கீல்வாத பாதிப்பின் தீவிரத்தை அதிகப்படுத்தும் என்பதால், ஆரோக்கியமான உடல் எடையைப் பின்பற்றவும்.
மூட்டுகளுக்கு அவ்வப்போது ஓய்வு கொடுக்க வேண்டும். மூட்டுகளில் வீக்கம் அல்லது வலி இருப்பின், உடனடியாக மருத்துவரைக் கலந்தாலோசித்து, குறைந்தது ஒருநாளாவது அதற்கு ஓய்வு அளிக்க வேண்டியது அவசியம் ஆகும்.
இரத்தத்தில் சர்க்கரை அளவைச் சரியான அளவில் பராமரிக்க வேண்டும் : ஹைபர்டென்சன் எனப்படும் உயர் ரத்த அழுத்த பாதிப்பானது, குருத்தெலும்பு இழப்பைத் துரிதப்படுத்தி, அதனைக் கடினமானதாக மாற்றுகிறது. இதன்மூலம், எலும்பு இழப்பு நிகழ்வானது எளிதாகிறது. இது ஒட்டுமொத்த எலும்பு மண்டலத்தையும் பெரும்பாதிப்பிற்கு உள்ளாக்கிவிடுகிறது.
கீல்வாத பாதிப்பின் தீவிரத்தை முழுவதுமாக அறிந்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்தப் பாதிப்பில் இருந்து முழுமையான நிவாரணம் பெற, அதன் துவக்கக் கால அறிகுறிகள் தென்படும்பட்சத்திலேயே, உரிய மருத்துவரைக் கலந்தாலோசித்துத் தக்கச் சிகிச்சைப் பெறும்பட்சத்தில், இப்பாதிப்பு இல்லாத நல்வாழ்க்கையைச் சாத்தியமாக்கலாம்…