ஆரோக்கியமான உணவை மதிப்பீடு செய்வது எப்படி?
நாம் சாப்பிடும் உணவுமுறை ஆரோக்கியமானதா என்பதைக் கண்டறிவது எளிதானது அல்ல. நாம் உட்கொள்ளும் உணவு வகைகள், அவற்றின் சத்துக்கள், மற்றும் உடலால் உட்கிரகிக்கப்படும் விதம் ஆகியவற்றை அறிய மதிப்பீடு முறைகள் அவசியம்.
ஒருவர் சாப்பிட்ட உணவின் அளவைத் துல்லியமாக அளப்பது நடைமுறையில் சாத்தியமில்லை. அவர் என்ன சாப்பிட்டார், எந்த அளவு சாப்பிட்டார் என்பதுடன், சாப்பிட்ட சூழ்நிலையையும் கணக்கில் எடுத்துக் கொள்வது அவசியம். குறிப்பிட்ட நபர் ஏதாவது உணவுமுறையைப் பின்பற்றுகிறாரா என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
உணவு உட்கொள்ளலைக் கணக்கிட பல்வேறு முறைகள் இருந்தபோதிலும், எந்த ஒரு முறையும் முழுமையான தீர்வினைத் தந்ததில்லை. ஒவ்வொரு முறைக்கும் அதற்கே உரித்தான நன்மைகள் மற்றும் குறைபாடுகள் உள்ளன. மேலும், அது பயன்படுத்தப்படும் சூழ்நிலை, நோயாளியின் நிலை, மதிப்பீட்டாளரின் திறமை ஆகியவற்றைப் பொறுத்தே அதன் முடிவுகள் அமையும்.
உணவுமுறை மதிப்பீட்டு வழிமுறைகள்
உணவுமுறை மதிப்பீட்டை நேரடி மற்றும் மறைமுக வழிமுறைகளின் மூலம் மேற்கொள்ளலாம்:
- நேரடி வழிமுறை: முன்னர் மேற்கொண்ட உணவுமுறைகளின் தகவல்களைப் பயன்படுத்தி மதிப்பீடு செய்யப்படுகிறது.
- மறைமுக வழிமுறை: வழங்கப்படும் உணவு மற்றும் அதன் நுகர்வுத் தன்மை தொடர்பான விவரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
உணவு உட்கொள்ளலை மதிப்பீடு செய்வதும், உணவுமுறைகளைக் கண்காணிப்பதும் தகவல்களை வரைபடமாக மாற்ற உதவும்.
உணவுப் பதிவேடு:
- இரண்டு வார நாட்கள், வார இறுதி நாட்கள் அல்லது 3 நாட்களுக்கு மேற்கொண்ட உணவு வகைகள் மற்றும் அருந்திய பானங்கள் குறித்த தகவல்களைப் பதிவு செய்ய வேண்டும்.
- கடந்த 24 மணிநேரத்தில் உட்கொண்ட உணவுகள், அருந்திய பானங்களை நினைவுகூர வேண்டும்.
- ஓராண்டு காலமாக உட்கொண்டு வந்த உணவு வகைகள், அதன் அளவு, அருந்தி வந்த பான வகைகள் உள்ளிட்டவற்றைக் குறிப்பெடுக்க வேண்டும்.
உணவுப் பதிவேட்டின் பயன்பாடு:
- எந்த இடத்தில், எந்த நேரத்தில், எந்த வகை உணவுகளை உட்கொண்டீர்கள்? ( உதாரணமாக, வீட்டில் காலை உணவாகச் சாண்ட்விச், வேலைக்குச் செல்லும் வழியில், காரில் ஆப்பிள் சாப்பிடுவது, நண்பர்களுடன் காலை உணவு சாப்பிடுவது)
- உணவின் வகை மற்றும் தயாரிப்பு முறை என்ன? (உதாரணமாக, காய்கறிகளை வேகவைத்துத் தயாரிக்கப்பட்டதா? பழங்கள் நிறைந்த சாலட்)
- சாப்பிட்ட உணவு மற்றும் அருந்திய பானத்தின் அளவு என்ன?( 1 கப் தயிர் அல்லது ரொட்டித்துண்டுகளின் மீது தடவப்பட்ட 2 தேக்கரண்டி பாதாம் பட்டர்)
இந்த முறை உணவின் அளவு, தரம், ஆரோக்கியமற்ற சிற்றுண்டி, உடல் பாதிப்புகள், தயாரிப்புச் செலவு போன்ற விவரங்களை வழங்குகிறது.
ஒரு நபரின் சராசரி உட்கொள்ளல் விகிதத்தைக் கண்டறிய, குறைந்தது 3 முதல் 7 நாள்கள் கால அளவிலான தரவுகள் தேவை. இத்தரவுகள் கிடைத்தவுடன், உட்கொள்ளப்பட்ட காய்கறிகள், பழங்கள், முழுத்தானியங்கள் உள்ளிட்டவை ஆராயப்படும்.
மதிப்பீட்டு முறைகளின் பலம் மற்றும் பலவீனங்கள்:
1. 24 மணிநேர நினைவுகூரல்கள்:
கடந்த 24 மணிநேரத்தில் நாம் உட்கொண்ட உணவு வகைகள் மற்றும் பானங்களின் அளவுகள் மீதான மதிப்பீட்டு முறை ஆகும். வழக்கமான உட்கொள்ளல்கள் மற்றும் அதன் மாறுபாட்டைக் கணக்கிட, பல்வேறு நினைவுகூரல்கள் மேற்கொள்ளப்படுவது அவசியமாகின்றது.
பலம்:
- உணவு வகைகள் மற்றும் அளவுகள் குறித்த துல்லிய விவரங்கள்
- வழக்கமான உட்கொள்ளல்களை மதிப்பீடு செய்ய உதவுகிறது
- சூழ்நிலைத் தகவல்கள் சேகரிக்க முடியும்
- குறைந்த கால அளவே தேவை (20-30 நிமிடங்கள்)
பலவீனங்கள்:
- உணவின் அளவு குறித்த துல்லியமான நினைவுகூரலை அடிப்படையாகக் கொண்டுள்ளது
- ஊட்டச்சத்து மதிப்பைக் கணக்கிட அதிக செலவு ஏற்படும்
- பயிற்சி பெற்ற நிபுணர் தேவை
- தொடர் நினைவுகூரல்கள் பகுப்பாய்வு நேரத்தையும் செலவையும் அதிகரிக்கும்
2. அடிக்கடி கேட்கப்படும் உணவு தொடர்பான கேள்விகள்
சில வாரங்கள், மாதங்கள் மற்றும் ஆண்டுகள் எனப் பொதுவாக நீண்ட கால அடிப்படையிலான உணவு உட்கொள்ளலை, மதிப்பிடுவதற்கான வழிமுறையாக இது விளங்குகிறது. இந்த வழிமுறையில் தொகுக்கப்படும் தகவல்கள், குறைவானதாகவோ அல்லது நீண்டதாகவோ இருக்கும் வாய்ப்பு உள்ளது.
பலம்:
- நீண்ட கால உட்கொள்ளல்களை மதிப்பீடு செய்ய உதவுகிறது
- 24 மணிநேர நினைவுகூரல்களை விட குறைவான உழைப்பு தேவை
பலவீனங்கள்:
- நீண்ட கால உணவு உட்கொள்ளலை துல்லியமாக நினைவுகூர கடினம்
- பட்டியலிடப்பட்ட உட்கொள்ளலை மட்டுமே மதிப்பிடுகிறது
- ஊட்டச்சத்து உட்கொள்ளலை மதிப்பிட நம்பகமான வழிமுறை அல்ல
- தவறான தகவல்கள் வர வாய்ப்பு உள்ளது
3. உணவு வரலாறு
உணவுமுறைக் கட்டுப்பாடு, காலை உணவைத் தவிர்த்தல், உணவுப் பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட ஐயங்களை, பங்கேற்பாளரிடம் கேட்டு, நேர்காணல் நடத்துபவர்த் தெளிவு பெறுகிறார்.
பலம்:
- வழக்கமான உணவு மற்றும் ஊட்டச்சத்து உட்கொள்ளலை மதிப்பீடு செய்கிறது
- உணவு வகைகள், தயாரிப்பு முறைகள் குறித்த தகவல்களை அளிக்கிறது
- பங்கேற்பாளர்களுக்கு அதிக கல்வியறிவு தேவையில்லை
பலவீனங்கள்:
- நேர்காணல் நிகழ்த்துபவரின் திறனைப் பொறுத்து துல்லியம் மாறுபடும்
- பயிற்சி பெற்ற நேர்காணலாளர் தேவை
- தரவுகளைக் குறியீடுகளாக மாற்ற அதிக செலவு ஏற்படும்
மேலும் வாசிக்க : இந்தியர்களிடையே காணப்படும் ஃலைப்ஸ்டைல் நோய்கள்
உணவுப் பதிவேடுகள்
இந்த வழிமுறை, உணவுப் பதிவேடு என்று குறிப்பிடப்படுகிறது. இது, உணவு உட்கொள்ளல் மற்றும் பானம் அருந்துதலை மதிப்பீடு செய்வதற்கான வழிமுறையாக உள்ளது.
பலம்:
- முழுமையான விவரங்களை நினைவில் வைக்க வேண்டிய தேவையில்லை
- உணவுப் பொருட்கள் மற்றும் அளவுகளில் துல்லியம்
- வழக்கமான உட்கொள்ளல் மதிப்பீட்டிற்கும் பயன்படுத்தலாம்
- வெளியே சாப்பிட்ட உணவுகள் குறித்த தகவல்களும் கிடைக்கும்
பலவீனங்கள்:
- எடை மதிப்பிலான பதிவேடு பயன்படுத்துவது சிரமமாக இருக்கலாம்
- ஊட்டச்சத்து மதிப்பீட்டுக் கணக்கீடு அதிக விலை கொண்டது
- பங்குபெறுபவர்கள் கல்வியறிவு கொண்டவர்களாக இருத்தல் அவசியம்
இந்த மதிப்பீட்டு முறைகளைப் பயன்படுத்தி, நாம் சாப்பிடும் உணவு, அதில் உள்ள ஊட்டச்சத்துகள், உணவூட்ட முறை ஆகியவற்றை மதிப்பீடு செய்து கொள்ளலாம்.