கீல்வாதத்தை உடற்பயிற்சி மூலம் குணப்படுத்த இயலுமா?
கீல்வாத பாதிப்பு என்பது மூட்டு தொடர்பான மருத்துவப் பாதிப்பு ஆகும்.
கடுமையான வலி, வீக்கம், எந்தவொரு செயல்பாட்டையும் மேற்கொள்ள இயலாத வகையிலான வெறுப்பு உள்ளிட்டவை, இதன் அறிகுறிகளாக வகைப்படுத்தப்படுகிறது. இந்திய மக்கள்தொகையில் 22 முதல் 39 சதவீதத்தினர்க் கீல்வாத பாதிப்பால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த எண்ணிக்கை, 1990ஆம் ஆண்டில் இருந்ததைவிட, கிட்டத்தட்ட 2 மடங்கு அதிகரித்து உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
கீல்வாத பாதிப்பு நோயாளிகள், உடற்பயிற்சியை எவ்வாறு தொடங்க வேண்டும்?
நம் உடல் உற்சாகமாகச் செயல்பட, உடற்பயிற்சி மிகவும் இன்றியமையாததாக உள்ளது. ஆனால், நம்மில் பலருக்கு உடற்பயிற்சியை எவ்வாறு தொடங்க வேண்டும் என்பது தெரியாமல் உள்ளோம். நமக்கு ஏற்ற உடற்பயிற்சிகளைத் தேர்ந்தெடுப்பது சவாலானது. நீங்கள் மேற்கொள்ளும் உடற்பயிற்சிகள், உங்கள் உடலுக்குத் தீங்கு இழைப்பவையாக இருக்கக் கூடாது. உடலுக்கு உகந்த பயிற்சிகளை அடையாளம் கண்டு, பின்னர் ஒவ்வொரு நாளும் மீண்டும் மீண்டும் செய்வது 3 முதல் 5 நிமிட கால அளவிலான வழக்கத்தை, பலமுறைச் செய்ய வேண்டும். உங்களுக்குச் சௌகரியமாக இருந்தால், பயிற்சியின் அளவை அதிகரிக்கலாம். உங்கள் உடலுக்கு ஏற்ற வகையிலான உடற்பயிற்சியைத் தேர்ந்தெடுக்க, உடல் சிகிச்சை அல்லது உடற்பயிற்சி நிபுணரிடம் கலந்துரையாடி ஆலோசனையைப் பெற்று, அதன்படி நடந்துகொள்வது நல்லது.
குறைந்த தாக்கப் பயிற்சிகள்
வேகமான நடைப்பயிற்சி, யோகா, நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், எளிமையான நடன அசைவுகள், ஏரோபிக்ஸ் பயிற்சிகள் உள்ளிட்டவை, குறைந்த தாக்கப் பயிற்சிகளில் அடங்கும்.
உடற்பயிற்சியில் மாற்றங்கள்
உடற்பயிற்சிகளைச் செய்வதற்கு முன்னர், நீட்சிப்பயிற்சிகளை மேற்கொள்வது உள்ளிட்ட சிற்சில மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம், கீல்வாத பாதிப்பிற்கு உரிய தீர்வை விரைந்து காண இயலும்.
நீட்சிப்பயிற்சியின் முக்கியத்துவம்
உடற்பயிற்சிகளைத் துவக்குவதற்கு முன்பு, உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும் வகையிலான நீட்சிப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம், மூட்டுகள் உயவூட்டப்படுவதுடன், அதன் இயக்க வரம்பையும் மேம்படுத்த முடியும். உடற்பயிற்சிகளை முடித்த பின்னரும், நீட்சிப்பயிற்சியை மேற்கொள்வது சிறந்த நடைமுறை ஆகும். இதன்மூலம், உடல் குளிர்விக்கப்படுகிறது.
கீல்வாத பாதிப்பிற்குத் தீர்வு அளிக்கும் யோகாப் பயிற்சிகள்
பூனை-மாடு போஸ், கீழ்நோக்கிய நிலையிலான நாய் போஸ், முக்கோண போஸ், பிரிட்ஜ் போஸ், போர்வீரன் போன்ற போஸ், உட்கார்ந்த முதுகெலும்பு திருப்பம், நாகப்பாம்பு போஸ் மற்றும் நாற்காலி போஸ் ஆகியவைக் குறைந்த தாக்க யோகா ஆசனங்களுக்குச் சில சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும். இவ்வகை ஆசனங்கள் கீல்வாத பாதிப்பால் ஏற்படும் வலியைக் குறைக்கவும், மூட்டுகளின் இயக்க வரம்பை மேம்படுத்தவும் உதவுகின்றன.
நீர் அடிப்படையிலான உடற்பயிற்சிகள்
நீர்ச் சார்ந்த ஏரோபிக்ஸ் பயிற்சிகள், நடைப்பயிற்சி, புஷ் அப்கள், தண்ணீரில் சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட பயிற்சிகள் அனைவராலும் எளிதாக மேற்கொள்ளக் கூடியது ஆகும். இந்தப் பயிற்சிகளில், நாம் நீரில் நீண்டநேரம் மிதப்பதால், உடலில் ஏற்படும் உராய்வு குறைந்து, வலி உணர்வானது குறைகிறது. இதன்காரணமாக, வாழ்க்கைத்தரம் மேம்படுகிறது.
வலிமையை அதிகரிக்கும் வகையிலான பயிற்சிகள்
கீல்வாத பாதிப்பிற்கு உள்ளானவர்கள்
- உங்கள் உடலமைப்புக்கு ஏற்ற வகையிலான உடற்பயிற்சிகளை வடிவமைக்கச் சரியான உடற்பயிற்சி நிபுணரை நாட வேண்டும்.
- உடலுக்கு வலிமை அளிக்கவல்லப் பயிற்சிகளை உடனடியாகத் துவக்கிவிடக் கூடாது. சரியான வார்ம் – அப் பயிற்சிகளை மேற்கொண்ட பிறகே, வலிமைப் பயிற்சிகளைத் துவங்கவும்.
- மூட்டுப்பகுதி வீக்கம் அடைந்து இருந்தால், வலிமைப் பயிற்சிகளை மேற்கொள்ளக் கூடாது. வீக்கம் குறையும் வரை, காத்திருந்து பின் பயிற்சியைத் துவங்கவும்.
- உடல் இயக்கத்தைக் கவனமாகக் கண்காணிக்கவும். வலி ஏற்பட்டால், உடனே பயிற்சியை நிறுத்தவும்.
மேலும் வாசிக்க : கீல்வாத பாதிப்புக்கும், மன ஆரோக்கியத்திற்கும் தொடர்பு
உடற்பயிற்சி மேற்கொள்வதனால் கிடைக்கும் நன்மைகள்
மூட்டு வலியால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு உடற்பயிற்சி, சிறந்த தீர்வினை அளிப்பதாக உள்ளது. அவர்கள் உடற்பயிற்சி மேற்கொள்வதால், பின்வரும் நன்மைகள் விளைகின்றன.
வலி மற்றும் விறைப்பு உணர்வு குறைதல்
உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம், மூட்டுகளின் மேற்பரப்புகளைச் சூடேற்றவோ அல்லது மசாஜ் செய்யவோ உதவுகிறது. இதன்மூலம், மூட்டுகளில் ஏற்படும் விறைப்பைத் தடுக்க உதவுகிறது.
வலுவான தசைகள்’
உடல் தசைகளுக்குப் போதிய வலிமை இல்லாதபோது, உடல் தளர்ச்சியாகவும், மூட்டுகளில் திடத்தன்மை இன்றியும் இருக்கும். நம் உடலின் பெரும்பாலான செயல்பாடுகள், மூட்டுகளின் உதவியுடனேயே நடைபெறுகின்றன. வலிமைக் குன்றிய தசைகள், வலிப்பாதிப்புக்கு வழிவகுக்கிறது. போதிய உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம், தசைத் திசுக்களுக்கு உரிய கவனம் செலுத்தப்படுகிறது. இது உடலின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துவதற்கும், வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகளின்போது, செயல்பாடுகள் தங்குதடையின்றி நடைபெறவும் உதவுகிறது.
உடலின் நெகிழ்வுத்தன்மை அதிகரிப்பு
மூட்டுகளின் வரையறுக்கப்பட்ட அளவிலான செயல்பாடுகளை மேலும் மேம்படுத்த உடற்பயிற்சிகள் உதவுகின்றன. காயங்கள் ஏற்படுவதற்கான அபாயங்களைக் குறைக்கிறது.
ஆரோக்கியமான உடல் எடையை நிர்வகித்தல்
உடற்பயிற்சிகளைத் தவறாமல் மேற்கொள்வதன் மூலம், ஆரோக்கியமான உடல் எடையை நிர்வகிக்க முடியும். இதன்மூலம் மூட்டு அழற்சிப் பாதிப்பைத் திறம்பட கட்டுப்படுத்த இயலும்.
வலுவான எலும்புகள்
யோகா, சைக்கிள் ஓட்டுதல். நீச்சல் உள்ளிட்ட உடற்பயிற்சிகள் எலும்புகளின் அடர்த்தியைப் பராமரிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. இதன்மூலம், ஆஸ்டியோபோரோசிஸ் உள்ளிட்ட நோய்ப்பாதிப்புகளைத் திறம்பட கட்டுப்படுத்த முடியும். இதுமட்டுமல்லாது, கீல்வாத பாதிப்பின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் பெருமூளை ஈடுபாட்டின் அளவை அதிகரிக்க, இந்த வகை உடற்பயிற்சிகள் உதவுகின்றன.
மேற்குறிப்பிட்ட உடற்பயிற்சிகளைத் தினசரி தவறாமல் மேற்கொண்டு, ஆர்த்ரைடிஸ் எனப்படும் கீல்வாத பாதிப்பில் இருந்து பூரண நலம் அடைந்து, ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வோமாக…