கீல்வாத நிவாரணத்தில் புதிய சிகிச்சை முறைகளின் பங்கு
சர்வதேச அளவில் மில்லியன் கணக்கான மக்கள், கீல்வாத பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். வல்லரசு நாடான அமெரிக்காவில் மட்டும் 58 மில்லியன் மக்கள், இந்தப் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். இதன்காரணமாக, அந்நாட்டில் வேலை இயலாமை நிகழ்வு, முக்கியக் காரணியாக உள்ளது. கீல்வாத பாதிப்பானது, உடல்ரீதியாக மட்டுமல்லாது, உணர்ச்சிரீதியாகவும் கடுமையாகப் பாதிக்கிறது. கீல்வாத பாதிப்பினால் ஏற்படும் வலியை எவ்வாறு நிர்வகித்து, வாழ்க்கைத்தரத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை ஆராய்வது சிறந்தது.
கீல்வாத பாதிப்பின் மூலம், உங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்க்கையும் பெரும்பாதிப்பிற்கு உள்ளாகிறது. எனவே, உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்வதன் மூலம், முதுமையிலும் சுறுசுறுப்பாகவும், திடகாத்திரமாகவும், மற்றவர்களின் உதவியின்றி வாழ இயலும்.
கீல்வாத பாதிப்பிற்கு, அறுவைச் சிகிச்சைகளின் மூலம் மட்டுமே சிகிச்சை அளிக்க இயலும் என்ற நிலை மாறி, அறுவைச் சிகிச்சை அல்லாத சிகிச்சை முறைகளின் மூலமும், கீல்வாத பாதிப்பிற்குத் தீர்வு காண இயலும்.
அறுவைச் சிகிச்சை அல்லாத சிகிச்சை முறைகள்
கீல்வாத பாதிப்பிற்குத் தீர்வு காண உதவும் அறுவைச் சிகிச்சை அல்லாத சிகிச்சை முறைகள் இங்கே பட்டியலிடப்பட்டு உள்ளன.
உடலியக்கச் சிகிச்சை
கீல்வாத பாதிப்பானது, மூட்டுப் பகுதிகளில் வலி, வீக்கம் மற்றும் விறைப்புத் தன்மையை ஏற்படுத்துகிறது. சரியான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதின் மூலம், மூட்டுப் பகுதிகளில் ஏற்படும் விறைப்பு உணர்வைத் திறம்பட நிர்வகிக்க இயலும். இதன்மூலம், வலி மற்றும் வீக்க உணர்வானது கட்டுப்படுத்தப்படுகிறது. நீண்ட நேரமாக அசைவற்ற நிலையில் இருத்தல் நிகழ்வானது, மூட்டு ஆரோக்கியத்தைக் கடுமையாகப் பாதிக்கிறது. இது அதீத வலி நிலையை ஏற்படுத்துகிறது.
உடலியக்கச் சிகிச்சை நிபுணர்கள் உங்களுக்கு ஏற்ற உடற்பயிற்சித் திட்டங்களை வழங்குவர். இது உடலின் இயக்கம் மற்றும் செயல்பாடுகளை மேம்படுத்தும்.
மூட்டுகளின் இயக்கங்கள்,
தசை வலிமை மேம்பாடு,
உடலின் நெகிழ்வுத்தன்மை அதிகரிப்பு,
உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு,
உள்ளிட்ட நேர்மறை விளைவுகளுக்கு உடலியக்கச் சிகிச்சையானது பேருதவி புரிவதோடு மட்டுமல்லாது, மூட்டு சேதத்தையும் பெருமளவு குறைக்கிறது.
மேலும் வாசிக்க : மூட்டுவலி நிவாரணத்தில் சமீபத்திய சிகிச்சைகளின் பங்கு
மருந்துமுறைகள்
அழற்சி எதிர்ப்பு மருந்துகள், கீல்வாத பாதிப்பினால் ஏற்படும் வலி உணர்வு தீவிரமடைவதைத் தடுக்க உதவுகிறது. Rheumatoid Arthritis எனப்படும் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு, நோயின் பாதிப்பைத் தீவிரமாவதைத் தடுக்கும் முடக்குவாத தடுப்பு மருந்துகள், மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன.
மூட்டுக்களில் செலுத்தப்படும் ஊசிகள்
மூட்டுப்பகுதிகளில் ஊசி மூலம் செலுத்தப்படும் மருந்துகள், கீல்வாத பாதிப்பினால் ஏற்படும் வலியின் தீவிரத்தைக் குறைக்கவல்ல அறுவைச் சிகிச்சை அல்லாத சிகிச்சைத் தேர்வு ஆகும். மூட்டு வலி மற்றும் வீக்கப் பாதிப்பைக் குறைக்க, கார்டிகோஸ்டீராய்டு மருந்து, மூட்டுகளில் ஊசி மூலம் நேரடியாகச் செலுத்தப்படுகிறது.
முழங்கால் பகுதியில் கீல்வாத பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கு, விஸ்கோசப்ளிமெண்டேசன் ஊசி மருந்துகள் பரிந்துரைச் செய்யப்படுகிறது. இந்த ஊசிமருந்தில், ஹைலுரோனிக் அமிலம் (HA) ஜெல் உள்ளது. HA என்பது மூட்டுகளில் இயற்கையாகவே காணப்படும் உயவுப் பொருள் ஆகும். முழங்காலில் HA மருந்தைச் செலுத்துவதன் மூலம் மூட்டுப்பகுதிகள் இயற்கையாகவே உயவு செய்வதன் மூலம், உராய்வு மற்றும் வலி உணர்வு கட்டுப்படுத்தப்படுகிறது.
ரேடியோ அலைகளின் வெப்ப நீக்கம்
நீண்ட கால நிவாரணத்திற்கு, ரேடியோ அலைகளின் வெப்ப நீக்க முறையைப் பரீட்சித்துப் பார்க்கலாம். இந்த முறையிலான வலி மேலாண்மைச் சிகிச்சையானது, மூட்டு ஆரோக்கியத்திற்கு உகந்த முறை அல்ல என்றபோதிலும், மூளைக்கு வலி தொடர்பான செய்திகளை அனுப்பும் நரம்புகளை நீக்குகிறது.
இந்தச் செயல்முறையானது, குறைந்தபட்ச ஆக்கிரமிப்பு செயல்முறையாகும். இந்தச் சிகிச்சைமுறையானது, கீல்வாத பாதிப்பிற்கு, சுமார் ஆறு மாத கால அளவிலான நிவாரணத்தை வழங்குகிறது. இந்தச் சிகிச்சைமுறையின் மூலம், முழங்கால்கள் போன்ற பெரிய மூட்டுகள் அல்லது முதுகெலும்பில் உள்ள முக மூட்டுக்கள் போன்ற சிறிய மூட்டுகளுக்கும் உரிய சிகிச்சையை வழங்க இயலும்.
கீல்வாத பாதிப்பிற்கு விரைவில் சிகிச்சையைத் தொடங்குவதன் மூலம், முழுமையான தீர்வை, உரிய நேரத்தில் பெற இயலும். இதன்மூலம், மூட்டு ஆரோக்கியத்திற்காக மூட்டு அறுவைச் சிகிச்சையின் தேவையைத் தவிர்க்கும் அல்லது அதன் தேவையை நாம் மேற்கொள்வதைத் தாமதப்படுத்திக் கொள்ள இயலும்.இந்தச் சிகிச்சை முறை, வலி பாதிப்பைக் குறைப்பது மட்டுமல்லாது, மூட்டு ஆரோக்கியத்திற்கும் மிகவும் உகந்ததாக உள்ளது.
மேற்குறிப்பிட்ட சிகிச்சை முறைகளைக் கவனமாகப் பின்பற்றி, கீல்வாத பாதிப்பில் இருந்து முழுமையான நிவாரணம் பெற்று, ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வோமாக..