Rear view of a body builder flexing his biceps.

தசையின் வலிமை அதிகரிப்பு – உங்கள் பட்ஜெட்டிலேயே!

உடல் தசைகளின் வளர்ச்சி மற்றும் வலிமையை அதிகரிப்பது என்பது விலைமதிப்புமிக்க நிகழ்வாகச் சிலருக்குத் தோன்றலாம். வெளிநாட்டு உபகரணங்கள் மட்டுமே இதற்குத் தேவை என்ற நிலை இப்போது இல்லை. உங்கள் உடற்பயிற்சி இலக்குகளை எட்ட, ஆடம்பரமான உடற்பயிற்சிக் கூடங்கள் அவசியமில்லை. உங்கள் பட்ஜெட்டிலேயே, தசைகளின் வலிமையை எளிதாக அதிகரிக்க முடியும். இந்தியாவில் பின்பற்றப்படும் வளமான உணவு மரபுகளின் மூலமாக இது சாத்தியமாகி உள்ளது. புரதத்தின் ஆற்றல் இக்கணத்தில், ஜிம்களில் விற்கப்படும் புரோட்டீன் [...]

Two young women sitting on the floor doing yoga/exercise in a family lounge.

உடற்பயிற்சி பழக்கத்தை மீண்டும் துவங்குகிறீர்களா?

நாம் வாழ்க்கையின் ஒருகட்டத்தில் இருந்து மற்றொரு கட்டத்திற்கு முன்னேறிச் செல்லும் காலகட்டத்தில், உடற்பயிற்சியை நிறுத்தும் சூழ்நிலை ஏற்படலாம். இது அனைவருக்கும் இயல்பாகவே நடக்கும் நிகழ்வுதான் ஆகும். புதிய வேலை, தினசரி அட்டவணை, மன அழுத்தம், குடும்பப் பொறுப்புகள் போன்றவை உடற்பயிற்சியைத் தடுக்கலாம். வியர்வைச் சொட்டும் அளவிற்கு உடற்பயிற்சிகள் மேற்கொள்வது எல்லாம், இப்போது நினைவுச் சின்னங்களாக மாறிவிட்டன. நின்றுபோன உடற்பயிற்சியை மீண்டும் துவங்கும் யோசனை என்பது, சிலருக்கு அச்சுறுத்தல் நிறைந்ததாகவும், மன [...]

Top side view if a woman sitting on a yoga mat in a gym, holding a mobile displaying a fitness app and dumb bells placed near the mat.

உடற்பயிற்சி இலக்குகளைக் கண்காணிக்கும் செயலிகள்

உடல் ஆரோக்கியமாக வைத்திருக்கும் நிகழ்வு என்பது முக்கியமானது மட்டுமல்ல, மிகவும் அத்தியாவசியமானதும் ஆகும். கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் தான், நாம் இந்தப் படிப்பினையைக் கற்றுக் கொண்டோம். சரியான ஊட்டச்சத்துகள் கொண்ட உணவுமுறை, உடற்பயிற்சி செய்வதைத் தொடர்ந்து வழக்கமாக்கிக் கொள்வதன் மூலம், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும். உடற்பயிற்சியைக் கண்காணிக்கச் செயலிகள் அவசியமா? இன்றைய நவீன உலகில், நாம் தனிப்பட்ட அல்லது தொழில்சார்ந்த எவ்வித நடவடிக்கைகளானாலும்,பரிபூரணத்தை நாடுகிறோம்.. இந்த நிலையை [...]

A sad overweight woman standing in front of a white background, checking her waist size with a measuring tape held around her waist.

உடற்பயிற்சி எந்தளவிற்கு முக்கியமானது – அறிவோமா?

உடல் ஆரோக்கியம் மேம்பட உடற்பயிற்சி நிகழ்வானது சிறந்த வழிமுறையாகச் செயல்படுகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால், மக்களின் சோம்பேறித்தனத்தின் காரணமாக, அவர்கள் உடற்பயிற்சி நிகழ்வைத் தவிர்ப்பதால், பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இளம் வயதினர் வாரத்திற்கு 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சியும், 75 நிமிடங்கள் தீவிர உடற்பயிற்சியும் செய்ய வேண்டும்.உடற்பயிற்சி பழக்கமானது உடலுக்கு மட்டுமல்லாது மன ஆரோக்கியத்திற்கும் உதவுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. உடற்பயிற்சிகளைத் தவறாது மேற்கொள்வதன் மூலம் [...]

Interior view of a modern gym with a wide window, containing treadmill and other sport equipments.

உடல் வலிமையை அதிகரிக்க உதவும் பயிற்சி உபகரணங்கள்

நாம் உடல்நலத்தில் கவனம் செலுத்தினால், பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சைப் பெறலாம். இதனால் முழுமையான நிவாரணம் கிடைக்கும். உடல்நலத்தைக் காக்கும் பொருட்டு, பெரும்பாலானோர், தாங்கள் வசிக்கும் வீடுகளிலேயே உடற்பயிற்சிக் கூடத்தை அமைத்துக் கொள்கின்றனர். வெகுசிலரோ, ஜிம்மிற்குத் தினந்தோறும் சென்று, உடல்நல ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையிலான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். வீடு மற்றும் ஜிம்மில் நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு வகை உடற்பயிற்சிகளும், நம் உடலின் ஒவ்வொரு பாகத்தைப் பேணிப் பாதுகாக்க உதவுகின்றன. [...]

Rear view of a young woman sitting on a chair in a room making her workout schedule in a notebook and a water bottle kept near her.

தனிப்பட்ட உடற்பயிற்சித் திட்டத்தை உருவாக்குவோமா?

ஒருவரின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி மிக முக்கியமானது. தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும். ஆரோக்கியமான வாழ்க்கை வாழ, சரியான உடற்பயிற்சி திட்டம் மிகவும் அவசியமான ஒன்றாக அமைகிறது. சீரான உடற்பயிற்சி முறையானது, நம்மை எப்போதும் இளமையுடனும், மிகுந்த சுறுசுறுப்பு உணர்வுடனும் வைத்திருக்க உதவுகிறது. உடற்பயிற்சி பழக்கம், நமக்குச் சரியான உறக்கப் பழக்கத்தை வழங்கி, செயல்திறனை அதிகரிக்கச் செய்து, நம்மை [...]

Vector image of two men and a woman doing work out in a gym.

உங்களின் உடற்தகுதியை நீங்களே கண்காணிக்கத் தயாரா?

உடற்தகுதி என்பது ஒருவரின் வாழ்க்கைமுறை நடவடிக்கைகளை எளிதாக மேற்கொள்ளும் திறன் ஆகும். இது உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகளை திறம்பட எதிர்கொள்வதற்கான தகவமைப்பையும் குறிக்கிறது. உங்களது உடற்தகுதியை, கீழ்க்கண்ட முறைகளின் மூலம் நாம் எளிதாகக் கண்காணிக்க இயலும். உடல்வாகு ஒருவரின் உடல்வாகு அல்லது உடல் அமைப்பு என்பது, உங்களது உடலில் உள்ள ஒட்டுமொத்த கொழுப்புச் சதவீதத்தைத் தீர்மானிக்கின்றது. ஒருவரின் உடல் ஆரோக்கியமாக உள்ளது என்று வைத்துக் கொண்டால், அவரது உடலில், [...]

Close up image of a fat and overweight man measuring his waist using a measuring tape.

போதிய உடற்பயிற்சிகள் இல்லாததால் ஏற்படும் நோய்கள்

உடற்பயிற்சியின் நன்மைகள் தெரிந்தும், மக்கள் அதை அன்றாட பழக்கமாக ஏற்க தயங்குகின்றனர். போதிய அளவிலான உடற்பயிற்சிகள் மேற்கொள்ளாததால், நமது உடல் ஆரோக்கியத்திற்குத் தீங்கு ஏற்படுத்தும் வகையிலான பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. கொரோனா பெருந்தொற்று காரணமாக, வீட்டிலிருந்தே வேலை செய்யும் முறை அறிமுகமானது அனைவருக்கும் மகிழ்ச்சி அளித்தது.அலுவலகத்திற்குச் செல்லுதல், அங்கு மாடிப்படிகளில் ஏறுதல், அங்கும் இங்கும் நடத்தல், பணி முடிந்தபின் மீண்டும் வீட்டிற்குத் திரும்புதல் உள்ளிட்ட உடல் உழைப்புகளாவது [...]

A male fitness instructor assisting his female client in lifting weight inside a modern gymnasium.

உடல் செயல்திறனை அதிகரிக்கும் செயல்பாட்டுப் பயிற்சிகள்

இன்றைய இளம்தலைமுறையினர் மற்றும் ஐ.டி.துறைகளில் பணிபுரிபவர்களில் பெரும்பாலானோர், நாளின் பெரும்பகுதியை, ஜிம்களிலேயே செலவழித்து வருகின்றனர். அந்தளவிற்கு, அவர்களின் வாழ்க்கையில், உடற்கட்டை மேம்படுத்திக் கொள்வது அத்தியாவசியமானதாக உள்ளது. நாம் உடற்பயிற்சி மேற்கொள்வதற்காக ஜிம்மிற்குச் சென்றால், அங்கு இளம்தலைமுறையினரைக் காணலாம். அவர்களில் பெரும்பாலானோர் மூட்டு இணைப்புகள் மற்றும் தசைகளுக்கு வலுவூட்டும் இயந்திரங்கள் அல்லது அதிக எடைகளைப் பயன்படுத்தி பயிற்சிகளை மேற்கொள்வர்.இத்தகையப் பயிற்சிகள், அவர்களுக்கு உரியப் பலனை அளிக்கும் என்றபோதிலும், ஜிம்மிற்கு வெளியே, இந்தப் [...]

Copyright © 2024 Health Design | All Rights Reserved.