போதிய உடற்பயிற்சிகள் இல்லாததால் ஏற்படும் நோய்கள்
உடற்பயிற்சியின் நன்மைகள் தெரிந்தும், மக்கள் அதை அன்றாட பழக்கமாக ஏற்க தயங்குகின்றனர். போதிய அளவிலான உடற்பயிற்சிகள் மேற்கொள்ளாததால், நமது உடல் ஆரோக்கியத்திற்குத் தீங்கு ஏற்படுத்தும் வகையிலான பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. கொரோனா பெருந்தொற்று காரணமாக, வீட்டிலிருந்தே வேலை செய்யும் முறை அறிமுகமானது அனைவருக்கும் மகிழ்ச்சி அளித்தது.அலுவலகத்திற்குச் செல்லுதல், அங்கு மாடிப்படிகளில் ஏறுதல், அங்கும் இங்கும் நடத்தல், பணி முடிந்தபின் மீண்டும் வீட்டிற்குத் திரும்புதல் உள்ளிட்ட உடல் உழைப்புகளாவது [...]