தலைவலி – எச்சரிக்கை அறிகுறிகளை அறிவோமா?
தலைவலி என்பது, பெரும்பாலான மக்கள் அனுபவிக்கும், பொதுவான உடல்நலப் பாதிப்பு ஆகும். அனைவரும் வாழ்நாளில் ஒருமுறையேனும் தலைவலியை அனுபவித்திருப்பர். உடல் பாதிப்புகளின் முதல் அறிகுறியாகத் தலைவலி வெளிப்படும்.
தலைவலி ஏற்படுவதற்கு, நீண்ட, நெடிய காரணங்கள் உள்ளன. அதில் முதன்மையானதாக, மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி உணர்வும், மன அழுத்த பாதிப்பும் கருதப்படுகின்றன. பெரும்பாலான தலைவலிகள் தீவிரமானவை அல்ல. எனினும், மருத்துவர்கள் இதனை அடிப்படை உடல்நலப் பிரச்சினையாகக் கருதி பரிசோதிப்பர்.
தலைவலி என்பது என்ன?
தலை அல்லது முகப் பகுதியில் ஏற்படும் விரும்பத்தகாத நிலையே, தலைவலி உணர்வாக வரையறுக்கப்படுகிறது. இது பெரும்பாலும் அழுத்தம், துடிப்பு, மந்தம் உள்ளிட்ட உணர்வுகளாக, தலைவலி வெளிப்படுத்தப்படுகிறது. இது வலியின் தன்மை, அதன் பாதிப்பு நிலை, பாதிக்கப்பட்ட பகுதி உள்ளிட்டவைகளின் தன்மையைப் பொறுத்து அதன் தீவிரம் வேறுபடலாம்.
தலைவலி உணர்வை அனுபவிக்காத மனிதர்களே, இந்த உலகத்தில் இல்லை எனலாம். பெரும்பாலான மக்கள், தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை அந்த வலி உணர்வுடனேயே கழித்து வருகின்றனர். இந்த வலிப்பாதிப்பிற்கு, மருத்துவ உதவி ஒன்றே சரியான தீர்வு ஆகும்.
தலைவலியின் வகைகள்
தலைவலி பாதிப்பானது, 150க்கும் மேற்பட்ட வகைகளாக வகைப்படுத்தப்பட்டு இருப்பினும், அவை அனைத்தும் முதன்மை மற்றும் இரண்டாம் நிலைப் பிரிவுகளில் அடங்குகின்றன.
முதன்மைத் தலைவலி (Primary Headaches)
தலையின் வலி உணர்திறன் கட்டமைப்புகளில், செயலற்ற அல்லது அதீதச் செயல்பாட்டின் காரணமாக, இந்த வகைத் தலைவலி பாதிப்பானது உருவாகிறது. அது அடிப்படை மருத்துவ நிலையின் அறிகுறியாகக் கருதப்படுவதில்லை. இந்த வகைத் தலைவலி பாதிப்புகள், சிலருக்கும் மரபணுக் காரணிகள் வாயிலாகவும் ஏற்படுகின்றன.
பதட்டம் காரணமாக ஏற்படும் தலைவலி – இது பெரும்பாலான மக்களிடம் காணப்படும் பொதுவான முதன்மைத் தலைவலி பாதிப்பு ஆகும்.
ஒற்றைத் தலைவலி – இந்த வகைத் தலைவலியில், வலியின் பாதிப்பு அதிகமாக இருப்பதோடு, மற்ற அறிகுறிகளுக்கும் இது காரணமாக அமைகின்றன.
கொத்து (cluster) தலைவலி – இது கடுமையான வலி கொண்டதாக இருக்கும்.
இப்பாதிப்பிற்கான காரணங்கள்
- ரெட் ஒயின் உள்ளிட்ட மதுபானங்களின் பயன்பாடு
- நைட்ரேட்கள் அதிகம் உள்ள உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்
- புகையிலைப் பயன்பாடு
- சரியான அளவிற்கு உறங்காமை அல்லது போதிய ஓய்வு எடுக்காத நிலை
- உடல் தோரணையைச் சரியாகப் பராமரிக்காமல் இருத்தல்
- அதி தீவிர உடற்பயிற்சி நடவடிக்கைகள்
- ஊட்டச்சத்துக் குறைபாடு, உணவுகளைத் தவிர்த்தல்
- இருமல், தும்மல் அடிக்கடி ஏற்படுபவர்கள்
இரண்டாம் வகைத் தலைவலிப் பாதிப்பு
இந்த வகைப் பாதிப்பானது, அடையாளம் காணக்கூடிய வகையிலான அடிப்படை மருத்துவ நிலையில் இருந்து உருவாகிறது. இந்தத் தலைவலி உணர்வானது, சில நோயியல் செயல்முறையின் அறிகுறியாகத் திகழ்கின்றன.
- உடலின் நீரிழப்பு காரணமாக ஏற்படும் தலைவலி
- சைனஸ் தொடர்பான தலைவலி
- மருந்துகள் எடுத்துக் கொள்வதனால் ஏற்படும் தலைவலி
இந்த வகை, தலைவலி உணர்வானது, கடுமையான சிக்கல்களை உருவாக்குவதாகவும் உள்ளன.
தலைவலி இருப்பவர்கள் இந்த அறிகுறிகளை உதாசீனம் செய்ய வேண்டாம்?
தலைவலி உணர்வு அனைவருக்கும் பொதுவான பாதிப்புதான் என்றபோதிலும், அதி கவலைப்பட வேண்டிய விஷயமல்ல. ஆனால், கீழ்க்காணும் அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றைச் சந்தித்தால், விரைந்து மருத்துவரின் உதவியை நாடுவது நல்லது.
நாள்பட்ட தலைவலி
மாதத்திற்கு 15 நாள்களுக்கு மேல் அல்லது தொடர்ச்சியாக 3 மாதங்களுக்கு மேல் நீடிக்கும் தலைவலி, நாள்பட்ட தலைவலியாகக் கருதப்படுகிறது. இந்தப் பாதிப்புகள், சம்பந்தப்பட்ட நபர்களின் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் அவர்களின் பொறுப்பு விவகாரங்களில் அதிகளவிலான பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
சில நாள்பட்ட தலைவலிப் பாதிப்புகள், நாம் அவ்வப்போது எதிர்கொள்ளும் பதட்ட நிகழ்வுகளால் ஏற்படுவதாக இருக்கும்போதிலும், அதற்கு உரிய மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்வது நல்லது. மூளை மற்றும் அதனைச் சுற்றி உள்ள கட்டமைப்புகளில், கூடுதல் பராமரிப்பு மேற்கொள்ளப்படுவது அவசியம் ஆகும்.
தொடர்ச்சியான தலைவலி (Persistent Headaches)
இந்த அறிகுறியானது, வாழ்க்கைமுறையில் கடும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. தொடர்ச்சியான தலைவலியால் பாதிக்கப்பட்டவர்கள், எப்போதும் மருந்துகளைச் சார்ந்து இருக்கும் நிலையை ஏற்படுத்தி விடுகிறது.
தலைவலி உணர்வானது, கடுமையானதாக மாறாதவரை எவ்விதப் பாதிப்பு இல்லை என்றபோதிலும், அது நீண்ட நாட்களுக்கு நீடிக்கும்போது, அதற்குக் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
தீவிர வலி (Intense Pain)
கடுமையான தலைவலிப் பாதிப்பானது, முன்பைப் போல் அல்லாமல், உடனடி மருத்துவ கவனிப்பின் அவசியத்தை உணர்த்துகிறது. இது தண்டர்க் கிளாப் தலைவலி என்றும் குறிப்பிடப்படுகிறது. இதன் தொடக்க வெளிப்பாடுகள், சில நேரங்களில் உடல் ஆரோக்கியப்பாதிப்பின் சீர்குலைவுகளை வெளிப்படுத்தும் சிக்னல்களாகவும் விளங்குகின்றன.
இந்த அறிகுறிகள் தீவிரமானதாக இல்லாதபோதிலும், மூளைப்பகுதியில் நிகழும் அசாதாரண மாற்றங்கள் அல்லது ரத்தக்கசிவு உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான நிலைமைகளைக் குறிப்பதாக உள்ளன. ஞாபகச்சக்தி இழப்பு, வலிப்புத் தாக்கங்கள் உள்ளிட்ட ஆபத்துகளின் அபாயத்தை அதிகரிப்பதாக உள்ளன. இதற்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அது கோமா நிலைக்கு இட்டுச் செல்வதாக அமையும்.
தலையில் அடிபட்ட நிகழ்வைத் தொடர்ந்து ஏற்படும் தலைவலி
தலையில் விழும் லேசான அடிகள் கூட, சில நேரங்களில் அதிக ஆபத்தை ஏற்படுத்தி விடுகின்றன. எனவே, தலையில் ஏதாவது அடிபடும் பட்சத்தில், உடனடியாக மருத்துவரைச் சந்தித்துச் சிகிச்சைப் பெற்றுக்கொள்வது நல்லது. தலையில் திடீர் என்று ஏற்படும் தாக்கமானது, தலைவலியைத் தூண்டும். இது ஆபத்தான மூளை அதிர்ச்சி அல்லது கண்ணுக்குப் புலப்படாத மூளை அதிர்ச்சியை மறைப்பதாக உள்ளது.
காய்ச்சல் மற்றும் கழுத்து அசவுகரிய நிலை உடன் தலைவலி
காய்ச்சல் மற்றும் கழுத்து விறைப்பு பாதிப்புடன், கடுமையான தலைவலியும் சேரும்போது, அது மூளைக்காய்ச்சல் பாதிப்பை ஏற்படுத்துவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது. மூளை அல்லது முதுகெலும்பு உறைகளின் மீது நிகழும் வகையிலான இந்தப் பயங்கர வீக்கம், உடனடி மருத்துவ கவனிப்பை வலியுறுத்துவதாக உள்ளது.
குமட்டல் மற்றும் வாந்தி உணர்வுடன் தலைவலி
தலைவலி, குறிப்பாக ஒற்றைத் தலைவலி பாதிப்புக்கு, குமட்டல் அல்லது வாந்தி, இரண்டாம் நிலை அறிகுறிகளாக உள்ளன. வாந்தி, நீண்ட நாட்களுக்குத் தொடரும்பட்சத்தில், அதற்கு மருத்துவக் கவனிப்பு என்பது அவசியமானதாகின்றது. நீடித்த வாந்தி எடுக்கும் உணர்வானது, நீரிழப்பு ஆபத்தை ஏற்படுத்துவதாக அமைகிறது. இதற்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாவிடில், அது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தி, கடும் சிக்கல்களை ஏற்படுத்துகிறது.
மேலும் வாசிக்க : நரம்பியல் மருத்துவரைப் பார்க்க இதுவே சரியான நேரம்
மனம் சார்ந்த செயல்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் தலைவலி
மனக் குழப்பம், பலவீனம், ஒருங்கிணைப்பு இழப்பு உள்ளிட்ட அறிகுறிகளுடன் நீங்கள் கடுமையான தலைவலியைச் சந்திக்கிறீர்கள் என்றால், உடனடியாக, அவசர மருத்துவ உதவியை நாட வேண்டியது அவசியம் ஆகும். ஏனெனில், இது பக்கவாத பாதிப்பின் அறிகுறிகளாக இருக்கும் வாய்ப்புகள் மிக அதிகம் உள்ளது.
பக்கவாத பாதிப்பின் அறிகுறிகளை அறிந்து இருந்தால் மட்டுமே, அதனை எளிதாக அடையாளம் காண முடியும். நடப்பதில், உரையாடுவதில் சிரமம் அல்லது பேச்சில் மந்தநிலை உள்ளிட்ட பாதிப்புகளுக்கு, உடனடி மருத்துவ சிகிச்சை அவசியமானதாக உள்ளது. இதற்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாத பட்சத்தில், அது நிரந்தர மூளைப்பாதிப்பிற்கு வழிவகுத்துவிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
சிகிச்சை முறைகள்
லேசான பதட்டம், தலைவலி உள்ளிட்ட விருப்பங்களை, மருந்து முறைகளின் மூலம் குணப்படுத்த இயலும். நீண்டகாலத்திற்கு, இந்த மருந்து முறைகளை, நீங்கள் அதிகம் எடுத்துக்கொள்ளும் பட்சத்தில், தலைவலிப் பாதிப்பிற்கான காரணம் என்ன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.
தொடர்ச்சியான தலைவலி அல்லது உங்களைப் பலவீனப்படுத்தும் வகையிலான தலைவலிப் பாதிப்பிற்கு, உரிய மருந்துகளை, மருத்துவர்ப் பரிந்துரைப்பார். உயர் ரத்த அழுத்தம், வலிப்புத் தாக்கங்கள், மனச்சோர்வு உள்ளிட்ட பாதிப்புகளுக்குப் பரிந்துரைக்கப்படும் சில மருந்துகள், தலைவலிப் பாதிப்பின் தீவிரத்தைக் குறைப்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது.
மேற்குறிப்பிட்ட சிகிச்சை முறைகளைக் கவனமாகப் பின்பற்றி, தலைவலிப் பாதிப்பில் இருந்து பூரண நலம் பெற்று ஆரோக்கியமான மற்றும் வளமான நல்வாழ்க்கை வாழ்வோமாக…