A woman doing meditation sitting on a yoga mat at home.

வாழ்க்கையில் அமைதியைக் கண்டறியும் வழிமுறைகள்

மன அமைதி என்ற வார்த்தையைக் கேட்டவுடனே, உங்கள் மனதிற்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறப்பது போன்றதொரு உணர்வு ஏற்படுகிறது அல்லவா? நீங்கள் எப்போது கடைசியாக மன அமைதியினை அனுபவித்தீர்கள் என்று சொல்லுங்கள்.

நாம் இன்று எண்ணங்கள் மற்றும் கவலைகள் நிறைந்த சமூகத்தில் வாழ்கிறோம்.இந்தப் போட்டி நிறைந்த உலகில் மகிழ்ச்சியும் மன அமைதியும் பெறுவது சவாலானது.வாழ்வின் அடுத்த விடியலுக்காக, நாம் தொடர்ந்து காத்துக் கொண்டு இருக்கிறோம். இந்தக் காத்திருப்பு நிகழ்வானது, நம் உள்மன அமைதியைச் சீர்குலைக்கும் காரணிகளில் முதன்மையானதாக உள்ளது.

உள் அமைதி நிலை என்பது, அமைதியான மனநிலையாகும். இது உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதற்குப் பதிலாக, உள்மனதில் எப்படி உணர்கிறீர்கள் என்பதைப் பொறுத்ததாக உள்ளது. அமைதி என்பது மிகவும் இயல்பான நிலை ஆகும். நீங்கள் எந்த மனநிலையில் இருந்தாலும், அமைதியாக இருக்க முயற்சித்தால், உள் அமைதியானது, இயல்பானமுறையானதாகவே இருக்கும் வாய்ப்புகள் அதிகம்.

மனம் மற்றும் உடல் தளர்வு நடவடிக்கைகளுக்கு, யோகா, டை சி, கிகோங் போன்ற முழுமையான நடைமுறைகள், பயன்மிக்க அணுகுமுறைகளை வழங்குகின்றன.

உடல் செயல்பாடுகள், சுவாச நடவடிக்கைகள் மற்றும் நினைவாற்றல் உள்ளிட்டவைகளை, யோகாப் பயிற்சியானது மேம்படுத்துவதால், உடல், மனம் மற்றும் உணர்ச்சி சார்ந்த நல்வாழ்வானது சாத்தியமாகிறது.

டை சி, மென்மையான வகையிலான தற்காப்புக் கலை ஆகும். இது நினைவாற்றல், மற்றும் உள்மன அமைதியை மேம்படுத்துகிறது.

கிகோங் பயிற்சியானது, உயிர்ச்சக்தி, மனத் தெளிவு மற்றும் உணர்ச்சி சமநிலையை மேம்படுத்துவதில் பேருதவி புரிகிறது.

  • எப்போதும் நிதானமான மனநிலையிலேயே இருக்க வேண்டும்
  • நிதானமாக நடந்து செல்ல வேண்டும்
  • மனதுக்கு விருப்பமான பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுதல்
  • பிரியமானவர்களுடன் பொழுதைக் கழித்தல்

A woman doing qi gong/ breathing exercise standing outdoors.

யோகாப் பயிற்சி

உடல் செயல்பாடுகள், சுவாச நடவடிக்கைகள், நினைவாற்றல் உள்ளிட்டவற்றை ஒருங்கிணைக்கிறது.

உடல், மனம், மற்றும் உணர்ச்சி சார்ந்த நல்வாழ்வைச் சாத்தியமாக்குகிறது.

உடலின் நெகிழ்வுத்தன்மை, வலிமை மற்றும் அதன் சமநிலையை மேம்படுத்துகிறது.

டை சி

  • இந்த தற்காப்புக் கலையானது, உடலின் செயல்பாடுகளில் கூடுதல் கவனத்தைச் செலுத்துகிறது.
  • உள்மன அமைதி மற்றும் நினைவாற்றலை அதிகரிக்கச் செய்கிறது.
  • உடலின் தோரணை, சமநிலை மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்துகிறது.

இதேபோன்று, மனதிற்குப் பிடித்த பொழுதுபோக்கு நிகழ்வுகளில் ஈடுபடும் போது அது மனநிறைவு மற்றும் தளர்வு உணர்வினை வழங்கும். இது ஓவியம் வரைதல், தோட்ட வேலைகளில் ஈடுபடுதல், இசைக்கருவியை வாசித்தல் உள்ளிட்ட நிகழ்வுகள், மனதிற்கு மகிழ்ச்சியையும், திருப்தியையும் வழங்குவதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. அன்றாட நிகழ்வுகளில் கவனம் செலுத்துவது மன அழுத்தத்தைக் குறைத்து, உடல் சக்தியை மீட்டெடுக்க உதவுகிறது.

பிரியமானவர்களுடன் நேரத்தைச் செலவிடுவது, போதிய அளவிலான ஓய்வு எடுப்பது உள்ளிட்டவைகள், மன அமைதியை ஏற்படுத்துவதற்கான சிறந்த வழிகள் ஆகும். குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களுடன் இணைந்து பொழுதைக் கழிப்பது, அவர்களுடன் மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்து கொள்வது, இனிய நினைவுகளை உருவாக்குவதன் மூலம் உறவுகள் மேம்படும்.

மேலும் வாசிக்க : நடத்தைச் சிகிச்சை முறை – அறிந்ததும் அறியாததும்…

தினசரி வாழ்க்கையில், உடல் மற்றும் மனத் தளர்வுக்கான அணுகுமுறைகள், மன அமைதி, ஆரோக்கியமான நல்வாழ்க்கைச் சார்ந்த உணர்வினைப் பிரதிபலிக்கின்றன. எப்போதும் நிதானமான மனநிலையில் இருப்பதன் மூலமோ அல்லது யோகா டை சி, கிகோங் உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலமாக மனமகிழ்ச்சி மற்றும் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த இயலும்.

மனதிற்கு இதமளிக்கும் வகையிலான இயற்கையான சூழல், பிரியமானவர்களுடன் பொழுதைக் கழித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள், உடல் மற்றும் மனதிற்குப் புத்துயிர் அளிப்பதாய் உள்ளன.

தினசரி வாழ்க்கையில், மன அமைதிக்குக் காரணமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு, உடல், மனம் சார்ந்த ஆரோக்கியத்தை மேம்படுத்தி, ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வோமாக…

Leave A Comment

Copyright © 2024 Health Design | All Rights Reserved.