கீல்வாத பாதிப்பிற்கான வீட்டு மருத்துவ முறைகள்
கீல்வாத பாதிப்பின் விளைவாக ஏற்படும் வலி உணர்வுடன் வாழ்வது மிகவும் சவாலான நிகழ்வு ஆகும். இந்தப் பாதிப்பிற்கு, வீட்டு மருத்துவ முறைகள், பாதிப்பினால் ஏற்படும் அசவுகரியத்தை நிர்வகித்து, வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த பேருதவி புரிகிறது.
வீட்டு மருத்துவ முறைகளில் உணவுமுறை மாற்றங்களும், இலகுவான பயிற்சிகளும் அடங்கும். இவை இயற்கையான முறையில் கீல்வாத பாதிப்பினைக் குறைக்க உதவுகின்றன. வீட்டு மருத்துவ முறைகளின் மூலம், கீல்வாத பாதிப்பின் அறிகுறிகளைக் கட்டுப்படுத்தவும் மற்றும் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை நிர்வகிக்கவும் உதவுகிறது.
கீல்வாத பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான வீட்டு மருத்துவ முறைகள்
நீர்ச் சார்ந்த பயிற்சிகள்
கீல்வாத பாதிப்பு உள்ளவர்களுக்கு, நீச்சல் உள்ளிட்ட நீர்சார்ந்த பயிற்சிகள், மிகுந்த நன்மை அளிப்பனவாய் உள்ளன. நீரில் செய்யும் பயிற்சிகள் உடற்பயிற்சியின் தீவிரத்தை அதிகரிக்கும். நீரில் மிதக்கும்போது, உடல் எடை, உடல் முழுவதும் சரியான அளவில் பேண உதவுகிறது. உடலின் கொழுப்பு அளவு குறைதல், மேம்பட்ட ஒருங்கிணைப்பு, உடல் செயல்பாடுகள் அதிகரிப்பு, மனநிலை மேம்படுதல், வாழ்க்கைத்தரம் உயர்தல் உள்ளிட்ட நன்மைகள், நீச்சல் உள்ளிட்ட நீர்ச் சார்ந்த பயிற்சிகளை மேற்கொள்வதனால் உண்டாகின்றன. கீல்வாத பாதிப்பிலான வலி உணர்வில் இருந்து நிவாரணம் பெற வாரத்திற்கு மூன்று முறை 40 முதல் 60 நிமிடங்கள் நீர்ச் சார்ந்த பயிற்சிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.
உடல் எடை மேலாண்மை
மூட்டு ஆரோக்கியத்தில் உடல் எடை நிர்வகித்தல் நிகழ்வு குறிப்பிடத்தக்கப் பங்கினை அளிக்கிறது. உடல் எடையின் ஒவ்வொரு பவுண்டும் முழங்கால்களில் 3 பவுண்டுகள், இடுப்பு மூட்டுகளில் 6 பவுண்டுகள் அளவில் மன அழுத்தத்தை அதிகரிக்கும் வகையிலனதாக உள்ளது. மூட்டுப் பகுதிகளுக்கு இடையே அதிகரிக்கும் இந்த அழுத்தம், குருத்தெலும்பு சேதத்தை ஏற்படுத்தி, முறிவைத் துரிதமாக்குகிறது.
டை சி
இது குறைந்த தாக்க அளவிலான பயிற்சி ஆகும். இந்து நெகிழ்வுத்தன்மை, தசை வலிமை, உடலின் சமநிலையை மேம்படுத்த மெதுவான, மென்மையான இயக்கங்களை மேம்படுத்துகிறது. கீல்வாத பாதிப்பு உள்ளவர்களுக்கு, வலி மற்றும் விறைப்பு உணர்வைக் குறைப்பதில் டை சி முக்கியப் பங்காற்றுகிறது.
யோகா
உடற்கூறியல் சீரமைப்பில் கவனம் செலுத்தவும், மூட்டுகளைப் பலப்படுத்தவும் யோகாப் பயிற்சி, பேருதவி புரிகிறது. இந்தப் பயிற்சியானது, உடல்நலம், மனநிலை, வாழ்க்கைத்தரம், நாள்பட்ட வலியைச் சமாளிக்கும் திறன் அதிகரிப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.
வெப்பம் மற்றும் குளிர்ச் சிகிச்சைகள்
கீல்வாத பாதிப்பைக் குறைக்க, வெப்பம் மற்றும் குளிர்ச் சிகிச்சைகள் மிகுந்த பயனுள்ளதாக உள்ளன. வெப்ப சிகிச்சைகள், மூட்டுக்களின் ஆரோக்கியத்திற்கும், தசைகளின் வலி உணர்வைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
குளிர்ச் சிகிச்சைகள், ரத்த நாளங்களின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாது, வீக்கம், வலி உணர்ச்சி குறைக்கிறது.
குளிர் மற்றும் வெப்பத்திற்கு இடையில் மாறி மாறி செய்வது நன்மைபயக்கும். சரும பராமரிப்பைக் கண்காணிப்பது மற்றும் காயங்கள் ஏற்படின் இந்தச் சிகிச்சை உதவுகிறது.
மேலும் வாசிக்க : மூட்டு வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவும் உணவுகள்
நினைவாற்றல் தியானம்
நினைவாற்றல் அடிப்படையிலான மன அழுத்த பயிற்சியானது, வலி உணர்வைக் குறைக்க உதவுகிறது. வலி, அதிகாலை விறைப்பு, மூட்டுகளின் எண்ணிக்கை உள்ளிட்ட கீல்வாத அறிகுறிகளைக் கட்டுப்படுத்த இத்தகைய பயிற்சியானது உதவுகிறது.
மசாஜ் சிகிச்சைகள்
கீல்வாத பாதிப்பினால் தசைகள் மற்றும் மூட்டுகளில் ஏற்படும் வலி உணர்வைத் தணிக்க, மசாஜ் சிகிச்சைகள் உதவுகின்றன. இந்த வகைச் சிகிச்சைகள், மன அழுத்தத்தைத் தூண்டும் கார்டிசோல் ஹார்மோனின் உற்பத்தியைக் கட்டுப்படுத்துகிறது. மனநிலையை மேம்படுத்த உதவும் செர்டோனின் ஹார்மோனின் உற்பத்தியைத் தூண்டுகிறது. வாரத்திற்கு ஒருமுறை மசாஜ் சிகிச்சை மேற்கொண்டால், அது தசை மற்றும் மூட்டுப் பகுதிகளின் இயக்கங்களை மேம்படுத்துகிறது.
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்
கீலவாத பாதிப்பைக் குணப்படுத்தும் வகையிலான வீட்டு மருத்துவ முறைகளில், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் முறையும் ஒன்றாகும். இவ்வகை உணவுகள், உடலில் ஏற்படும் அழற்சி உணர்வைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துகின்றன. முடக்கு வாத பாதிப்பு நிர்வாகத்தில், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களின் பங்கு அளப்பரியது என்றபோதிலும், இதுகுறித்த ஆய்வு முடிவுகளையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டியது முக்கியம் ஆகும்.
கிரீம்கள், ஜெல்களின் பயன்பாடு
உடலின் மேற்புற பாதுகாப்பிற்காகப் பூசப்படும் கிரீம்கள், ஜெல்கள் உள்ளிட்டவை, கீல்வாத பாதிப்பிற்கு உரிய நிவாரணத்தை அளிக்கின்றன. இவ்வகைப் பொருட்களில் கேப்சைசின் எனும் வேதிப்பொருள் உள்ளது. இந்த வேதிப்பொருளானது, அதிக உஷ்ணத்தை ஏற்படுத்தும் தன்மைக் கொண்டது. தீக்காயங்களால் பாதிக்கப்பட்டவர்கள், கேப்சைசின் கொண்ட பொருட்களின் பயன்பாட்டைத் தவிர்ப்பது நல்லது.
தசைத் தளர்வு நுட்பங்கள்
இந்த நுட்பமானது, உடல் பாகங்களில் உள்ள வெவ்வேறு தசைகளை இறுக்குவது மற்றும் தளர்த்துவதை உள்ளடக்கியது ஆகும். இந்த நடைமுறைகள், கீல்வாத பாதிப்பினால் ஏற்படும் வலியுடன் தொடர்புடைய தசைகளின் பதட்டத்தைக் குறைக்க உதவும்.
மஞ்சள்
இந்திய உணவுமுறையில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான சமையல் நிகழ்வுகளில், மஞ்சள் முக்கிய இடம்பிடிக்கிறது. மஞ்சளில் உள்ள குர்குமின் வேதிப்பொருளானது, வீக்கத்தை ஏற்படுத்தும் புரதங்களின் செயல்பாட்டைத் தடுத்து, வலியைக் குறைக்க உதவுகிறது.
இயற்கை மருத்துவ முறைகளை, வாழ்க்கையின் அன்றாட நடைமுறைகளில் இணைப்பதன் மூலம், கீல்வாத பாதிப்பு உள்ளவர்கள் வலி மற்றும் விறைப்பு உணர்வில் இருந்து நிவாரணம் பெற்று, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள இயலும்.
கீல்வாத பாதிப்பிற்கான உணவுப் பரிசீலனைகள்
கீல்வாத பாதிப்பிற்கான அறிகுறிகளை நிர்வகிப்பதில் உணவுமுறையானது முக்கியப்பங்கு வகிக்கிறது. இதுதொடர்பாக, மருத்துவ நிபுணர்கள், அழற்சி எதிர்ப்பு உணவுத் திட்டத்தைப் பின்பற்ற பரிந்துரைக்கின்றனர். காய்கறிகள், பழ வகைகள், முழுத் தானியங்கள், ஒல்லியான புரதங்கள் உள்ளிட்ட உணவு வகைகள் இந்தளவில் இடம்பெறுகின்றன.
மேற்குறிப்பிட்ட வீட்டு மருத்துவ முறைகளைக் கவனமாகப் பின்பற்றி, கீல்வாத பாதிப்பில் இருந்து முழுமையான நிவாரணம் பெற்று, ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வோமாக..