மன ஆரோக்கியத்தில் உணவுமுறையின் தாக்கம்
நாம் நம் உடல் ஆரோக்கியத்திற்கு உணவுமுறையில் கவனம் செலுத்துகிறோம். அதேபோல, மன ஆரோக்கியத்திற்கும் கவனம் தேவை. நாம் உட்கொள்ளும் உணவு வகைகள், நம் மனநிலையையும், நாம், நடந்து கொள்ளும் விதத்தையும் கட்டுப்படுத்துவதாக, சமீபத்திய ஆய்வுமுடிவுகள் தெரிவித்து உள்ளன. நாம் அருந்தும் பானங்கள், சாப்பிடும் உணவு வகைகள் அனைத்தும், அது நம் உணர்வினைப் பாதிப்பனவையாக உள்ளன. நீங்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறைக் கொண்டவராக இருப்பின், உங்கள் உணவுமுறையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது முக்கியம் ஆகும்.
சாப்பிடுதல், சுவாசித்தல், தொடுதல், சிந்தித்தல் என நம் உடலின் அனைத்து நிகழ்வுகளையும், மூளையாலேயே கட்டுப்படுத்தப்படுகிறது. நம் உடலில் உள்ள உறுப்புகள் செயல்பட எவ்வாறு ஆற்றல் தேவையோ, அதுபோன்றே, மூளையும் இயங்க ஆற்றல் இன்றியமையாததாக உள்ளது. நம் உணவுமுறை வயது மூப்பைத் தடுக்காது. ஆனால், உடலில் சிறு மாற்றங்களை உருவாக்கும் என்பது உறுதி.
இந்தக் கட்டுரையில், நாம் சாப்பிடும் உணவு, நம் மனம் மற்றும் மனநிலையை எவ்வாறு பாதிக்கிறது, மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையிலான உணவு வகைகள், உணவுக்கும், மனநிலைக்கும் இடையேயான தொடர்பு உள்ளிட்டவைகள் குறித்து விரிவாகக் காண்போம்.
மன ஆரோக்கியத்தை, உணவுமுறையானது எவ்வாறு பாதிக்கிறது?
வைட்டமின்கள், மினரல்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் கொண்ட காய்கறிகள், பழ வகைகள் உள்ளிட்ட உணவு வகைகள், மூளைக்குப் போதிய அளவிலான ஊட்டமளிக்கின்றன. மூளையின் செயல்பாட்டைக் குறைக்கவல்ல, ஆக்சிக்ஜனேற்ற அழுத்த அபாயத்தைக் கட்டுப்படுத்துகின்றன. பெரும்பாலான மருத்துவர்கள், எவ்வகை உடல்நலப் பாதிப்பைக் கொண்ட நோயாளிகளிடமும், முதறகட்டமாக, ஆரோக்கியமான மற்றும் சீரான உணவுமுறையைப் பரிந்துரைத்தலையே, வழக்கமானதாகக் கொண்டு உள்ளனர்.
குடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கவல்ல உணவுமுறைகள்
ஆரோக்கியமற்ற குடல் ஆரோக்கியம், உங்கள் நோயெதிர்ப்புச் சக்தியைப் பாதிக்கிறது. மன ஆரோக்கியத்தையும் பாதிப்பதாக உள்ளது. மோசமான உணவுப்பழக்கம், ஆரோக்கியமான உணவுமுறை, மதுப்பழக்கம், செரிக்கக் கடினமானதாக இருக்கும் உணவுகள், உணவு சரியாகச் சாப்பிடாமல் இருக்கும் நிலை உள்ளிட்ட காரணிகள், குடல் ஆரோக்கியத்தை, மோசமாகப் பாதிக்கின்றன. உடல் உறுப்புகளானது, ஊட்டச்சத்துகளை உறிஞ்சுவதற்கும், உடலில் ஏற்படும் கழிவுப் பொருட்களை அகற்றுவதற்கும், ஆரோக்கியமான குடல் அமைப்பு இன்றியமையாத தேவையாக உள்ளன. உடல் மற்றும் மனம் சிறந்து விளங்கி, உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்பட, குடல் ஆரோக்கியத்தின் பங்கு அளப்பரியது ஆகும்.
குடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் வகையிலான உணவுகள்
- சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை
- சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள்
- பேக்கேஜிங் செய்யப்பட்ட மற்றும் கேன்களில் அடைக்கப்பட்ட உணவுகள்
- அதிகளவில் சாச்சுரேட் செய்யப்பட்ட உணவுகள்
- செயற்கையான இனிப்புச் சுவையூட்ட்டிகள்
- பொறிக்கப்பட்ட உணவு வகைகள், குடல் ஆரோக்கியத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்துவனவாக உள்ளன.
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையிலான உணவுகள்
- பச்சை இலைக் காய்கறிகள்
- நார்ச்ச்சத்து நிறைந்த உணவுகள்
- கடல் உணவுகள்
- புரோஃபயாடிக்குகள்
- முழுத் தானியங்கள்
- குறைந்த சர்க்கரைக் கொண்ட பழங்கள்
- மெலிந்த புரதங்கள் உள்ளிட்ட உணவுவகைகள், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன.
மனநிலை மாற்றத்திற்குக் காரணமாகும் உணவுகள்
நீங்கள் அதீதச் சோர்வுடனோ, பசி உணர்வுடனோ, கவலைத் தோய்ந்தோ அல்லது மன அழுத்த நிலையிலோ இருக்கும் போது, மனநிலை மாற்றங்கள் நிகழ்கின்றன. மனநிலை மாற்ற நிகழ்வு என்பது, மனிதர்களாகப் பிறந்த அனைவருக்கும் பொதுவானது என்றபோதிலும், இந்த நிகழ்வானது, அடிக்கடி ஏற்படும் போது, உங்களுக்கு மருத்துவப் பிரச்சினை இருப்பது உறுதிப்படுத்தப்படுகிறது.
நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்து, நம் மனநிலையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக, முன்னணி மனநல மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். நாம் சாப்பிடும் உணவுகளில் உள்ள கிளைசீமிக் அளவிற்கும், நமது மனநிலைக்கும் இடையே உள்ளார்ந்த உறவு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. கவலைகள், பதட்டம், எரிச்சலைத் தூண்டுவது உள்ளிட்ட மோசமான கிளைசீமிக் அளவு, ரத்த சர்க்கரை ஏற்ற இறக்க அளவுகளுடன் நெருங்கிய தொடர்புடையதாக உள்ளது.
மனநிலையை மேம்படுத்த உதவும் உணவுகள்
- டார்க் சாக்லேட்கள்
- கொழுப்பு நிறைந்த மீன்கள்
- நொதித்த உணவுகள்
- ஓட்ஸ்
- வாழைப்பழம்
- காஃபி
- பெர்ரி பழங்கள்
- விதை மற்றும் கொட்டை உணவுகள்
- பீன்ஸ்கள்
மனநிலையை மோசமாக்கும் உணவு வகைகள்
- பதப்படுத்தப்பட்ட உணவுகள்
- செயற்கை இனிப்புச் சுவையூட்டிகள்
- மதுப்பழக்கம்
அதிகச் சர்க்கரைக் கொண்ட பானங்கள் உள்ளிட்ட உணவுகள், மனநிலையை மிகவும் மோசமானதாக மாற்றுகின்றன.
மன அழுத்தம், பதட்டத்தை அதிகரிக்கும் உணவுகள்
நாம் மேற்கொள்ளும் உணவுமுறையானது, மன அழுத்தம் மற்றும் பதட்ட உணர்வை அதிகரிக்கும் என்பதைப் பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பது இல்லை. நீங்கள் சீரான உணவுமுறையைப் பின்பற்றவில்லை எனில், அது மன அழுத்தத்திற்குக் காரணமான கார்டிசோல் ஹார்மோனின் உற்பத்தியைத் தூண்டுகிறது. இதன்காரணமாக, மன அழுத்த பாதிப்பு, பதட்டம் மற்றும் கவலை உணர்வுகள் ஏற்படுகின்றன. நீங்கள் அதிகளவிலான பதப்படுத்தப்பட்ட உணவுகள் அல்லது துரித உணவுகளை உட்கொள்ளும்போது, அது ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை அதிகரிக்கச் செய்து, மன அழுத்தம் மற்றும் பதட்ட பாதிப்பை ஏற்படுத்துகிறது.
மன அழுத்தத்தைக் குறைக்க வல்ல உணவு வகைகள்
- வைட்டமின்கள் A, C மற்றும் E நிறைந்த உணவு வகைகள்
- ப்ரீஃபயாடிக் மற்றும் புரோஃபயாடிக் உணவுகள்
- மெக்னீசியம் நிறைந்த உணவுகள்
- கோழி, முட்டை மற்றும் மீன் உள்ளிட்ட மெலிந்த புரதங்கள் கொண்ட உணவு வகைகள்
நீங்கள் மேற்கொள்ளும் உணவுமுறையானது, மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. நீங்கள் மனநலம் சார்ந்த பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு உள்ளீர்கள் என்றால், என்ன சாப்பிட வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும் என்பதை, உங்கள் மனநல ஆலோசகரிடம் கலந்தாலோசித்து, உரிய ஆலோசனையைப் பெற அறிவுறுத்தப்படுகின்றனர்.
மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் உணவுகள்
நமது உணவுமுறையில் உள்ள சில வகை உணவுகள், உண்மையிலேயே, மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக உள்ளன. இது பெரும்பாலானோருக்குத் தெரிவதில்லை. சில வகை உணவுகள், உங்கள் மன ஆரோக்கியத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்துபவையாக உள்ளன.
மன அழுத்தம், கவலை, மனச்சோர்வு உள்ளிட்ட பாதிப்புகளின் அபாயங்களைக் குறைக்கவும், மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உட்கொள்ள வேண்டிய உணவு வகைகள், கீழே பட்டியலிடப்பட்டு உள்ளன.
வைட்டமின் B6 கொண்ட உணவுகள்
- வைட்டமின் B6 ஊட்டச்சத்துக் குறைபாடானது, மனிதர்களிடையே மன இறுக்கம், கவலை, உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இவர்கள்
- அடர் இலைக் காய்கறிகள்
- மாவுச்சத்து அதிகம் கொண்ட காய்கறிகள் மற்றும் பழங்கள்
- கொண்டைக்கடலை
- கோழி, மீன், மாட்டின் கல்லீரல் உள்ளிட்ட உணவு வகைகளை அதிகம் சாப்பிட்டு வருதல் நல்லது.
செலீனியம் அதிகம் கொண்ட உணவுகள்
தைராய்டு சுரப்பியின் சிறந்த செயல்பாட்டிற்கு, செலீனியம் மிகவும் இன்றியமையாததாக உள்ளது. செலீனியம் குறைபாடு உள்ள நோயாளிகளுக்கு, மனநிலை மாற்ற பாதிப்பு உருவாகிறது. இதுமட்டுமல்லாது கவலை, மன இறுக்கம், உடல் சோர்வு உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்படுகின்றன,
- கடல் உணவுகள்
- முட்டை
- இறைச்சி உணவுகள்
- முழுத் தானியங்கள்
- சூரியகாந்தி விதைகள்
- எள் விதைகள்
- காளான் உள்ளிட்டவற்றில் அதிகளவில் செலீனியம் உள்ளது.
மேலும் வாசிக்க : தலைவலி – எச்சரிக்கை அறிகுறிகளை அறிவோமா?
பிஃளேவனாய்டுகள் அதிகம் கொண்ட உணவுகள்
இதயப் பாதிப்பு நோய்களில் இருந்து பூரண நலம் பெற, பிஃளேவனாய்டுகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. பிளேவனாய்டுகள், ரத்தஓட்டத்தைச் சீராக்குவதால், நாம் ஆரோக்கியமுடன் வாழ வழிவகைச் செய்கிறது.
- டீ
- பெர்ரி பழங்கள்
- ஆப்பிள்
- சிட்ரஸ் பழங்கள் மற்றும் அதன் சாறு
- ரெட் ஒயின்
வைட்டமின் D ஊட்டச்சத்து அதிகம் கொண்ட உணவுகள்
வைட்டமின் D ஊட்டச்சத்துக் குறைபாடு, மனச்சோர்வு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு வழிவகுக்கிறது. உடல் ஆரோக்கியத்தைப் போலவே, உங்கள் மன ஆரோக்கியத்திற்கும் இன்றியமையாதது ஆகும். வைட்டமின் D குறைபாடு கொண்டவர்கள்,
- மீன்
- முட்டையின் மஞ்சள் கரு
- வைட்டமின் கொண்ட பானங்களை உட்கொள்வது நல்லது.
மெக்னீசியம் கொண்ட உணவு வகைகள்
மனிதச் செல்களின் செயல்பாட்டிற்கு, மெக்னீசியம் மிகவும் அவசியமாக உள்ளது. எனவே, இது உங்கள் மூளைக்கும் மிக முக்கியமானதாக உள்ளது. நல்ல மன ஆரோக்கியத்தைப் பெற, உணவில் மெக்னீசியம் நிறைந்த உணவுகளைச் சேர்க்க வேண்டும்.
- கொட்டைகள் மற்றும் விதைகள்
- முழு தானியங்கள்
- பச்சை இலைக் காய்கறிகள்
- மீன்
- பீன்ஸ்
உள்ளிட்ட உணவுவகைகளில் மெக்னீசியம் அதிகளவில் உள்ளது.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சீரான மற்றும் சரிவிகித உணவுமுறையைப் பின்பற்றி, மன ஆரோக்கியத்தை மேம்படுத்தி, ஆரோக்கியமான மற்றும் வளமான நல்வாழ்க்கை வாழ்வோமாக…