வீட்டில் DNA சோதனை எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது?
DNA சோதனைகளின் முடிவுகள் மிகவும் துல்லியத்தன்மையுடன் இருப்பதால், இன்றைய நிலையில், மிக வேகமாக மக்களிடையே பிரபலமடைந்து வருகின்றன. இந்தச் சோதனையானது கைரேகைச் சோதனை, மரபணுச் சோதனை எனப் பல்வேறுவிதமான பெயர்களில் அழைக்கப்பட்டு வருகின்றன.
DNA சோதனை என்பது, உடலில் உள்ள செல்களின் DNAவைப் பரிசோதனைக்கு உட்படுத்தும் பல்துறை நுட்பமாகும். இது குறிப்பிட்ட நபரின் நோய்ப்பாதிப்பின் நிலை, மரபணு விவரங்கள், அந்நபரின் அடையாளம் உள்ளிட்ட தகவல்களை வழங்குகிறது.
DNA சோதனையை, வீட்டிலேயே மேற்கொள்வதற்கு ஏதுவாக, அதற்கான கருவிகள் சந்தையில் கிடைக்கின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேலைநாடுகளில், DNA சோதனையை வீட்டிலேயே மேற்கொள்ளும் பழக்கம், மிகப்பிரபலமாக உள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில், மக்கள் இன்னும் அந்த முறையை வியப்புடனேயே உற்றுநோக்கியவாறே உள்ளனர் என்பதே நிதர்சனமான உண்மை.
DNA என்பது நமது உடல் செல்களில் உள்ள டியாக்ஸி ரிபோநியூக்ளிக் அமிலம் ஆகும். இது செல்லின் உட்புறத்தின் கருப்பகுதியில் அமைந்து உள்ளது. DNA, பெற்றோர்க் கொண்டு உள்ள மரபணுத் தகவல்களை, அவர்களின் சந்ததியினருக்குக் கடத்துகின்றது.
குழந்தைகள் கொண்டுள்ள மரபணு ஒப்பனையானது, 50 சதவீதம் தந்தையிடமிருந்தும், 50 சதவீதம் தாயிடம் இருந்தும் பெறப்பட்டு உள்ளன.
உதாரணமாக, உங்கள் மரபணு ஒப்பனை உங்கள் பெற்றோரிடமிருந்தும், பாதி உங்கள் தந்தையிடமிருந்தும், பாதி உங்கள் தாயிடமிருந்தும் பெறப்படுகிறது.
உயிர் வாழ்வதற்கும், வளர்சிதை மாற்றம் மேற்கொள்வதற்குமான அத்தியாவசிய தகவல்கள் DNAவில் உள்ளன. அதேபோல், இனப்பெருக்கம் செய்து புதிய சந்ததிகளைத் தோற்றுவிப்பதற்கான தகவல்களும் இதில் அடங்கியுள்ளன.
DNA என்பது நியூக்ளியோடைடுகளின் நீண்ட சங்கிலித் தொகுப்பாகும். இந்த நியூக்ளியோடைடுகள் சர்க்கரை, பாஸ்பேட் மற்றும் நைட்ரஜன் மூலக்கூறுகளால் ஆனவை. அடினைன், தையமின், குவானைன் மற்றும் சைட்டோசின் உள்ளிட்டவை, நைட்ரஜன் தளங்களாக உள்ளன.
அனைத்துத் தகவல்களும் நைட்ரஜன் காரங்களின் மும்மையில் குறியீடாக்கப்பட்டு, புரதமாக டீகோட் செய்யப்படுகின்றன. இது மரபணுக் குறியீடாகக் குறிப்பிடப்படுகின்றது.
புரதங்களை உற்பத்தி செய்யும் வகையிலான DNAவின் குறிப்பிட்ட பகுதி ‘ஜீன்’ என்று வரையறுக்கப்படுகிறது. செல்லில் உள்ள அனைத்து DNAக்களின் முழுத்தொகுப்பு “ ஜீனோம்” என்று குறிப்பிடப்படுகிறது. ஒரு நபர்த் தன்னுடைய மரபணுவில் சுமார் 3.2 பில்லியன் இணைகள் உள்ளன.
DNA சோதனையின் நோக்கம் மற்றும் செயல்முறை
குறிப்பிட்ட நபரை அடையாளம் காண
குற்றவியல் நடைமுறைகளைச் சரிபார்க்க
பெற்றோரை அடையாளம் காண
நோயாளியின் நோய்ப்பாதிப்பு நிலையை அறிய
உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு, DNA சோதனை இன்றியமையாததாக உள்ளது.’’
உடல் பாகங்களில் இருந்து, DNA பெறப்பட்டு, சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. DNAவைப் பெருக்கி, அந்த மாதிரியில் உள்ள எண்ணிக்கை மீண்டும் அளவிடப்படுகிறது. வெவ்வேறு DNA மாதிரிகளை ஒப்பீடு செய்வதன் மூலம், வெவ்வேறு குணநலன் கொண்ட மனிதர்களை அடையாளம் கண்டுகொள்ள இயலும்.
DNA சோதனை வீட்டிலேயே எப்படி மேற்கொள்ளப்படுகிறது?
உயிரியல் சோதனைகளுக்காக, DNA மாதிரிகள், ஊடுருவும் செயல்முறை அல்லது ஊடுருவும் தன்மையற்ற செயல்முறைகளின் மூலம் சேகரிக்கப்படுகின்றன.
ஊடுருவும் செயல்முறையில் மாதிரி சேகரிக்கும் நிகழ்வானது, வலி மிகுந்ததாக உள்ளது. உடலின் குறிப்பிட்ட பகுதியில் துளையிட்டோ அல்லது தோல் அல்லது திசுப்பகுதியை வெட்டுவதன் மூலமாகவோ, மாதிரி சேகரிக்கப்படுகிறது.
ஊடுருவல் தன்மையற்ற செயல்முறையில், தோல் அல்லது திசுப்பகுதிக்கு எவ்விதச் சேதத்தையும் ஏற்படுத்தாமல், உமிழ்நீர், குறிப்பிட்ட பகுதியை, துணியால் துடைப்பதன் மூலமாகவும், DNA மாதிரியைச் சேகரிக்கலாம். இது வலியற்ற செயல்முறை ஆகும்.
வீட்டிலேயே, ஊடுருவல் தன்மையற்ற செயல்முறையில் DNA மாதிரி சேகரிக்கப்படுகின்றன. இதன்காரணமாக, நாம் ஆய்வகங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை.
மேலும் வாசிக்க : மனநல சிகிச்சையைப் பாதிக்கும் சமூகத்தடை அறிவோமா?
சோதனையின் படிநிலைகள்
DNA சோதனையை மேற்கொள்ள உதவும் சோதனைக் கருவிகள், சந்தையில் வெகுவாகப் பரவிகிடக்கின்றன. அதில் எது சிறந்தது என்பதை உரிய வழிமுறைகளின் கீழ்க் கண்டறிந்து சரியான ஒன்றைத் தேர்ந்தெடுப்பதே, முதல்படி ஆகும்.
சோதனைக்கருவிகள் உங்கள் கைக்கு வந்தவுடன், கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி, DNA மாதிரியைச் சேகரிக்கலாம்.
மாதிரி சேகரிப்பு தொகுப்பைத் திறந்து, அதில் உள்ள படிவத்தை, சரியான விவரங்களைக் கொண்டு நிரப்பவும்.
DNA சோதனைக்கு, உங்கள் மற்றும் உங்கள் பெற்றோரின் ஒப்புதல் மிகவும் அவசியம் ஆகும். DNA சோதனைக்கு உட்படுத்தப்படுபவர்க் குழந்தையாகவோ அல்லது 18 வயதுக்கு உட்பட்டு இருந்தாலோ, அவரது பெற்றோர், அந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
மாதிரி சேகரிப்பு குழாயிலும், மார்க்கர்ப் பேனாவைக் கொண்டு யாருடையது என்பதைக் குறிப்பிட வேண்டும். அதில் உள்ள பார்கோடுகளிலும், சோதனைக்கு உட்படுத்தப்படுபவரின் பெயரைக் குறிப்பிட வேண்டும். இது தவறான மாதிரி தேர்ந்தெடுத்தலைத் தவிர்க்க உதவும்.
கைகளைச் சுத்தமாகக் கழுவி, மாதிரி சேகரிக்கும் தொகுப்பில் இருந்து துணியை அகற்ற வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும், மாதிரியைத் தொட்டுவிடக் கூடாது. இது தவறும்பட்சத்தில், எதிர்மறையான முடிவுகளை ஏற்படுத்த கூடும்.
கன்னத்தின் உள்பக்கத்தில் துணியை வைத்து சில நிமிடங்கள் உறுதியாகத் தேய்க்கவும். அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம். மாதிரி வெளியே எடுத்தவுடன், மீண்டும் அதை வாய்க்குள் செலுத்த வேண்டாம்.
மாதிரி சேகரித்த துணியை உலர வைத்தபிறகு, அதைக் கொள்கலனில் வைக்கவும். அந்தக் கொள்கலன் மற்றும் ஒப்புதல் படிவத்தை, அந்தத் தொகுப்பில் வைத்து, சோதனை மையத்திற்கு அனுப்ப வேண்டும். சோதனை முடிவுகளுக்கு, சில நாள்கள் முதல் சில வாரங்கள் வரைக் காத்திருக்க வேண்டும்.
சோதனை முடிவுகள்
இந்த உலகில், எந்த இரண்டு நபர்களும், மரபணு ரீதியாக, ஒத்துப்போவதில்லை. மரபணு ஒப்பீட்டுச் சோதனையின் மூலம் 99.999 சதவீதத் துல்லியத்துடன் உறவு முறையைக் கண்டறிய இயலும்.
சோதனை முடிவுகள் குறித்து அறிந்துகொள்ள, தொழில்நுட்ப அறிவு இன்றியமையாததாக உள்ளது. அது இல்லாதபட்சத்தில், வீட்டிலேயே மேற்கொள்ளப்பட்ட DNA சோதனையின் முடிவுகளைத் தெரிந்துகொள்வது மிகவும் சவாலான நிகழ்வு ஆகும்.
குறிப்பிட்ட பண்புகளுக்கு அல்லீல்கள் எனப்படும் இரண்டு வெவ்வேறு விதமான, DNA பட்டைகள் காரணமாக அமைகின்றன.
இந்த DNA பட்டைகளில் ஒன்று தந்தையுடனும், மற்றொன்று தாயுடனும் பொருந்துகிறது. மரபியல் நிபுணர் , இந்தச் சோதனை முடிவைக் கவனமாகப் பகுப்பாய்வு செய்து, சோதனை முடிவு அறிக்கையை உருவாக்குகிறார்.
DNA சோதனையை, வீட்டிலேயே உரிய முறையில் மேற்கொண்டு, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நோய்ப்பாதிப்புகள் முன்கூட்டியே கண்டறிந்து, அதனைத் தடுத்து, ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வோமாக…