Upset couple sitting apart on a bed, symbolizing the importance of healthy discussions about mental health and finding solutions.

மனநல சிகிச்சையைப் பாதிக்கும் சமூகத்தடை அறிவோமா?

இந்தியா பல்வேறு கலாச்சார நம்பிக்கைகளையும், சமூகத் தடைகளையும் உள்ளடக்கிய வகையிலான பரந்த நாடு ஆகும். சில சமூகங்களில் மனநலப் பிரச்சினைகள் சார்ந்த குறைபாடுகள், இயற்கைக்கு அப்பாற்பட்ட தண்டனையாகக் கருதப்படுகின்றன. இந்தியாவில், கடுமையான மனநலப் பாதிப்புகளால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் மருத்துவ சிகிச்சையை நாடுவதில்லை. அவர்கள் கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களையே நாடுவதாக முன்னணி நாளிதழ்ச் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கான காரணம்,மனநலப் பிரச்சினைத் தொடர்பான விழிப்புணர்வு மக்களிடம் போதிய அளவு இல்லாததனால் என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

சமூகத் தடைகள் குறித்து கற்பிப்பதற்கான நேர்மறையான வழிமுறைகள்

தவறான புரிதல், அறியாமை, பயம் உள்ளிட்ட உணர்வுகளின் காரணமாக, பல்வேறு குடும்பங்கள்,சமூகத் தடைகள் குறித்த ஆக்கப்பூர்வமான உரையாடல்களைத் தவிர்த்துவிடுகின்றன. சமூகத்தடைகள் குறித்த ஆக்கப்பூர்வமான கல்வியைக் குடும்பங்களுக்கு மட்டுமல்லாது, தனிநபர்களுக்கும் போதிப்பதன் மூலம்,மனநலக் குறைபாடுகள் தொடர்பாக ஆரோக்கியமான விவாதம் மேற்கொண்டு,நல்வழிகளைக் கண்டறிய இயலும்.

சமூகங்கள்,மனநலக்குறைபாடு தொடர்பான களங்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கும்,அதன் தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும் முயல வேண்டும். இதற்குப் பாதிப்பின் துவக்கநிலையிலேயே அதன் அங்கீகாரத்தை உறுதி செய்து,மனநல விழிப்புணர்வை ஏற்படுத்துவதே சிறந்த வழிமுறையாகும்.

குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் மனநல குறைபாடுகள் தொடர்பான களங்கத்தைக் குறைப்பதற்கும்,தடைகளைச் சமாளிக்க உதவும் வழிமுறைகள்:

மனநலம் சார்ந்த உண்மைத் தகவல்களைப் பரப்புதல்

மனநலப் பாதிப்பினால் பாதிக்கப்பட்டவர்களின் கருத்துகளைக் கேட்டல்

அவர்களின் அனுபவங்களை, சமூக உறுப்பினர்கள் கேட்கச் செய்தல்

இந்தியாவில்,மனநலப் பாதிப்புகளுக்கு உள்ளானவர்களுக்குச் சமூகத்தடைகள், பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றன. மக்களுக்குக் கல்வி மற்றும் உறுதியான தகவல்கள் கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்வதன் மூலம்,சமூகத் தடைகளால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க இயலும். இது பாதிக்கப்பட்டவர்களின் உடல் மற்றும் மனம் சார்ந்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.

மனநல ஆரோக்கியம் தொடர்பான பொதுவான சமூகத் தடைகள்

இந்தியாவில் மனநலம் மற்றும் தொழில்முறைச் சிகிச்சைகள் தொடர்பாக, மாறுபட்ட கருத்துகள் நிலவி வருகின்றன. கீழ்க்காணும் இந்த 3 சமூகத்தடைகளே நம்நாட்டில் பிரதானமாக உள்ளன.

A depressed young man sits on the floor in darkness, reflecting the stigma and blame society places on mental health struggles.

பயம் அல்லது அவமானத்தைக் குறைக்கும் பொருட்டு, மனநலம் சார்ந்த உரையாடல்களைத் தவிர்த்தல்

மனநலப் பாதிப்புகள், மற்றவர்களுக்கு மட்டுமே ஏற்படும் என்று பெரும்பாலானோர் நினைக்கின்றனர். அவைத் தங்களுக்கோ அல்லது தங்களின் பிரியமானவர்களுக்கோ நடக்காது என்று நினைக்கின்றனர். பயம், வெட்கம்,சங்கடம் காரணமாக, பல்வேறு குடும்பங்கள் மனநலம் சார்ந்த உரையாடல்களை முற்றிலுமாகத் தவிர்த்துவிடுகின்றனர். இந்த விவகாரத்தில் அமைதியாக இருப்பது என்பது,சமூகத்தில் நிகழும் களங்கங்களைப் போலவே, அதிகத் தீங்கினை விளைவிக்கும். நோயறிதல் மற்றும் சிகிச்சை முறைகள் மற்றும் சமூக ஆதரவுச் சேவைகளின் மூலம், இந்த அசாதாரணமான நிலையை, இயல்பானதாக மாற்ற இயலும்.

மனநலப் பாதிப்புகளால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்குக் கீழ்க்கண்ட நடைமுறைகளை வழங்கும் பொறுப்பு, நாம் வாழும் சமூகத்திற்கு உள்ளது.

சிகிச்சைக்கான போக்குவரத்து வசதி உள்ளிட்ட நடைமுறை ஆதரவுகள்.

விரிவான மற்றும் முழுமையான மனநலப் பரிசோதனை.

சமூக அடிப்படையிலான சிகிச்சை மையங்கள்.

தனிநபர்கள் மற்றும் குடும்பங்கள் அடிப்படையிலான மீட்பு மையங்கள்.

மனநலப் பாதிப்பால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு வழங்கப்படும் உயர்தரச் சிகிச்சை மற்றும் ஆதரவு சேவைகளுக்கான அணுகல், அவர்கள் அந்தப் பாதிப்பில் இருந்து மீள்வதற்கும் மற்றும் மறுபிறப்புக்கும் இடையேயான வித்தியாசத்தைக் குறிக்கிறது.

சமூகங்களில் இது தடைச் செய்யப்பட்டதாகக் கருதப்படுவதால், மனநலப் பிரச்சினைகளுக்குச் சிகிச்சை அளிப்பதில் தொடர்ந்து இடையூறுகள் நிலவிவருகின்றன.

நடத்தைத் தொடர்பான சமூகத் தடைகள்

மனநலப் பாதிப்புகள் வயது, பாலினம், சாதி, சமூகப் பொருளாதார நிலை உள்ளிட்ட எவ்விதக் காரணிகளையும் பொருட்படுத்துவதில்லை. யாருக்கு வேண்டுமானாலும், இந்தப் பாதிப்புகள் வரலாம். ஆனால், இந்தச் சமூகத்திலோ, இந்தப் பாதிப்பு கொண்டவர்களே, நோயை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்படுகின்றனர்.

மனநலப் பாதிப்புகளுக்கான காரணங்கள், அதன் காரணிகளைப் பொறுத்து மாறுபடுகின்றன. இதில் ஒழுக்கம் என்ற காரணி அடங்கவில்லை. ஒருவர் மோசமானவர் என்பதாலோ, அவர் மனநல பாதிப்பால் பாதிக்கப்படத் தகுதியானவர் என்று அர்த்தம் அல்ல.

மேலும் வாசிக்க : குடும்ப அமைப்பு சிகிச்சை உறவுகளை வலுப்படுத்துமா?

சிகிச்சைத் திட்டங்களின் தாக்கம், முழுக் குடும்பத்தையும் பாதிக்கிறது

இந்தியக் கலாச்சாரத்தில், குடும்பம் முக்கிய அங்கமாகக் கருதப்படுகிறது. ஆனால், மனநலப் பாதிப்பிற்கு உள்ளானவர்களுக்கு, இது தடைசெய்யப்பட்டதாகக் கருதப்படுகிறது. இந்த இடத்தில் சமூகமானது, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தில், ஏதோ தவறு இருப்பதாகக் கருதும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு, உண்ர்வுப்பூர்வமான ஆதரவு மற்றும் தொழில்முறை உதவியை வழங்குவதன் மூலம், அவர்கள் இந்தச் சவாலைச் சமாளிக்க ஏதுவாக இருக்கும்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களில் சிலர் மட்டுமே, அவர்களுக்குத் தேவையான உதவிகளைப் பெற்றால், அவர்கள் தலைமுறையினர், மனநலப் பிரச்சினைகளைச் சமாளிப்பது என்பது கடினமான நிகழ்வாக மாறக்கூடும். அனைவரும் சிகிச்சை மற்றும் மீட்பு செயல்பாடுகளில் கலந்து கொள்வதன் மூலமாகவே, முழுப்பலனையும் அடைய முடியும். மனநலப் பாதிப்பு மற்றும் சிகிச்சைத் தொடர்பாக, சமூகத்தில் நிலவி வரும் களங்கங்கள் மற்றும் தடைகளைக் குறைப்பதன் மூலம், மனநலப் பாதிப்பிற்கான பராமரிப்பு மற்றும் மீட்பு செயல்பாடுகளால், நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் பயன் அடைவர்.

மனநலப் பாதிப்புகள் தொடர்பான சமூகத்தடைகள் மற்றும் களங்களைச் சரியாகக் களைந்து, ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வோமாக…

Leave A Comment

Copyright © 2024 Health Design | All Rights Reserved.