உடற்பயிற்சி பழக்கத்தை மீண்டும் துவங்குகிறீர்களா?
நாம் வாழ்க்கையின் ஒருகட்டத்தில் இருந்து மற்றொரு கட்டத்திற்கு முன்னேறிச் செல்லும் காலகட்டத்தில், உடற்பயிற்சியை நிறுத்தும் சூழ்நிலை ஏற்படலாம். இது அனைவருக்கும் இயல்பாகவே நடக்கும் நிகழ்வுதான் ஆகும். புதிய வேலை, தினசரி அட்டவணை, மன அழுத்தம், குடும்பப் பொறுப்புகள் போன்றவை உடற்பயிற்சியைத் தடுக்கலாம்.
வியர்வைச் சொட்டும் அளவிற்கு உடற்பயிற்சிகள் மேற்கொள்வது எல்லாம், இப்போது நினைவுச் சின்னங்களாக மாறிவிட்டன. நின்றுபோன உடற்பயிற்சியை மீண்டும் துவங்கும் யோசனை என்பது, சிலருக்கு அச்சுறுத்தல் நிறைந்ததாகவும், மன அழுத்த உணர்வுடனும் இருக்க வைக்கும்.
நீங்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு உடற்பயிற்சியைத் துவக்குவது சாத்தியமே. இதற்குத் திட்டமிடலும் பொறுமையும் அவசியம்.
உடற்பயிற்சிக்கு மீண்டும் திரும்புவதற்கான வழிகள்
நீங்கள் ஜிம்மில் இருந்து எவ்வளவு காலங்கள் விலகி இருந்தீர்களோ, மீண்டும் அங்கு உடற்பயிற்சி மேற்கொள்வதை, மிகவும் கடினமாக உணருவீர்கள். இருந்தபோதிலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு உடற்பயிற்சிக்குத் திரும்புவது குறித்து நீங்கள் முடிவெடுத்து விட்டால், அதற்கான நடவடிக்கைகளில் முழுமனதுடன் இறங்கிவிட வேண்டும். இதன்மூலமாகவே, நீங்கள் உங்கள் உடற்தகுதிக்கு ஏற்றவகையில் உடற்பயிற்சிகளைச் செய்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.
சாத்தியமான எதிர்பார்ப்புகளை அமைக்க வேண்டும்
நீண்ட இடைவெளிக்குப்பிறகு, நீங்கள் உடற்பயிற்சிக்குத் திரும்புகிறீர்கள் என்றால், சாத்தியமான மற்றும் அடையக்கூடிய வகையிலான இலக்குகள் மற்றும் எதிர்பார்ப்புகளை அமைத்துக் கொள்ள வேண்டும். உங்களின் தனிப்பட்ட பயிற்சியாளர், உங்களின் தற்போதைய உடற்பயிற்சியின் அளவை மதிப்பீடு செய்து, உடற்பயிற்சி இலக்குகளை நிர்ணயிக்க உதவிக்கரம் நீட்டுவார். நீங்கள் என்னென்ன பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் உங்களுக்கு வழிகாட்டுவார்.
தனிப்பட்ட பயிற்சியாளர் இன்றியும், நீங்களாகவே உடல் தசைகளின் வலிமை அதிகரிப்பு, உடல் எடைக் குறைப்பு, உடலின் நெகிழ்வுத்தன்மையில் மேம்பாடு உள்ளிட்டவைகளை உள்ளடக்கிய உடற்பயிற்சி இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ள இயலும். நாள் ஒன்றுக்கு 5000 நடைகள் நடப்பதை நோக்கமாகக் கொண்டு, அளவிடக்கூடிய வகையிலான உடற்பயிற்சி இலக்குகளை நாம் உருவாக்கிக் கொள்ளலாம்.
மருத்துவ நிபுணர்களின் பங்கு
நீங்கள் ஏதாவதொரு நோய்ப்பாதிப்பிற்கு உள்ளான நிலையில், தற்போது அதில் இருந்து விடுபட்டு, உடற்பயிற்சியை மீண்டும் துவங்க திட்டமிட்டு இருந்தால், மருத்துவ நிபுணர்களின் உதவியை நீங்கள் நாடுவது அவசியம் ஆகும். அவர் உங்களின் தற்போதைய உடல்நிலைக்கு ஏற்ற வகையிலான, உடற்பயிற்சி திட்டங்களை உங்களுக்குப் பரிந்துரைச் செய்வார். முதலில் குறைந்த தீவிரம் கொண்ட உடற்பயிற்சிகளோடு துவங்கி, பின் உடல்நிலையைப் பொறுத்து, படிப்படியாக உடற்பயிற்சிகள் கடுமையாக்கப்பட வேண்டும்.
குறிக்கோள்களுக்கு ஏற்ற பயிற்சிகளைத் தேர்ந்தெடுத்தல்
உங்கள் உடல்நல இலக்குகளைத் தீர்மானிக்கும் வகையிலான சரியான உடற்பயிற்சிகளைத் தேர்ந்தெடுப்பது, உங்களை முன்னேற்றப்பாதைக்கு இட்டுச் செல்லும். எடுத்துக்காட்டாக, நீங்கள் உடல் எடை நிர்வாகத்திற்காக, உடற்பயிற்சிகளைத் தேர்ந்தெடுத்து உள்ளீர்கள் என்றால், நடைப் பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், ஓட்ட பயிற்சி, பளு தூக்குதல் உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொள்ளலாம். உங்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் தற்போதைய உடற்பயிற்சி குறித்த நிகழ்வுகளில் உண்மைத்தன்மையுடன் இருக்க வேண்டும். தீவிரம் குறைந்த பயிற்சிகளுடன் முதலில் துவங்கி, பின்பு படிப்படியாக, உடற்பயிற்சியின் தீவிரத்தை அதிகரிக்க வேண்டும்.
கட்டமைக்கப்பட்ட உடற்பயிற்சித் திட்டங்கள்
நீங்கள் மீண்டும் உடற்பயிற்சியைத் தொடங்க விரும்பினால் மட்டும் போதாது, அதற்குரிய கட்டமைப்புத் திட்டங்களின் மீதும் போதிய கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் மேற்கொள்ள நினைக்கும் உடற்பயிற்சிகளின் வகைகள், அதற்கேற்ற இடங்கள், உடற்பயிற்சி மேற்கொள்ள இருக்கும் நேரம் மற்றும் காலம் உள்ளிட்டவற்றை முன்கூட்டியே முடிவு செய்ய வேண்டும்.
உங்களுக்குப் பிடித்த பாடல்களின் பிளேலிஸ்ட்களை உருவாக்கிக் கொண்டு, பின்னர் உடற்பயிற்சியைத் துவக்கவும். இந்த நிகழ்வானது உடலை உடற்பயிற்சி புதுப்பிப்பது போல, உங்கள் மன அமைதியை விருப்பமான பாடல்கள் ஏற்படுத்தும். மாதத்திற்குக் குறைந்தது இரண்டு முறையாவது, உடற்பயிற்சிகளை மாற்றிச் செய்ய வேண்டும்.
ஓய்வு நாட்களைத் திட்டமிடுங்கள்
ஓய்வு நாட்களைச் சரியாகத் திட்டமிடாமல்,எந்தவொரு உடற்பயிற்சித் திட்டமும் முழுவெற்றி அடைய முடியாது. ஓய்வு நாட்களைத் திட்டமிடுவது என்பது, உடற்பயிற்சித் திட்டத்தைப் போன்றே மிக முக்கியமானது ஆகும். ஓய்வு நாட்கள் உடற்பயிற்சியை மிகைப்படுத்துவதற்காக அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.சீரான இடைவெளியில், ஓய்வு எடுப்பது என்பது, உடற்பயிற்சி நிகழ்வின் போது, உடல் அழுத்தத்திற்கு உள்ளாகும் நிலையில், அதைச் சரிசெய்யவும், பாதிப்பில் இருந்து மீட்கவும் உதவுகிறது. இது உங்கள் தசை வளர்ச்சிக்கு உதவுகிறது, தசைகளின் சோர்வு உணர்வைத் தடுக்கிறது, காயம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. உடற்பயிற்சியின் அளவைப் பொருட்படுத்தாமல், ஓய்வு நாட்கள், உடற்பயிற்சியின் முன்னேற்றத்திற்கு முக்கியமான நிகழ்வாக உள்ளது.
முன்னேற்றத்தைக் கண்காணித்து மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்
உடற்பயிற்சிகள் மேற்கொள்வதன் மூலமாக ஏற்படும் முன்னேற்றத்தைக் காண சிறிது காலங்கள் காத்திருப்பது அவசியமாகும். நீங்கள் இதற்கெனச் சிறிய அளவிலான இலக்குகளை உருவாக்குவதன் மூலம், முன்னேற்றத்தை உன்னிப்பாகக் கண்காணிக்க இயலும்.
இந்த இலக்குகளை நீங்கள் தொடர்ந்து எட்டும் போது, முன்னேற்றத்தைக் கண்காணிக்க இயலும். இது உங்களை அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறும் பொருட்டு, உடற்பயிற்சித் திட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ள உதவும்.
மேலும் வாசிக்க : சாப்பிடுவதில் கவனம் அவசியமா?
ஊட்டச்சத்து மற்றும் உடலின் நீரின் அளவிலும் கவனம் அவசியம்
நீங்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு உடற்பயிற்சிகளை மீண்டும் துவங்குகிறீர்கள் என்றால், உங்கள் அன்றாட ஊட்டச்சத்து நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியமான உணவு வகைகளைத் தேர்வு செய்வது, உங்களின் முதன்மையான நடவடிக்கையாக இருக்க வேண்டும். காய்கறிகள், பழங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்.பதப்படுத்தப்பட்ட உணவு வ்கைகளைக் குறைத்துக் கொள்வது நல்லது.
உடலை நீரேற்றமாக வைத்திருப்பதும் இன்றியமையாத விசயம் ஆகும். நீங்கள் அருந்தும் நீர், உடலின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், உடற்பயிற்சியின் போது உடல் இழந்த நீரை, மீண்டும் ஈடு செய்வதற்கும் உதவுகிறது. உங்கள் உடலை எப்போதும் போதுமான அளவிலான நீரேற்றத்துடன் வைத்திருக்க, பழச்சாறு உள்ளிட்டவற்றை அடிக்கடி குடிக்க வேண்டும்.
எப்போதும் ஊக்கத்துடனேயே இருக்க வேண்டும்
உடற்பயிற்சி திட்டத்துடன் எப்போதும் ஒன்றி இருப்பது என்பது ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கு வெற்றிகரமாகத் திரும்புவதற்கான முக்கிய நடவடிக்கையாக உள்ளது. முடியாது, இயலாது என்பது போன்ற எதிர்மறை எண்ணங்களை விட்டொழிக்க வேண்டும். உங்களை ஊக்குவிக்கும் வகையிலான நடத்தைகளை மேற்கொள்வது அவசியமாகும். இதன்மூலம், உடற்பயிற்சி மேற்கொள்வதை உற்சாகமாக உணர்வீர்கள்.
எந்தவொரு பயிற்சிக்கும் நிலைத்தன்மை என்பது மிக முக்கியமானது ஆகும். நிலைத்தன்மை விவகாரத்தில் நீங்கள் பொய் கூற இயலாது, இதன்மூலம், நீங்கள் உடற்பயிற்சி தவிர்த்த நாட்களை எளிதாகக் கணிக்க இயலும்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு உடற்பயிற்சிப் பழக்கத்தை மீண்டும் மேற்கொள்ளத் திட்டமிட்டு உள்ளவர்கள், மேற்கூறிய வழிமுறைகளை மனதில் நிலைநிறுத்தி செயல்பட்டால், ஆரோக்கியமான நல்வாழ்க்கை நமக்கு வசப்படும்..