வீட்டிலேயே ரத்த அழுத்த மாறுபாட்டைக் கண்காணிக்கலாம்
இரத்த அழுத்தம் என்பது, ரத்த ஓட்டத்தின் போது தமனிகளின் சுவர்களுக்கு எதிராக, ரத்த செல்கள் செலுத்தும் சக்தி அல்லது அழுத்தம் என வரையறுக்கப்படுகின்றது. இந்த அழுத்தம், இடது வெண்ட்ரிக்கிளில் இருந்து, அதன் தூரத்தைப் பொறுத்து படிப்படியாகக் குறைகின்றது. இந்த அழுத்தம், சிஸ்டாலிக் மற்றும் டயஸ்டாலிக் என்ற இரு எண் வகைகளால் குறிப்பிடப்படுகின்றது.
சிஸ்டாலிக் – இதயம் சுருங்கி ரத்தத்தைச் செலுத்தும் போது ஏற்படும் அழுத்தத்தைக் குறிக்கிறது.
டயஸ்டாலிக் – இதயத்துடிப்புகளுக்கு இடையில் ஓய்வெடுக்கும்போது ஏற்படும் அழுத்தத்தைக் குறிக்கிறது. இவை, உங்கள் இதயத்தின் ஆரோக்கியம் தொடர்பான மதிப்புமிக்க விளக்கங்களை வழங்குகின்றன.
கொரோனா பெருந்தொற்றின் போது, பெரும்பாலானோர் வீட்டில் இருந்துப் பணிபுரிய நிர்ப்பந்திக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பான்மையினர். இன்றளவும், தங்களது அலுவலகப் பணிகளை, வீட்டில் இருந்தவாறே, தொடர்ந்து வருகின்றனர். அவர்கள் வீட்டில் இருந்தே, தொடர்ந்து பணியாற்றி வருவதால், அலுவலகம் செல்வதற்கான போக்குவரத்துச் செலவு முற்றிலுமாகக்குறைவதோடு மட்டுமல்லாது, காலவிரயமும் தடுக்கப்படுகிறது. அலுவலகம் செல்வதும், வாகனம் ஓட்டுவதும் நமக்கு நல்ல உடற்பயிற்சியாக இருந்தது.ஆனால், தற்போது வீட்டில் இருந்தே, வேலைகளைச் செய்வதன் மூலம் உடற்பயிற்சியானது தவிர்க்கப்படுகிறது. உணவு மற்றும் உறக்கப் பழக்கவழக்கங்களில் நிகழும் மாறுதல்கள், நமது உடலுக்கு, விரும்பத்தகாதபாதிப்புகளை ஏற்படுத்தி விடுகின்றன.
இந்தியாவில், இளம்தலைமுறையினர் 3 பேரில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருப்பதாக, அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. இந்தக் கட்டுரையைப் படிக்கும் உங்களுக்கும் அந்தப் பாதிப்பு இருக்கலாம். அதன் அறிகுறிகளை, நீங்கள் இன்னமும் உணர்ந்திருக்க மாட்டீர்கள். இந்தப் பாதிப்பிற்கான அறிகுறிகள் முழுமையாக வெளித்தோன்றும்வரை, இந்தப் பாதிப்பு குறித்து யாரும் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. இந்தப் பாதிப்பு ஏற்பட்டால், நாம் பயப்படத் தேவை இல்லை. அதற்குரியச் சிகிச்சைகளை மேற்கொண்டு, ரத்த அழுத்த மாறுபாட்டை, நீங்கள் வீட்டில் இருந்தபடியே, கண்காணிக்கலாம். இதன்மூலம், மேற்கொள்வது சரியான சிகிச்சைதானா என்பதைக் கண்டறிய இயலும்.
வீட்டிலேயே ரத்த அழுத்த மாறுபாட்டைப் பரிசோதிக்க முடியும்
உயர் ரத்த அழுத்த மாறுபாட்டால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள், தினமும் தங்களது ரத்த அழுத்தத்தை, பரிசோதித்துக் கொள்வது அவசியமாகிறது. இதன்மூலம், இந்தப் பாதிப்பிற்கு, நாம் மேற்கொள்ளும் சிகிச்சை முறை, பலன் அளிக்கிறதா என்பதைக் கண்டறிய முடியும். தற்போது சந்தையில், ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கும் வகையில், பல்வேறு வகையான கருவிகள் பயன்பாட்டிற்கு வந்து உள்ளன. இதனைக் கொண்டு, சிலமணி நேர இடைவெளிகளில் அடுத்தடுத்து எடுக்கப்படும் பரிசோதனைகளின் மூலம், இதுகுறித்த முழுமையான விளக்கத்தைப் பெற இயலும்.
நீங்கள் ரத்த அழுத்தத்தை, பரிசோதிக்க விரும்பினால், உங்களுக்கு முதன்மையாகத் தேவைப்படுவது, ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க உதவும் கருவி ஆகும். இந்தக் கருவியை, ஆன்லைன் வாயிலாகவும் மற்றும் மருந்தகங்களின் மூலமாகவும் வாங்க முடியும். டிஜிட்டல் வகையிலான கருவிகள், பயன்படுத்த மிகவும் எளிமையானதாக உள்ளதால், இது பெரும்பாலானோரின் தேர்வு ஆக உள்ளது.
இரத்த அழுத்த பரிசோதனைக்கு முன்பாக
சில நிமிடங்கள் ஓய்வு நிலையில் இருக்க வேண்டும்
இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்யும் நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும்
பரிசோதனைக்கு முன் சிறுநீர்ப்பையைக் காலி செய்யவும். நிரம்பிய சிறுநீர்ப்பை அளவீடுகளைப் பாதிக்கலாம்.
ஒரே நேரத்தில் அளவீடுகளை எடுப்பது நல்ல பலனைத் தரும்
எளிமையான, அதேசமயம் இலகுவான ஆடைகளை அணிய வேண்டும்.
செயல்முறை
காலைநேரத்தில், காலை உணவு சாப்பிடுவதற்கு முன்பாக ரத்த அழுத்தம் பரிசோதனைச் செய்துகொள்வது நல்ல பலனைத் தரும்.
பரிசோதனை மேற்கொள்வதற்கு முன்பாக, பேசுவதைத் தவிர்த்துவிட்டு, 3 முதல் 5 நிமிடங்கள் ஓய்வு நிலையில் இருப்பது நல்லது.
வசதியாக அமர்ந்துக் கொண்டு, கால்களை மடக்காமல் நேராக இருக்க வேண்டும்.
உங்களது இடது கையை, இதயத்திற்கு நேராக உயர்த்தி, அதை ஒரு டேபிளில் வைக்கவும்.
இரத்த அழுத்தத்தைக் கண்காணிக்கும் கருவியில் இணைக்கப்பட்ட பட்டையை, முழங்கை மூட்டுக்கு மேற்பகுதியில், கட்ட வேண்டும்.
பின்னர்க் கருவியை இயக்க வேண்டும்.
இந்தக் கருவி, முழங்கையினுள் ஒருவித அழுத்தம் கொடுக்கும். பின்னர்ப் பரிசோதனைத் துவங்கும். ரத்த அழுத்த அளவு கருவியின் திரையில் காட்டப்படும்.
அதை வெவ்வெறு நேரங்களில் எடுத்து, அதன்மூலம், நமக்கு இருக்கும் உயர் ரத்த அழுத்த பாதிப்பினைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியும்.
இரத்த அழுத்த அளவுகள் மற்றும் அவற்றின் அர்த்தங்கள்
இரத்த அழுத்தம் 120/80 என்ற அளவில் இருந்தால், உடல் ஆரோக்கியமாக உள்ளது என்று அர்த்தம்
90/60 என்ற அளவு – சிலருக்கு இயற்கையாகவே, குறைந்த ரத்த அழுத்த பாதிப்பு இருக்கும். இருப்பினும், அவர்களுக்கு எவ்வித எதிர்மறை விளைவுக்ளும் இருக்காது.100 -129 /80 – உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு
130 -139 /80 – 89 – உயர் ரத்த அழுத்த பாதிப்பு, வாழ்க்கை முறையில் மாற்றங்களை மேற்கொள்வது அவசியம்
140 /90க்கும் அதிகமாக – உயர் ரத்த அழுத்த பாதிப்பு, வாழ்க்கைமுறையில் மாற்றங்கள் மற்றும் தகுந்தச் சிகிச்சைகள் அவசியமாகின்றன.
பாதிக்கும் காரணிகள்
காபி, டீ போன்ற பானங்கள் ரத்த அழுத்த அளவீடுகளைப் பாதிக்கும்..இதனால், அளவீடு மேற்கொள்ளப்படும் போது, இத்தகைய பானங்களைத் தவிர்ப்பது நல்லது.
உடற்பயிற்சி செய்பவர்களுக்கு, ரத்த அழுத்த மாறுபாடு அதிகமாக இருக்கும். எனவே, பரிசோதனைக்கு முன்னதாக, 30 நிமிடங்கள் எவ்வித உடற்பயிற்சியையும் மேற்கொள்ளாமல் ஓய்வு நிலையில் இருப்பது நல்லது.
மன அழுத்தம், கோபம், கவலை போன்ற மனநிலைகளில் இருக்கும் போது, ரத்த அழுத்தம் அதிக அளவில் இருக்கும். அளவீடு மேற்கொள்ளப்படும் போது, இந்த மனநிலைகளைத் தவிர்ப்பது நல்லது.
சிகரெட் பிடித்தல், புகையிலைப் பொருட்கள் பயன்படுத்துதல் உள்ளிட்ட நிகழ்வுகள், ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். அளவீடு எடுப்பதற்கு முன், இத்தகைய நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும்.
மேலும் வாசிக்க : DNA அடிப்படையிலான உணவுமுறைப் பலனளிக்கிறதா?
கட்டுப்படுத்தும் காரணிகள்
உப்பு உட்கொள்ளலைக் குறைக்க வேண்டும்
இரத்த அழுத்தத்தைக் குறைக்க, உணவில் உப்பின் பயன்பாட்டைக் குறைத்துக் கொண்டாலே போதும்.வீட்டில் இருக்கும்போது, மக்கள் அதிக நொறுக்குத் தீனிகளை உண்கின்றனர்.. இது அவர்களின் உடலில் கொழுப்பு அளவை அதிகரிக்கச் செய்வதோடு மட்டுமல்லாது, உடல் எடை அதிகரிப்பிற்கும் காரணமாக அமைகின்றன. முழுத்தானியங்கள், சால்ட்கள், பழ வகைகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்க வேண்டும்
தினமும் தவறாது உடற்பயிற்சி செய்வதன் மூலம், நாம், நம்மை எப்போதும் ஆக்டிவ் ஆக வைத்துக் கொள்ள முடியும். காலை மற்றும் மாலை வேளைகளில் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். உங்களால் ஜிம்மிற்குச் செல்ல முடியவில்லை என்றபோதிலும், வீட்டிலேயே சிறிய அளவிலான உடற்பயிற்சிகளைச் செய்யலாம். யோகா, சிறந்ததொரு பயிற்சி முறை ஆகும். தினமும் 30 நிமிடங்கள் யோகா செய்து வருவது நல்லது.
மூலிகைத் தேநீருக்கு மாறுங்கள்
நீங்கள் உயர் ரத்த அழுத்த பாதிப்பால் பாதிக்கப்பட்டு இருப்பின், தொடர்ந்து காபி குடித்து வந்தால், அது உங்கள் உடல்நிலையை மேலும் மோசமானதாக மாற்றி விடும். இந்த நேரத்தில் கிரீன் டீ அல்லது பிளாக் டீயை, நீங்கள் பரிசீலனைச் செய்யலாம். செம்பருத்தி டீயில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்கள் ரத்த அழுத்தத்தையும் உடல் எடையையும் குறைக்க உதவுகின்றன.
மன அழுத்தத்தைத் தவிருங்கள்
உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்படுவதற்கு, முக்கியமான காரணமே மன அழுத்த பாதிப்பு தான் ஆகும். நீங்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்க நேரும் போது, உங்களது மன அழுத்தம் பன்மடங்கு அதிகரித்திருக்கும்.
மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி, உயர் ரத்த அழுத்த பாதிப்பில் இருந்து விடுபட்டு, வளமான நல்வாழ்க்கை வாழ்வோமாக….