நீரிழிவுப் பாதிப்பைத் துவக்கத்திலேயே தவிர்ப்பது எப்படி?
ப்ஃரீடயாபடிஸ் எனப்படும் நீரிழிவுப் பாதிப்பிற்கு முந்தைய நிலையில், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, சாதாரண வரம்பைக் காட்டிலும் அதிகமாக இருக்கும். இருப்பினும், அது இரண்டாம் வகை நீரிழிவுப்பாதிப்புடன் ஒப்பிடும்போது குறைவான அளவுதான் ஆகும். ப்ஃரீடயாபடிஸ் நிலை நீண்ட நாட்களுக்கு நீடிக்கும்பட்சத்தில், அது நீரிழிவு நோய்ப்பாதிப்பை உருவாக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
ஆரோக்கியமான ப்ஃரீடயாபடிஸ் உணவுமுறையைக் கடைப்பிடிப்பது, உடல் செயல்பாடுகளை அதிகரிப்பது உள்ளிட்ட நேர்மறையான வாழ்க்கைமுறை மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம், இரண்டாம் வகை நீரிழிவு நோய்ப்பாதிப்பைத் தடுக்க அல்லது தாமதப்படுத்த இயலும்.
ப்ஃரீடயாபடிஸ் மற்றும் இரண்டாம் வகை நீரிழிவுக்கும் இடையே உள்ள தொடர்பு
உயர் ரத்த சர்க்கரை அளவு என்ற அடிப்படைச் சிக்கலுடன், ப்ஃரீடயாபடிஸ் மற்றும் இரண்டாம் வகை நீரிழிவு இணைக்கப்பட்டு உள்ளன. ப்ஃரீடயாபடிஸ் நிலை இரண்டாம் வகை நீரிழிவு நோய்ப்பாதிப்பின் தொடக்க அறிகுறி ஆகும். இதற்குச் சரியான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அது இரண்டாம் வகை நீரிழிவுப் பாதிப்பிற்கு வழிவகுத்துவிடும். ப்ஃரீடயாபடிஸ் நிலை உள்ளவர்கள் ஆரோக்கியமான உணவுமுறை, உடல் எடையைச் சரியாக நிர்வகித்தல், போதிய அளவிலான உடல் செயல்பாடுகளை மேற்கொண்டாலே, நீரிழிவுப் பாதிப்பிலிருந்து தப்பி விடலாம்.
ப்ஃரீடயாபடிஸ் பாதிப்பின் பொதுவான அறிகுறிகள்
அதிகத் தாக உணர்வு
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்பட்சத்தில், நீரிழப்பு அதிகமாகக் காணப்படும். இதன்காரணமாக, அதிகப்படியான தாக உணர்வு ஏற்படுகிறது.
அடிக்கடி சிறுநீர்க் கழித்தல்
இரவுநேரத்தில் அடிக்கடி சிறுநீர்க் கழித்தல், நீரிழிவுக்கு முந்தைய நிலையின் அறிகுறியாக உள்ளது.
உடல் சோர்வு
போதிய அளவு ஓய்வு எடுத்தபிறகும், உடல் அதீதச் சோர்வுடன் இருத்தல் அல்லது உடலில் போதிய சக்தி இல்லாமல் இருத்தல்.
பசி உணர்வு அதிகரிப்பு
உங்கள் உடல், குளுக்கோஸைத் திறம்பட பயன்படுத்தாத காரணத்தினால், பசி உணர்வு அடிக்கடி ஏற்படுகிறது.
எதிர்பாராத உடல் எடை இழப்பு
பசி உணர்வு அதிகரித்து உள்ளபோதிலும், குளுக்கோஸைச் சரியாகச் செயல்படுத்தாத நிலை, உடலின் இயலாமைக் காரணமாக, எதிர்பாராத அளவிலான உடல் எடை இழப்பை எதிர்கொள்ளலாம்.
காயங்கள் மெதுவாகக் குணமடைதல்
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்பட்சத்தில், உடலில் வெட்டுகள் அல்லது காயங்கள் குணமடைய அதிக நேரம் ஆகும்.
ப்ஃரீடயாபடிஸ் பாதிப்பு ஏற்படுவதற்கான ஆபத்துக் காரணிகள்
ப்ஃரீடயாபடிஸ் பாதிப்பு ஏற்படுவதற்கான ஆபத்துக் காரணிகள் பல இருப்பினும் பொதுவான காரணிகள் இங்கே பட்டியலிடப்பட்டு உள்ளன.
உடல் பருமன் அல்லது அதிக உடல் எடை
அதிக உடல் எடை, குறிப்பாக வயிற்றுப்பகுதியில் கொழுப்பு, இன்சுலின் எதிர்ப்பின் அபாயத்தை அதிகரிக்கச் செய்கிறது. இதன்காரணமாக, ப்ஃரீடயாபடிஸ் நிலை உருவாகிறது.
நீண்ட நேரம் அமர்ந்த நிலையிலான வாழ்க்கைமுறை
போதிய உடல் செயல்பாடுகள் இல்லாதது, ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து இருக்கும் வகையிலான வாழ்க்கைமுறை, இன்சுலின் எதிர்ப்பிற்குப் பங்களிப்பதுடன், ப்ஃரீடயாபடிஸ் அபாயத்தையும் அதிகரிக்கிறது.
குடும்ப வரலாறு
இரண்டாம் வகை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர் இருக்கும் குடும்பத்தில் இருக்கும் மற்ற உறுப்பினர்களுக்கு, ப்ஃரீடயாபடிஸ் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
வயதுக் காரணிகள்
45 வயதைக் கடந்தவர்களுக்கு, ப்ஃரீடயாபடிஸ் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இது உடல் செயல்பாடுகள் குறைதல், ஹார்மோன் வடிவங்களில் மாற்றங்கள், இந்தப் பாதிப்பு ஏற்படுவதற்குக் காரணமாக அமைகிறது.
கர்ப்பகாலத்தில் ஏற்படும் நீரிழிவு
பெண்களுக்குக் கர்ப்ப காலத்தில் ஏற்படும் நீரிழிவு நோய்ப்பாதிப்பானது, ப்ஃரீடயாபடிஸ் மற்றும் இரண்டாம் வகை நீரிழிவுப் பாதிப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
ஆரோக்கியமற்ற உணவுமுறை
பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை நிறைந்த உணவுகள் நிறைந்த ஆரோக்கியமற்ற உணவுமுறையை மேற்கொள்பவர்களுக்கு, ப்ஃரீடயாபடிஸ் மற்றும் இரண்டாம் வகை நீரிழிவுப் பாதிப்பு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
மேலும் வாசிக்க : இன்சுலின் பம்ப்களின் மூலம் நீரிழிவு பாதிப்பை நிர்வகித்தல்
ப்ஃரீடயாபடிஸ் நிலையை மாற்றி அமைப்பதற்கான வாழ்க்கைமுறை மாற்றங்கள்
நாம் வாழும் வாழ்க்கைமுறையில் சில மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம், ப்ஃரீடயாபடிஸ் நிலையைத் தடுப்பது மட்டுமல்லாது, இரண்டாம் வகை நீரிழிவு நோய்ப்பாதிப்பின் முன்னேற்றத்தைத் தடுக்கவும் உதவுகிறது.
ஆரோக்கியமான உணவுப்பழக்கத்துடன் கூடிய சமச்சீர்ப் ப்ஃரீடயாபடிஸ் நிலை
பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை நிறைந்த உணவு வகைகள் உள்ளிட்டவைகளைக் குறைத்து, பழ வகைகள், காய்கறிகள், முழுத் தானியங்கள், புரதங்கள், ஊட்டமளிக்கும் கொழுப்புகளை உள்ளடக்கிய ப்ஃரீடயாபடிஸ் நிலைக்கு ஏற்ப, ஆரோக்கியமான உணவுமுறைக்கு முன்னுரிமை அளியுங்கள்.
வழக்கமான உடல் செயல்பாடு
வாரத்திற்கு 150 நிமிடம் கால அளவிலான மிதமான தீவிரம் கொண்ட ஏரோபிக் உடற்பயிற்சிகளை, சீரான உடல் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். விறுவிறுப்பான நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் அல்லது இதயத்துடிப்பை அதிகரிக்கும் எந்தவகை உடற்பயிற்சிகளும் இதில் அடங்கும்.
உடல் எடை மேலாண்மை
ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் வழக்கமான உடல் செயல்பாடு மூலம் சரியான உடல் எடையைப் பராமரிக்கவும். உங்கள் உடல் எடையில் 5 முதல் 7 சதவீதம் அளவிலான சிறிய அளவிலான உடல் எடையை இழப்பது கூட, இரண்டாம் வகை நீரிழிவுப் பாதிப்பைக் கணிசமாகக் குறைக்க உதவும்.
மன அழுத்த மேலாண்மை நுட்பங்கள்
தியானம், ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள், நினைவாற்றல் பயிற்சிகள், யோகா அல்லது ஓய்வெடுக்க உதவும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். நாள்பட்ட மன அழுத்த பாதிப்பானது, இன்சுலின் எதிர்ப்பை ஊக்குவிப்பதோடு, ப்ஃரீடயாபடிஸ் நிலையை நிர்வகிப்பதையும் சவாலான நிகழ்வாக மாற்றுகிறது.
போதிய அளவிலான உறக்கம்
தினசரி இரவு 7 முதல் 8 மணி நேரம் உறக்கம் மேற்கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். போதிய அளவிலான உறக்கம் இல்லாத நிலை, இன்சுலின் உணர்திறனைப் பாதிப்பதோடு மட்டுமல்லாது, ப்ஃரீடயாபடிஸ் நிலையை உருவாக்கி, இரண்டாம் வகை நீரிழிவுப் பாதிப்பு ஏற்படவும் காரணமாக அமைகிறது.
மது மற்றும் புகையிலைப் பழக்கத்தை முற்றிலும் தவிர்த்தல்
மது மற்றும் புகையிலைப் பழக்கங்கள், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும். இதன்மூலம் ப்ஃரீடயாபடிஸ் மற்றும் இரண்டாம் வகை நீரிழிவு பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
ப்ஃரீடயாபடிஸ் நோயாளிகள் சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள்
இரத்தத்தில் சர்க்கரையின் அளவைப் பராமரிக்கவும், இரண்டாம் வகை நீரிழிவுப் பாதிப்பின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தவும் ப்ஃரீடயாபடிஸ் உணவுத்திட்டத்தை உருவாக்குவது இன்றியமையாத நிகழ்வாக உள்ளது. ப்ஃரீடயாபடிஸ் நோயாளிகள் சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள் கீழே பட்டியலிடப்பட்டு உள்ளன.
சாப்பிட வேண்டிய உணவுகள்
முழுத் தானியங்கள்
முழுக் கோதுமை, பழுப்பு அரிசி, குயினோவா, ஓட்ஸ் போன்ற முழுத்தானிய வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த உணவுவகைகளில், அதிகளவில் நார்ச்சத்து உள்ளன. இரத்தத்தில் சர்க்கரை அளவுகளில் குறைந்த அளவு தாக்கத்தையே வழங்குகின்றன.
மாவுச்சத்து இல்லாத காய்கறிகள்
இலைக் கீரைகள், ப்ரோக்கோலி, காலிபிளவர், மிளகுத்தூள், கேரட் போன்ற பல்வேறு வண்ணமயமான காய்கறிகளை, உணவுமுறையில் சேர்க்க வேண்டும். கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அதிகம் உள்ளன.
மெலிந்த புரதங்கள்
தோல் நீக்கப்பட்ட கோழி, மீன், பருப்பு வகைகள், குறைந்த கொழுப்பு கொண்ட பால் பொருட்கள் பொன்ற மெலிந்த புரத உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும். இது ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கணிசமாக அதிகரிப்பதைத் தடுக்கிறது.
ஆரோக்கியமான கொழுப்புகள்
வெண்ணெய், கொட்டைகள், விதைகள், ஆலிவ் எண்ணெய் போன்ற ஊட்டமளிக்கும் கொழுப்பு வகைகளைச் சேர்க்கவும். இந்தக் கொழுப்புகள், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகின்றன.
அதிக நார்ச்சத்து உள்ள உணவுகள்
பழ வகைகள், காய்கறிகள், பருப்பு வகைகள், முழுத் தானியங்கள் உள்ளிட்ட நார்ச்சத்து நிறைந்த உணவு வகைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். நார்ச்சத்து மிக்க உணவு வகைகள் செரிமானத்தைத் தாமதப்படுத்துவதோடு மட்டுமல்லாது, ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்
சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள் மற்றும் பானங்கள்
சர்க்கரை அதிகம் கொண்ட உணவு வகைகள், மிட்டாய்கள், இனிப்புகள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் உள்ளிட்டவைகளின் பயன்பாட்டைக் குறைக்கவும். இந்த உணவு வகைகள், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்துவிடுகின்றன.
சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள்
வெள்ளை ரொட்டி, வெள்ளை அரிசி, பதப்படுத்தப்பட்ட தானியங்களின் பயன்பாட்டைத் தவிர்க்கவும். இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கணிசமான அளவிற்கு உயர்த்தி விடுகின்றன.
நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள்
வறுத்த உணவுகள், இறைச்சிக் கொழுப்புகள், முழுக் கொழுப்பு கொண்ட பால் பொருட்கள் உள்ளிட்ட நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் கொண்ட உணவு வகைகளைக் கூடுமானவரைத் தவிர்ப்பது நல்லது.
மேற்குறிப்பிட்ட உணவுமுறைகளைக் கவனமாகப் பின்பற்றி, ப்ஃரீடயாபடிஸ் எனப்படும் நீரிழிவுப் பாதிப்பின் முந்தைய நிலையின் அறிகுறிகளில் இருந்து முழுமையாக விடுபட்டு, இரண்டாம் வகை நீரிழிவுப் பாதிப்பு குறித்த அச்சம் இன்றி ஆரோக்கியமாக வாழ்வீராக…