Image of a female patient's hands with the digital BP monitor measuring the readings meanwhile the doctor conducts a remote consultation and provides online medical assistance through the laptop in front of her.

தொலைமருத்துவத்தில் அணியக்கூடிய சாதனங்களின் பங்கு

மருத்துவத் துறையில் நிகழும் அபரிமிதமான மாற்றங்களைக் கண்டு உலகமே வியந்து நிற்கிறது. முன்னொரு காலத்தில் அதிசயமாகப் பார்க்கப்பட்ட தொழில்நுட்பமானது, தற்போதைய நிலையில், நவீன மருத்துவத்தின் அடிப்படையாக மாறி உள்ளது. தொலைமருத்துவம் மற்றும் தொலைநிலை நோயாளி கண்காணிப்பு முறைகளில், அணியக்கூடிய சாதனங்களின் பங்கு அளப்பரியதாக உள்ளது. தற்போதைய நவீனயுகத்தில், இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்ட கைக்கடிகாரம் நேரம், இதயத்துடிப்பு, நடைகளின் எண்ணிக்கை மற்றும் உறக்கத்தின் அளவை மதிப்பிடுகிறது.இத்தகைய தொழில்நுட்பம் சார்ந்த [...]

Vector image of a person sitting on a chair and a mobile phone displaying an image of online consultation app with a female doctor writing down a prescription.

நோயாளிகளுக்குத் தொலைமருத்துவத்தின் நன்மைகள்

இந்தியாவின் சுகாதாரத் துறையில் புரட்சியை ஏற்படுத்தவல்லத் துறையாகப் பிரமாண்ட அளவில் உருவெடுத்துள்ளது டெலிமெடிசின் எனப்படும் தொலைமருத்துவத் துறை. நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் வசிக்கும் அனைவருக்கும், மலிவான மற்றும் எளிதில் அணுகக்கூடிய சுகாதாரச் சேவையைத் தொலைமருத்துவம் வழங்குகிறது.இதுகுறித்த விழிப்புணர்வை, மக்களிடையே ஏற்படுத்தும் வகையில், அரசுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தொலைமருத்துவம் என்றால் என்ன? எளிதில் அணுகமுடியாத பகுதிகளான ஊரகப் பகுதிகள், மலைக்கிராமங்கள் உள்ளிட்டவற்றில் வசிப்பவர்களுக்கு, வீடியோ கான்பரன்சிங், தொலைதூரக் [...]

Side view of a woman having a video consultation with a male doctor through a laptop kept on a table and a mobile kept near it.

தொலைநிலை நோயாளி கண்காணிப்பு முறை நன்மைகள்

தொலைநிலை நோயாளி கண்காணிப்பு முறை என்றால் என்ன? நோயாளிகளின் மருத்துவம் சார்ந்த நிலைகளின் தரவைக் கண்காணிக்கும் நிகழ்விற்கு, டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் முறையை, தொலைநிலை நோயாளிக் கண்காணிப்பு முறை என்று குறிப்பிடுகின்றோம். இந்தத் தரவுகளை, மின்னணு முறையில் மாற்றி அமைத்து. தேவைப்படும்போது தொடர்ச்சியான மதிப்பீடுகளை மேற்கொள்ளச் சுகாதார வல்லுநர்களுக்குப் பேருதவி புரிகிறது. நாள்பட்ட நோய்கள் மற்றும் கடுமையான பாதிப்புக்கு உள்ளான நோயாளிகளின் தற்போதைய நிலையை, இணைய வசதியின் மூலம், அவர்கள் [...]

Vector image of a woman's hands holding a smartphone with video Call on screen depicting the idea of a patient having online conversation with doctor.

தொலைமருத்துவம் – நன்மைகள் மற்றும் அதன் எதிர்காலம்

நீங்கள் வீடியோ அழைப்புகளின் வாயிலாக நண்பர்கள், உறவினர்களிடம் அளவளாவுகிறீர்கள். இந்த நவீன யுகத்தில் இத்தகைய இனிமையான பொழுதுபோக்கு அதிகரித்துள்ளது. இந்தத் தொலைநுட்ப வசதியையே, சுகாதாரச் சேவைகளுக்குப் பயன்படுத்தினால், அதுவே தொலைமருத்துவம் எனப்படும் டெலிஹெல்த் சேவை ஆகும். கொரோனா பெருந்தொற்று, சர்வதேச அளவில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், இந்தத் தொலைமருத்துவ சேவையே பெருமளவிற்குக் கைகொடுத்தது எனலாம். இந்தத் தொலைமருத்துவ சேவையின் நன்மைகள், எதிர்காலத்தின் அதன் பங்களிப்பு உள்ளிட்டவைகளை விரிவாகக் காண்போம். [...]

Copyright © 2024 Health Design | All Rights Reserved.