இதய ஆரோக்கியத்தில் காற்று மாசுபடுதலின் தாக்கம்
சர்வதேச அளவில், வெளிப்புறக் காற்று மாசுபாடு காரணமாக, ஆண்டுதோறும் 1.9 மில்லியன் மக்கள் இதய நோய்ப்பாதிப்புகளாலும், கிட்டத்தட்ட 1 மில்லியன் மக்கள் பக்கவாதத்தாலும் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று உலக இதயக் கூட்டமைப்பு (WHF) தெரிவித்து உள்ளது.
காற்று மாசுபாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரத் தாக்கம்
காற்று மாசுபாடு நிகழ்வானது, சுற்றுப்புறச் சூழல் மற்றும் மனிதர்களின் உடல்நலத்தில் அதிகப் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக, சர்வதேச அளவிலான கவலையாக உருவெடுத்து உள்ளது. காற்று மாசுபாடு, எண்ணற்ற உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தினாலும், இதய ஆரோக்கியத்தில் அதன் தாக்கம் அளப்பரியது ஆகும். இந்த மாசுபாடு நிகழ்வின் முக்கிய அங்கமான நுண் துகள்கள், இதயச் செயலிழப்பு பாதிப்பு வரைக் கொண்டு சென்றுவிடுகிறது.
நுண் துகள்கள் மற்றும் அவற்றின் தாக்கம்
நுண் துகள்கள் PM என்ற அலகால் குறிப்பிடப்படுகின்றன. நுண்ணிய துகள்கள் PM 2.5 என்ற அளவிலும், பெரிய அளவிலான நுண் துகள்கள் PM 10 என்ற அளவில் மதிப்பிடப்படுகின்றன. இந்த நுண் துகள்கள், சுவாசித்தலின் வழியாக உடலின் உள்நுழைந்து, ரத்த ஓட்டத்தில் கலந்து, வீக்கம் மற்றும் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தைத் தூண்டி, இதயப் பாதிப்புகள் ஏற்பட காரணமாக அமைகின்றன.
இதய ஆரோக்கிய பாதிப்பு
காற்று மாசுபாடு, இதய ஆரோக்கியச் சீர்கேட்டில் முக்கியப்பங்கு வகிக்கிறது. கரோனரி தமனி நோய் உள்ளிட்ட நோய்ப்பாதிப்பு கொண்டவர்கள், காற்று மாசுபாட்டினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். காற்று மாசுபாட்டின் மூலம் ஏற்படும் அழற்சி விளைவானது தமனி விறைப்பு மற்றும் எண்டோடெலியல் செயலிழப்பு பாதிப்பை அதிகரிக்கச் செய்கின்றன. இதன்மூலம், இதயச் செயலிழப்பு வீதம் அதிகரிக்கிறது. ஹைபர்டென்சன் எனப்படும் உயர் ரத்த அழுத்தம், பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சி உள்ளிட்ட இதயச் செயலிழப்புப் பாதிப்புடன் தொடர்புடைய ஆபத்துக் காரணிகளில், காற்று மாசுபாட்டின் பங்களிப்பு அபரிமிதமாக உள்ளது.
மேலும் வாசிக்க : வீக் எண்ட் லேட் ஆக எழுபவரா நீங்க – லக்கிமேன் தான்!
வாயு மாசுபடுத்திகளின் தாக்கம்
நுண் துகள்களுக்கு அப்பால், நைட்ரஜன் டை ஆக்சைடு (NO2) மற்றும் ஓசோன் (O3) போன்ற வாயு மாசுபடுத்திகளும், இதயப் பாதிப்புகளுக்கு முக்கியக் காரணமாக அமைகின்றன. தொழிற்சாலை மற்றும் வாகனங்களில் இருந்து வெளிவரும் புகையில் நைட்ரஜன் டை ஆக்சைடு வேதிப்பொருளானது, இதயச் செயலிழப்புடன் தொடர்புடையது.
இதேபோல், பருவநிலை மாற்றத்தின் முக்கியக் காரணியாக உள்ள ஓசோன் வாயுவானது, வீக்கம் மற்றும் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தைத் தொடர்ந்து ஊக்குவிப்பதன் மூலம், இதயச் செயலிழப்பு பாதிப்பின் வீதம் அதிகரிக்கிறது.
குளிர்காலத்தில் மாரடைப்பு ஏற்படுவதற்கான தூண்டுதல் நிகழ்வுகள்
இதயச் செயலிழப்பு நிகழ்வில், காற்று மாசுபாட்டின் தாக்கத்தை அறிந்துகொள்ள, புவியியல் மற்றும் காலநிலை மாறுபாடுகள் உள்ளிட்ட சுற்றுச்சூழல் காரணிகள் குறித்த புரிதல் அவசியமாகும். அதிகரித்த வாகனப் போக்குவரத்து, தொழில்துறை நடவடிக்கைகளால், நகர்ப்புறப் பகுதிகள், காற்று மாசுபடுத்திகளால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளன. இதன்காரணமாக, இந்தப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு இதயச் செயலிழப்பு உள்ளிட்ட இதய நோய்ப்பாதிப்புகள் ஏற்படும் வீதம் மிகவும் அதிகமாகவே உள்ளது. பருவகால மாறுபாடுகள் மற்றும் காலநிலைக் காரணிகள் காற்று மாசுபாட்டின் தீவிரத்தை மேலும் அதிகரிக்கிறது.
பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள்
இதயச் செயலிழப்புப் பாதிப்பில் இருந்து விடுபட, காற்று மாசுபாட்டின் தாக்கத்தைத் திறம்பட நிர்வகிப்பது மட்டுமல்லாது, அதற்கென விரிவான மற்றும் பன்முக அணுகுமுறையானது இன்றியமையாததாக உள்ளது. சரியான அளவிலான நிலையான திட்டமிடலை ஊக்குவித்தல், புதுப்பிக்கத்தக்க மற்றும் சுத்தமான எரிசக்தி ஆதாரங்களுக்கு மாறுதல் உள்ளிட்ட நடைமுறைகள், இதய நோய்ப் பாதிப்புகளில் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள உதவுகின்றன.
மக்கள் பங்கேற்பு மற்றும் விழிப்புணர்வு
பொது விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள், வாகனங்களின் பயன்பாட்டைக் குறைத்து, அதன் உமிழ்வைக் கட்டுப்படுத்துதல், அதிகக் காற்றும் மாசுபாடு காலங்களில் அதன் பயன்பாட்டைக் குறைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், இதய ஆரோக்கியத்தில் காற்று மாசுபாட்டின் தாக்கத்தைத் தணிக்க இயலும். நுண் துகள்கள், வாயு மாசுபடுத்திகள், இதய ஆரோக்கியத்துடனான அவற்றின் பன்முகத் தொடர்புகளுக்கு இடையிலான சிக்கலான தொடர்பு, காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கும், பாதிக்கப்படக்கூடிய மக்களை, இதயச் செயலிழப்பின் பலவீனப்படுத்தும் விளைவுகளில் இருந்து பாதுகாப்பதற்குப் பேருதவி புரிகிறது.
காற்று மாசுபாட்டு வீதத்தினைக் குறைத்து, இதய நோய்ப்பாதிப்புகளில் இருந்து முழுமையான நிவாரணம் பெற்று, ஆரோக்கியமான மற்றும் வளமான நல்வாழ்க்கை வாழ்வோமாக…