Close up view of a male doctor wearing a blue stethoscope,holding a card with the words

வழக்கமான குளுக்கோஸ் சோதனையின் முக்கியத்துவம்

சர்வதேச அளவில், நீரிழிவு நோயாளிகள் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.இதில் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால், இந்தியாவில் ஆண்டுதோறும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கைத் தொடர்ந்து அதிகரித்து வருவதுதான்.

நீரிழிவு பாதிப்பு குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருகிறது. இதனால், பலர்த் தங்கள் உடல்நலத்திற்கு முன்னுரிமை அளிக்கத் துவங்கியுள்ளனர். நீரிழிவு பாதிப்பைக் கண்டறிய குளுக்கோஸ் சோதனை முக்கியமானது.

இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை, குளுக்கோஸ் சோதனையின் மூலம் கண்டறியலாம். இந்தச் சர்க்கரையானது, உடலின் அனைத்து உறுப்புகளும் சீராக இயங்குவதற்குத் தேவையான ஆற்றலை வழங்குகின்றது. நாம் உண்ணும் உணவுவகைகளில் இருந்து, நம் உடலுக்குத் தேவையான குளுக்கோஸ் அல்லது சர்க்கரைக் கிடைக்கின்றது. கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவு வகைகளை அதிகம் சாப்பிடுவதன் மூலம், அது செரிமானம் அடைந்து, அதில் இருந்து கிடைக்கும் குளுக்கோஸ், ரத்தஓட்டத்தில் கலக்கின்றது. நமது உடலில் உள்ள கணையத்தில், இன்சுலின் என்ற ஹார்மோன் சுரக்கின்றது. இந்த ஹார்மோனானது, ரத்தத்தில் எவ்வளவு சர்க்கரை இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறது. உடல் செல்கள், ரத்தத்தில் உள்ள சர்க்கரையை எடுத்துக் கொள்வதற்கும், இன்சுலின் ஹார்மோன் துணைபுரிகிறது.

உடல் ஆரோக்கியத்திற்குச் சர்க்கரை முக்கியம். ஆனால் அதன் அளவு அதிகரிக்கும்போது, நீரிழிவு, சிறுநீரகம் மற்றும் இதயப் பாதிப்புகளுக்குக் காரணமாகிறது.

இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கண்டறிய, குளுகோமீட்டர்கள் பயன்படுகின்றன. இதன்மூலம் உடலின் சர்க்கரையின் அளவைத் துல்லியமாகவும், எளிதாகவும் கண்டறிய முடியும். நீரிழிவுப் பாதிப்பு நோயாளிகளுக்கு, உதவிகரமாகக் குளுகோமீட்டர் விளங்கி வருகிறது என்று கூறினால், அது மிகையல்ல.

சர்க்கரையின் அளவு ஏற்றத்தாழ்வுகளுக்குக் காரணங்கள்

உடற்பயிற்சி செய்துமுடித்த பின், உடலில் சர்க்கரையின் அளவு பெருமளவு குறைவதாக, ஆய்வுமுடிவுகள் தெரிவிக்கின்றன. நீங்கள் அதிதீவிரக் கடின உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும் போது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு நீண்ட நாட்களுக்குக் கட்டுக்குள் உள்ளது.

உணவுமுறைத் தேர்வுகள்

உடற்பயிற்சியின் அளவுகள்

மன அழுத்த அளவு

உறக்கத்தின் தரம்

ஆண்டிபயாடிக்ஸ் மற்றும் ஸ்டீராய்டுகளின் பயன்பாடு

உடலின் நீரேற்ற அளவு

உள்ளிட்டவை, இரத்தத்தில் சர்க்கரையின் அளவில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படக் காரணமாக அமைகின்றன.

சர்க்கரையின் அளவு விகிதம்

நீரிழிவுப் பாதிப்பு இல்லாதவர்கள்

எதுவும் சாப்பிடாத நிலையில், பரிந்துரைக்கப்பட்ட சர்க்கரையின் அளவு 70 -100 mg/dl

சாப்பிட்டு 90 நிமிடங்கள் கழித்து, பரிந்துரைக்கப்பட்ட சர்க்கரையின் அளவு 90 -140 mg/dl

முதல் வகை நீரிழிவுப் பாதிப்பு உடையவர்கள்

சாப்பிடுவதற்கு முன்பாக, பரிந்துரைக்கப்பட்ட சர்க்கரையின் அளவு 80 – 130 mg/dl

சாப்பிட்டு 2 மணிநேரங்கள் கழித்து, பரிந்துரைக்கப்பட்ட சர்க்கரையின் அளவு 180 mg/dlக்கு குறைவாக இருக்க வேண்டும்.

இரண்டாம் வகை நீரிழிவுப் பாதிப்பு உடையவர்கள்

எதுவும் சாப்பிடாத நிலையில், பரிந்துரைக்கப்பட்ட சர்க்கரையின் அளவு 126mg/dl அல்லது அதற்கு அதிகமாக இருக்கும்.

சாப்பிட்டு 90 நிமிடங்கள் கழிந்த பின்னர், பரிந்துரைக்கப்பட்ட சர்க்கரையின் அளவு 200 mg/dl அல்லது அதற்கு அதிகமாக இருக்கும்.

குளுகோமீட்டரின் பங்கு

குளுகோமீட்டர்கள், ரத்தத்தில் சர்க்கரை அளவு தொடர்பான நிகழ்நேரத் தரவுகளை வழங்குகின்றன. இதன்காரணமாக, உடனடி அளவீடுகள் கிடைக்கின்றன. இதன்மூலம், உணவுமுறை, சிகிச்சை முறை உள்ளிட்டவைகளில் தேவையான மாற்றங்களைச் செய்துகொள்ள இயலும்.

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை நீங்களே அறிந்து கொள்வதால், மேற்கொள்ள வேண்டிய உணவுமுறை, சிகிச்சை முறைக் குறித்து தீர்மானித்துக் கொள்ள இயலும். உங்களின் தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப, அதனை மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

குளுகோமீட்டரின் உதவியால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. இதனால், சர்க்கரையின் அளவு அதிகரிப்பு (ஹைபர்கிளைசீமியா) மற்றும் குறைவு (ஹைப்போகிளைசீமியா) பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிய முடிகிறது.இதன்காரணமாக, அதன்மூலம் ஏற்படும் பாதிப்புகளை, முன்கூட்டியே தடுக்க இயலும்.

நீங்கள் நீரிழிவுப் பாதிப்பிற்கு மருத்துவம் மேற்கொள்பவராக இருந்தால், குளுகோமீட்டரின் உதவிகொண்டு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை நீங்களே அறிந்துகொண்டு, அதை மருத்துவ நிபுணரிடம் தெரிவிக்கும்பட்சத்தில், மருத்துவ முறையில் தேவையான மாற்றங்களை அவர் மேற்கொண்டு, நீங்கள் விரைவில் அப்பாதிப்பிலிருந்து நிவாரணம் பெற உதவுவார்.

குளுகோமீட்டரின் உதவிகொண்டு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைத் தெரிந்து கொள்வதன் மூலம், உணவுமுறை, உடற்பயிற்சிகள், மன அழுத்த மேலாணமை உள்ளிட்ட விவகாரங்களில் தேவையான மாற்றங்களை மேற்கொண்டு, சிறப்பானதொரு வாழ்க்கையை வாழ இயலும்.

குளுகோமீட்டரின் மூலம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை முன்கூட்டியே அறிவதன் மூலம், இதய நோய்ப் பாதிப்புகள், சிறுநீரகப் பாதிப்புகள் மற்றும் நரம்பு சம்பந்தமான பாதிப்புகளைத் தடுக்க இயலும்.

சர்க்கரை அளவைக் கண்டறிதலின் முக்கியத்துவம்

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்பட்சத்தில், விரும்பத்தகாத விளைவுகள் உண்டாகின்றன. தொடர்க் கண்காணிப்புகளின் மூலம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் கொண்டுவரும் பட்சத்தில், அதன்மூலம் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க முடிவதோடு மட்டுமல்லாது, வாழ்க்கையையும் மேம்படுத்திக் கொள்ள இயலும்.

நீரிழிவுப் பாதிப்பிற்கான சிகிச்சை முறைகள் நபருக்கு நபர் வேறுபடும் என்ற நிலையில், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கண்காணிக்கும் தொடர் நடவடிக்கைகளின் மூலம் தேவையான மாற்றங்களை மட்டும் மேற்கொண்டு, விரைவில் நிவாரணம் பெற இயலும்.

Image of a male patient sitting on a chair inside a laboratory and a technician withdrawing blood sample from his hand.

இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கண்டறியும் முறை

சரியான குளுகோமீட்டரைத் தேர்வு செய்யவும்

உங்களின் தேவை மற்றும் முன்னுரிமைகளுக்கு ஏற்ப, சரியான குளுகோமீட்டரைத் தேர்வு செய்யவும். குளுகோமீட்டர்ப் பயன்படுத்துவதற்கு எளிதாகவும், அதேசமயம் துல்லியமான முடிவுகளைத் தெரிவிக்கும் வகையிலும் இருத்தல் வேண்டும்.

அட்டவணையை உருவாக்கவும்

இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கண்காணிக்கும் பொருட்டு, அட்டவணை ஒன்றை வடிவமைத்துக் கொள்ளவும். சோதனை முறை, கால அளவு, இடைவெளி உள்ளிட்டவைகள் இன்றியமையாததாகும்.

மேலும் வாசிக்க : இந்தியாவில் மரபணு ஆலோசனைச் சேவை

தரவுகளைப் பராமரிக்கவும்

குளுகோமீட்டர் உதவியுடன் கண்டறியப்பட்ட ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவுகள் குறித்த தரவுகளை, பராமரித்து வரவும். இந்தத் தரவுகள் மட்டுமல்லாது, உணவு வகைகள், உடற்பயிற்சிகள், உட்கொள்ளும் மருந்துகள் உள்ளிட்ட தரவுகளையும் பராமரித்து மருத்துவரிடம் தெரிவித்து, தகுந்த ஆலோசனைகளைப் பெறலாம்.

சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் காரணிகள்

ஆல்கஹால் உள்ளிட்ட மதுபானங்கள் அருந்துவதைக் குறைத்தல்

அதிகளவிலான நீரைப் பருகுதல்

சரியான இடைவெளிகளில் உணவு சாப்பிடுதல்

கலோரி, கொழுப்பு, சர்க்கரைக் குறைவாக உள்ள உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்தல்

உள்ளிட்டவை, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றன.

உடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும், நீரிழிவுப் பாதிப்புடன் தொடர்புடைய சிக்கல்களின் அபாயங்களைக் குறைக்க, நீரிழிவுப் பரிசோதனைகள் அவசியமாக உள்ளன. இந்தச் சோதனைகளின் மூலம், பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிய முடியும். இதன்மூலம், தேவையான சிகிச்சை முறைகளை மேற்கொண்டு, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள இயலும்.

Leave A Comment

Copyright © 2024 Health Design | All Rights Reserved.