மூட்டுவலி நிவாரணத்தில் சமீபத்திய சிகிச்சைகளின் பங்கு
சர்வதேச அளவில் கீல்வாத பாதிப்பு, காயங்கள் ஏற்படுதல், வயது மூப்பு உள்ளிட்ட பாதிப்புகள், ஆர்த்ரால்ஜியா என்ற பிரிவில் அடங்குகின்றன. மூட்டுவலிப் பாதிப்புகள், மூட்டுச் செயலிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதற்கான காரணங்கள், அறிகுறிகள், சிகிச்சை முறைகள் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தப் பாதிப்புகளுக்கு உரிய முழுமையான நிவாரணம் விரைவில் கிடைக்கப்பெறும்.
மூட்டுவலிப் பாதிப்பு மற்றும் அதன் காரணங்கள்
மூட்டுவலிப் பாதிப்புகள் எதனால் ஏற்படுகின்றன என்பதை முதலில் கண்டறிவது அவசியம் ஆகும். மூட்டுக்களில் எளிய வலிகள், மூட்டுப் பகுதிகளில் வீக்கம், விறைப்பு உள்ளிட்டவை, கீல்வாத பாதிப்பின் முக்கிய அறிகுறிகள் ஆகும். வயது, உடல் செயல்பாடு, மரபியல் காரணிகள், பரம்பரை உள்ளிட்ட காரணிகள், மூட்டுவலி ஏற்பட காரணமாக அமைகின்றன.
மூட்டுவலிப் பாதிப்பின் காரணத்தை அறிந்து அதனை முழுமையாக நீக்குவது என்பது சிகிச்சை முறையின் முக்கிய அம்சமாகும். உதாரணமாக, கீல்வாத பாதிப்பினால் ஏற்பட்ட வலியால் அவதிப்படும் நபருக்கு, காயத்தால் ஏற்பட்ட வலியால் அவதிப்படும் நபருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பொருத்தமாக இருக்க வாய்ப்பில்லை அவருக்கென்று தனியானதொரு சிகிச்சைமுறைகள் அவசியமானதாக உள்ளது. மூட்டுவலிப் பாதிப்பின் வகையை மருத்துவ நிபுணரால் மட்டுமே கண்டறிய முடியும். அதற்கேற்ற சிகிச்சைத் திட்டங்களையும் அவர்களால் மட்டுமே பரிந்துரைக்க இயலும்.
மூட்டு ஆரோக்கியத்தில் புதிய அணுகுமுறைகள்
மருத்துவத் துறையில் சமீபகாலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய ஆராய்ச்சிகள், மூட்டு ஆரோக்கியத்தில் புதிய மற்றும் புதுமையான சிகிச்சை முறைகளை நமக்கு அளித்து உள்ளன. உடலியக்க மருத்துவ, அழற்சி எதிர்ப்பு மருத்துவம் உள்ளிட்ட பாரம்பரிய முறைகள் மிகுந்த பயன் அளிப்பதாக உள்ள நிலையில், புதுமையான சிகிச்சை முறைகளும், மக்களுக்குப் புதிய நம்பிக்கையை அளித்துள்ளன.
பாதிப்படைந்த மூட்டுகளில் வலியை ஏற்படுத்தவல்லச் சேதம் அடைந்த திசுக்களை அகற்றிவிட்டு, அங்கு புதிய ஸ்டெம் செல்களை இடம்பெறச் செய்வதன் மூலம், நாள்பட்ட வலிக்கு உரிய நிவாரணம் என்பது சாத்தியமாகிறது. இந்தச் சிகிச்சை முறை, ஸ்டெம் செல் சிகிச்சை முறை என்று அழைக்கப்படுகிறது. மூட்டுவலிப் பாதிப்பிற்கு அறுவைச் சிகிச்சைக்கு, மாற்று வழித் தேடுபவர்களுக்கு, இந்தச் சிகிச்சை முறைச் சிறந்த தேர்வாக அமைகிறது.
உடலியக்கச் சிகிச்சை என்பது, மூட்டு ஆரோக்கிய நிர்வாகத்தின் முக்கிய மைல்கல் ஆக உள்ளது என்றுதான் கூற வேண்டும். உடலியக்கச் சிகிச்சையானது, தசை இறுக்கப் பாதிப்பை நிவர்த்தி செய்வதன் மூலம், கீல்வாத பாதிப்பின் விளைவாக ஏற்படும் வலி உணர்வின் அளவைக் குறைக்க உதவுகிறது. மூட்டுவலிப் பாதிப்பிற்கு உரிய சிகிச்சைத் தேவைப்படுபவர்கள், உடலியக்கச் சிகிச்சையை, மற்ற சிகிச்சை முறைகளுடன் இணைந்து மேற்கொள்ளும்போது, அது விரும்பத்தக்க முடிவுகள் கிடைக்க வழிவகைச் செய்கிறது.
மூட்டுவலி சிகிச்சைக்கான முழுமையான அணுகுமுறைகள்
பாரம்பரிய மருத்துவ சிகிச்சை முறைகளுக்கு அப்பால், மூட்டுவலி சிகிச்சைக்கான முழுமையான சிகிச்சை மற்றும் பராமரிப்பு அணுகுமுறைகள் தற்போது பெரும்வரவேற்பைப் பெற்று வருகின்றன. யோகாப் பயிற்சி குத்தூசி மருத்துவ முறை எனப்படும் அக்குபஞ்சர் மருத்துவம், உணவு மாற்றங்கள் உள்ளிட்டவை, ஆரோக்கியமான நல்வாழ்க்கைக்குப் பங்களிப்பவையாக உள்ளன.
அக்குபஞ்சர் மருத்துவத்தில், மூட்டுவலிப்பாதிப்பைக் குறைக்க, உடலின்
குறிப்பிட்ட புள்ளிகளில் அழுத்தம் அளிப்பதன் மூலம், நிவாரணம் பெற முடியும்.
யோகா போன்ற இலகுவான பயிற்சிகள், உடலின் நெகிழ்வுத்தன்மையைப் பராமரிக்கவும், தசைகளுக்குத் தேவையான வலிமையை அளிக்கவும் உதவுகிறது. மாற்று விருப்பங்களைத் தேர்ந்தெடுக்க விரும்புபவர்களுக்கு, வழக்கமான சிகிச்சைகளுக்கு மாற்றாக, இந்த முழுமையான சிகிச்சை முறைகள் பலனளிப்பதாக உள்ளன.
மேலும் வாசிக்க : கீல்வாத பாதிப்பிற்கான வீட்டு மருத்துவ முறைகள்
நீண்ட கால மூட்டு ஆரோக்கியம்
மூட்டு ஆரோக்கிய நிகழ்விற்கு, சரியான உடற்பயிற்சி, சீரான மற்றும் சரிவிகித உணவுமுறை மற்றும் ஆரோக்கியமான உடல் எடையை நிர்வகித்தல் உள்ளிட்ட நடைமுறைகள் அடங்கும். அதிர்ச்சியைத் தவிர்க்கும் பொருட்டு, மூட்டுக் கட்டமைப்புகளில் கூடுதல் அழுத்தத்தைத் தரவல்லப் பயிற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.
மேற்குறிப்பிட்ட புதுமையான மற்றும் முழுமையான சிகிச்சை முறைகளால் மூட்டுவலிப் பாதிப்பில் இருந்து விடுபட்டு, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த இயலும்.