A head with an alarm clock and sleep symbols, showing the circadian rhythm's effect on morning blood sugar.

உறக்க நிகழ்வு, ரத்த சர்க்கரை அளவைப் பாதிக்குமா?

மனிதர்களின் உடலியல் கடிகார ( சர்காடியன் ரிதம்) சுழற்சியின் ஒருபகுதியாக, அதிகாலை நேரத்தில், உங்கள் ரத்த சர்க்கரையின் அளவு அதிகரித்துக் காணப்படும். நீங்கள் ஓய்வெடுக்கும் நிலையிலும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கணிசமாக அதிகரித்து இருக்கும். இரவு நேரத்தில் மற்றும் உறக்கத்தின் போது, ரத்தத்தில் சர்க்கரை அளவுகளில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவது சாதாரணமான நிகழ்வே ஆகும். ஆரோக்கியமான நபர்களுக்கு, இது கவலைக்குரிய விஷயமாக என்றுமே இருந்ததில்லை.

கடந்த சில ஆண்டுகளாக, மக்களின் இரவுநேர உறக்க விகிதம் குறைந்து வருகிறது. இந்த உறக்கம் இந்த உறக்கக் குறைவு உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய் அதிகரிப்பில் முக்கிய காரணமாக உள்ளது. இதன்விளைவாக, உடல் எடைக் குறைப்பு மற்றும் நல்ல இரவு ஓய்வு, ரத்த சர்க்கரை அளவு விகித மாற்றத்திற்குக் காரணமாக அமைகின்றன.

உறக்கத்திற்கும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் இடையேயான உறவு பிரிக்க முடியாதது ஆகும். போதிய அளவிலான உறக்கம் இல்லாதநிலை, குளுக்கோஸ் வளர்சிதை மாற்ற விகிதத்தைப் பாதிக்கிறது.

நீங்கள் உறங்கும்போது ரத்த சர்க்கரை அளவில் மாற்றம் நிகழ்கிறதா?

நீங்கள் உறக்கத்தில் இருக்கும்போது, ரத்த ஓட்டத்தில் இருக்கும் குளுக்கோஸை, இன்சுலின் ஹார்மோன் எவ்வாறு செயலாக்குகிறது என்பதோடு இணைக்கப்பட்டு உள்ளது ஆகும். நீங்கள் உறங்கிக் கொண்டு இருக்கும்போது, ரத்த சர்க்கரை அளவு, ஏற்ற, இறக்கத்துடனேயே இருக்கும். காலை 4 மணிமுதல் 8 மணி வரையிலான காலகட்டத்தில் ரத்த சர்க்கரை அளவு அதிகரித்துக் காணப்படும். இந்த நிலைக்கு, “dawn effect.” என்று பெயர். மற்ற நேரங்களில் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை, இன்சுலின் உதவியுடன் தசைகள், கல்லீரல் செல்கள் எடுத்துக் கொள்வதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.

நீரிழிவு பாதிப்பு கொண்ட நோயாளிகளின் உடலில் இன்சுலின் ஹார்மோனின் செயல்திறன் குறைவாக உள்ள நிலையில், உடலின் ரத்த சர்க்கரை அளவு அதிகரித்துக் காணப்படுகிறது.

மேலும் வாசிக்க : நீரிழிவு பாதிப்பு குழந்தையை வளர்ப்பதற்கான குறிப்புகள்

நீரிழிவு நோய் அபாயத்தை, உறக்கம் எவ்வாறு கட்டுப்படுத்துகிறது?

இதுதொடர்பான ஆராய்ச்சியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். அவர்களின் தினசரி உறக்க நேரம் குறித்த குறிப்புகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. தினமும் இரவில் 6 மணிநேரத்திற்கும் குறைவாக உறங்கியவர்களுக்கு, இரண்டாம் வகை நீரிழிவு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகமாக இருப்பது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

உறக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படுதல் மற்றும் உறக்கம் தொடர்பான பாதிப்புகள், நீரிழிவு நோய்ப்பாதிப்பை அதிகரிக்கச் செய்கின்றன. அதிக உறக்கமும், அதாவது தினசரி 9 மணிநேரத்திற்கு மேல் உறங்குவதன் மூலம், நீரிழிவு நோய்ப் பாதிப்பு அதிகரிப்பதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உறக்கம், ரத்த சர்க்கரை அளவில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு, ஆராய்ச்சியாளர்கள் ஆம் என்று பதில் அளித்து உள்ளனர்.

போதிய அளவிலான உறக்கம் உள்ளிட்ட ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை மேற்கொள்ளும் போது, உடலுக்குத் தீமை விளைவிக்கவல்ல, ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. உறக்கமின்மை நிகழ்வானது, ஹைபர்டென்சன் எனப்படும் உயர் ரத்த அழுத்த பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இரவுநேரத்தில் தொடர்ச்சியான உறக்கம் இல்லாதநிலை, இன்சுலின் எதிர்ப்பை அதிகரிக்கச் செய்கிறது. இன்சுலின் எதிர்ப்பு நிகழ்வானது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்வதால், நீரிழிவு நோய்ப்பாதிப்பு ஏற்பட முக்கியக் காரணமாக அமைகிறது.

இரத்த சர்க்கரை மாறுபாடுகளுக்கும் உறக்கத்திற்கும் இடையிலான தொடர்பை ஆராய மேலும் விரிவான ஆய்வுகள் அவசியமாகின்றன.

குறிப்பிட்ட நபர், எவ்வளவு நேரம் உறங்குகிறார்

உறக்கத்தின் பல்வேறு கட்டங்களின் மூலம், அந்நபரின் உடல்நிலையில் ஏற்படும் முன்னேற்றம்

உறங்க படுக்கையறைக்குச் செல்லுதல் மற்றும் காலை எழுந்திருக்கும் கால அளவு

ஊட்டச்சத்து மற்றும் உறக்கத்துடன் தொடர்புடைய நடைமுறைகள் உள்ளிட்ட காரணிகள் அத்தியாவசிய தேவைகளாக உள்ளன.

A woman lies in bed at night, using a laptop in a dark room, its screen glowing as it impacts her sleep and blood sugar levels.

தினசரி இரவு நிம்மதியான உறக்கம் பெறுவதற்கான வழிமுறைகள்

இரவில் எலெக்ட்ரானிக் உபகரணங்களின் பயன்பாட்டைக் குறையுங்கள்

மொபைல் போன், டேப்லெட் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் உபகரணங்களில் இருந்து வரும் நீல நிற ஒளியானது, உங்கள் உறக்கச் சுழற்சியில் பெரும்மாற்றத்தை விளைவித்து விடுகிறது. இதன்காரணமாக, ஆழ்ந்த உறக்கம் என்பது எட்டாக்கனியாக மாறுகிறது. படுக்கையறைக்குச் செல்வதற்கு முன்பாகவே, இதுபோன்ற எலெக்ட்ரானிக் உபகரணங்களின் பயன்பாட்டைத் தவிர்த்து, புத்தகம் படித்தல், மெல்லிய இசையைக் கேட்பது என மனதைச் சாந்தப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

உறங்கச் செல்வதற்கு முன் மது அருந்துவதைத் தவிர்க்கவும்

உறங்கச் செல்வதற்கு முன் ஒரு கிளாஸ் ஒயின் குடிப்பதன் மூலம், மனம் அமைதியாகும் என்றபோதிலும், அது உறக்கமின்மைக்குக் காரணமாக அமைந்துவிடும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

இடையூறுகளைத் தவிருங்கள்

ஆழ்ந்த உறக்கத்தின் போது, மொபைல் போனிற்கு வரும் குறுந்தகவல்கள், உங்கள் உறக்கத்தைக் கெடுக்கக் கூடும். எனவே இரவுநேரத்தில் மொபைல் போனை அணைத்து வைப்பது நல்லது. இரவுநேரத்தில் அலாரம் வைப்பவராக இருந்தால், அதற்கென உள்ள அலாரம் கடிகாரத்தைப் பயன்படுத்தவும். உங்கள் படுக்கை அறையில், இரவுநேரத்தில் மொபைல் போன் வைத்திருப்பதையே தவிர்ப்பது மிக நல்லது.

பின்னணி சத்தங்களை நீக்கவும்

குயில்சத்தம் கேட்டுக் காலையில் எழுந்திருப்பது இனிய உணர்வைத் தரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், இரவில் உறங்கிக் கொண்டிருக்கும் போது, இந்தக் குயிலின் சத்தம், ஆழ்ந்த உறக்கத்திற்கு இடையூறாய் அமைகின்றன.

மின்விசிறி உள்ளிட்ட சாதனங்களில் இருந்து வரும் சத்தமும், ஆழ்ந்த உறக்கத்திற்குத் தடையாக இருந்து வருகின்றன.

உறக்க அட்டவணையை உருவாக்கவும்

தினமும் உறங்கச் செல்லும் நேரம் மற்றும் காலையில் எழுந்திருக்கும் நேரம் கொண்ட அட்டவணையை உருவாக்கி, அதில் குறிப்பிடப்பட்ட நேரத்தைச் சரியாகப் பின்பற்றவும். வார இறுதி நாட்களிலும், இந்த அட்டவணையைப் பின்பற்றவும். இதன்மூலம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைப் பராமரிக்க இயலும்.

படுக்கையறைக்குச் செல்லுவதற்கு முன் காஃபி குடித்தல், உடற்பயிற்சி செய்தல் உள்ளிட்டவற்றைச் செய்யாமல், அமர்ந்தவாறே மேற்கொள்ளும் யோகா, தியானம் போன்ற உடலைச் சாந்தப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டால், உறக்கம் எளிதில் உங்கள் கண்களைத் தவழும்.

உறக்க நிகழ்விற்கும், ரத்தத்தில் சர்க்கரை அளவின் மாறுபாட்டிற்கும் உள்ள தொடர்பை அறிந்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். தகுந்த உறக்க அட்டவணையைப் பின்பற்றி, போதிய அளவிலான உறக்கத்தை மேற்கொண்டு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைப் பேணிக்காத்து, நீரிழிவுப் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்வோமாக…

Leave A Comment

Copyright © 2024 Health Design | All Rights Reserved.