A circular diagram with the term alzheimer's disease mentioned in the middle with related terms mentioned around.

அல்சைமர்ப் பாதிப்பைக் குறைக்கும் வாழ்க்கைமுறைகள்

அல்சைமர் நோய்ப்பாதிப்பிற்கான தடுப்பு மருந்துகளை நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மற்றும் வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தங்களது புதிய ஆய்வில், தனிப்பயனாக்கப்பட்ட உடல்நலம் மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்கள் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாற்றல் இழப்பைத் தாமதப்படுத்தலாம் அல்லது தடுக்கலாம் என்று கண்டறிந்துள்ளனர். இரண்டு ஆண்டுகள் கால அளவிலான இந்த ஆராய்ச்சியில், 172 பேரிடம் சிந்தனைத் திறன்கள், ஆபத்துக் காரணிகள் மற்றும் வாழ்க்கைத்தரம் உள்ளிட்ட கேள்விகள் [...]

A businessman with pain sits at his office laptop, hands positioned behind his back.

ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக் குறிப்புகள் இதோ…!

இன்றைய அவசரகதியிலான சூழ்நிலையில், பெரும்பாலானோர் உடல்நலம் சார்ந்த பிரச்சினைகளால் அவதிப்படுகின்றனர். இதனால், ஆரோக்கியமான வாழ்க்கைமுறை என்பது பேசுபொருளாகி உள்ளது.உடல்நலம் சார்ந்தப் பிரச்சினைகளுக்கு, உடற்பயிற்சிப் பழக்கமின்மை, ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து இருக்கும் வகையிலான வாழ்க்கைமுறை உள்ளிட்டவைகளே, முக்கியக் காரணமாக உள்ளன. உணவியல் நிபுணருடன் கைகோர்த்துக் கொள்ளுங்கள். செயலில் இறங்குங்கள், ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை மீட்டெடுங்கள். ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை முன்னெடுத்துச் செல்வதற்கான வழிமுறைகள் சரிவிகித உணவுமுறையைத் தேர்வு செய்யுங்கள் நமது உடலின் [...]

A balanced diet, stethoscope, and physical fitness symbolize a healthy lifestyle.

ஆரோக்கியமான வாழ்க்கைமுறை எப்படிச் சாத்தியம்

வாழ்க்கைமுறை என்பது, நாம் வாழும் தினசரி முறையைக் குறிக்கிறது. இது ஒரு நபரின் உடல், மனம், உணர்ச்சி, நல்வாழ்வு உள்ளிட்டவைகளுடன் நேரடி தொடர்புடையது ஆகும். ஆரோக்கியமான உணவுமுறை, உடற்பயிற்சி, சரியான உடல் எடைப் பராமரிப்பு போன்ற நல்ல பழக்கங்கள் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை அடையலாம்.ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்குப் பின்னால் உள்ள அறிவியலைப் புரிந்துகொள்ள உதவுகிறது இந்தக் கட்டுரை. ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை மேற்கொள்வதற்கான வழிமுறைகளும் இங்கு விரிவாகத் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறைக்கான [...]

Close up image of a man sitting on a sofa with his hands covering his face in a sad and depressed condition.

நோய்த்தடுப்பு நிகழ்வில் வாழ்க்கைமுறை முக்கியத்துவம்

உடல் ஆரோக்கியத்தில், வாழ்க்கைமுறையானது முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறையின் விளைவாக, ஹைபர்டென்சன் எனப்படும் உயர் ரத்த அழுத்த பாதிப்பு, உடல் பருமன் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. நோய்ப்பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள, முழு உடல் பரிசோதனைகள் பேருதவி புரிகின்றன.இத்தகையப் பரிசோதனைகள், உங்களை வழக்கமான உடற்பயிற்சி, சரிவிகித உணவுமுறை உள்ளிட்ட ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை மேற்கொள்ள வழிவகுக்கின்றன. இந்தப் பழக்கவழக்கங்கள், உங்களை நோய் அபாயங்களில் இருந்து பாதுகாக்க உதவுகின்றன. [...]

A vector illustration of a healthy living concept with the characters/people doing exercise, yoga and healthy food with the symbol of heart at the middle.

வாழ்க்கைமுறை நோய்களைத் தடுப்பது எப்படி?

வாழ்க்கைமுறை நோய்கள் என்பது ஏதோ ஒரு சிலருக்கு மட்டுமே வரும் என்ற காலம் மாறி, தற்போது அனைத்துத் தரப்பினரையும் பாதிக்கும் நோயாக மாறிவிட்டது என்பதே கசப்பான உண்மை. வாழ்க்கைமுறைத் தொடர்பான நோய்கள் அல்லது பரவும் தன்மையற்ற நோய்கள், நம் அன்றாடப் பழக்கவழக்கங்களின் காரணமாக வருவதே ஆகும். உடற்பருமன், உறக்கமின்மை, இதய நோய்கள், புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள், வாழ்க்கைமுறை நோய்களாக வரையறுக்கப்பட்டு உள்ளன. வாழ்க்கைமுறை நோய்கள் உடல்நலம் மற்றும் பொருளாதாரத்தை பாதிக்கின்றன. [...]

Copyright © 2024 Health Design | All Rights Reserved.