நாள்பட்ட நோய்ப்பாதிப்புகளைச் சோதனைகளின் மூலம் நிர்வகித்தல்
சர்வதேச அளவில், உடல்நலப் பாதிப்புகள் தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்து வரும் நிலையில், நோய்களை, அதன் துவக்கக் கட்டத்திலேயே உறுதி செய்வது இன்றியமையாததாக அமைகிறது. நோய்களை, அதன் ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் மூலம், சிறந்த சிகிச்சையைப் பெறுவது மட்டுமல்லாது, மேம்பட்ட சிகிச்சை விளைவுகளின் மூலம், நீண்ட நாட்கள் உயிர் வாழ்வதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது.
புற்றுநோய், நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் உள்ளிட்ட மருத்துவ நிலைமைகளுக்கு, வழக்கமான திரையிடல்களின் மூலம், ஆரம்பகால தலையீட்டை மேற்கொள்ள, பொது சுகாதாரத் திட்டங்கள் பரிந்துரைச் செய்கின்றன. இந்தப் பரிந்துரைகள், உலகச் சுகாதார அமைப்பின் (WHO) பரிந்துரைகளுடன் ஒத்துப் போகின்றன. சரியான நேரத்தில், நோய்களை அடையாளம் கண்டறிவதன் மூலம், சிக்கல்களைத் தடுப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
சரியான நேரத்தில் நோய்ப்பாதிப்பைக் கண்டறிதலின் முக்கியத்துவம்
நீரிழிவு நோய், புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களின் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் நாம் பல வழிகளில் பாதிக்கப்படுவது எளிதாக உள்ளது. இந்த நோய்ப்பாதிப்புகளைத் திறம்படக் கட்டுப்படுத்த, பல்வேறு நிலைத் தடுப்பு சுகாதார முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய நோய்களை, அதன் துவக்க நிலையிலேயே கண்டறிவது என்பது முதன்மையான நிகழ்வாகும். சமீபத்தில் உலகத்தையே புரட்டிப்போட்ட COVID-19 பெருந்தொற்றுப் பாதிப்பானது, அதனைத் துவக்க நிலையிலேயே கண்டறிவதன் முக்கியத்துவத்தை, வெளியுலகிற்கு உணர்த்தியது. நோய்ப்பாதிப்புகளின் சிக்கல்களை, முன்கூட்டியே கண்டறிவதன் மூலம், உங்கள் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திக் கொள்ள இயலும். இது சிகிச்சைகள் சிறப்பாகச் செயல்பட உதவுகிறது. இதன்மூலம், நோய்ப்கள் மோசமடைவது தவிர்க்கப்படுகிறது. நோய்களை, அதன் ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் மூலம், சிகிச்சைச் செலவினங்களும் பெருமளவில் கட்டுப்படுத்தப்படுகின்றன.
முழுமையான உடல் பரிசோதனைகளில் இடம்பெற்று உள்ள திரையிடல் சோதனைகள், நோய்களை அதன் ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவும் முதன்மையான கருவிகளாக விளங்குகின்றன. உடலின் பல்வேறு மருத்துவ அளவுருக்களை மதிப்பிடுவதன் மூலம், நோய்ப்பாதிப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் கண்டறியப்படுகின்றன. இந்த அறிகுறிகளைக் கண்டறிவதன் மூலம், பெரிய அளவிலான நோய்கள் ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது. வாழ்க்கைமுறையில் சில மாற்றங்களை மேற்கொள்வதன் மூலமும், சிகிச்சையானது துவங்கப்படுகிறது. இதன்மூலம், உடல்நலப் பாதிப்புகளானது மொட்டு நிலையிலேயே தடுக்கப்படுகிறது.
நோய்களை அதன் ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கான, விரிவான சுகாதார மதிப்பீடுகள்
முழுமையான உடல் பரிசோதனை உள்ளிட்ட விரிவான சுகாதார மதிப்பீடுகள், நோய்களை, அதன் துவக்க நிலையிலேயே கண்டறிவதற்கும், அதனை உரிய சிகிச்சை முறைகளின் உதவியுடன் தடுப்பதில் முக்கியப் பங்கினை வகிக்கின்றது.
விரிவான சுகாதார மதிப்பீடுகளின் அவசியம் குறித்து பின்வரும் வழிமுறைகள் விளக்குகின்றன.
நோய்ப்பாதிப்பிற்கான சிக்கல்களை முன்கூட்டியே கண்டறிதல்
விரிவான சுகாதார மதிப்பீட்டுச் சோதனைகள், உடல்நலப் பாதிப்புகள் தீவிரம் அடைவதற்கு முன்பே, அவற்றைக் கண்டறிய உதவுகிறது. இந்தச் சோதனைகள், சிகிச்சைகளை எளிதாகவும் மற்றும் பயனுள்ளதாக மாற்றுகின்றன.
நாள்பட்ட நோய்ப்பாதிப்புகளைத் தடுத்தல்
நீரிழிவு நோய், புற்றுநோய் மற்றும் இதய நோய்ப் பாதிப்புகள் தொடர்பான கடுமையான நோய்களை, அதன் ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் போது, அதனைச் சிறப்பாக நிர்வகிக்க இயலும். வழக்கமான சோதனைகளின் மூலம், இந்த நோய்ப்பாதிப்புகளுக்கான ஆபத்துக் காரணிகளை அடையாளம் காண்பதோடு மட்டுமல்லாது, அவற்றைத் தடுக்கவும், திறம்பட நிர்வகிக்கவும் இயலும்.
ஆறுதல் உணர்வு
உங்கள் உடல் ஆரோக்கிய நிலையை முழுமையாக அறிவது மனநிம்மதியையும், ஆறுதலையும் தரும். சிறந்த ஆரோக்கியத்திற்காக,, நீங்கள் வாழ்க்கை முறையில் நேர்மறையான மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள இயலும்.
தனிப்பட்ட பராமரிப்பு
விரிவான சுகாதார மதிப்பீடுகள், உங்கள் உடல் சுகாதாரம் சார்ந்த வரலாறு உள்ளிட்ட பிற காரணிகளைக் கருத்தில் கொண்டு, உங்களின் தேவைகளுக்கு ஏற்ற வகையிலான, சுகாதாரத் திட்டத்தை வடிவமைக்க, சுகாதார வழங்குநர்களுக்கு, உரிய ஆலோசனைகளை வழங்குகின்றன.
உடல் ஆரோக்கியம் தொடர்பான சுயக் கற்றல்
உங்கள் உடல்நல ஆரோக்கியம் குறித்து நீங்கள் முழுமையாக அறிந்திருப்பதன் மூலம், அது உங்களை மேலும் எவ்வாறு சிறப்பாகக் கவனித்துக்கொள்வது என்பதை உணர்த்த, இதற்கு வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள், பேருதவி புரிவதாக உள்ளன.
முழுமையான உடல் பரிசோதனைகளின் தொகுப்புகளில், உடல் ஆரோக்கியம் தொடர்பான பல்வேறு அம்சங்களை மதிப்பிட உதவும் பல்வேறு சோதனைகள் இடம்பெறுகின்றன. இந்தத் தொகுப்பில் இடம்பெற்று உள்ள சில ரத்த பரிசோதனகள், இங்கே பட்டியலிடப்பட்டு உள்ளன.
முழுமையான ரத்த எண்ணிக்கைச் சோதனை (CBC)
உடலின் பல்வேறு அளவுருக்களை மதிப்பிடு செய்வதற்கு ஏதுவாக, ரத்த மாதிரிகள், இந்தச் சோதனையில் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. இதன்மூலம், பல்வேறு நோய்ப்பாதிப்புகள், தொற்றுநோய்ப்பாதிப்புகள் கண்டறியப்படுகின்றன. இரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் எனப்படும் ரத்த நுண் தட்டுகள் உள்ளிட்ட ரத்தத்தின் பகுதிப்பொருட்கள் குறித்து அறியவும், இந்தச் சோதனை உதவுகிறது. இவைகளின் எண்ணிக்கைகளில் மாறுபாடுகள் நிலவும்போது, சில நோய்ப்களுக்குக் காரணமாக அமைகிறது.
லிப்பிட் பேனல் சோதனை
இதயம் சார்ந்த பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை ஆராய, மருத்துவர்கள், லிப்பிட் பேனல் சோதனையைப் பரிந்துரைச் செய்கின்றனர். இந்தச் சோதனையின் மூலம், ரத்தத்தில் உள்ள கொழுப்புகள் மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் அளவு மதிப்பிடப்படுகிறது. லிப்பிட் பேனல் சோதனையின் முடிவுகளில், கொழுப்புகள் மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் அளவு, வழக்கமான அளவைவிட அதிகரித்துக் காணப்படின், அது இதயப் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைகிறது.
இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கண்டறியும் சோதனை
உங்கள் ரத்தத்தில் எவ்வளவு சர்க்கரை உள்ளது என்பதைக் கண்டறிய, ரத்த குளுக்கோஸ் சோதனை உதவுகிறது. இந்தச் சோதனையின் மூலம், இரண்டாம் வகை நீரிழிவுப் பாதிப்பால் நீங்கள் பாதிக்கப்பட்டு உள்ளீர்களா என்பதையும் கண்டறிய இயலும்.
சிறுநீரகச் செயல்பாட்டுச் சோதனை
உங்கள் உடலில் உள்ள சிறுநீரகங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைக் கண்டறிய, சிறுநீரகச் செயல்பாட்டுச் சோதனைகள் உதவுகின்றன. இந்தச் சோதனையின் மூலம், உடலில் வளர்சிதை மாற்ற நிகழ்வின் மூலமாக உருவாகும் கழிவுகளை, சிறுநீரகங்கள் எங்ஙனம் திறம்பட வெளியேற்றுகின்றன என்பதை அறிய இயலும்.
கல்லீரல் செயல்பாட்டைக் கண்டறியும் சோதனை
கல்லீரல் செயல்பாட்டுச் சோதனையைக் கண்டறிய உதவும் சோதனைகள், ரத்த மாதிரியைக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்றன. இந்தச் சோதனையின் மூலம், கல்லீரலில் உற்பத்தி செய்யப்படும் வெவ்வேறு பொருட்களை அளவிடப்படுகிறது.
சிறுநீர்ப் பகுப்பாய்வுச் சோதனை
சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் நோய்த் தொற்றுகள், சிறுநீரகங்களில் ஏற்படும் நோய்கள், நீரிழிவு நோய் மற்றும் பிற வளர்சிதை மாற்ற பாதிப்புகள் உள்ளிட்ட அசாதாரணங்களைக் கண்டறிய, இந்தச் சோதனையானது பேருதவி புரிகிறது.
எலக்ட்ரோ கார்டியோகிராம், எக்கோ கார்டியோகிராம் உள்ளிட்ட கூடுதல் சோதனைகள், இதயத்தின் மின் செயல்பாட்டைச் சரிபார்க்கவும், இதய நிலைகளைக் கண்டறிவதற்கான அமைப்பு மற்றும் செயல்பாட்டை மதிப்பிட உதவுகிறது.
மேலும் வாசிக்க : கர்ப்ப காலத்தில் செய்யும் ரத்த சோதனைகளை அறிவோமா?
அமைதியான அல்லது அறிகுறியற்ற நிலைமைகளை அடையாளம் காணுதல்
அறிகுறியற்ற நோய்கள், சைலண்ட் கில்லர் ஆக வரையறுக்கப்படுகிறது. ஹைபர்டென்சன் எனப்படும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவுப் பாதிப்பை, அதன் ஆரம்ப நிலையில் கண்டறிய முயலும்போது, அவை எவ்வித அறிகுறிகளையும் வெளிக்காட்டுவதில்லை. இதுபோன்ற தருணங்களில், விரிவான சுகாதார மதிப்பீட்டுச் சோதனைகள், உடலுக்குள் மறைந்திருக்கும் சுகாதாரப் பிரச்சினைகளை அடையாளம் காண உதவுகின்றன. இந்தச் சோதனைகள், அறிகுறிகளை வெளிப்படையாகக் காட்டாத நோய்கள் மற்றும் அறிகுறிகளை வெளிக்காட்டாத சிக்கல்களை அடையாளம் காண உதவுகின்றன. இந்தச் சோதனையின் மூலம், மறைக்கப்பட்ட அறிகுறிகள் முன்கூட்டியே அடையாளம் காணப்படுவதால், உடனடியாகச் சிகிச்சையைத் துவங்க ஏதுவாக அமைகிறது. இதன்மூலம் நோய்ப்பாதிப்பின் தீவிரம் குறைக்கப்பட்டு, உடல் ஆரோக்கியம் மேம்படுத்தப்படுகிறது.
இலக்கு அனைத்து வயதினரும் தான்..
மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள், நோய்களின் துவக்கக் கால அறிகுறிகளைக் கண்டறிய உதவுகின்றன. இதன்மூலம், சிகிச்சைகளின் செயல்திறன் மேம்படுத்தப்படுகின்றன. மேற்கொள்ளப்படும் சோதனைகளின் எண்ணிக்கை, நோயாளியின் வயது, சுகாதார நிலை, குடும்ப வரலாறு, வாழ்க்கைமுறைத் தேர்வுகள் உள்ளிட்ட காரணிகளைப் பொறுத்து, சிகிச்சையின் செயல்திறன் அமைகிறது. இந்தச் சோதனைகளை, எல்லா வயதினரும் மேற்கொள்ள வேண்டும். இன்றைய இளைய தலைமுறையினர் அதிக மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கைச்சூழல், மோசமான உணவுமுறை உள்ளிட்ட விரும்பத்தகாத சூழ்நிலைகளுக்கிடையே வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு, இந்த முழுமையான உடல் பரிசோதனை மிகவும் அவசியமான ஒன்றாகும். இந்தச் சோதனையின் மூலம், நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நாள்பட்ட நோய்கள், அதன் ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியப்படுகின்றன. ஹார்மோன் சுரப்பு நிகழ்வில் நிகழும் மாறுபாடுகள், ஊட்டச்சத்துகளின் குறைபாடு உள்ளிட்டவற்றால் ஏற்படும் நிலைமைகளை மதிப்பிடுகின்றன. குழந்தைகள் மற்றும் இளம் தலைமுறையினர், முழுமையான உடல் பரிசோதனைகளை வழக்கமாக்கிக் கொள்வதன் மூலம், சரியான வளர்ச்சி மற்றும் வளர்சிதை மாற்றத்தை உறுதி செய்யலாம்.
நோய்களை முன்கூட்டியே கண்டறிய உதவும் வகையில் வாழ்க்கைமுறையில் மாற்றங்களை மேற்கொள்ளுதல்
நோய்களை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம், நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள் என்பது குறித்து அறிய சிறந்த தேர்வுகளை மேற்கொள்ள உதவுகிறது. உங்கள் உடல்நல ஆரோக்கியம் சார்ந்த மருத்துவப் பிரச்சினைகளை நீங்கள் முன்கூட்டியே அறிந்து கொள்வதன் மூலம், வளமான எதிர்காலத்திற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க அனுமதிக்கிறது. அதிக ஊட்டச்சத்துகள் கொண்ட உணவுவகைகளைச் சாப்பிடுதல், உடலை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருத்தல், உடல் எடையை ஆரோக்கியமானதாகப் பராமரித்தல், மதுப்பழக்கத்தை எப்போதும் அளவாக வைத்திருத்தல், புகையிலைப் பழக்கத்தைக் கைவிடுதல், தளர்வு நடவடிக்கைகளின் மூலம், மன அழுத்தத்தை நிர்வகித்தல் உள்ளிட்ட வாழ்க்கைமுறை மாற்றங்களின் மூலம், ஆரோக்கியமான வாழ்க்கையை நமதாக்கிக் கொள்ளலாம்.
மேற்குறிப்பிட்ட சோதனைகளைச் சரியான நேரத்தில் மேற்கொண்டு, நாள்பட்ட நோய்ப்பாதிப்புகளில் இருந்து பூரண நலம் பெற்று வளமான மற்றும் ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வோமாக…