A young woman practicing yoga in a living room.

மன ஆரோக்கியம், உடற்பயிற்சி பின்னிப் பிணைந்தவையா?

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த, உடற்பயிற்சிப் பழக்கவழக்கங்கள் பேருதவி புரிகின்றன. உடற்பயிற்சிகள் உடல் ஆரோக்கியத்தில் பல நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. அவை உடல் எடையை நிர்வகிக்கவும், சகிப்புத்தன்மையை அதிகரிக்கவும், ஆற்றலை மேம்படுத்தவும், நோய்களைத் தடுக்கவும் உதவுகின்றன.உடற்பயிற்சிகளும், உளவியல்ரீதியிலான நன்மைகளைத் தன்னகத்தே கொண்டு உள்ளன. உடற்பயிற்சிகள் மூளையின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றன. இது மனநிலையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ஆய்வுகள் இதனை மன அழுத்தத்திற்கான தீர்வாகக் காட்டுகின்றன.மன ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சிகள், நேர்மறையான உளவியல் விளைவுகளுடன் தொடர்புடையவை ஆகும்.

நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, நடனப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, யோகாப் பயிற்சி, தோட்டக்கலை உள்ளிட்டவைச் சுறுசுறுப்பாகவும், உடலை ஃபிட் ஆக வைத்திருக்க உதவும் பொதுவான நடவடிக்கைகள் ஆகும். உடற்பயிற்சிகள், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாது, ஒட்டுமொத்த நல்வாழ்வையும் நீட்டிக்கின்றன. மன ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சிகள் இணைந்த நிகழ்வானது, உடலின் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கிறது, மனநிலையை மேம்படுத்துகிறது, மனச்சோர்வு, பதட்டம் , கவனக்குறைவு ஹைபட் ஆக்டிவிட்டி குறைபாடு (ADHD) உள்ளிட்டவைகளைத் திறம்பட நிர்வகிக்கிறது. மனநல சவால்களுக்குச் சிகிச்சை அளிக்க உதவுவதுடன், மனநோய் உருவாகும் அபாயத்தையும் குறைக்கிறது.

மன அழுத்த பாதிப்பிற்கு, உடற்பயிற்சியானது, சிறந்த முறையில் தீர்வு காண்கிறது. கழுத்து, முகம், தோள் உள்ளிட்ட பகுதிகளில் காணப்படும் தசை இறுக்கம், உடல் வலி, போதுமான உறக்கம் இல்லாதது, நெஞ்செரிச்சல் உள்ளிட்டவை, மன அழுத்தத்தின் பொதுவான அறிகுறிகளாக வரையறுக்கப்பட்டு உள்ளன. கவலை மற்றும் அசவுகரிய உணர்வானது, மன அழுத்தத்தை மேலும் அதிகரிக்கச் செய்கிறது. இது மனதிற்கும், உடலுக்கும் இடையே விரும்பத்தகாத நிகழ்வை ஏற்படுத்துகிறது. உடற்பயிற்சிகள், எண்டோர்பின்கள் எனப்படும் சக்திவாய்ந்த வேதிப்பொருட்களை, மூளையில் வெளியிடுகிறது. அவை, தசைகளைத் தளர்த்தி, உடல் இறுக்கத்தை நீக்குகின்றன. உடல் மற்றும் மனம் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டிருப்பதால், உடல் நன்றாக உணரும் போது, மனமும் நம்மை நன்றாக உணர வைக்கிறது. இதன்மூலம், மன அழுத்த பாதிப்பிற்குத் தீர்வு கிடைக்கிறது.

நம்மில் பெரும்பாலானோருக்கு,உடற்பயிற்சி பழக்கத்தைத் தொடர்வது என்பது மிகவும் சவாலான நிகழ்வாக உள்ளது. மேற்கொண்டு இருக்கும் உடற்பயிற்சிகளில் அவ்வப்போது சில மாற்றங்களை மேற்கொள்வதும் அவர்களுக்கு அசவுகரியமான நிகழ்வாக உள்ளது. மன ஆரோக்கியம் மேம்பட உடற்பயிற்சிகள் பேருதவி புரியும் என்பதை உணரும்பட்சத்தில், நாம் உடற்பயிற்சிகளுக்குப் போதுமான முன்னுரிமை அளிக்கத் துவங்குவோம்.

ஈடுபாடு மற்றும் விழிப்புணர்வு அதிகரிப்பு

நாம் உடற்பயிற்சிகள் மேற்கொள்ளும் போது, மூளையினுள் சுரக்கும் எண்டோர்பின் வேதிப்பொருளானது, நாம் மேற்கொள்ளும் பணிகளுக்கு ஏற்ப, நம்மைச் செம்மைப்படுத்தி, உற்பத்தித்திறனை அதிகரிக்கின்றன.

ஆற்றல் மேம்பாடு

உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம், உடல் தசைகளின் நெகிழ்வுத்தன்மை அதிகரிப்பதால், உடல் பதட்டமானது குறைகிறது, அதேநேரம் சகிப்புத்தன்மையானது அதிகரிக்கிறது. இதனால் இதயம், மூட்டு இணைப்புகள், எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படுவதுடன், சுறுசுறுப்பாகவும் நம்மை உணர வைக்கிறது.

அதிகரிக்கும் சுயமதிப்பு உணர்வு

சிறிய அளவிலான உடற்பயிற்சிகளையும் செய்து முடிப்பது சாதனையாகக் கருதும் எண்ணத்தை வளர்க்கிறது. இந்தப் பழக்கத்திற்கு நாம் அதிக முன்னுரிமை அளிக்கும்போது, அது நம்மைச் செதுக்குகிறது. நம் தோற்றத்தைப் பற்றிச் சிறப்பாக உணர வைக்கிறது. நம் மீதான சுய மதிப்பு உணர்வை அதிகரிக்கச் செய்து, மனரீதியாகச் சக்திவாய்ந்ததாக உணரச் செய்கிறது.

மூளைச் செல்களை உருவாக்குகிறது

உடற்பயிற்சியானது, புதிய மூளைச் செல்களை உருவாக்குவது மட்டுமல்லாது, அதன் வளர்ச்சிக்கும் உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து, நோய்ப்பாதிப்புகளின் தாக்கங்களைக் குறைக்கின்றன. மனக்கவலைகளைப் போக்க மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்தும் நிகழ்வுகளைக் குறைப்பதால், உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது.

Close up view of a man sleeping peacefully in his bed.

சிறந்த முறையிலான உறக்கம்

நாம் எவ்வளவு நேரம் உறங்காமல் இருக்கிறோமோ, அந்த அளவிற்கு நம் உடல் சோர்வு அடைகிறது. உடற்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு, உடல் விரைவில் சோர்வு அடைவதால், அவர்கள் விரைவாக உறங்கி விடுகின்றனர். உடற்பயிற்சி நிகழ்வானது, உறக்கத்தின் நீளம் மற்றும் தரத்தை மேம்படுத்தி, சிறந்த உறக்கத்திற்கு வழிவகுக்கிறது. இரவில் விழித்திருக்கும் நேரத்தைக் குறைக்கிறது.

மேலும் வாசிக்க : மொபைல் செயலி மூலம் மனநல ஆரோக்கியத்தை அறிதல்

மனநோய்ப் பாதிப்புகளைக் கட்டுப்படுத்துகிறது

எதிர்மறை எண்ணங்களைக் களையவும், கவலை உணர்வுகளைக் குறைக்கவும் அமைதியான மனநிலை என்பது அவசியமாகிறது. சீரான உடற்பயிற்சிகளானது, நம்மை மனச்சோர்வு மற்றும் கவலைகளில் இருந்து காக்கின்றது.

உடற்பயிற்சிகளின் பலனை அறுவடைச் செய்ய, நாம் உடற்பயிற்சி ஆர்வலராக இருக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் வயது மற்றும் உடலமைப்புக்கு ஏற்ற வகையிலான மிதமான உடற்பயிற்சிகளைச் செய்து வந்தாலே, நல்ல வித்தியாசத்தைக் காண இயலும். உடற்பயிற்சிகளைக் கூடுதல் பணியாக அல்லாமல், தினசரி வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாகக் கருதுங்கள்.சிறிய தொலைவிலான இடங்களுக்குச் செல்லக் காரைப் பயன்படுத்தாமல், நடந்தோ அல்லது சைக்கிளிலோ செல்லலாம். ரயில் அல்லது பேருந்தில் பயணம் செய்பவராக இருப்பின், இறங்க வேண்டிய நிறுத்தத்திற்கு முன்னரே இறங்கி, சிறிது தொலைவிற்கு நடந்து செல்லலாம். குழந்தைகளுடன் இணைந்து உடற்பயிற்சிகளில் ஈடுபடும் போது, அவர்களையும் உடற்பயிற்சி மேற்கொள்ள ஊக்குவிப்பதாக அமையும்.

மன ஆரோக்கியமும், உடற்பயிற்சியும், உளவியல்ரீதியாக ஒன்றுக்கொன்று தொடர்புடையவை ஆகும். உடற்பயிற்சி பழக்கத்தை இன்றே துவங்கி, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நல்வாழ்க்கை வாழ்வீராக….

Leave A Comment

Copyright © 2024 Health Design | All Rights Reserved.