மனநல சிகிச்சையைப் பாதிக்கும் சமூகத்தடை அறிவோமா?
இந்தியா பல்வேறு கலாச்சார நம்பிக்கைகளையும், சமூகத் தடைகளையும் உள்ளடக்கிய வகையிலான பரந்த நாடு ஆகும். சில சமூகங்களில் மனநலப் பிரச்சினைகள் சார்ந்த குறைபாடுகள், இயற்கைக்கு அப்பாற்பட்ட தண்டனையாகக் கருதப்படுகின்றன. இந்தியாவில், கடுமையான மனநலப் பாதிப்புகளால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் மருத்துவ சிகிச்சையை நாடுவதில்லை. அவர்கள் கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களையே நாடுவதாக முன்னணி நாளிதழ்ச் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கான காரணம்,மனநலப் பிரச்சினைத் தொடர்பான விழிப்புணர்வு மக்களிடம் போதிய அளவு இல்லாததனால் என்று [...]