இரத்த அழுத்தம் குறித்த கட்டுக்கதைகளை அறிவோமா?
இரத்த அழுத்த பாதிப்பானது, இந்தியாவில் பெரும்பாலானோருக்கு உள்ள பாதிப்பாக விளங்குகிறது. இந்தப் பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைத் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இது உயிருக்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கிறது. இரத்த அழுத்த பாதிப்பிற்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அது இதய நோய்கள் மற்றும் பக்கவாத பாதிப்பிற்கு வழிவகுத்துவிடுகிறது. இரத்த அழுத்த பாதிப்பானது மிகவும் கொடியது. ஆனால் மக்கள் பரப்பும் தவறான கட்டுக்கதைகளால் பலர்ப் பாதிக்கப்படுவது அதிர்ச்சியளிக்கிறது. இரத்த அழுத்தம் தொடர்பான உண்மைநிலையைத் தெரிந்துகொள்வது அவசியம் ஆகும். இரத்த அழுத்தம் தொடர்பாக, நிலவி வரும் கட்டுக்கதைகள் குறித்து, இந்தக் கட்டுரையில் விரிவாகக் காண்போம்.
இரத்த அழுத்தம் மிகச் சாதாரணமானது, எவ்விதப் பாதிப்பும் இல்லாதது
இரத்த அழுத்தம் தொடர்பான மருத்துவப் பாதிப்புகளை, பெரும்பாலானோர் மிகவும் சாதாரணமானது என்றும் இதன்காரணமாக, எவ்விதப் பாதிப்பும் இல்லை என்றும் நினைத்துக் கொள்கின்றனர். ஆனால், உண்மை அதுவன்று. இரத்த அழுத்த பாதிப்பானது, மிகவும் விசித்திரமானது. இந்தப் பாதிப்பு கொண்டவர்கள், நீண்ட காலமாக அதை உணராமலேயே இருந்திருக்கலாம். அதன் அறிகுறிகள் வெளிப்படும்பட்சத்தில், நாம் உடனடி நடவடிக்கைகள் எடுக்கவேண்டியது அவசியம் ஆகும். நடவடிக்கைகள் எடுக்கத் தவறும்பட்சத்தில், ரத்த நாளங்கள், இதயம், சிறுநீரகங்கள் உள்ளிட்ட உடலின் முக்கிய இன்னபிற பாகங்கள், பெரும்பாதிப்பிற்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
இரத்த அழுத்தம் சாதாரணமானதாக இருந்தால், இதயம் சிறப்பாக உள்ளது எனப் பொருள்
உண்மை இல்லை. இரத்த அழுத்தம் 120 சிஸ்டாலிக் அழுத்தம் மற்றும் 80 டயஸ்டாலிக் அழுத்தம் இருக்கும்பட்சத்தில், அது இயல்பானதாகக் கருதப்படுகிறது. ஆனால் இந்த அளவீடானது, இதயத்தின் பாதுகாப்பிற்கு எவ்வித உத்தரவாதமும் அளிப்பதில்லை. 90 முதல் 99 mmHg சிஸ்டாலிக் அழுத்தமும், 120 முதல் 129 mmHg டயஸ்டாலிக் அழுத்தம் உடையவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், இவர்களுக்கு இதயப் பாதிப்பு வருவதற்கான வாய்ப்பு 5 மடங்கு அதிகம் உள்ளது கண்டறியப்பட்டு உள்ளது.
உப்பைத் தவிர்க்க அறிவுறுத்தவும்
உங்கள் பிரியமானவர்களுக்கு, ரத்த அழுத்த பாதிப்பு கண்டறியப்பட்டால், நாம் சாப்பிடும் உணவு வகைகளில் உள்ள உப்பு, ரத்த அழுத்தத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் வாய்ப்பு உள்ளதால், அவர்களை உப்பைத் தவிர்க்கச் சொல்லி அறிவுறுத்தலாம். அவர்கள் கட்டுக்கோப்பாக இருக்க முயற்சித்தாலும், அன்றாடம் பயன்படுத்தப்படும் ஊறுகாய், கெட்ச் அப் உள்ளிட்ட பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளில் அதிகளவில் உப்பு உள்ளதை மறுத்துவிட இயலாது.
ஒயின் குடிப்பதன் மூலம் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம்
ஒயின் குடிப்பதன் மூலம் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம் என்று பெரும்பாலானோர் நினைத்து வருகின்றனர். அது முற்றிலும் பொய்யான தகவல் ஆகும். மதுபானம், எந்தவகையினதாக இருந்தாலும், அது இரத்த அழுத்த பாதிப்பிற்குத் தீர்வாக இருந்ததில்லை. தொடர்ந்து மதுபானம் அருந்துவோரின் உடலில் ரத்த ஓட்டம் மாறுபடுகிறது. டிரைகிளிசரைடுகள் அதிகரித்து, தமனிகள் தடிமனாகி, இதயம் மற்றும் கல்லீரல் பாதிப்புகள் ஏற்படலாம்.
மேலும் வாசிக்க : தனிப்பயனாக்கப்பட்ட சுகாதாரப் பராமரிப்பு அறிவோமா?
இரத்த அழுத்தம் சீராக இருந்தால் மருந்துகளைத் தவிர்க்கலாம்
இரத்த அழுத்தம் சீரான நிலையை எட்டும்பட்சத்தில், எடுத்துக்கொள்ளும் மருந்துகளை நிறுத்திவிடலாம் என்ற பொதுவான கருத்து பெரும்பாலான மக்களிடையே நிலவிவருகிறது. இது முற்றிலும் தவறானது என்பது மட்டுமல்லாது, பெரும் தீங்கினையும் விளைவிக்கவல்லது ஆகும். மருத்துவர்களின் அறிவுறுத்தல் இன்றி, மருந்துகள் எடுத்துக்கொள்வதை நிறுத்துவது, பெரிய பிரச்சினைகளுக்கு நம்மை இட்டுச் செல்லும்.
சிஸ்டாலிக் அழுத்தம் தான் முக்கியம்
இரத்த அழுத்த மாறுபாட்டைக் கண்காணிக்கச் சிஸ்டாலிக் மற்றும் டயஸ்டாலிக் அழுத்த குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் சிஸ்டாலிக் அழுத்த குறியீடானது, உயர் ரத்த அழுத்த மாறுபாட்டைக் கண்டறிய உதவுகிறது. டயஸ்டாலிக் அழுத்த குறியீட்டு மதிப்பு எப்போதும் 80க்கு குறைவாகவே இருக்க வேண்டும். இரத்த அழுத்த மாறுபாட்டை அளவிடும்போது, சிஸ்டாலிக் அழுத்தத்தைப் பதிவு செய்தால் மட்டும் போதும் என்று சிலர் நினைக்கின்றனர். அது முற்றிலும் தவறான ஒன்று ஆகும். சிஸ்டாலிக் மற்றும் டயஸ்டாலிக் என 2 அளவீடுகளும் முக்கியம் ஆகும்.
இரத்த அழுத்தம் தொடர்பான கட்டுக்கதைகளைத் தகர்த்து எறிந்து, உண்மைத்தன்மையை ஆராய்ந்து, அதன்படி நடந்து ரத்த அழுத்த பாதிப்பினை வெற்றிகரமாக எதிர்கொண்டு, ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வோமாக…