இரத்த அழுத்தத்தை நிர்வகிக்கும் இயற்கை வழிமுறைகள்
இந்தியாவில் 220 மில்லியன் மக்கள், ஹைபர்டென்சன் எனப்படும் உயர் ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தேசிய மக்கள்தொகையில், வெறும் 12 சதவீதத்தினர் மட்டுமே, சீரான ரத்த அழுத்தத்தைப் பெற்று உள்ளனர்.
ஹைபர்டென்சன் பாதிப்பானது, மனிதகுலத்திற்கு அச்சுறுத்தல் நிறைந்ததாக இருப்பினும், சரியான மருத்துவ முறைகள் மற்றும் வாழ்க்கைமுறையில் சில முக்கிய மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம், இந்தப் பாதிப்பைக் கட்டுப்படுத்த இயலும் என்பது சற்று ஆறுதலான விசயம் ஆகும்.
இரத்த அழுத்தத்தை இயற்கையான முறையில் நிர்வகிக்க உதவும் பல வழிமுறைகள் உள்ளன. வீட்டு மருத்துவம், உணவுமுறை, வாழ்க்கைமுறை மாற்றங்கள், உடற்பயிற்சி, மன அழுத்த நிர்வாகம், மற்றும் உறக்க முறைகள் குறித்து இங்கு விரிவாகக் காண்போம்.
இயற்கையாகவே ரத்த அழுத்த மாறுபாட்டைக் குறைக்கும் வழிகள்
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் நிகழ்வில் மருந்துகள் முறையே, மிகவும் பொதுவானதாக உள்ளது. வாழ்க்கைமுறைகளில் சில மாற்றங்களை மேற்கொள்வதன் மூலமும், ரத்த அழுத்த மாறுபாட்டைத் தவிர்க்க இயலும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
வீட்டு மருத்துவ முறைகள்
வெள்ளைப்பூண்டு
வெள்ளைப்பூண்டு, இதய ஆரோக்கியத்திற்கு உகந்த பண்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது.இது நைட்ரிக் அமிலத்தின் உற்பத்தியைத் தூண்டுவதன் மூலம், ரத்த நாளங்களை விரிவடையச் செய்து, ரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
ஆப்பிள் சிடார் வினிகர்
ஒரு தேக்கரண்டி அளவிலான ஆப்பிள் சிடார் வினிகரை, தண்ணீரில் கலந்து தினமும் குடித்து வந்தால், அது உடலின் pH அளவைப் பேணிக்காத்து, ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
செம்பருத்தி டீ
செம்பருத்தி டீயில் உள்ள டையூரிடிக் பண்புகள், ரத்த நாளங்களைத் தளர்வடையச் செய்து, ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன.
இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் உணவுக்குறிப்புகள்
ஆரோக்கியமான உணவுமுறையானது, ரத்த அழுத்தத்தைக் குறைக்கப் பேருதவி புரிகிறது.
பொட்டாட்சியம் உட்கொள்ளுதலை அதிகரிக்கவும்
பொட்டாசியம் சத்து அதிகம் கொண்ட வாழைப்பழங்கள், இனிப்பு உருளைக்கிழங்கு, கீரைகள் உள்ளிட்டவை உடலில் சோடியம் அளவைக் கட்டுப்படுத்தி, ரத்த அழுத்த மாறுபாட்டைக் குறைக்கின்றன.
சோடியம் உட்கொள்ளலைக் குறைத்தல்
சோடியம் என்றழைக்கப்படும் உப்பின் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்வதன் மூலம், உடலில் அதிகப்படியான திரவம் தங்குவதைத் தடுக்க இயலும். இதன்மூலம், ரத்த அழுத்த மாறுபாட்டைக் குறைக்கலாம்.
DASH உணவுமுறை
உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் வகையிலான DASH உணவுமுறையில் பழ வகைகள், காய்கறிகள், முழுத்தானியங்கள், புரதங்கள் நிறைந்த உணவு வகைகள் இடம்பெற்று உள்ளன. இந்த உணவுமுறையானது, ரத்த அழுத்த மாறுபாட்டைக் குறைக்க உதவுகிறது.
மருந்துகள் இல்லாமலேயே ரத்த அழுத்த மாறுபாட்டைக் குறைத்தல்
ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரித்தல்
உடல் எடையைக் குறிப்பிடத்தக்க அளவிற்குக் குறைப்பதன் மூலம், ரத்த அழுத்த மாறுபாட்டைக் கணிசமான அளவிற்குக் குறைக்கலாம். சரிவிகித உணவுமுறை மற்றும் வழக்கமான உடற்பயிற்சியின் மூலம், சரியான உடல் நிறைக் குறியீட்டு (BMI) எண்ணைப் பராமரிக்க முடியும்.
ஆல்கஹால் பயன்பாட்டைக் குறைத்தல்
அதிகப்படியான ஆல்கஹால் பயன்பாடானது, உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது. ஆண்கள் என்றால் தினமும் 2 கட்டிங்களும், அதுவே பெண்கள் எனில், ஒரு கட்டிங் அளவிற்கே மதுபானங்களைக் குடிக்க வேண்டும்.
புகைப்பழக்கத்தைக் கைவிடுதல்
புகைப்பிடிக்கும் பழக்கமானது சிறிதுசிறிதாக, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும் காரணியாகும். நீண்ட காலமாகப் புகைப்பிடித்து வருபவர்களுக்கு, ரத்த குழாய்களில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இது உயர் ரத்த அழுத்த பாதிப்பிற்கு வழிவகுக்கிறது.
வாழ்க்கைமுறை மாற்றங்களின் மூலம் ரத்த அழுத்தத்தைக் குறைத்தல்
ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை மேற்கொள்வதன் மூலம், ரத்த அழுத்த நிர்வாகத்தைத் திறம்பட நிர்வகிக்க முடியும்.
உடற்பயிற்சி பழக்கம்
வாரத்திற்கு 150 நிமிடங்கள் கால அளவிற்கு நடைப்பயிற்சி அல்லது சைக்கிளிங் போன்ற மிதமான ஏரோபிக் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். உடற்பயிற்சிகளானது, இதயத்தை வலுப்படுத்தி, சீரான ரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது.
தியானம் மற்றும் மனந்தெளிநிலைப் பயிற்சிகள்
யோகா மற்றும் தியான பயிற்சிகள், மன அழுத்தத்தைக் குறைத்து, ரத்த அழுத்த மாறுபாட்டைக் கட்டுப்படுத்துகிறது. இது மனம் தளர்வு அடையவும், அமைதியான மனநிலைப் பெறவும் உதவுகிறது.
உடலில் போதுமான அளவு நீரேற்றம்
தினசரி போதுமான அளவிற்கு நீரைப் பருகுவதன் மூலம், ரத்த நாளங்களின் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கிறது. இதன்மூலம், ரத்த ஓட்டமானது சீராக நடைபெறுகிறது.
இரத்த அழுத்தத்தைக் குறைக்கவல்ல உணவுகள்
காய்கறிகள்
கீரைகள் உள்ளிட்ட காய்கறிகளில், அதிகளவிலான நைட்ரேட்கள் உள்ளன. இவை, உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்படாமல் தடுக்க உதவுகின்றன.
பெர்ரி பழங்கள்
புளூபெர்ரிகள், ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி உள்ளிட்டவற்றில் உள்ள ஆண்டி ஆக்சிடண்ட்கள் மற்றும் பிளேவானாய்டுகள், ரத்த அழுத்த மாறுபாட்டைக் கட்டுப்படுத்துகின்றன.
பீட்ரூட்
பீட்ரூட் சாறில், அதிகளவில் நைட்ரேட்கள் உள்ளன. இவை ரத்த நாளங்களில் தளர்வினை ஏற்படுத்தி, ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, உயர் ரத்த அழுத்த பாதிப்பைத் தடுக்கின்றது.
மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் நுட்பங்கள்
ஆழ்ந்த சுவாசப் பயிற்சி
ஆழ்ந்த மற்றும் மெதுவான சுவாசப் பயிற்சிகள், நரம்பு மண்டலத்தைத் தளர்வடையச் செய்து, உயர் ரத்த அழுத்த பாதிப்பைத் தடுக்கின்றது.
தசைத் தளர்வுப் பயிற்சிகள்
இந்த நுட்பமானது, தசைகளின் தளர்வுக்கு முக்கியப் பங்காற்றுகிறது. இது மன அழுத்தத்தைக் குறைப்பது மட்டுமல்லாது, ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.
மேலும் வாசிக்க : இந்திய மக்கள்தொகையின் மரபியல் வகைப்பாடுகள்
உறக்கத்தை மேம்படுத்துவதன் மூலம் ரத்த அழுத்தத்தைக் குறைத்தல்
படுக்கை அட்டவணையை உருவாக்குதல்
தினமும் இரவில் ஒரே நேரத்தில் உறங்கச் செல்லுதல் மற்றும் காலையில் ஒரே நேரத்தில் விழித்திருத்தலைப் பழக்கப்படுத்திக் கொள்வதன் மூலம் சர்காடியன் ரிதம் எனப்படும் உடலியல் கடிகாரத்தை ஒழுங்குபடுத்த இயலும்..
உறக்கத்திற்கு ஏற்ற சூழலை உருவாக்குதல்
புத்தகம் வாசித்தல்,வெதுவெதுப்பான நீரில் குளித்தல், யோகா பயிற்சி செய்தல் உள்ளிட்ட நிகழ்வுகள், அமைதியான மற்றும் ஆழ்ந்த உறக்கத்திற்கு வழிவகுக்கின்றன.
மின்னணு உபகரணங்களின் பயன்பாட்டைத் தவிர்த்தல்
படுக்கை அறையில், ஸ்மார்ட் போன், லேப்டாப், டிவி உள்ளிட்ட மின்னணு உபகரணங்களின் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும். இந்த உபகரணங்களின் திரை வெளிச்சமானது, மூளையில் உறக்கத்தைத் தூண்டும் ஹார்மோனின் செயல்பாட்டைத் தடுக்கிறது.
அதேபோன்று, காஃபின் அடங்கிய காபி உள்ளிட்ட பானங்களும், உறக்கமின்மைப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. போதுமான அளவு உறக்கம் இல்லாதவர்களுக்கு, உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
ஹைபர்டென்சன் எனப்படும் உயர் ரத்த அழுத்த பாதிப்பை, இயற்கையான முறையில் குறைத்து ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வோமாக…