: பல் இம்பிளாண்ட் ஒரே நாளில் செய்ய முடியுமா

பல் இம்பிளாண்ட் ஒரே நாளில் செய்து கொள்ள முடியுமா? என்ற கேள்வி உங்களுக்கு சகஜமாகவே ஏற்படும். நிச்சயம் இந்த பல் இம்பிளாண்ட சிகிச்சையை ஓரே நாளில் செய்ய முடியும் என்று கூறினாலும், உங்களுக்கு கொஞ்சம் சந்தேகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. “ஒரே நாளில் எப்படி நல்ல சிகிச்சையைச் செய்ய முடியும்?” என நீங்கள் கேட்கலாம். இது சரியான கேள்வி தான். இந்த வகை கேள்விகள் உங்களுக்கு எழுவது ஒன்றும் தவறான விஷயம் அல்ல. நீங்கள் உங்கள் ஆரோக்கியத்திற்காக செய்து கொள்ளும் இந்த சிகிச்சை முறைகள் பற்றி நன்றாக அலசி ஆராய்ந்து தெரிந்து கொள்வது ஆரோக்கியமான செயல்பாடு தான்.

இந்த கட்டுரையில், பல் இம்பிளாண்ட பற்றி பொதுவாக ஏற்படும் சில சந்தேகங்களை பற்றி தெளிவு பெறலாம். ஒரே நாளில் பல் இம்பிளாண்ட் சிகிச்சையை சாத்தியமாக்குவதைப் பற்றி பார்ப்பதன் மூலம் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம்.

பாரம்பரியமாக, பல் இம்பிளாண்ட் சிகிச்சை இரண்டு-படி செயல்பாட்டில் செய்யப்படுகின்றன. முதல் கட்டத்தில், டைட்டானியத்தால் உருவாக்கப்பட்ட பல் இம்பிளாண்ட், தாடை எலும்பில் செருகப்படுகிறது. இந்த முறையில் முன்னதாக, ஆசியோ இன்டெக்ரேஷன் செயல்முறை, மூலம் பல் உள் வைப்பை, தாடை எலும்புடன் இணைக்கும் செயல் நடைமுறை படுத்தப்படுகிறது. இந்த நடைமுறையில் நாம் குணமாக சில காலம் ஆகும். அதன் பிறகு, உள்வைப்பின் மேல் ஒரு சுருக்கம் ஏற்படும். அப்போது, உங்கள் பல்லை மாற்றியமைக்கும் பகுதியான, க்ரெளன் பின்னர் அதில் இணைக்கப்படும். இந்த பாரம்பரிய முறையின் தீமை என்னவென்றால், இந்த சிகிச்சையை முடிக்க எடுக்கும் நேரம் மிகவும் கூடுதலாக செலவாகும். மேலும் இந்த முறையில் சில மருத்துவர்கள் ஃப்ரீஹேண்ட் முறையை பின்பற்றுவதால், தாடை எலும்பில் உள்வைப்பைச் செருகுவதற்கான சிறந்த இடத்தை அவர்கள் மதிப்பிடும் போது சில அசெளகரியங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பல நேரங்களில் உள்வைப்பு உகந்த இடத்தை விட குறைவான இடத்தில் செருகப்படுகிறது. இதனால் சிகிச்சை முடிந்து நோயாளி குணமாகிட நீண்ட காலம் ஆகிறது.

ஒரே நாளில் செய்யப்படும் பல் இம்பிளாண்ட் நடைமுறைகள் இந்த செயல்முறையைப் பயன்படுத்துவதில்லை. டாக்டர் வெலாஸ்கோ பயன்படுத்தும் டீத்-இன்-ஹவர் நடைமுறையில், ஒரு பல் அகற்றப்படலாம், ஒரு இம்பிளாண்ட் செருகப்படலாம் மற்றும் ஒரு க்ரெளன் சேர்க்கப்படலாம். இவை அனைத்துமே இரண்டு மணிநேர இடைவெளியில் முடிந்து விடும்.

ஒரு மணி நேரத்தில் இந்த செயல்முறைகளை செய்ய முடியும் என்றாலும், பல செயல்பாடுகள் இதில் தேவைப்படுவதால் ஒரு முறையான திட்டமிடல் தேவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

மேலும் இந்த நடைமுறைக்கு முக்கியமானது கணினி இமேஜிங் தொழில்நுட்பம்; இங்கே மருத்துவர்கள் ஃப்ரீஹேண்ட் முறையை பின்பற்றுவது இல்லை. இந்த முறையில் முதலில் சி.டி ஸ்கேன் எடுக்கப்படுகிறது. பின்னர் பல் தாடையின் 3 டி மாதிரி டிஜிட்டல் முறையில் உருவாக்கப்படுகிறது. இந்த முறையால் பல் மருத்துவர் தாடை எலும்பில், பல் இம்பிளாண்ட் எங்கு செருகப்பட வேண்டும் என்று துல்லியமாக திட்டமிட்டு கண்டறிய முடியும். சுருக்கமாக கூற வேண்டும் என்றால், ஒரே நாளில் நீங்கள் பல் இம்பிளாண்ட் சிகிச்சை பெறுவது, பாரம்பரிய முறையுடன் ஒப்பிடும் போது மிகவும் துல்லியமானதாகவே இருக்கும்.

பல் இம்பிளாண்ட் உண்மையில் ஒரே நாளில் ஆரோக்கியமாக செய்யப்பட்டுவிடும். மேலும் அவை ஓரே நாளில் செய்யப்பட்டாலும், சிறப்பாக செய்யப்படுகின்றன. இதில் டீத்-இன்-ஹவர் முறையானது
அதிக வெற்றி விகிதத்தைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுபற்றி உங்களுக்கு மேலும் எழும் சந்தேகங்களை தீர்ப்பதற்கு, சென்னையில் செயல்படும் பல் மருத்துவ சிகிச்சை மையங்கள் பல்வேறு வகையான முகாம்களை இலவசமாக நடத்தி வருகிறார்கள். அந்த முகாம்களில் நீங்கள் பங்கு பெற்று இது பற்றிய சிகிச்சை முறைகளை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம். மேலும் இதற்காக இலவச டோல் ப்ரீ அழைப்பு எண்களையும் அறிமுகம் செய்து உள்ளார்கள். அந்த இலவச டோல் ப்ரீ அழைப்பு எண்களில் தொடர்பு கொண்டும் உங்களின் பல சந்தேகங்களுக்கு எளிதாக தீர்வு பெறலாம்.

எனவே நீங்கள் உங்கள் பற்களின் பாதுகாப்பை பேண சரியான நேரத்தில் பல் இம்பிளாண்ட் செய்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இந்த பல் இம்பிளாண்ட் செய்வதற்கு என சென்னையில் பல பல் மருத்துவ சிகிச்சை மையங்கள் உள்ளன. அவற்றில் உங்களுக்கு தகுந்த சிகிச்சை முறைகள் பற்றி கேட்டறிந்து, பல் இம்பிளாண்ட் செய்வதற்கு திட்டமிட்டு, முறையான சிகிச்சை பெற்று கொள்ளலாம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழிக்கு ஏற்ப, உங்கள் அழகை உங்கள் முகத்தில் காட்டும் அழகிய புன்னைகையால் வெளிப்படுத்தலாம்.

மேலும் வாசிக்க :  கர்ப்ப காலத்தில் செய்யப்படும் அனாமலி ஸ்கேன் பற்றிய முழு குறிப்பு.

Leave comment