Blood samples from a pregnant woman, emphasizing medical tests for baby’s health and parental care.

கர்ப்ப காலத்தில் செய்யும் ரத்த சோதனைகளை அறிவோமா?

பெண்கள், தங்கள் கர்ப்பத்தை உறுதிப்படுத்தும் நிலையிலேயே, ரத்த பரிசோதனைகள் முக்கியத்துவம் பெற துவங்கி விடுகின்றன. HCG எனப்படும் மனிதக் கோரியோனிக் கோனடோட்ரோபின் ஹார்மோன், தாய் மற்றும் வயிற்றில் உள்ள குழந்தையின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வைக் கண்காணிக்க உதவுகின்றன. வீட்டிலேயே மேற்கொள்ளப்படும் கர்ப்ப பரிசோதனைகள் போலன்றி, ரத்த பரிசோதனைகள் மிகவும் துல்லியமானதாக உள்ளன. இந்த ரத்த பரிசோதனைகள், கர்ப்ப நிகழ்வை, முன்கூட்டியே கண்டறிய உதவுகின்றன.

கர்ப்பக் காலத்தில், வயிற்றில் உள்ள குழந்தையின் ஆரோக்கியத்தை மதிப்பீடு செய்வதற்கும், பெற்றோர் ரீதியான கவனிப்பை மேம்படுத்துவதற்கும், உங்கள் மருத்துவ நிபுணர், பல்வேறு கண்காணிப்பு மற்றும் சோதனைகளைப் பரிந்துரைச் செய்யலாம்.

நீங்கள் கர்ப்பமாக இருப்பதை உணர்ந்தவுடன், நீங்கள் மேற்கொள்ள வேண்டிய சில கர்ப்பக் கால ரத்த பரிசோதனைகள் குறித்து இந்தக் கட்டுரையில் விரிவாகக் காண்போம்.

கர்ப்பக் காலத்தில் மேற்கொள்ளப்படும் பொதுவான ரத்த சோதனைகள்

உங்கள் கர்ப்பக் காலம் முழுமைக்கும், உங்கள் வயிற்றில் உள்ள குழந்தையின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும், ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நிலையில் அதனைத் திரையிட, ரத்த பரிசோதனைகள் மற்றும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் உங்களுக்குப் பேருதவி புரிகின்றன. இத்தகைய சோதனைகள், உங்களை மட்டுமல்லாது, உங்கள் வயிற்றில் உள்ள குழந்தையின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் விதத்தில் அமைகின்றன.

உங்களுக்குக் கர்ப்பம் உறுதிப்படுத்தப்படும்பட்சத்தில், மருத்துவ நிபுணர் மேற்கொள்ளச் சொல்லும் சில கட்டாயச் சோதனைகள், இங்கே பட்டியலிடப்பட்டு உள்ளன.

இரத்த பரிசோதனை

பெண்கள், தங்கள் கர்ப்பக் காலம் முழுமைக்கும், அவ்வப்போது, ரத்த பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும். கர்ப்பம் குறித்த நேர்மறையான முடிவைப் பெறும் நேரத்தில் இருந்து, ரத்த பரிசோதனைகளின் தேவைத் துவங்குகிறது. இரத்தத்தில், ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கைப் பரிசோதிக்கப்பட்டு, அவர்களுக்கு ரத்தசோகைப் பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய, மருத்துவ நிபுணர், ரத்த பரிசோதனையை மேற்கொள்வார்.

இரத்தத்தில் ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கைக் குறையும் போதுதான், ரத்தசோகைப் பாதிப்பானது ஏற்படுகிறது. ஆனால், கர்ப்பிணிகளுக்கு இரும்புச்சத்துக் குறைபாட்டால் ரத்தசோகை ஏற்படலாம். இதைச் சரிசெய்ய மருத்துவர் இரும்புச்சத்து மாத்திரைகளைப் பரிந்துரைப்பார்.

இரத்தசோகையைத் தவிர்த்து, பெண்களின் கர்ப்பக் காலத்தில் மேற்கொள்ளப்படும் ரத்த பரிசோதனைகள், பிளேட்லெட்டுகள் எனப்படும் ரத்த நுண் தட்டுகளின் எண்ணிக்கையையும், ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையையும் மதிப்பிட உதவுகின்றன. இந்த மதிப்பீட்டுச் சோதனைகள், ரத்தம் உறைதல் மற்றும் நோய் எதிர்ப்பு அமைப்பு தொடர்பான பிரச்சினைகள் மற்றும் கர்ப்பக் காலத்தின் துவக்கத்தில் காணப்படும் சிக்கல்களைக் கண்டறிய, மருத்துவர்களுக்கு உதவுகின்றன.

இரத்த வகைப்படுத்துதல் (Blood Typing)

இரத்த வகைப்படுத்துதல் என்பது உங்கள் உடலில் உள்ள ரத்தம் என்ன வகையைச் சேர்ந்தது என்பதைக் கண்டறிய உதவும் முறை ஆகும். இது உடலில் உள்ள ரத்த செல்களின் மேற்பரப்பில், Rh காரணி உள்ளதா என்பதையும் கண்டறிய உதவுகிறது.

Rh காரணி என்பது, ரத்த சிவப்பு செல்களின் மேற்பரப்பில் காணப்படும் புரதம் ஆகும். இது Rh நேர்மறை (Positive) அல்லது Rh எதிர்மறை (Negative) வகையினதாக இருக்க வாய்ப்பு உள்ளது. Rh எதிர்மறைக் கொண்ட நபர், Rh நேர்மறைக் குழந்தையைக் கருவில் சுமக்கும் பட்சத்தில், அது Rh இணக்கமின்மைப் பாதிப்பை ஏற்படுத்த கூடும். பிரசவ நிகழ்வின் போது, Rh நேர்மறை ரத்தமானது, தாயின் ரத்த ஓட்டத்தில் கலக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு நுழையும்பட்சத்தில், அது தாயின் உடலில், Rh காரணிக்கு எதிரான ஆன்ட்டிபாடிகளை வெளியிட நிர்பந்திக்கப்படுகிறது. இந்த ஆன்ட்டிபாடிகள், குழந்தையின் ரத்த சிவப்பணுக்களுக்குப் பெரும்பாதிப்பை ஏற்படுத்தவல்லதாக உள்ளன. இரத்த சிவப்பணுக்களில் ஏற்படும் இத்தகைய பாதிப்பானது, ரத்த சோகை உள்ளிட்ட இன்னபிற பாதிப்புகளுக்குக் காரணமாக அமைகின்றன. Rh தொடர்பான பிரச்சினைகளைத் தவிர்க்க, Rh எதிர்மறைக் கொண்ட கர்ப்பிணிகள், பாதிப்புகளைத் தவிர்க்கும் பொருட்டு, Rh இம்யூனோகுளோபுலின்கள் (RhIg), ஊசி மருந்துகளை, மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த ஊசி மருந்துகள், கர்ப்பிணிகளின் உடலில் தீங்கு விளைவிக்கும் ஆன்ட்டிபாடிகளின் உற்பத்தியைத் தடுக்கிறது.

Negative Hepatitis B test report with a test tube labeled 'Hepatitis B - Test', part of prenatal screening.

ஹெபாடைட்டிஸ் B

சில தருணங்களில், பிரசவ நிகழ்வின் போது, ஹெபாடைட்டிஸ் B வைரஸ் பாதிப்பானது, கருவில் உள்ள குழந்தைக்கும் பரவ வாய்ப்பு உள்ளது. இது கல்லீரல் பாதிப்பு உள்ளிட்ட கடுமையான உடல்நலப் பாதிப்புகளுக்கு வழிவகுப்பதாக உள்ளது. பெரும்பாலான சுகாதார வழங்குநர்கள், கர்ப்ப ரத்த பரிசோதனைகளின் ஒருபகுதியாக, ஹெபாடைட்டிஸ் B வைரஸ் பாதிப்பு இருப்பதைக் கண்டறிகின்றனர். குழந்தைக்கு, இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டால், குழந்தைக்கு, இம்யுனோகுளோபுலின் ஊசி மருந்துகள், நோய்த்தடுப்பு மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த நடவடிக்கைகள் குழந்தையை ஹெபாடைட்டிஸ் B வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது.

மனித நோய் எதிர்ப்பு குறைபாடு வைரஸ் (HIV)

HIV வைரஸ், மனிதர்களின் உடல் செல்களைத் தாக்கி பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது. உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியானது, நோய்த்தொற்றுகளில் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது. இந்த HIV வைரஸ்,தவறான உடலுறவு, பரிசோதிக்கப்படாத ரத்தம் செலுத்துதல் உள்ளிட்ட காரணிகளால், ஏற்படுகிறது. HIV பாதிப்புள்ள தாயிடமிருந்து குழந்தைக்குப் பிரசவத்தின் போதோ அல்லது தாய்ப்பால் மூலமாகவோ நோய் பரவலாம். இதன்காரணமாக, மருத்துவ வல்லுநர்கள், கர்ப்பக் கால பரிசோதனைகளின் ஒருபகுதியாகவே, HIV பரிசோதனையையும் மேற்கொள்கின்றனர். குழந்தையை நோய்த்தொற்றில் இருந்து பாதுகாக்கவும், கர்ப்பக் காலத்தில். தாயின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும், மருத்துவ நிபுணர்கள், அதற்கான மருந்துகளைப் பரிந்துரைச் செய்கின்றனர்.

கர்ப்பகால நீரிழிவு நோய்ப் பாதிப்பு (Gestational Diabetes)

பெண்களுக்கு, கர்ப்பக் காலத்தில் நீரிழிவு நோய்ப்பாதிப்பு ஏற்படும்பட்சத்தில், அது, கர்ப்பக் கால நீரிழிவு நோய்ப்பாதிப்பு (Gestational Diabetes) என்று வரையறுக்கப்படுகிறது.

  • அதிக உடல் எடை
  • கர்ப்பக் காலத்திற்கு முன்பாகவே, நீரிழிவு நோய்ப்பாதிப்பிற்கு உள்ளாகி இருத்தல்,
  • குடும்ப உறுப்பினர்களுக்கு, நீரிழிவு நோய்ப்பாதிப்பு இருத்தல்

உள்ளிட்ட காரணிகளைக் கொண்டவர்களுக்கு, அவர்களது கர்ப்பக் காலத்தின் துவக்கத்தில் இருந்தே, மருத்துவ நிபுணர்கள் கர்ப்பக்கால நீரிழிவுப் நோய்ப் பாதிப்பைக் கண்டறியும் பரிசோதனைகளை மேற்கொள்கின்றனர். கர்ப்பக் காலத்தில், பெண்களுக்கு நீரிழிவு நோய்ப்பாதிப்பு இருப்பது கண்டறியப்படின், அது பெண்களின் ஆரோக்கியம் மட்டுமல்லாது, குழந்தையின் வளர்ச்சியையும் பாதிப்பதாக உள்ளது. பெண்களுக்கு, அவர்களின் கர்ப்பக் காலத்தில். இரண்டு முறை, நீரிழிவு நோய்ப்பாதிப்பிற்கான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. முதல் சோதனையானது, குறிப்பிட்ட பெண்ணிற்கு ஏற்கனவே நீரிழிவு பாதிப்பு உள்ளதா என்பதை அறியவும், அல்லது அந்நோய்ப்பாதிப்பு உருவாகும் ஆபத்து உள்ளதா என்பதைக் கண்டறிய உதவுகிறது. இரண்டாவது சோதனையின் மூலம், கர்ப்பக் காலத்தில் நீரிழிவு நோய்ப்பாதிப்பு ஏற்படுமா என்பதைக் கண்டறிய உதவுகிறது.

மேலும் வாசிக்க : குழந்தைகளுக்குச் செய்ய வேண்டிய ரத்த சோதனைகள்

கர்ப்பக் காலத்தில் மேற்கொள்ளப்படும் மற்ற பரிசோதனைகள்

மேலே குறிப்பிடப்பட்டு உள்ள மற்ற ரத்த பரிசோதனைகளைத் தவிர்த்து, கர்ப்பக் காலத்தின் துவக்கத்தில் இருந்தே உடல் எடை, உயரம், உடல் நிறைக் குறியீட்டு எண் (BMI) உள்ளிட்டவை மதிப்பீடு செய்யப்படுகிறது. இந்தச் சோதனையில், கர்ப்பிணிகள் அதிக உடல் எடையுடன் இருப்ப்பது கண்டறியப்படின், அது பெரும் ஆபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்பாக அமைகிறது. பெண்கள், அவர்களின் கர்ப்பக் காலத்தில் 10 முதல் 12 கிலோ அளவிற்கு உடல் எடைக் கூடுவர்.

பெண்கள், கர்ப்பக் காலத்தில் ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்கும் பொருட்டு, ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் உடற்பயிற்சிகளை, மருத்துவ நிபுணர்ப் பரிந்துரைச் செய்வார்.

கர்ப்பக் காலத்தின் போது, கர்ப்பிணிகளுக்குச் சிறுநீர்ப் பரிசோதனையும், சீரிய இடைவெளிகளில் மேற்கொள்ளப்படும். இந்தச் சிறுநீர்ப் பரிசோதனைகளின் மூலமாக, புரதம் மற்றும் ரத்த அழுத்த மாறுபாட்டின் விகிதமானது மதிப்பிடப்படும்.

கர்ப்பக் காலத்தில் மேற்கொள்ளப்படும் ரத்த பரிசோதனைகளின் மூலம் அறிவன

பெண்களுக்கு, கர்ப்பக் காலத்தில் மேற்கொள்ளப்படும் ரத்த பரிசோதனைகளின் மூலம், கர்ப்ப ஹார்மோனான மனிதக் கோரியானிக் கோனோடோட்ரோபின் (HCG) இருப்பது உறுதிசெய்யப்படுகிறது.

கர்ப்பிணிகளுக்கு, அந்தந்த காலகட்டத்தில், HCG அளவு மதிப்பீடுகள்

  • கர்ப்பம் தரிக்காத பெண்கள் அல்லது, 3 வாரங்களுக்கும் குறைவான கர்ப்பம் கொண்ட பெண்கள் – 5 மில்லி லிட்டருக்கும் குறைவாக
  • மூன்று வாரக் கர்ப்பம் கொண்ட பெண்கள் – 5 முதல் 50 மில்லிலிட்டர்கள் வரை
  • நான்கு வாரக் கர்ப்பம் – 5 முதல் 426 மில்லி லிட்டர்கள் வரை
  • ஐந்து வாரக் கர்ப்பம் – 18 முதல் 7340 மில்லி லிட்டர்கள் வரை
  • ஆறு வாரக் கர்ப்பம் -1080 முதக் 56500 மில்லி லிட்டர்கள் வரை
  • ஏழு முதல் 8 வாரக் கால அளவிலான கர்ப்பம் – 7650 முதல் 2,29,000 மில்லி லிட்டர்கள் வரை
  • ஒன்பது முதல் 12 வாரக் கால அளவிலான கர்ப்பம் – 25,700 முதல் 2,88,000 மில்லி லிட்டர்கள் வரை
  • 13 முதல் 16 வாரக் கர்ப்பிணி – 13,300 முதல் 2,54,000 மில்லி லிட்டர்கள் வரை
  • 17 முதல் 24 வாரக் கர்ப்பிணிகள் – 4,060 முதல் 1,65,400 மில்லி லிட்டர்கள் வரை
  • 25 முதல் 40 வாரக் கர்ப்பிணிகள் – 3,640 முதல் 1,17,000 மில்லி லிட்டர்கள் வரை

மேற்குறிப்பிட்ட இந்த அளவுகள், வழிகாட்டுதல்களுக்கான அளவுகள் மட்டுமே என்பதை மறந்துவிட வேண்டாம். இந்த மதிப்பீடுகள், மேலே குறிப்பிடப்பட்டு உள்ள அளவுடன் பொருந்தவில்லை என்றால், நீங்கள் பயப்படத் தேவையில்லை.

பெண்களே, உங்களின் கர்ப்பக் காலத்தில் உரிய ரத்த பரிசோதனைகளை மேற்கொண்டு, நீரிழிவு உள்ளிட்ட பாதிப்புகளில் இருந்து பூரண நலம் பெற்று, ஆரோக்கியமான மற்றும் வளமான நல்வாழ்க்கை வாழ வழிவகுப்போமாக…

Leave A Comment

Copyright © 2024 Health Design | All Rights Reserved.