பிரிமெச்சூர் குழந்தைகளுக்கு செய்யப்படும் பரிசோதனைகள்

பிரிமெச்சூர் குழந்தை என்றால் என்ன?

தற்போதைய நவீன கால சூழ்நிலையில் மக்களின் வாழ்க்கை முறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. அவர்கள் உண்ணும் உணவு முறைகள் காரணமாக அவர்களின் உடல்நிலையில் பல்வேறு வேதியியல் மாற்றங்கள் நிகழ்கின்றன. பொதுவாக ஒரு குழந்தை தாயின் கருவறையில் கருவாக உருவாகி, குழந்தையாக வெளிவர பத்து மாதங்கள் ஆகும். ஆனால் தற்போது பல குழந்தைகள் 7 அல்லது 8 மாதங்களிலோ, அல்லது அதற்கு முன்னதாகவே குறை பிரசவத்தில் பிறந்து விடுகின்றன. இந்த குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் பிரிமெச்சூர் குழந்தைகள் என்று அழைக்கப்படுகிறது.

பிரிமெச்சூர் குழந்தைகள் குறுகிய வளர்ச்சியுடன் பிறந்து விடுவதால், அவர்களின் உடல் உறுப்புக்கள் சீரான வளர்ச்சி பெற்றிருப்பதில்லை. எனவே அந்த குழந்தைகளின் மீது அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். மருத்துவமனைகளில் இத்தகைய குழந்தைகளை பாதுகாக்க இன்குபேட்டர் மற்றும் என். ஐ. சி. யூ வார்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.

பிரிமெச்சூர் குழந்தைகளுக்கு மேற்கொள்ள வேண்டிய நோய் கண்டறிதல் பரிசோதனைகள்.

உங்களுக்கு முன்கூட்டிய குழந்தை பிறந்து விட்டது என்றால், மருத்துவமனையில் அந்த குழந்தையை பாதுகாக்க என். ஐ. சி. யூ வார்டுக்கு மாற்றிவிடுவார்கள். ,அங்கு அந்த குழந்தையின் ஆரோக்கிய மேம்பாடுகளுக்காக பல சோதனைகள் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

உங்கள் பிரிமெச்சூர் குழந்தைக்கு செய்யப்படும் சாத்தியமுள்ள சோதனைகள்:

1.உங்கள் குழந்தையின் சுவாசம் மற்றும் இதயத் துடிப்பு தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

2.இரத்த அழுத்த அளவீடுகளும் அடிக்கடி பரிசோதனை செய்யப்படும்.

3.உணவுகள் மற்றும் நரம்புகளின் வழியே செலுத்தப்படும் திரவங்கள் மூலம் உங்கள் குழந்தை எவ்வளவு உள்ளே திரவத்தை எடுத்துக்கொள்கிறது மற்றும் அந்த குழந்தை எவ்வளவு திரவத்தை இழக்கிறது என்பதை என். ஐ. சி. யூ குழு கவனமாகக் கண்காணிக்கும்.

4. உங்கள் குழந்தையின் இரத்தத்தில் கால்சியம், குளுக்கோஸ் மற்றும் பிலிரூபின் அளவுகள் உள்ளிட்ட பல முக்கியமான பொருட்களைக் கண்காணிக்க நரம்புக்குள் செருகப்பட்ட ஊசி மூலம் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு இரத்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த இரத்தப் பரிசோதனை இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அளவிடுவதற்கும் இரத்த சோகை குறைபாடுகளை போக்கவும், குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்றுநோயை மதிப்பிடுவதற்கும் உதவி செய்கிறது.

5. உங்கள் குழந்தையின் இதய செயல்பாட்டில் உள்ள சிக்கல்களைச் சரிபார்க்க இந்த சோதனை இதயத்தின் அல்ட்ராசவுண்ட் ஆகும். கரு அல்ட்ராசவுண்ட் போலவே, ஒரு எலக்ட்ரோ கார்டியோகிராம் ஒலி அலைகளைப் பயன்படுத்தி காட்சி மானிட்டரில் நகரும் படங்களை உருவாக்குகிறது.

6. அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம் இரத்த ஓட்டத்தை பெருக்கும் மூளையின் செயல்பாட்டை சரிபார்கத்து கொள்ளலாம். மேலும்

7.இரைப்பை, குடல், கல்லீரல் அல்லது சிறுநீரகங்களில் உள்ள பிரச்சினைகளுக்கு வயிற்று உறுப்புகளை ஸ்கேன் செய்து பரிசோதிக்கலாம்.

8.குழந்தைகளின் விழித்திரையில் உள்ள சிக்கல்களைச் சரிபார்க்கவும், உங்கள் குழந்தையின் பார்வை திறனை சரிபார்க்கவும் முறையான கண் சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

இவை தவிர உங்கள் பிரிமெச்சூர் குழந்தைக்கு தேவையான உடல் வெப்பநிலையை பராமரிக்க இன்குபேட்டர் பயன்படுத்தப்படும். இங்கு என்.ஐ.சி.யு ஊழியர்கள் உங்கள் குழந்தையை “கங்காரு” கவனிப்பு” என்று அழைக்கப்படும் ஒரு குறிப்பிட்ட வழிமுறையை பின்பற்றி கவனமுடன் பராமரித்து வருவார்கள். இந்த பரிசோதனைகளின் முடிவுகளை ஆய்வு செய்து, ஒரு அறிக்கை தயார் செய்து, அதன்படி குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தேவையான சிகிச்சை அளிப்பார்கள்.
என். ஐ. சி. யூ வார்டில் உங்கள் பிரிமெச்சூர் குழந்தையின் முக்கிய அறிகுறிகளான இரத்த அழுத்தம், இதய துடிப்பு, சுவாசம் மற்றும் வெப்பநிலையை கண்காணிக்க சென்சார்கள் பயன்படுத்துவார்கள்.

மேலும் உங்கள் பிரிமெச்சூர் குழந்தை சிரமமில்லாமல் சுவாசிக்க ஒரு வென்டிலேட்டர் கருவியை பயன்படுத்துவார்கள்.

முதலில் உங்கள் பிரிமெச்சூர் குழந்தை ஒரு நரம்பு குழாய் மூலம் திரவங்களையும், ஊட்டச்சத்துக்களையும் பெறுவார்கள். உங்கள் குழந்தையின் மூக்கு வழியாகவும், அவன் வயிற்றிலும் (நாசோகாஸ்ட்ரிக், அல்லது என்ஜி, குழாய்) பொருத்தப்பட்ட குழாய் வழியாக தாய்ப்பாலை உணவாக கொடுக்க செய்வார்கள்.

இப்படி என். ஐ. சி. யூ வார்டில் அங்குள்ள சிறப்பு ஊழியர்கள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு உங்கள் பிரிமெச்சூர் குழந்தையை கவனமுடனும், அன்புடனும் கவனித்து கொள்வார்கள். உங்கள் குழந்தைக்கு தேவையான அனைத்து பரிசோதனைகளையும் அந்த மருத்துவமனையிலேயே செய்து கொள்ளும் வசதிகளை ஏற்படுத்தி இருப்பார்கள். எனவே ஒரு பிரிமெச்சூர் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கும் அறிகுறிகள் தென்பட்டால் அதற்குரிய சிசிதச்சை முறைகளை தாமதமின்றி தொடங்கி விடுவார்கள்.

எனவே பிரிமெச்சூர் குழந்தைகளை மிகவும் கவனமுடன் கையாள வேண்டும் என்பதால், அதில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. தற்போது சென்னையில் உள்ள பல குழந்தைகள் மருத்துவ சிகிச்சை மையங்கள், தங்கள் மருத்துவமனை வளாகத்திற்கு உள்ளேயே அனைத்து பரிசோதனைகளையும் மேற்கொள்ளும் ஆய்வுக்கூடங்களுடனும், குழந்தைகளுக்கான என். ஜ. சி. யூ வார்டுகளுடனும் அமையப் பெற்றுள்ளன.

மேலும் வாசிக்க : பல் இம்பிளாண்ட் ஒரே நாளில் செய்ய முடியுமா

Leave comment