இரத்த சர்க்கரை அளவு அறிக்கைச் சொல்வது என்ன?
மனிதன் உயிர் வாழ்வதற்கும், உடல் செயல்பாடுகள் சீராக இயங்கவும் ஆற்றல் இன்றியமையாத தேவையாக உள்ளது. நாம் சாப்பிடும் உணவு வகைகளில் இருந்து, நம் உடலுக்குத் தேவையான ஆற்றலைப் பெறுகின்றோம். நாம் சாப்பிடும் உணவு செரிக்கப்படுகிறது. இதிலுள்ள குளுக்கோஸ் ரத்த ஓட்டத்தில் கலந்து, உடலின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்கிறது. இன்சுலின் சுரப்பியின் உதவியால், உடலில் உள்ள செல்கள், குளுக்கோஸை உறிஞ்சி, ஆற்றலாக மாற்றி அமைக்கிறது.
உடல் செல்களினால், உறிஞ்ச இயலாத குளுக்கோஸ், ரத்த ஓட்டத்திலேயே எஞ்சி இருக்கும். ரத்தத்தில் அதிகக் குளுக்கோஸ் இருப்பதே நீரிழிவு நோய் ஆகும். இரத்தத்தில் இயல்பைவிட, அதிகளவு குளுக்கோஸ் அல்லது சர்க்கரை இருக்கும்போது, அது நீரிழிவு நிலையை உறுதிப்படுத்துகிறது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்தால், அது நீரிழிவுக்கும் முந்தைய நிலையாகக் கருதப்படுகிறது. இந்த நிலையின்போது, HbA1C அளவைக் கண்காணிப்பது அவசியம் ஆகும்.
ஒவ்வொரு நோயாளியும், உடலினுள் நிகழும் மாற்றங்கள் குறித்து அறிந்து இருப்பது அவசியமாகும். இதைத் தெரிந்துகொண்டால் மட்டுமே, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த இயலும். இந்தக் கட்டுரையில், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கண்டறிய உதவும் பரிசோதனை, பரிசோதனை அறிக்கை, நீரிழிவுப் பாதிப்பு, இந்தப் பாதிப்பிற்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சைகள் உள்ளிட்டவைகள் விரிவாக விளக்கப்பட உள்ளன.
இரத்தத்தில் சர்க்கரை அளவு
சாதாரண ரத்த பரிசோதனையில் சர்க்கரையின் அளவு இயல்பாகவே இருக்கும். உணவு சாப்பிடாமல் இருக்கும் நிலையிலோ, மற்ற சோதனை நிலையிலோ நாம் இந்தப் பரிசோதனையை மேற்கொள்ளும்போது தான், ரத்தத்தில் சர்க்கரையின் அளவில் ஏற்றத்தாழ்வுகள் இருப்பது தெரியவரும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு தொடர்பாக, பெரும்பாலானவர்களுக்கு இன்றளவும் சந்தேகங்கள் தொடர்ந்து வரும் நிலையில், நாம் அதனைத் தீர்க்க முயற்சிப்போம்.
இயல்பான ரத்த சர்க்கரை அளவு என்ன? ( உணவு சாப்பிடாத நிலையிலும், சாப்பிட்ட பின்பும்)
உணவு சாப்பிடாத நிலையில், FBS மதிப்பு 100 mg/dL க்கு குறைவாக இருத்தல் வேண்டும். உணவு சாப்பிட்ட நிலையில், குறிப்பிட்ட நபர் ஆரோக்கியமானவர் எனில், ரத்த சர்க்கரையின் அளவு 140 முதல் 160 mg/dL வரை இருத்தல் நல்லது.
அபாயகரமான ரத்த சர்க்கரை அளவு
காலை உணவுக்கு முன், ரத்தத்தில் சர்க்கரை அளவு 180 mg/dL எட்டும்பட்சத்தில், உடலில் மைட்டோகாண்ட்ரியா பாதிக்கப்பட்டு உள்ளது என்று பொருள். உடனடியாக, நீங்கள் நீரிழிவுப் பாதிப்பு நிர்வாகத்தைத் தொடங்க வேண்டும். மைட்டோகாண்ட்ரியாவிற்கு மேலும் சேதத்தை ஏற்படுத்தும் வகையிலான நடைமுறைகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
கடந்த 3 மாதங்களின் சராசரி ரத்த சர்க்கரை அளவீடு மூலம் நீரிழிவு நோயைக் கண்டறியலாம். இதற்கு A1C சோதனைப் பேருதவி புரிகிறது. இந்தச் சோதனையின் மூலம் உடலில் ஹீமோகுளோபின் அதிக அளவில் இருப்பது தெரியவருகிறது. இதன்மூலம், உடலில் குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் இருப்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.
நீரிழிவுப் பாதிப்பு இல்லாதவர்களில் A1C அளவு 5.7 சதவீதத்திற்குக் குறைவாக இருக்க வேண்டும். நீரிழிவுப் பாதிப்பிற்கு முந்தைய நிலையில் இருப்பவர்களுக்கு A1C அளவு 5.7 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதம் வரை இருக்க வேண்டும். A1C அளவு 6.5 சதவீதத்திற்கு மேல் இருக்கும்பட்சத்தில், அங்கு நீரிழிவுப் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்படுகிறது. A1C அளவுகள் 9 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்கும்பட்சத்தில், குருட்டுத்தன்மை, நரம்புப் பாதிப்பு, சிறுநீரகச் செயலிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.
வயதுவாரியாக, ரத்த சர்க்கரை அளவின் வரம்பு என்ன?
வயது அதிகரிக்க, அதிகரிக்க மைட்டோகாண்ட்ரியாவின் செயல்பாடும் குறைந்துகொண்டே வருகிறது. முன்பெல்லாம், நீரிழிவுப் பாதிப்பானது வயதானவர்களுக்கு வரும் நோய்ப்பாதிப்பாக இருந்தது. ஆனால் இன்றோ, அது சிறுவயதினருக்கும் சர்வசாதாரணமாக வரத் துவங்கிவிட்டது. இதுபோன்ற விஷயங்களைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
நீரிழிவு, நீரிழிவுக்கு முந்தைய நிலை, பாதிப்பு இல்லாத நிலை மற்றும் இயல்பான மனிதர்களின் ரத்தத்தில் சர்க்கரை அளவுகள்
HbA1Cயின் அளவு சதவீதத்தில் | சாப்பிடாமல் இருக்கும் நிலையில் சாதாரண ரத்த சர்க்கரை அளவு (mg/dl) | சாப்பிட்ட பிறகு சாதாரண ரத்த சர்க்கரை அளவு | |
நீரிழிவுப் பாதிப்பு | 6.5 மற்றும் அதற்கு மேல் | 126 மற்றும் அதற்கு மேல் | 200 மற்றும் அதற்கு மேல் |
நீரிழிவுக்கு முந்தைய நிலை | 5.7 – 6.4 | 100 -125 | 140 -199 |
நீரிழிவு இல்லாதநிலை | 5.7க்கும் குறைவாக | 99க்கும் குறைவாக | 140க்கும் குறைவாக |
இயல்பு நிலை | 5.7க்கும் குறைவாக | 99க்கும் குறைவாக | 140க்கும் குறைவாக |
நீரிழிவுப்பாதிப்பு கொண்டவர்களின் ஆரோக்கியமான வரம்பு
நீரிழிவு நோயாளிகள், உணவு சாப்பிடாத நிலையில், அவர்களின் ரத்த சர்க்கரை அளவு 80 முதல் 130 mg/dl என்ற அளவிற்குள் இருக்க வேண்டும். சாப்பிட்ட 2 மணி நேரத்திற்குள், ரத்த சர்க்கரை அளவு 180 mg/dl என்ற அளவிற்கும் குறைவாக இருக்க வேண்டும். இந்த அளவு வித்தியாசத்தில் ஆண், பெண் எனப் பாலினப் பாகுபாடு இல்லை.
இந்த விவகாரத்தில், ரத்தத்தில் சர்க்கரையின் அளவானது, நாம் மேற்கொள்ளும் செயல்பாடுகளைப் பொறுத்து நாள்முழுவதும் ஏற்ற, இறக்கமுடன் இருக்கும். இதன்காரணமாக, இதனை நாம் நம்பகமான அடையாளமாக ஏற்றுக்கொள்ள இயலாது. அதற்குமாறாக, இன்சுலின் அளவு மற்றும் HbA1C போன்றவை, சிறந்த மார்க்கர்களாகச் செயல்படுவதால், அதனை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவது நல்லது.
சோதனை மேற்கொள்ளப்படும் உடலில் HbA1C அளவு 5.6 மேல் இருக்கும்பட்சத்தில், அவருக்கு நீரிழிவு பாதிப்பு இருப்பதை உறுதி செய்ய முடியும். ஒருவருக்கு HbA1C அளவு 5.2 என்ற அளவைத் தொடும்போது, வாழ்க்கைமுறையில் சில மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம், சேதங்கள் ஏற்படுவதைத் தடுக்க முடியும்.
இரத்தத்தில் சர்க்கரை அளவை எப்போது சோதனைச் செய்ய வேண்டும்?
உங்களுக்கு நீரிழிவுப் பாதிப்பு இருப்பின், ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லையென்றால், வாராந்திர அடிப்படையில் தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும். சர்க்கரையின் அளவு கட்டுக்குள் கொண்டுவரப்படும்பட்சத்தில், மாதத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறைக் கண்காணித்தாலே போதுமானது ஆகும்.
பாமர மக்களும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆண்டிற்கு ஒருமுறை, ரத்தத்தின் சர்க்கரையின் அளவைப் பரிசோதனைச் செய்துகொள்ள வேண்டும். ஏனெனில், நீரிழிவுப் பாதிப்பிற்கான முந்தைய நிலையால் பாதிக்கப்பட்டு இருந்தாலும், அறிகுறிகள் வெளியே தெரியாது. அந்த நிலை இருப்பின் தகுந்த முன்னேற்பாடுகளை மேற்கொண்டு, அதிலிருந்து விடுபட இயலும்.
- அதீதக் களைப்பு
- நோய்த்தொற்றுக்கள் அடிக்கடி ஏற்படுதல்
- பசி, தாகம் அதிகரிப்பு
- அடிக்கடி சிறுநீர்க் கழித்தல்
- பல் தொடர்பான பிரச்சினைகள்
- பார்வை மங்குதல்
- கை, கால்களில் ஏற்படும் உணர்வின்மை நிலை
மெதுவாகக் குணமடையும் அல்லது குணமடையாத காயங்கள் உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒரு அறிகுறி தோன்றும்பட்சத்தில் உடனடியாக ரத்த சர்க்கரைப் பரிசோதனைச் செய்துகொள்வது அவசியம் ஆகும்.
கடந்த 10 ஆண்டுகளில் இரண்டாம் வகை நீரிழிவுப் பாதிப்புக்கு உள்ளானவர்களில் பெரும்பாலானோர்க் குழந்தைகள் மற்றும் இளைஞர்களே ஆவர். இந்த வயதினர், ஆண்டு தவறாமல், ரத்த சர்க்கரைப் பரிசோதனைச் செய்துகொள்வது நல்லது.
இரத்த சர்க்கரைப் பரிசோதனைக்குத் தயாராகும் வழிமுறைகள்
சோதனை மேற்கொள்வதற்கு முதல்நாள் இரவில் 8 முதல் 12 மணி வரை உணவு சாப்பிடாமல் இருப்பது நல்லது. இந்த நேரத்தில், வழக்கமாக உட்கொள்ளும் மருந்து மாத்திரைகள், இன்சுலின் ஊசி போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். சோதனைக்கு முன்னதாகச் சாப்பிடாமல் இருப்பதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கணக்கிடப்படுவது மட்டுமல்லாது, கல்லீரலின் செயல்திறனையும் மதிப்பீடு செய்ய இயலும்.
நீங்கள் முதல் வகை நீரிழிவுப் பாதிப்பிற்கு உள்ளாகி இருப்பின், சோதனைக்கு முன்பு இன்சுலின் ஊசியை எடுத்துக் கொள்வது நல்லது.
- ஹைட்ரோகார்டிசோன், ப்ரெட்னிசோலோன் போன்ற ஸ்டீராய்டு மருந்துகள்
- கவலை, மனச்சோர்வு, மனநலப் பாதிப்புகளுக்குச் சிகிச்சை அளிக்கவல்ல மருந்துகள்
- உயர் ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு பாதிப்பிற்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகள்
- ஆஸ்த்துமா மருந்துகள்
- இருமல் மருந்துகள்
- முகப்பருக்களைத் தடுக்கும் மருந்துகள் உள்ளிட்டவற்றை, ரத்த சர்க்கரைப் பரிசோதனைக்கு முன்னதாக எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
சோதனைக்கு முன் செய்ய வேண்டியவை
- போதிய அளவிற்கு நீர் அருந்த வேண்டும்.
- சோதனைக்கு முதல்நாள் இரவு நன்றாக உறங்க வேண்டும்
- இரத்தம் எடுக்கப்படுவதற்கு முன் மனதையும், உடலையும் ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டும்.
செய்யக்கூடாதவை
- காபி குடித்தல், பப்பிள் கம் மெல்லுவதைத் தவிர்க்க வேண்டும்
- மது குடித்தல், மூலிகை டீ தவிர்க்க வேண்டும்
- சோதனைக்கு முன், அதிகச் சூடான உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்
- புகைபிடித்தலைத் தவிர்க்க வேண்டும்
- உடற்பயிற்சி மேற்கொள்ளக் கூடாது
- மருந்துகள் எடுத்துக்கொள்பவராக இருப்பின், மருத்துவரிடம் சோதனை மேற்கொள்ளப்பட இருப்பதைத் தெரிவித்து, அவரின் ஆலோசனையின்படி நடந்துகொள்ள வேண்டும்.
மேலும் வாசிக்க : இரத்தத்தில் சர்க்கரை அளவு – அறிந்ததும், அறியாததும்
ஹைபோகிளைசீமியா – அறிகுறிகள்
ஒருவர் ஆரோக்கியமாகவும், இயல்பான அளவிலான வளர்சிதை மாற்றத்தைப் பெற்றிருக்கிறார் என்றால், அவர்க்கு ஹைபோகிளைசீமியா எனப்படும் ரத்தத்தில் குறைந்த சர்க்கரை இருக்கும் நிலை ஏற்படுவதற்கான சாத்தியம் குறைவு தான். உணவுமுறையில் போதிய ஊட்டச்சத்து இல்லாத காரணத்தினாலேயே, இது சாத்தியமாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
நீரிழிவு பாதிப்பு நோயாளிகள், கூடுதலாக இன்சுலின் ஊசியை எடுத்துக் கொண்டாலோ அல்லது கணையம் அதிகமாக இன்சுலின் சுரக்க நிர்பந்திக்கப்பட்டாலோ, இந்த நிலை ஏற்படுகிறது.
- வேகமான இதயத்துடிப்பு
- அதிக வியர்வை
- பதட்ட உணர்வு
- எரிச்சல் அல்லது குழப்ப நிலை
- தலைச்சுற்றல் உணர்வு
- அதீதப் பசி உணர்வு உள்ளிட்டவை இதன் அறிகுறிகளாக வரையறுக்கப்பட்டு உள்ளன.
நீங்கள் வழக்கமாக அருந்தும் சோடா, ஆரஞ்சு ஜீஸ் போன்ற அதிகச் சர்க்கரைக் கொண்ட பானங்கள், உங்கள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கணிசமாக உயர்த்திவிடுகின்றன. இதனைக் கூடுமானவரைத் தவிர்ப்பது நல்லது.
ஹைபர்கிளைசீமியா – அறிகுறிகள்
நீரிழிவுப் பாதிப்பானது கட்டுப்பாட்டை மீறி செல்லும்போது, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அபரிமிதமாக அதிகரித்துக் காணப்படுகிறது.
- அதிகத் தாக உணர்வு
- அடிக்கடி வாய் வறண்டு போதல்
- அடிக்கடி சிறுநீர்க் கழித்தல்
- அதீதத் தலைவலி
- பார்வை மங்குதல்
- அதிக உடல் சோர்வு
- உடல் எடைத் திடீரென்று குறைதல்
- அடிக்கடி தொற்றுநோய்ப் பாதிப்புகள் ஏற்படுதல்
உள்ளிட்டவை இதன் அறிகுறிகள் ஆகும்.
உயர் ரத்த அழுத்த சர்க்கரைப் பாதிப்புக்கு, மருத்துவர்கள் பெரும்பாலும் இன்சுலின் மருந்துகளையே பரிந்துரைக்கின்றனர். இந்த மருந்து, அறிகுறிகளுக்கு மட்டுமே பலன் அளிக்கிறது.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறித்த முழுமையான தகவல்களை அறிந்து இருப்பீர்கள் என நம்புகிறோம். இத்தகைய வழிமுறைகளைக் கவனமாகக் கையாண்டு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருந்து, ஆரோக்கியமான மற்றும் வளமான நல்வாழ்க்கை வாழ்வோமாக…