யதார்த்தமான உடற்பயிற்சி இலக்குகளை நிர்ணயித்தல்
நம்பமுடியாத அளவிற்கு ஊக்கமளிப்பவைகளில் முதலிடம் யாருக்குத் தரலாம் என்று கேட்டால், உடற்பயிற்சிகள் என்று எவ்விதத் தயக்கமும் இன்றிச் சொல்ல முடியும். ஆனால், எவ்விதத் திட்டமிடலும் இல்லாமல் மேற்கொள்ளப்படும் பயிற்சிகள், நம்மை விரக்தியின் உச்சத்திற்கே கொண்டு போய் சேர்த்துவிடும் என்பதே நிதர்சனமான உண்மை.
இலக்கு நிர்ணயித்தல் என்பது எளிமையான நடவடிக்கைதான் என்றபோதிலும், இது விளையாட்டு உளவியல் பிரிவில் முக்கியமான கருவியாக அமைகின்றது. இலக்கு நிர்ணயிக்கும் நிகழ்வு என்பது உங்களது ஊக்கம் மற்றும் ஈடுபாட்டை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாது, செயல்திறனைக் கண்காணிக்கவும் முக்கியத்துவம் அளிக்கிறது.
தற்போதைய உடற்பயிற்சி நிலையை அறிந்து கொள்ளல்
உங்கள் தற்போதைய உடற்பயிற்சி நிலையை அறியாமல் இருப்பது, வழிகாட்டி இல்லாத பயணம் போன்றது.இப்போது மேற்கொண்டு இருக்கும் உடற்பயிற்சியின் அளவை மதிப்பிட, சுயமதிப்பீட்டை நடத்துவது இன்றியமையாதது ஆகும்.
SMART இலக்குகளைப் புரிந்துகொள்ளுதல்
உடற்பயிற்சி இலக்குகளை நிர்ணயிக்க SMART என்ற கட்டமைப்பைப் பயன்படுத்துகிறோம்.இவை, உடல் வளர்ச்சிக்கு அடிகோலும் வகையிலான யதார்த்தமான திட்டங்களைத் திட்டமிட உதவுகிறது.
Specific :
நாம் மேற்கொள்ள வேண்டிய இலக்குகள், ரத்தினச் சுருக்கமாகவும், தெளிவாகவும் இருத்தல் அவசியம். உடற்பயிற்சியை முதன்முதலாகத் துவங்குபவருக்கு, உடல் எடை, மற்றும் வலிமையை அதிகரிக்கும் வகையிலான பயிற்சிகளில் 30 நிமிடங்கள் வீதம் வாரத்திற்கு 3 முறை மேற்கொள்ள வைக்கலாம்.
Measurable:
ஒரு வாரக் கால அளவில் நீங்கள் மேற்கொள்ளும் உடற்பயிற்சிகளின் எண்ணிக்கை, அதன் கால அளவு, நீங்கள் தூக்க விரும்பும் எடையின் அளவுகள் என உங்களது இலக்குகள் அமையலாம். உங்களது இலக்குகளை அளவிடுவதன் மூலம், அதுதொடர்பான முன்னேற்றத்தைக் கண்காணிக்க இயலும்.
Achievable :
நீங்கள் நிர்ணயிக்கும் இலக்குகள், அனைவராலும் சாத்தியமான ஒன்றுதான் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது முக்கியமானதாகும். நீங்கள், புதியதாக உடற்பயிற்சியை மேற்கொள்கிறீர்கள் என்றால், உங்களது இயங்கும் திறனைப் படிப்படியாக அதிகரிப்பதற்கும், ஒரே மாதத்தில் மாரத்தான் போட்டியில் பங்கேற்க முயல்வதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.
Relevant :
உங்களது தனிப்பட்ட விருப்பங்கள் மற்றும் வாழ்க்கைமுறை உடன் இணக்கமாக உள்ளவைகளாக, உடற்பயிற்சி இலக்குகள் இருக்க வேண்டும். உதாரணமாக, வலுவான தசை அமைப்பை உருவாக்குவது உங்கள் இலக்கு என்றால், தசை வளர்ச்சிக்கு உதவும் வகையிலான உடற்பயிற்சிகள் மற்றும் அதற்கே உரித்தான ஊட்டச்சத்துத் திட்டத்தை மேற்கொள்ள வேண்டும்.
Time bound :
நீங்கள் மேற்கொள்ளும் விசயங்களில் பொறுப்புணர்வுடன் செயல்பட, அதற்கென ஒரு காலக்கெடுவை நிர்ணயிப்பது அவசியம் ஆகும். உதாரணமாக, நீங்கள் மேற்கொள்ளும் உடற்பயிற்சியின் நிலைகள் மற்றும் அதன் குறிக்கோள்களை மதிப்பீடு செய்ய, 30 நிமிட கால அளவிலான உடற்பயிற்சி வழக்கத்தை, அடுத்த 3 மாதங்களுக்குப் பின்பற்ற வேண்டும் என்று காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும்.
உடற்பயிற்சி இலக்குகளை சரியாக அமைக்க SMART அம்சங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.ஆனால், பெரும்பாலானோர், இந்த விசயத்தில் கோட்டை விட்டு விடுகின்றனர். நீங்கள் SMART அம்சங்கள் அடிப்படையிலான செயல்முறை அடிப்படையிலான இலக்குகளுக்கும், உங்களது இலக்குகளுக்கும் அதிக வேறுபாடுகள் உள்ளன.
உடற்பயிற்சி இலக்குகளைத் திட்டமிடுபவர்களுக்கான பயனுள்ளக் குறிப்புகள்
ஒரு நேரத்தில் ஒரு இலக்கு மட்டுமே…
ஒரே நேரத்தில் பல இலக்குகளை அடைய முயற்சிப்பது தோல்விக்கு வழிவகுக்கும்.ஒரே நேரத்தில் ஜிம்மில், பல உடற்பயிற்சிகளை மேற்கொள்வது, சர்க்கரை உணவுப் பொருட்களின் அளவைக் குறைப்பது. இரவு 10 மணிநேரம் உறங்க முயற்சிப்பது போன்ற நடவடிக்கைகளை ஒரே நேரத்தில் மேற்கொள்ள முயற்சிப்பது, எந்தவொரு விசயத்திலும் வெற்றியை, நிச்சயம் தராது என்பதே உண்மை.
உங்களுக்கு உரியது உங்களுக்கு மட்டுமே..
உடற்பயிற்சி இலக்குகள் அமைக்கும்போது, மற்றவர்கள் வெற்றிப் பெற்றதை வைத்து, அதையே நீங்களும் இலக்காக நிர்ணயிக்கும்பட்சத்தில், அது உங்களுக்கும் வெற்றி தரும் என்று உறுதியாகக் கூற முடியாது.
உங்கள் இலக்குகள் உங்களுக்கே உரியதாக இருக்க வேண்டும். அவை உங்கள் உற்சாகத்தைத் தூண்டும் வகையில் இருக்க வேண்டுமே தவிர, மற்றவர்களின் சாதனைகளாக இருக்கக் கூடாது.
சாதாரண இலக்குகளாகத் திட்டமிடவும்
நீங்கள் நிர்ணயிக்கும் இலக்குகள், மிகவும் சாதாரணமானதாக இருக்க வேண்டும். அதன் துவக்கத்திலேயே, வெற்றியுடன் துவங்குவதை உறுதிச் செய்துகொள்ள வேண்டும். அப்போதுதான், நாம் அதனுடன் ஒன்றி இருக்க முடியும்.
நீண்ட விளையாட்டை விளையாடுங்கள்
உங்களது இலக்கு, சில மாதங்கள் அல்லது ஒரு வருட கால அளவிற்குள் அடையக்கூடைய ஒன்றாக இருத்தல் அவசியமாகும். இந்த இலக்கை வாழ்க்கைமுறையாகக் கருதுவதால், தொடர்ந்து கடைப்பிடிப்பதில் தயக்கம் இருக்காது.
இலக்கைச் செயல்படுத்தும் முறை
உங்களது இலக்கைச் செயல்படுத்துவதில், ஏதாவது மனப் பதட்டம் அல்லது உளவியல் ரீதியான பிரச்சினைகளைச் சந்திக்க நேரும்பட்சத்தில், உடனடியாக, உளவியல் நிபுணரைக் கலந்தாலோசிப்பது நலம்.
நெகிழ்வுத்தன்மையுடன் இருப்பது அவசியம்
உங்களால் முடியும் என்று தோன்றும் வகையிலான இலக்குகளை மட்டுமே நிர்ணயிக்க வேண்டும். அதன்மூலம், உங்களது திறனின் அளவு அறிய வாய்ப்பு இருப்பதால், தேவைப்படும் போது, அதில் நீங்களே திருத்தங்களை மேற்கொள்ள முயலும்.
வெற்றிக்கு வழிவகுக்கும் சிறிய இலக்குகள்
நீங்கள் பெரிய இலக்குகள் வகுப்பதைக் காட்டிலும், அதைச் சிறிய சிறிய இலக்குகளாக நிர்ணயிக்கும்பட்சத்தில் குறைந்தக் கால அளவிலேயே முடிக்க முடியும், வெற்றிப் பெறும் வாய்ப்பும் இதில் அதிகம் உள்ளது. உதாரணமாக, நீங்கள் ஒரு மைல் தொலைவை, 9 நிமிடங்களில் கடக்க வேண்டும் என்று இலக்கை நிர்ணயிப்பதைவிட, அரை மைல் தொலைவை, 5 நிமிடங்களில் கடக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்தால், இலக்கை, குறுகிய கால அளவிலேயே முடிக்க முடிவதோடு, வெற்றிப் பெறுவதற்கான வாய்ப்பும் இதில் அதிகமாகும்.
மேலும் வாசிக்க : NO GYM – உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளச் சில வழிகள்
நிபுணர்களின் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும்
உங்கள் உடற்தகுதியின் அளவு குறித்த அளவீடுகள், உங்களுக்குச் சரியாகப் புலப்படாத நேரத்தில், தகுந்த நிபுணரைக் கலந்தாலோசிப்பதில் எவ்விதத் தவறும் இல்லை. நீங்கள் மேற்கொண்டு உள்ள இலக்கு எந்த வகையில் யதார்த்தமானது என்பதற்கான வழிகாட்டுதலை மட்டுமல்லாது, இதில் வெற்றிப் பெறுவதற்கான, சில முக்கிய மார்க்கர்களையும், நிபுணர் அளிக்க இயலும். இதன்மூலம், நீங்கள் சரியான பாதையில் பயணிப்பதை உறுதிசெய்துக் கொள்ள முடியும்.
ஆதரவும் அவசியம் ஆகும்
நீங்கள் உங்களது இலக்கை நோக்கி முன்னேறிச் செல்லும்போது, அதில் நீங்கள் வெற்றிப் பெற எத்தகைய ஆதரவு தேவை, அதை யாரால் வழங்க முடியும் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ள வேண்டும். உங்களுடன் அதிக நேரம் இருக்கும் நபர், உங்களது இலக்குகளுக்கு ஆதரவு அளிக்கும்பட்சத்தில், அது உங்களிடையே, பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் எவ்விதச் சந்தேகமுமில்லை.
இத்தகைய வழிமுறைகளைக் கடைப்பிடித்து, யதார்த்தமான உடற்பயிற்சி இலக்குகளைத் திட்டமிட்டு அதைச் செயல்படுத்தி, வாழ்க்கையில் வெற்றிக் காண்பீராக….