சைலன்ட் ஹார்ட் அட்டாக் – சிகிச்சை முறைகள்
சைலண்ட் ஹார்ட் அட்டாக், தமிழில் அமைதியான மாரடைப்பு என்று குறிப்பிடப்படுகிறது. இது மருத்துவரீதியாக, சைலண்ட் மயோகார்டியல் இன்பாஃர்க்ஷன் (SMI) என்று அழைக்கப்படுகிறது. இந்த மாரடைப்பில் எந்த அறிகுறிகளும் தெளிவாகத் தெரிவதில்லை. அதனால் இதைக் கண்டறிவது மிகவும் கடினமாக உள்ளது. செரிமான பிரச்சினைகள், நெஞ்செரிச்சல், தசை வலி, குமட்டல், காய்ச்சல் உணர்வு உள்ளிட்டவை இதன் பொதுவான அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன. அமைதியான மாரடைப்பு நிலைக்கு, வெளிப்படையான அறிகுறிகள் இல்லாத நிலையிலும், அது தீங்கு விளைவிக்கத் தவறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமைதியான மாரடைப்பின் அறிகுறிகள்
சைலண்ட் ஹார்ட் அட்டாக் எனப்படும் அமைதியான மாரடைப்பு பாதிப்புக்கு என வெளிப்படையான அறிகுறிகள் இதுவரை வரையறுக்கப்படவில்லை. ECG பரிசோதனை அல்லது ரத்த பரிசோதனைப் போன்ற நிலையான மருத்துவப் பரிசோதனைகளின் மூலம் கண்டுபிடிக்கப்படும்வரை, குறிப்பிட்ட நபருக்கு, அமைதியான மாரடைப்பு ஏற்பட்டதை அறிந்திருக்க வாய்ப்பே இல்லை.
சிலர் அமைதியான மாரடைப்பு பாதிப்பின் அறிகுறிகளாகக் கருதுவது
- மார்பு, கைகள், தாடைகள் உள்ளிட்ட பகுதிகளில் வலி உணர்வு
- மூச்சு விடுதலில் சிரமம்
- அதிக உடல் சோர்வு
- வாந்தி அல்லது குமட்டல் உணர்வு
- தலைச் சுற்றல் உணர்வு
- அதிக வியர்வை வெளியேறுதல்
- உறங்குவதில் சிரமம்
இந்த அறிகுறிகள், எதனால் ஏற்படுகிறது என்பதை அறிந்துகொள்வது அவசியமாகும்.
அமைதியான மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியமான காரணங்கள்
இதயத் தசைகளுக்குக் குறைவான ரத்தம் செல்வதாலோ அல்லது ரத்தம் முழுமையாகவோ நிறுத்தப்படும்போது, இதயத்தசைச் செல்கள் சேதம் அடைகின்றன. இதன்காரணமாகவே, அமைதியான மாரடைப்பு ஏற்படுகிறது.
சாதாரண மாரடைப்புக்குக் காரணமான காரணிகளாலும், அமைதியான மாரடைப்பு நிலை ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
- இஸ்கிமிக் இதய நோய் – கரோனரி தமனிகளில் கொழுப்புகள் படிந்து பிளேக்குகள் உருவாவதால், இந்த நோய்ப்பாதிப்பு ஏற்படுகிறது.
- கரோனரி இதய நோய் – உடலில் அதிகக் கொலஸ்ட்ரால் மற்றும் பிற வேதிப்பொருட்கள் குவியும்போது, இதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனிகளில் அடைப்பு ஏற்படுகின்றன அல்லது சுருங்குகின்றன. இதன்விளைவாக, இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது.
- உறைய வைக்கும் அளவிலான குளிர்ச் சூழல்
- உயர் ரத்த அழுத்த பாதிப்பு
- உடல் பருமன் – அதிக உடல் எடை, இதயத்திற்கு அதிகளவிலான மன அழுத்தத்தை ஏற்படுத்தி, இதய நோய் பாதிப்பிற்கான அபாயத்தை அதிகரிக்கச் செய்கின்றன.
- குடும்ப வரலாறு – உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்ப் பாதிப்பு இருப்பின், உங்களுக்கும் மாரடைப்பு பாதிப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகம்.
- புகைப்பிடித்தல் – சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களில் உள்ள நிகோடின் வேதிப்பொருள், ரத்த நாளங்களுக்குச் சேதத்தை ஏற்படுத்தி, மாரடைப்பு பாதிப்பு வரக் காரணமாக அமைகிறது.
- நீரிழிவுப்பாதிப்பு – நீரிழிவு நோய்ப்பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
அமைதியான மாரடைப்பு பாதிப்பு அபாயத்தை அதிகரிக்கும் காரணிகள்
அமைதியான மாரடைப்பு பாதிப்பு அபாயத்தை, பல்வேறு காரணிகள் அதிகரிக்கச் செய்கின்றன. இவற்றுள் சிலவற்றை, தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் மாற்றி அமைக்க இயலும். சில காரணிகளை, அங்ஙனம் செய்ய இயலாது.
மாற்றி அமைக்கத்தக்க வகையிலான காரணிகள் இங்கு பட்டியலிடப்பட்டு உள்ளன.
- போதிய அளவிலான உடற்பயிற்சி இல்லாதநிலை
- வயது
- உயர் ரத்த அழுத்த பாதிப்பு
- அதிகக் கொழுப்பு நிலை
- நீரிழிவுப் பாதிப்பு
- புகையிலைத் தொடர்பான நோய்ப்பாதிப்பு
- உடல் பருமன்
- அதிக மன அழுத்தம்
வாழ்க்கைமுறையில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள், மருந்துகளின் பயன்பாடு, உணவுமுறையில் மாற்றங்கள், மனநிலையில் தெளிவு உள்ளிட்ட நிகழ்வுகளின் உதவியுடன் கீழ்க்கண்ட சில காரணிகளை மாற்றி அமைக்க இயலும்.
- இதய நோய்ப் பாதிப்பு தொடர்பான குடும்ப வரலாற்றைக் கொண்டு இருத்தல்
- கர்ப்பம் தொடர்பான முன் எக்லாம்ப்சியா குறைபாடு
- 45 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள்
- 55 வயதுக்கு மேற்பட்டவராக இருக்கும் பெண்கள், மாதவிடாய் சுழற்சி நின்ற பெண்கள்
- கொரோனா தொற்றுநோய்ப் பாதிப்பிற்கு உள்ளாதல்
கவனிக்கக்கூடிய அறிகுறிகள் எதுவும் இல்லாததால், அமைதியான மாரடைப்பைக் கண்டறிவது கடினம்.
ECG சோதனை – இதயத்தின் செயல்பாட்டைக் கண்காணித்து, மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கும் சாத்தியமுள்ள முரண்பாடுகளைக் கண்டறிகின்றன.
இரத்த பரிசோதனைகள் – இதயம் பாதிப்பிற்கு உள்ளாகும்போது, உருவாகும் நொதிகளை, ரத்த பரிசோதனைகளின் மூலம் அறிய முடியும்.
MRI சோதனை – இந்தப் பரிசோதனை, இதயத்தின் துல்லியமான படங்களை உருவாக்கக் காந்தப்புலங்கள் மற்றும் ரேடியோ அலைகளைப் பயன்படுத்தி இதயத்தில் ஏற்பட்டு உள்ள பாதிப்பைக் கண்டறிய இயலும்.
ECHO கார்டியோகிராம் – இதயத்தில் ஏற்பட்ட பாதிப்பை, ஒலி அலைகளைப் பயன்படுத்தி படங்களாக உருவாக்க இந்தச் சோதனை உதவுகிறது.
மேலும் வாசிக்க : இதய ஆரோக்கியத்தில் ஊட்டச்சத்தின் தாக்கம் அறிவோமா?
சிகிச்சை முறைகள்
சாதாரணமான மாரடைப்பு நிகழ்வுபோலவே, அமைதியான மாரடைப்பு நிகழ்வு எனப் பெரும்பாலானோரால் கருதப்படுகிறது. இதயத்திற்குச் செல்லும் ரத்தம் தடைபட்டதை மீட்டெடுத்து, அங்கு மீண்டும் சீரான ரத்த ஓட்டம் மேற்கொள்ளச் செய்வதே, இந்தச் சிகிச்சைமுறையின் நோக்கம் ஆகும். EECP சிகிச்சை, ஆஸ்பிரின்,நைட்ரோகிளிசரின் போன்ற மருந்துகளை உட்கொள்வதன் மூலம், இதயத்திற்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைச் சீரமைக்க முடியும்.
EECP சிகிச்சை
அமைதியான மாரடைப்பு இஸ்கெமியா நோயாளிகளுக்கு, உடற்பயிற்சி சகிப்புத்தன்மையை, EECP சிகிச்சையானது கணிசமாக அதிகரிக்கிறது. இந்தச் சிகிச்சையானது, ஆஞ்சினா அறிகுறிகளின் தீவிரத்தைக் குறைத்து, எண்டோடெலியல் செயல்பாட்டை மேம்படுத்தியது. இது பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சி பாதிப்பிற்கு உள்ளாகி, தமனி பிளேக் உருவாகி, மாரடைப்பு மற்றும் பக்கவாதத்திற்கு உள்ளாகின்றனர்.
வாழ்க்கைமுறையில் மாற்றங்கள்
உடற்பயிற்சிகள் மேற்கொள்ளுதல், புகைப்பழக்கத்தைக் கைவிடுதல், மன அழுத்தத்தை நிர்வகித்தல் உள்ளிட்ட மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம், எதிர்காலத்தில் மாரடைப்பு மற்றும் பக்கவாத பாதிப்புகளைத் தவிர்க்க உதவுகின்றன.
தடுப்புமுறைகள்
வாழ்க்கைமுறையில் மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம், எதிர்காலத்தில் மாரடைப்பு, பக்கவாதம் பாதிப்பின் அபாயத்தைக் குறைக்கும்.
- உடற்பயிற்சி பழக்கத்தைத் தினசரி மேற்கொள்ளுதல்
- உடல் எடையை ஆரோக்கியமான நிர்வகித்தல்
- மன அழுத்தத்தைத் தவிர்த்தல்
- புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டைத் தவிர்த்தல்
- மருத்துவச் சிக்கல்கள் முறையாகக் கவனிக்கப்பட்டுக் களைதல்
- உடலின் கொழுப்பு அளவு மற்றும் ரத்த அழுத்த அளவைச் சரியான அளவிற்குப் பராமரித்தல்
- உடலில் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான புதிய அறிகுறிகள் தென்படும்பட்சத்தில், உடனடியாக மருத்துவரைக் கலந்தாலோசித்தல்
- பழங்கள், காய்கறிகள், முழுத்தானியங்கள் கொண்ட ஆரோக்கியமான மற்றும் சரிவிகித உணவுமுறையை மேற்கொள்ளுதல்.
மேற்குறிப்பிட்ட வழிமுறைகளைக் கவனமாகக் கையாண்டு அமைதியான மாரடைப்பு எனப்படும் சைலண்ட் ஹார்ட் அட்டாக் பாதிப்பைத் திறம்பட நிர்வகித்து, ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வோமாக…