தனிப்பயனாக்கப்பட்ட உணவுமுறையின் வெற்றிக் கதைகள்
பாரம்பரிய உணவுத்திட்ட முறைகள் பொதுவான தேவைகளுக்கு மட்டுமே பொருந்துகின்றன. இதனால், பயனர்களின் தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வது கடினமாகிறது. இந்தப் பாரம்பரிய உணவுமுறையில் உணவு விருப்பங்கள், கலாச்சாரம், வாழ்க்கைமுறைப் போன்றவைக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவது இல்லை. இதனால் பயனர்கள் பரிந்துரைக்கப்பட்ட ஊட்டச்சத்து முறையைப் பின்பற்றுவதில் சிரமப்படுகின்றனர்.
பாரம்பரிய உணவுமுறையில் உள்ள கடுமையான கட்டுப்பாடுகள் பயனர்களிடம் எதிர்மறை உணர்வுகளையும், ஒழுங்கற்ற உணவு பழக்கங்களையும் ஏற்படுத்துகின்றன. இதன்காரணமாகவே, தனிப்பயனாக்கப்பட்ட ஊட்டச்சத்து முறைப் பிரபலமாகத் துவங்கியது. இதன்மூலம், உடல்நலத்திற்கு நன்மைபயக்கும் விதமான ஆரோக்கிய இலக்குகளை அடைவது எளிமையாகி உள்ளது.
தனிப்பயனாக்கப்பட்ட உணவுமுறையைப் பின்பற்றி, பலர்த் தங்களது உணவுமுறையினை ஆரோக்கியமானதாக மாற்றி உள்ளனர். அவ்வாறு வெற்றிவாகைச் சூடியவர்களின் கதைகளை விரிவாகக் காண்போம்.
3 மாதங்களில் 7 கிலோ எடையைக் குறைத்த காயத்ரி கோச்சார்
காயத்ரி கோச்சார், அதிக உடல் எடைக் காரணமாக, 5 ஆண்டுகளுக்கும் மேல் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு சிகிச்சைகளை எடுத்துக்கொண்ட போதிலும், அவருக்கு எந்தப்பலனும் ஏற்படவில்லை. இந்த நிலையில், அவர் ஊட்டச்சத்து நிபுணரின் உதவியை நாடினார்.
காயத்ரியின் நிலையை ஆராய்ந்த ஊட்டச்சத்து நிபுணர், அவரின் வாழ்க்கைமுறை மற்றும் தேவைகளைக் கருத்தில் கொண்டு தனிப்பயனாக்கப்பட்ட உணவுமுறை மற்றும் உடற்பயிற்சிகளை அவருக்குப் பரிந்துரைத்தார்.
உணவுமுறையில் சில திருத்தங்கள்
சரிவிகித மற்றும் ஊட்டச்சத்துக் கொண்ட உணவுமுறையானது அவருக்கு அளிக்கப்பட்டது. புரதம் உட்கொள்ளல் கட்டுப்படுத்தப்பட்டது.
வலிமைப் பயிற்சிகள்
காயத்ரியின் ஃபிட்னெஸ் அளவு மற்றும் முன்னுரிமையின் அடிப்படையில் உடலின் வலிமையை அதிகரிக்கும் வகையிலான பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
வழக்கமான ஆலோசனைகள்
காயத்ரியை ஊக்குவிக்கும் வகையிலான சந்திப்புகள் அவ்வப்போது நடத்தி, ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, அவருக்குத் தேவையான வழிகாட்டுதல் நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன.
ஆபரேசன் சக்சஸ்
ஜிம்மிற்குச் செல்லாமல், பட்டினி கிடக்காமல், 3 மாத்ங்களில் 7 கிலோ அளவிலான உடல் எடைக் குறைக்கப்பட்டது.
உடலின் ஆற்றல் அளவு அதிகரிக்கப்பட்டு, நாள்முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க வழிவகை மேற்கொள்ளப்பட்டது.
உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி பழக்கவழக்கங்களில் சிற்சில மாற்றங்களை மேற்கொண்டு, ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை உருவாக்குதல்
உடல் பருமன் மற்றும் உறக்கமின்மையால் அவதிப்பட்ட ஹரீஷ்
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த 51 வயதான ஹரீஷ் மெக்கானிக்கல் இஞ்ஜினியராக உள்ளார். அவர் உடல் பருமன், உறக்கமின்மை மற்றும் நீரிழிவுப் பாதிப்பால் கடுமையாக அவதிப்பட்டார்.
இந்நிலையில்,ஹரீஷின் ரத்த மாதிரிச் சோதனை முடிவுகள் அதிர்ச்சியளித்தன. அவரது உடலில் இன்சுலின் சுரப்பு, கிரியாட்டினின், டிரைகிளிசரைடுகள் ஆகியவை அதிகமாக உள்ளன. மேலும், இரத்தசோகையின் அளவும் மிதமிஞ்சி உள்ளது.இவர் உணவு உட்கொள்ளாத நிலையிலேயே, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 166 mg/dl என்ற அளவிலும், HbA1C – 9.9 என்ற அளவிலும் உள்ளது.
ஹரீஷ், தனது இந்தப் பாதிப்பு நிலையில் இருந்து விடுபடும் நோக்கில், ஹைதராபாத்தின் சிறந்த ஊட்டச்சத்துவியல் நிபுணரின் உதவியை நாடினார். ஹரீஷ், எப்போதும் அன்றைய தினத்தை, தென்னிந்திய முறையிலான காலௌ உணவுடனேயே துவங்கிவந்தார். காலை உணவை முடித்தநிலையிலும், அவர் மிகுந்த சோர்வாகவே காணப்பட்டு வந்தார். இந்தச் சோர்வு உணர்வைப் போக்க, அடிக்கடி தேநீர் அருந்தி வந்தார். இந்த நிலையில், அவருக்கு நார்ச்சத்துகள் நிறைந்த உணவு வகைகள், நல்ல கொழுப்பு, புரதங்கள் நிறைந்த முட்டை, குறைந்த கிளைசீமிக் கொண்ட உணவுகளை, காலை உணவாக, ஊட்டச்சத்து நிபுணர்ப் பரிந்துரைத்தார். அன்றைய நாளின் துவக்கத்திலேயே, அவருக்கு ஆரோக்கியமான, சீரான உணவு வகைகளை வழங்கியதால், அவரின் பசி உணர்வு, ரத்த சர்க்கரை உள்ளிட்டவைக் கட்டுப்படுத்தப்பட்டதுடன், அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருந்ததை உணர்ந்தார். உடலில் சேமிக்கப்பட்டு இருந்த கொழுப்பானது எரியூட்டப்பட்டு,அவ்வப்போது அவருக்குத் தேவையான ஆற்றல் கிடைத்ததால், தேநீர்ப் பருகும் எண்ணிக்கையானது கணிசமான அளவிற்குக் குறைந்தது. இந்நிலையில், அவர் மலச்சிக்கலால் அவதிப்பட்டு வந்த நிலையில், முழுத்தானியங்கள், நீர் அதிகம் கொண்ட உணவு வகைகள் அவருக்குப் பரிந்துரைக்கப்பட்டன.
நாங்கள் பரிந்துரைத்த உணவுமுறை அவருக்குப் பிடித்திருந்ததால், அவர் மகிழ்ச்சியுடன் பின்பற்றினார். ஹரீஷுக்கு அதிகளவில் சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. இதைக் கவனித்த நாங்கள், புகைப்பிடிப்பதை நிறுத்தும் வழிமுறைகளைப் பரிந்துரைத்தோம்.உடல் ஆரோக்கியத்திற்காக, தினமும் காலையில் 40 நிமிடங்கள் கால அளவிலான நடைப்பயிற்சியைப் பரிந்துரைத்தோம். இந்த நடைப்பயிற்சியின் போது, மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகளைக் கற்றுக் கொடுத்தோம். அவர்க் கவனத்துடன் அதைப் பின்பற்றியதால், அவரது உடல் எடை, சில நாட்களிலேயே கணிசமான அளவில் சரிவு கண்டது.
சோதனை முடிவுகள்
தனிப்பயனாக்கப்பட்ட உணவுமுறையைப் பின்பற்ற ஹரீஷ், 4 மாதங்களில் 10 கிலோ அளவிலான உடல் எடையை இழந்தார். இதன்காரணமாக, 166 mg/dl என்ற அளவில் இருந்து 104 mg/dl ஆகக் குறைந்தது. HbA1C அளவு 7.4 ஆக குறைந்தது. நிலையான வாழ்க்கைமுறை மாற்றங்களுடன் சுகாதார இலக்குகளை வெற்றிகரமாக எட்ட உதவியது.
மேலும் வாசிக்க : ஆரோக்கியம், உணவுமுறையைத் தீர்மானிக்கும் ஜீன்கள்
3 மாதங்களில் 11 கிலோ உடல் எடையைக் குறைத்த மோனிகா அரோரா
ஹரியானா மாநிலம் குர்கானைச் சேர்ந்த மோனிகா அரோரா, 48 வயதான மோனிகாவுக்கு, மாதவிடாய் தொடர்பான பிரச்சினையும், உடல் எடைக் குறித்த குழப்பங்களாலும் பாதிக்கப்பட்டு இருந்தார்.
தனிப்பயனாக்கப்பட்ட உணவுமுறையின் பயனாக, உடல் எடையானது 3 மாதங்களில் 77 கிலோவில் இருந்து 65.5 கிலோ என்ற அளவிலும், HbA1C அளவானது 5.9 சதவீதம் என்ற அளவில் இருந்து 5.5 சதவீதம் என்ற அளவிற்கும், உடல் நிறைக் குறியீட்டு மதிப்பானது 32.9 என்ற அளவில் இருந்து 28 என்ற அளவிற்கும் குறைந்தது.
நீங்களும் தனிப்பயனாக்கப்பட்ட உணவுமுறையைப் பின்பற்றி, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நல்வாழ்க்கை வாழ்வீராக…