குழந்தைகளுக்கு உறக்கப் பாதிப்பு எதனால் ஏற்படுகிறது?
குழந்தையின் வளர்ச்சி மற்றும் நல்வாழ்வின் அடிப்படைத் தளமாக, உறக்க நிகழ்வானது உள்ளது. குழந்தைகளின் உறக்கக் குறைபாடு, அவர்களின் உடல் ஆரோக்கியம், உணர்ச்சி நிலைத்தன்மை மற்றும் வாழ்க்கைத் தரத்தைப் பாதித்து, பல சிக்கல்களை உருவாக்குகிறது.உறக்கக் குறைபாடு பாதிப்பானது, பெரும்பாலும் பெரியவர்களுடன் தொடர்புடையது என்றபோதிலும், அது குழந்தைகளையும் சமமான அளவில் பாதிக்கின்றன. இந்தச் சிக்கல்களை, துவக்கத்திலேயே புரிந்துகொள்வது, குழந்தைகளின் வாழ்க்கைத்தரத்தில் விரும்பத்தக்க அளவிலான மாற்றத்தை உருவாக்கும். உறக்கக் குறைபாடு பாதிப்பு சாதாரண உறக்க [...]