இதய ஆரோக்கியத்தில் ஊட்டச்சத்தின் தாக்கம் அறிவோமா?
இதயம், சிறந்த கவனிப்புக்குத் தகுதியான உடல் உறுப்பு ஆகும். நமது உணவுமுறைக்கும் இதய ஆரோக்கியத்திற்கும் இடையே ஆழமான தொடர்பு உள்ளது. இதயம் என்பது உடலைச் சீராக இயங்க உதவும் இயந்திரம் ஆகும். இதயம் இயங்க தேவைப்படும் எரிபொருள் மற்றும் அதன் செயல்திறன், மனிதர்களின் ஆயுளைத் தீர்மானிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு, இதய ஆரோக்கியம் இன்றியமையாததாக உள்ளது.
இதய நலனில் ஊட்டச்சத்தின் தாக்கம்
நாம் மேற்கொள்ளும் உணவுமுறையைப் பொறுத்து, இதயத்தின் செயல்பாடுகளான ரத்தம் சுத்திகரிக்கப்படுவது முதல் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தப்படுவது வரையிலான நிகழ்வுகள் அமைகின்றன. இதய ஆரோக்கியத்தின் ஒவ்வொரு அம்சமும், நாம் உட்கொள்ளும் உணவுமுறையில் உள்ள ஊட்டச்சத்துகளுடன் பிணைக்கப்பட்டு உள்ளன.
இதய நோய்கள் தடுப்பு நடவடிக்கைகளில் ஊட்டச்சத்தின் பங்கு
இதய நோய் தடுப்பு நடவடிக்கைகள், இதய நலன் சார்ந்த ஊட்டச்சத்துக்கான அர்ப்பணிப்புடன் துவங்குகிறது. இதய நோய்களைத் தடுப்பதில், சீரான மற்றும் சரிவிகித உணவுமுறை முக்கியப்பங்கு வகிக்கிறது. சரியான உணவுத்தேர்வுகள், கரோனரி தமனி நோய் மற்றும் மாரடைப்பு உள்ளிட்ட நிலைமைகளின் அபாயத்தைக் குறைக்கவல்லது.
இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கவல்ல உணவுகள்
உங்கள் சமையலறையை, இதய நலன் காக்கும் மருந்தகமாக முன்னேற்ற பாருங்கள். இதய நல்வாழ்வுக்கு உறுதுணையாக இருக்கும் உணவு வகைகளை அடையாளம் கண்டறிவது, இதய ஆரோக்கியத்திற்கான துவக்கப் புள்ளி ஆகும். இதய ஆரோக்கியத்திற்கு ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் முதல் நார்ச்சத்துக் கொண்ட உணவுகள் இன்றியமையாததாக ஆகும்.
இதய ஆரோக்கியத்திற்கான முதன்மையான ஊட்டச்சத்துக்கள்
வாகனம் இயங்க எரிபொருள் எவ்வளவு முக்கியமோ, அதுபோன்று இதயம் சீராக இயங்க ஒமேகா – 3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்துக்கள், ஆக்சிஜனேற்றிகள் உள்ளிட்டவை இன்றியமையாததாக உள்ளன.
இதய ஆரோக்கியத்தில் ஒமேகா – 3 கொழுப்பு அமிலங்களின் பங்கு
சால்மோன் உள்ளிட்ட கொழுப்பு நிறைந்த மீன் வகைகளில், ஒமேகா – 3 கொழுப்பு அமிலங்கள் அதிகளவில் உள்ளன. இவை இதய ஆரோக்கியத்தில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வீக்கத்தைக் குறைத்தல், ரத்த அழுத்தத்தைக் குறைத்தல், ரத்த உறைவு அபாயத்தையும் தடுப்பதாக உள்ளன. ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவைத் தொடர்ந்து உட்கொள்வதன் மூலம், இதய நோய் அபாயம் கணிசமாகக் குறைவதோடு, இதயத்தின் செயல்பாடும் மேம்படுத்தப்படுகிறது.
இதய ஆரோக்கியத்தில் நார்ச்சத்துக்கான நன்மைகள்
நார்ச்சத்து மிகுந்த உணவுகள், செரிமான ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த உணவு வகைகள், இதய ஆரோக்கியத்தில் நார்ச்சத்துக் கொண்ட உணவுகளின் பங்கு அளப்பரியது ஆகும். நாம் சாப்பிடும் உணவுகளில் உள்ள நார்ச்சத்து, உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புடன் பிணைக்கப்பட்டு, அதை நீக்க உதவுவதால், கொழுப்பின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. ஆரோக்கியமான உடல் எடையையும் ஊக்குவிக்க உதவுகிறது. இதன்மூலம், இதய ஆரோக்கியமானது பராமரிக்கப்படுகிறது.
இதய ஆரோக்கியத்தில் ஆன்டிஆக்சிடன்ட்களின் பங்கு
ஆன்டிஆக்சிடன்ட்கள், இதய நலனிற்குத் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிகல்களை எதிர்த்துப் போராடுகின்றன. ஃப்ரீ ரேடிகல்கள், இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகளின் செல்களைச் சேதப்படுத்துகின்றன. கீரை வகைகள், பெர்ரி, காலே, பழ வகைகள் உள்ளிட்ட உணவு வகைகளில் காணப்படும் ஆன்டிஆக்சிடன்ட்கள், உடல் செல்களில் காணப்படும் ஃப்ரீ ரேடிகல்களை நடுநிலையாக்குகின்றன. ஆன்டிஆக்சிடன்ட்கள் நிறைந்த உணவு வகைகள், ரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி, வீக்கங்களைக் குறைத்து, இதய நோய்ப்பாதிப்பிற்கான அபாயத்தைக் குறைக்கின்றன.
மேலும் வாசிக்க : வயதானவர்களுக்கு ஏற்படும் நீரிழிவுப் பாதிப்பு
இதய நலன் காக்கும் வகையிலான உணவு வகைகள்
ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரித்தல், உடற்பயிற்சிகள் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுதல், புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கைவிடுதல் உள்ளிட்டவைகள் அனைத்தும், இதய ஆரோக்கியத்திற்கு உகந்த வாழ்க்கைமுறையின் கூறுகள் ஆகும்.
காய்கறிகள் மற்றும் பழ வகைகள்
காய்கறிகள் மற்றும் பழ வகைகள், வைட்டமின்கள், மினரல்கள் எனப்படும் தாதுப் பொருட்களின் சிறந்த மூலங்களாக விளங்குகின்றன. இந்த உணவுவகைகளில் நார்ச்சத்துகள் அதிகளவிலும், கலோரிகள் குறைந்த அளவிலும் உள்ளன. இந்த வகை உணவுகளில், இதய நோய் அபாயத்தைக் குறைக்கும் வகையிலான காரணிகள் அதிகளவில் உள்ளன. காய்கறிகள் மற்றும் பழ வகைகளை அதிகம் உட்கொள்வதன் மூலம், இறைச்சி, சிற்றுண்டி உணவுகள் கொண்ட அதிகக் கலோரிகள் உட்கொள்வது தவிர்க்கப்படுகிறது.
பச்சை இலைக் காய்கறிகளில் வைட்டமின் K சத்தானது, தமனி பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியமான ரத்த உறைதல் நிகழ்வில் முக்கியப்பங்கு வகிக்கிறது.
முழுத்தானியங்கள்
முழுத்தானியங்களில் உள்ள நார்ச்சத்துக்கள் உள்ளிட்ட பிற ஊட்டச்சத்துக்கள், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, இதய ஆரோக்கியப் பராமரிப்பிற்கு உதவுகின்றன. பார்லி, குயினாவோ போன்ற முழுத்தானியங்களைத் தினசரி உணவில் சேர்த்துவர, இதய நோய்ப்பாதிப்பின் அபாயம் 10 முதல் 20 சதவீதம் வரைக் குறைகின்றன.
தாவர உணவுகள், முழுத்தானியங்கள், குறைந்த கொழுப்பு கொண்ட பால் பொருட்கள் உள்ளிட்டவைகளை உடகொள்வதன் மூலம், ஹைபர்டென்சன் எனப்படும் உயர் ரத்த அழுத்த பாதிப்பைத் தவிர்க்கவும், அதற்குத் தகுந்த சிகிச்சையளிக்கவும் உதவுகிறது.
பருப்பு வகைகள்
அதிகச் சத்து கொண்ட, அதேசமயம் குறைந்த விலையில் கிடைக்கும் உணவு வகைகளாக, பருப்பு வகைகள் உள்ளன. பருப்பு வகைகள், இதய ஆரோக்கியத்தில் முக்கியப்பங்கு வகிக்கின்றன.
ஆரோக்கியமான உணவுமுறையைக் கடைப்பிடித்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, வளமான நல்வாழ்க்கை வாழ்வோமாக…