மூட்டு ஆரோக்கியத்தில் உடல் எடையின் தாக்கம்
உடல் பருமன் பாதிப்பு அதிகப்படியான கொழுப்பினால் ஏற்படுகிறது. இது மாரடைப்பு, இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் போன்ற பாதிப்புகளை உருவாக்குகிறது. உடல் பருமன் கொண்ட மக்களில் பெரும்பாலானோர், மூட்டு வலி மற்றும் கீல்வாத பாதிப்பால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதிக உடல் எடை மற்றும் மூட்டு வலி ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை. மூட்டுப்பகுதிகளில் ஏற்படும் அதிக அழுத்தம் காரணமாக ஏற்படும் மாறுபாடானது, நாள்பட்ட மூட்டு வலியை ஏற்படுத்தும். அதிக எடைக் காரணமாக, முழங்கால்கள் மற்றும் இடுப்பு போன்ற பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. உடல் பருமன் காரணமாக முழங்கால் வலி உணர்வு, கீல்வாதம் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
வரையறுக்கப்பட்ட உடலின் செயல்பாடுகள், குறைந்த அளவிலான சுதந்திரம், உறக்கத்தில் ஏற்படும் கலக்கம், குறைந்த அளவிலான உறக்கம் அனைத்தும் மூட்டு வலிப்பாதிப்பின் அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன.
- முழங்கால் வலி மற்றும் உடல் பருமன்
- மனிதர்களின் செயல்பாடுகளுக்கு, முழங்கால்கள், மூட்டுகள் உள்ளிட்டவைப் பின்வரும் வழிகளில் உதவுகின்றன.
- உடலின் எடைக் கட்டுப்பாட்டிற்கு உதவுகின்றன மற்றும் சமநிலையைப் பராமரிக்கின்றன.
- உடலை வளைத்தல், நேராக்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளில், கால்களின் இயக்கத்தைச் செயல்படுத்துகின்றன.
- நடைப்பயிற்சி, ஓடுதல் போன்ற நிகழ்வுகளில் ஏற்படும் அதிர்ச்சியை உறிஞ்சுகின்றன.
- நிற்கும் போதும் மற்றும் உடல் செயல்பாடுகளின் போதும் நிலைத்தன்மையை அளிக்கின்றன.
- கால்களின் இயக்கத்திற்குப் பங்களிக்கின்றன.
முழங்கால்களில் பாதிப்பு ஏற்படும்போது, உடலின் இயக்கங்கள் மற்றும் செயல்பாடுகளில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்துகிறது. உடல் பருமன் பாதிப்பானது, முழங்கால்களை அதிக அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது. இந்தக் கூடுதல் சுமையானது, மூட்டு குருத்தெலும்புகள் விரைவாகச் சேதமடைய வழிவகுக்கிறது. இது வீக்கத்தைத் தூண்டி, கீல்வாதம் போன்ற பாதிப்புகள் ஏற்பட காரணமாக அமைகிறது.
அதிக உடல் எடை நிகழ்வானது, முழங்கால்களின் செயல்பாடுகளிலேயே மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்த மாற்றங்கள், உறுதியற்ற தன்மைக்குக் காரணமாக அமைகின்றன. சுருக்கமாகச் சொல்வதென்றால், உடல் பருமன் கொண்டவர்களுக்கு, நாள்பட்ட முழங்கால் வலி, உடல் செயல்பாடுகள் குறைதல், காயங்கள் விரைவாகக் குணம் ஆகாத நிலை உள்ளிட்டவை ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
மூட்டு வலியின் வகைகள்
மூட்டு வலி உணர்வானது, அவற்றின் நிலைகளைப் பொறுத்து பல்வேறு வகைகளாக வகைப்படுத்தப்படுகிறது.
கீல்வாதம்
இது மிகவும் பொதுவான வகை ஆகும். சர்வதேச அளவில் ஒவ்வொரு ஆண்டும் 500 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள், கீல்வாத பாதிப்பிற்கு உள்ளாவதாகச் சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது. கீல்வாத பாதிப்பானது, முதலில் முழங்கால், இடுப்பு, முதுகெலும்பு போன்ற எடைத் தாங்கும் மூட்டுகளைப் பாதிக்கிறது. இதன்காரணமாக, வலி, விறைப்பு உள்ளிட்ட பாதிப்புகளும், செயல்பாடுகள் குறையும் நிலையும் ஏற்படுகிறது.
முடக்குவாதம்
இந்தப் பாதிப்பானது, ஒரே நேரத்தில் பல மூட்டுகளைப் பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது. நாள்பட்ட வலி, தொற்றுகள், மூட்டுக் குறைபாடுகள் உள்ளிட்டவைகளுக்கு வழிவகுக்கிறது. முடக்குவாத பாதிப்பு, முழங்கால், கைகள், இடுப்பு, மணிக்கட்டு மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் உள்ள மூட்டுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
Gout
இது மூட்டுகளில் யூரிக் அமிலப் படிவுகள் அதிகம் குவிவதால் ஏற்படும் ஒரு வகைக் கீல்வாத பாதிப்பு ஆகும். இதன்காரணமாக, மூட்டுப் பகுதியில் கடுமையான வலி, வீக்கம் உள்ளிட்டவை ஏற்படுகிறது.
Ankylosing spondylitis
இந்தப் பாதிப்பானது, முதுகெலும்பு மற்றும் சாக்ரோலியாக் மூட்டுகளைப் பாதிக்கிறது. வலி, விறைப்பு மற்றும் குறைந்த உடல் செயல்பாடு உள்ளிட்டவைகளுக்கு வழிவகுக்கிறது.
Psoriatic arthritis
தோல் நிலைத் தடிப்புத் தோல் அழற்சியுடன், சோரியாடிக் ஆர்த்ரைட்டிஸ் தொடர்புடையது ஆகும். இது உடலின் பல்வேறு பகுதிகளில் உள்ள மூட்டுகளைப் பாதித்து, வீக்கத்தை ஏற்படுத்துகின்றன.
Juvenile idiopathic arthritis
இது குழந்தைகளைப் பாதிக்கும் கீல்வாத பாதிப்பு ஆகும். இதன் அறிகுறிகளானது,மூட்டு வலி மற்றும் வீக்கம் உள்ளிட்ட வடிவங்களில் வெளிப்படுகின்றன.
Septic arthritis
இந்தப் பாதிப்பு, மூட்டுகளில் பாக்டீரியா அல்லது பூஞ்சைத் தொற்று காரணமாக ஏற்படுகிறது. கடுமையான வலி, வீக்கம், காய்ச்சலுக்கு வழிவகுக்கிறது.
ஆஸ்டியோபோரோசிஸ்
இந்தப் பாதிப்பானது, எலும்புகளைப் பலவீனப்படுத்தி, எலும்பு முறிவை ஏற்படுத்துகிறது.
மேலும் வாசிக்க : கீல்வாதம் – கட்டுக்கதைகளும், அதன் உண்மைகளும்!
சிகிச்சை முறைகள்
வாழ்க்கைமுறையில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களின் மூலமாகவே, மூட்டு வலிப் பாதிப்பிற்குச் சிகிச்சை அளிப்பதைச் சாத்தியமாக்கிக் கொள்ள முடியும். ஆரோக்கியமான உடல் எடையை நிர்வகிப்பது என்பது சவாலான காரியம் என்றபோதிலும், அதைச் சரியான முறையில் நிர்வகிக்கும்பட்சத்தில், பல்வேறு பாதிப்புகளின் தீவிரத்தை நாம் குறைக்க முடியும் என்பதே திண்ணம்.
மூட்டு வலிப் பாதிப்புக்கு உரிய சிகிச்சை மேற்கொள்ள நினைப்பவர்கள் கருத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள் கீழே தொகுக்கப்பட்டு உள்ளன.
நோயறிதல் நிகழ்வைத் துல்லியமான அளவில் பெறுவது முதன்மையான படிநிலை ஆகும்.
மூட்டு வலிக்கான மூலக்காரணத்தை அறிந்த பிறகு, தீர்வை நோக்கி செல்ல முயற்சிக்கவும்.
மருத்துவர்ப் பரிந்துரைக்கும் மருந்துகளைக் கண்டிப்பாக உட்கொள்ளவும்.
நிபுணர்கள் மேற்கொள்ள வலியுறுத்தும் தனிப்பயனாக்கப்பட்ட பயிற்சிகளைத் தவறாமல் செய்து வருவதன் மூலம், வலியின் தீவிரத்தைக் குறைக்க இயலும்.
ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் உடற்பயிற்சிகளின் உதவியுடன் சீரான உடல் எடையைப் பராமரிக்கவும்.
போதிய அளவில் உறக்கம் மேற்கொண்டு ஓய்வு எடுக்க வேண்டும்.
வெப்பச் சிகிச்சையானது, விறைப்பு உணர்வைக் குறைக்கும்.
வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள், உங்களுக்குச் சிகிச்சையின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க உதவும்.
மேற்குறிப்பிட்ட சிகிச்சை முறைகளை முறையாக மேற்கொண்டு, மூட்டு, முழங்கால் வலி பாதிப்பில் இருந்து விரைவில் நிவாரணம் பெற்று ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வோமாக…