அல்சைமர் நோயாளிகளின் பராமரிப்பிற்கான குறிப்புகள்
உங்கள் பிரியமானவருக்கு, அல்சைமர் நோய்ப்பாதிப்பு ஏற்பட்டு இருப்பின் அவர்களைப் பராமரிப்பது சவாலான காரியமாக இருப்பினும், அன்பு காரணமாக, நீங்கள் எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்வீர்கள். அல்சைமர் நோயாளிகளைப் பராமரிப்பவர்களுக்கு நேரம், சகிப்புத்தன்மை உள்ளிட்டவையும், நோயாளிக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு தேவைப்படுகின்றன.
அல்சைமர்ப் பாதிப்பு குறித்த தகவல்கள், எளிதான பராமரிப்பு ஆலோசனைகள், பராமரிப்பாளர்களுக்கான உதவிக்குறிப்புகள் உள்ளிட்டவைகளை இந்தக் கட்டுரையில் விரிவாகக் காண்போம்.
அல்சைமர் நோய்ப்பாதிப்பு
அல்சைமர் நோய்ப்பாதிப்பானது, மனநிலைச் சீரழிவாகக் கருதப்படுகிறது. இது காலப்போக்கில் மேலும் மோசமடையக் கூடும். வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை நினைவில் கொள்ளவும், பகுத்தறிவுத் திறனையும் கடுமையாகப் பாதிக்கிறது. டிமென்ஷியா எனப்படுவது இதில் பொதுவான வகை ஆகும். டிமென்ஷியா பாதிப்பிற்கு உள்ளானவர்கள் சிந்தனைத்திறன் மற்றும் பகுத்தறிவில் பெரும்பாதிப்பைச் சந்தித்திருப்பர். இந்தப் பாதிப்பானது, அன்றாடப் பணிகளை மேற்கொள்வதற்கான செயல்திறனில் பாதிப்பை உண்டாக்குகிறது.
அல்சைமர்ப் பாதிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்
அல்சைமர் நோய்ப்பாதிப்பு ஏற்படுவதற்கான காரணிகள் குறித்து இன்னும் முழுமையாக அறியப்படாத நிலையில், இது மரபணு, சுற்றுச்சூழல், வாழ்க்கைமுறையின் காரணமாக ஏற்படுவதாகக் கருதப்படுகிறது. அல்சைமர் நோய்ப்பாதிப்பிற்கு உள்ளானவர்களின் மூளைப் பகுதியில் கொத்துகள், டவ் புரதங்கள் அல்லது சிக்கலான அமிலாய்டு பிளேக்குகள், அசாதாரணமான முறையில் தென்படுகின்றன.
அல்சைமர் நோய்ப்பாதிப்பிற்கான ஆபத்துக் காரணிகள்
வயதுக் காரணி மிக முக்கியமான ஆபத்துக் காரணி என்றபோதிலும், மற்ற காரணிகளும், அல்சைமர் நோய்ப்பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
குடும்ப வரலாறு
மரபியல்
ஹைபர்டென்சன் எனப்படும் உயர் ரத்த அழுத்தம்,
ஹைபர்கொலெஸ்டிரோலீமியா, நீரிழிவு போன்ற இதயப் பாதிப்பு நிலைகள்
தலையில் காயங்கள் ஏற்படுதல்
புகைப் பிடித்தல், உடல் பருமன், மோசமான உடல் செயல்பாடு, எதிலும் ஈடுபாடு இல்லாத நிலை உள்ளிட்ட வாழ்க்கைமுறைக் காரணிகளாலும், அல்சைமர்ப் பாதிப்பானது ஏற்படுகிறது.
அல்சைமர் நோய்ப்பாதிப்பின் அறிகுறிகள்
அல்சைமர் நோய்ப்பாதிப்பின் அறிகுறிகள் காலப்போக்கில் மோசமடைந்து, நோயாளிகளைக் கடுமையாகப் பாதிக்கிறது.
அல்சைமர்ப் பாதிப்பின் ஆரம்பகால அறிகுறிகள் கீழே தொகுக்கப்பட்டு உள்ளன.
அன்றாட நிகழ்வுகளைக் கூட நினைவில் வைத்துக்கொள்ள முடியாத அளவிற்கு மறதி.
- வழக்கமான பணிகளை மேற்கொள்ளவே இயலாத நிலை
- உரையாடுவதில் மற்றும் மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதில் சிக்கல்கள்
- நினைவாற்றல் இழப்பு
- தன்னிலை இழத்தல்
- மனநிலையில் ஏற்படும் சடுதி மாற்றங்கள்
- முடிவெடுப்பதில் சிரமம்
- சிந்தனைத் திறனில் சுணக்கங்கள் உள்ளிட்டவை, அல்சைமர் நோய்ப்பாதிப்பின் துவக்கக் கால அறிகுறிகள் ஆகும்.
அல்சைமர் நோய்ப்பாதிப்பிற்கான சிகிச்சை முறைகள்
அல்சைமர் நோய்ப் பாதிப்பிற்கு என்று தற்போதைய அளவில் தனியானதொரு சிகிச்சைகள் என்று எதுவும் இல்லை. இருந்தபோதிலும், சில சிகிச்சை முறைகள், நோய்ப்பாதிப்பின் தீவிரத்தைக் குறைக்க உதவுகின்றன. நோய்ப் பாதிப்பின் அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதும் நோயாளியின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதும், சிகிச்சை முறையின் முதன்மையான நோக்கங்களாக உள்ளன.
அல்சைமர்ப் பாதிப்பிற்கு உள்ளான நோயாளியை, சரியாகப் பராமரிக்கும் முறைக் குறித்து அறிந்து கொள்வது மிகவும் முக்கியம் ஆகும்.
அல்சைமர் நோயாளிகளின் பராமரிப்பிற்கு, பின்வரும் உத்திகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
கவனிப்பு ரீதியிலான உத்திகள்
டிமென்ஷியா நோய்ப்பாதிப்பு உள்ளவர்களைக் கவனித்துக் கொள்வது. (குறிப்பாக அல்சைமர் நோயாளிகளை) கவனித்துக் கொள்வது என்பது மிகவும் சவாலான நிகழ்வு ஆகும். இந்தப் பராமரிப்பு நிகழ்விற்கு அதிகக் காலமும், கூடுதல் கவனமும் அவசியமாகிறது.
பராமரிப்பு நிகழ்வில், பின்வரும் வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
வீட்டுப் பாதுகாப்பு
முதலில் வீட்டை மதிப்பாய்வு மேற்கொண்டு, ஆபத்தான பகுதிகளை அடையாளம் காண வேண்டும். மதிப்பீடுகளின் முடிவுகளுக்கு ஏற்ப, மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும், வீடுகளில் ஆங்காங்கே கைப்பிடிகளை அமைக்க வேண்டும். இடையூறுகளை ஏற்படுத்தும் வகையிலான தடைகளை அகற்ற வேண்டும். போதிய அளவிற்கு வெளிச்சம் படும்வகையிலான விளக்குகளை அமைப்பது நல்லது.
குழப்பங்களைத் தவிர்க்கவும்
வீடு மற்றும் நாம் அடிக்கடி புழங்கக்கூடிய பகுதிகளில் உள்ள சுற்றுப்புறங்களை முழுமையாக அறிந்து இருக்க வேண்டும். நோயாளிக்கு ஏற்படும் குழப்பத்தைத் தவிர்க்கும் பொருட்டு, சுற்றுப்புறப் பகுதிகளில் தேவையில்லாமல் மாற்றங்களை மேற்கொள்ளக் கூடாது.
பிடித்தமான செயல்பாடுகள்
அல்சைமர் நோயாளியை, அவருக்குப் பிடித்த திரைப்படம், இசை அல்லது விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அவர்கள் உடல்ரீதியாகச் சுறுசுறுப்பை உணரும்விதமாக, தோட்டக்கலை உள்ளிட்ட நிகழ்வுகளில் ஈடுபடுத்த வேண்டும்.
நினைவாற்றலை அதிகரிக்கும் கருவிகள்
தினசரி நடவடிக்கைகள் மற்றும் அட்டவணைகளைப் பயன்படுத்தி, அல்சைமர் நோயாளிகளின் நினைவாற்றலை அதிகரிக்க, காலண்டர்கள் மற்றும் லேபிள்களைப் பயன்படுத்தவும்.
தொடர்பு ரீதியிலான உத்திகள்
தகவல்தொடர்புகளை எளிதாக்குவதற்கும் தெளிவுபடுத்துவதற்குமான சில உத்திகள் கீழே பட்டியலிடப்பட்டு உள்ளன.
மொழியை எளிமைப்படுத்துதல்
நீண்ட, நெடிய தொழில்நுட்ப விளக்கங்களுடன் கூடிய உரையாடல்களுடன், நோயாளியைச் சங்கடப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
பச்சாதாபம் அவசியம்
சொற்கள் அல்லாத தகவல்தொடர்பு வழிகளை அதிகம் பயன்படுத்த வேண்டும்.
சரிபார்ப்புச் சிகிச்சை
பராமரிப்பு முறைகள், யதார்த்த நிலையுடன் ஒத்துப்போகவில்லை என்றாலும், நபரின் அனுபவங்கள் மற்றும் உணர்வுகளில் போதிய கவனம் செலுத்த வேண்டும்.
பொறுமையும், இரக்கமும் மிக அவசியம்
தகவல்தொடர்புக் காரணிகளில் ஏற்படும் சிரமங்கள், நோய்ப்பாதிப்பின் ஒரு பகுதி என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிக்கவும். உங்கள் தொடர்புகளில், பொறுமை மற்றும் இரக்கத்தைக் காட்டுவது முக்கியம் ஆகும்.
தினசரி வாழ்க்கை நடவடிக்கைகளை நிர்வகித்தல்
தினசரி வாழ்க்கை நடவடிக்கைளை நிர்வகிக்க, பின்வரும் உத்திகள் வழிவகுக்கின்றன.
கட்டுப்பாடு உணர்வு
நோயாளி கடைபிடிக்க வேண்டிய தினசரி நடவடிக்கையை நிறுவ வேண்டும், இது அவர்களுக்குத் தேவையான கட்டுப்பாட்டு உணர்வை அளிக்கிறது.
தனிப்பட்ட கவனிப்பில் உதவி
தேவைப்படும் பட்சத்தில், தனிப்பட்ட சீர்படுத்தும் நடவடிக்கைகளுக்குத் தேவையான உதவி வழங்க வேண்டும். ஆனால், ஓரளவு சுதந்திரத்தையும் பராமரிக்கவும் வேண்டும்.
உணவுத் திட்டமிடல்
நோயாளிக்கு எளிய, ஆரோக்கியமான உணவு வகைகள் மற்றும் தின்பண்டங்களைக் கொடுப்பது முக்கியம் ஆகும்.
மேற்பார்வை
காயங்களை ஏற்படுத்தக்கூடிய அசம்பாவிதங்களைத் தவிர்க்க, அவர்களின் செயல்பாடுகளைக் கவனிப்பது மிகவும் முக்கியம் ஆகும்.
நடத்தை மாற்றங்களைச் சமாளித்தல்
அல்சைமர் நோய்ப்பாதிப்பானது, தனிநபர்களின் நடத்தை மாற்றங்களுக்கு வழிவகுக்கிறது. அவற்றை நிர்வகிக்க வகையிலான சில குறிப்புகள் இங்கே தொகுக்கப்பட்டு உள்ளன.
நடத்தைகளைப் புரிந்துகொள்ளுதல்
பெரும்பாலான நேரங்களில், நடத்தைகளில் ஏற்படும் மாற்றங்களான விரக்தி, பயம் அல்லது குழப்பத்தின் அறிகுறிகள் என்பதாக அங்கீகாரம் செய்ய வேண்டும்.
திசைதிருப்பும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்
சிக்கலான செயல்பாடுகளில் இருந்து, அல்சைமர் நோயாளிகளைத் திசைத் திருப்ப, மேற்கொள்ளும் வகையில் விவாதத்தை மாற்றி அமைக்கவும்.
அமைதி மற்றும் உறுதியான மனநிலை
அல்சைமர்ப் பாதிப்பு நபர்களை, அமைதி மற்றும் உறுதியான மனநிலையில் தக்கவைத்துக் கொள்வதன் மூலமாக, அவர்களின் மன அழுத்த பாதிப்பைக் கணிசமான அளவிற்குக் கட்டுப்படுத்த இயலும்.
தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்
மற்றவர்களைத் திருத்த முயற்சிப்பதோ, அதன் பொருட்டு, மற்றவர்களுடன் வாக்குவாதம் மேற்கொள்வதையோ, கட்டாயம் தவிர்க்க வேண்டும். இந்த நிகழ்வுகள், தீர்க்கப்பட வேண்டிய விஷயங்களை மேலும் மோசமாக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
பராமரிப்பாளர்ச் சுயப் பாதுகாப்பு
பராமரிப்பாளர்கள், தங்களின் சொந்த ஆரோக்கியத்தையும் பராமரிப்பதும் முக்கியம் ஆகும்.
இடைவேளைகள் அவசியம்
தினசரி நடவடிக்கைகளுக்கு இடையே, சோர்வு அடைவதைத் தவிர்க்கவும், தொடர்ந்து விழிப்புடன் இருக்கவும், போதிய இடைவெளிகள் அவசியமானதாக உள்ளன.
மேலும் வாசிக்க : பார்கின்சன் நோயாளிகளுக்கான வீட்டு பராமரிப்பு முறைகள்
உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை
பராமரிப்பாளர், எப்போதும் தனக்கு விருப்பமான செயல்களை மேற்கொள்ள வேண்டும். உடற்பயிற்சிகளைத் தினமும் தவறாது மேற்கொள்ள வேண்டும். அத்துடன் போதுமான ஓய்வும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
தொழில்முறை உதவி
பராமரிப்பாளர்களுக்கு, குறுகிய கால நிவாரணம் தேவைப்படும்பட்சத்தில், வீட்டு வசதி, ஓய்வு பராமரிப்பு போன்ற விருப்பங்கள் குறித்த சிந்தனை அவசியமாகும்.
கூடுதல் குறிப்புகள்
உங்களை நீங்களே பயிற்றுவித்துக் கொள்ளுங்கள்
அல்சைமர் நோய்ப்பாதிப்பு எவ்வாறு உருவாகிறது மற்றும் அது எவ்வாறு தீவிரம் அடைகிறது என்பதைப் புரிந்துகொள்ள, நோயைப் பற்றி முழுமையாக அறிந்து இருப்பது அவசியமாகும்.
சுகாதார நிபுணர்களுடன் நல்லுறவு பேணுங்கள்
மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டோருடன் அவ்வப்போது கலந்துரையாடுவது நல்லது.
ஆதரவுக் குழுக்களில் இணையவும்
ஆதரவு மற்றும் ஆலோசனைகளைப் பெறும் பொருட்டு, அல்சைமர் நோயாளிகளுக்கான பிற பராமரிப்பாளர்களுடன் தொடர்பு கொள்ளவும், அவர்கள் சார்ந்து உள்ள குழுக்களிலும் இணைந்து செயலாற்றவும்.
நோயாளிகளிடம் நெகிழ்வுத்தன்மை உடன் இருக்க வேண்டும்
அல்சைமர் நோய்பாதிப்பின் தீவிரம் படிப்படியாகத்தான் அதிகரிக்கும் என்பதை மறந்து விடாதீர்கள். பராமரிப்பு உத்திகளில், அதிகப் பொறுமையுடனும், நோயாளிகளுடன் நெகிழ்வுத்தன்மையுடனும் இருப்பது இன்றியமையாததாக உள்ளது.
மேற்குறிப்பிட்ட வழிமுறைகளைக் கவனமாகக் கடைப்பிடித்து, அல்சைமர் நோய்ப் பாதிப்பிற்குள்ளானவர்களை, சிறந்த முறையில் பராமரித்து, அவர்களையும் இயல்பான வாழ்க்கை வாழ வழிசெய்வோமாக…