அன்றாட வாழ்க்கையில் முதுகெலும்பு ஆரோக்கியம் மேம்பட
நம் உடலின் அடிப்படைக் கட்டமைப்பாக விளங்கும் முதுகெலும்பின் ஆரோக்கியம், நம் அன்றாட வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதாக உள்ளது. அன்றாட வாழ்க்கை முறையில் நாம் மேற்கொள்ளும் நடத்தல், உட்காருதல், படுத்தல் போன்ற உடலின் செயல்பாடுகள் அனைத்தும் முதுகெலும்பின் நிலையைச் சார்ந்தே உள்ளன.
ஆரோக்கியமான முதுகெலும்பு நம் உடல் அசைவுகளுக்கு வலிமையையும் நெகிழ்வுத்தன்மையையும் அளிக்கிறது. அதே நேரம், முதுகெலும்புப் பகுதியில் ஏற்படும் பிரச்சினைகள், நம் அன்றாட வாழ்வில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகின்றன. எளிய செயல்களைக் கூட சிரமமாக்கி, வாழ்க்கையின் தரத்தைக் குறைக்கும் திறன் அவற்றிற்கு உள்ளது.
முதுகெலும்பைப் பேணுவது ஒரு நாள் பூக்கும் பூ அல்ல; அது ஒரு தொடர்ப் பயிற்சி ஆகும். “உடம்பார் அழியின் உயிரார் அழிவர்” என்ற வள்ளுவனின் வாக்கிற்கேற்ப, இந்தப் பழக்கங்கள் உங்கள் வாழ்வின் அங்கமாக மலர வேண்டும். இந்தக் கட்டுரையில், Spine360 போன்ற பெங்களூருவில் உள்ள முன்னணி முதுகெலும்பு நிபுணர்களின் (spine specialist in Bangalore) அரிய ஆலோசனைகளை அடிப்படையாகக் கொண்டு, உங்கள் முதுகெலும்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தினசரி பழக்கங்களை ஆராய்வோம்.
வீட்டிலும், பணியிடங்களிலும் சரியான உடல்நலத்தைப் பராமரித்தல்
உடல்நலத்தைப் பேணுவது என்பது வெறும் உடற்பயிற்சி செய்வதோடு மட்டும் நின்றுவிடாமல், அன்றாட வாழ்க்கையில் நாம் கடைப்பிடிக்கும் பழக்க வழக்கங்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, பணியிடங்கள் மற்றும் வீட்டில் நாம் எவ்வாறு நடந்துகொள்கிறோம் என்பதைப் பொறுத்து, உடல் ஆரோக்கியம் மாறுபடுகிறது.
அலுவலகத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது தவிர்க்க முடியாத நிலையாயிருந்தாலும், அவ்வப்போது எழுந்து நடப்பது மற்றும் நிற்கும் மேசையைப் பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம். “நடை ஒரு நல்ல மருந்து” என்பார்கள். அதனால், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் குறைந்தது ஐந்து நிமிடங்களாவது நடக்க முயற்சி செய்யுங்கள்.
வீட்டில் இருக்கும்போது, தரையில் அமர்ந்து வேலைச் செய்வதைத் தவிர்த்து, நாற்காலியில் நேராக அமர்ந்து பணிபுரிய வேண்டும். படுத்தபடி சாய்ந்து கொண்டு, லேப்டாப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இது உங்கள் முதுகெலும்புக்குக் கூடுதல் சுமையை ஏற்படுத்துகின்றன.
உங்கள் உடல் அமைப்பு மற்றும் அமரும் முறையில் கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல், சரியான ஊட்டச்சத்து உணவுகளை உட்கொள்வதும், போதுமான உறக்கம் மேற்கொள்வதும் அவசியம். “உண்டி சுருங்குதல் ஆற்றல் பெருகுதல்” என்னும் பழமொழியை நினைவில் கொள்ளுங்கள். சமச்சீர் உணவு முறையும் ஓய்வும் உங்கள் உடல் நலத்தை மேம்படுத்தும். இதுதொடர்பான கூடுதல் விவரங்களை அறிய…..
முதுகெலும்பை வலுப்படுத்தும் உடற்பயிற்சிப் பழக்கம்
முதுகெலும்பின் ஆரோக்கியத்தைப் பேணுவதில், உடற்பயிற்சிப் பழக்கமானது, சிறந்த ஆயுதமாக விளங்குகிறது. ஒரு நாளின் விழிப்பு நேரத்தில் வெறும் 2சதவீதம் அதாவது 30 நிமிடங்கள் – உடற்பயிற்சிக்கு ஒதுக்குவதன் மூலம், உங்கள் முதுகெலும்பின் வலிமை மலையளவு உயரும்!
முதுகெலும்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பயிற்சிகள்
- யோகாவின் யோகம்
- பிலாட்டஸின் பலம்
- நீச்சலின் நெகிழ்வு
- நீட்சியின் நேர்த்தி (தோள்பட்டைச் சுழற்சிகள், கழுத்து நீட்சிப்பயிற்சிகள்)
இப்பயிற்சிகள் உடலின் மையத்தை மேம்படுத்தி, நெகிழ்வின் நெம்புகோலாக மாற்றுகின்றன. நீட்சிப் பயிற்சிகள், முதுகெலும்பின் மகத்துவத்தை மேம்படுத்தும் மந்திரக்கோலாக விளங்குகிறது. இது உடலின் இயக்கத்தை மேம்படுத்தி, காயங்களை விரைவாகக் குணப்படுத்துகிறது..
கீழ்முதுகு மற்றும் வயிற்றுப் பகுதியின் மைய தசைகள் உள்ளிட்டவை, முதுகெலும்பின் மெய்க்காவலர்களாக விளங்குகின்றன. இவற்றின் வலிமை, முதுகெலும்பிற்கு ஆணிவேராக அமைந்து, கீழ்முதுகின் கடுமையான சுமையைக் குறைக்கிறது. அன்றாட வாழ்வில் இத்தசைகள் அரைகுறையாகவே பயன்படுத்தப்படுவதால், குறிப்பிட்ட பயிற்சிகளால் அவற்றை வளர்ப்பது மிகுந்த பயனுள்ளதாக உள்ளது.
உங்களுக்கேற்ற உடற்பயிற்சிகளைத் தேர்ந்தெடுக்க, மருத்துவர், உடற்பயிற்சி வல்லுநர், சுகாதார நிபுணரின் அறிவுரைகள் உதவுகின்றன. பெங்களூருவில் உள்ள முதுகெலும்பு நிபுணர்கள், உங்கள் தேவைக்கேற்ப தனிப்பட்ட பயிற்சித் திட்டங்களைத் திறம்பட வழங்கி வருகின்றனர்.
முதுகுவலியை முறியடிக்கும் மைய பயிற்சிகள், இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. படிப்படியான வழிகாட்டுதல்களுடன், இவற்றை எளிதில் கற்றுக்கொள்ளலாம்.
முதுகெலும்பு பிரச்சினைகளை முற்றிலும் தவிர்க்க, உடற்பயிற்சியுடன், முதுகெலும்பின் ஆரோக்கியமும் மிக முக்கியமானது ஆகும்.
முதுகெலும்பு ஆரோக்கியத்தைப் பணியிடத்திலும் மேம்படுத்தலாம்
அலுவலகத்தில் நாள் முழுவதும் நீண்ட நேரம் அமர்ந்திருப்பது உங்கள் முதுகெலும்பிற்குப் பெரும் சவாலாக அமையலாம். ஆனால் கவலை வேண்டாம்! உங்கள் முதுகெலும்பின் நலனைப் பேணும் பொருட்டு, சில அற்புதமான உபகரணங்கள், நம் பணியிடங்களிலேயே உள்ளன. அவற்றில் முதன்மையானது எர்கனோமிக் நாற்காலி. இது உங்கள் முதுகின் இயற்கையான வளைவிற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. நீண்ட நேரம் அமர்வதால் ஏற்படும் உடல் அசௌகரியத்தைக் குறைக்க உதவுகிறது.
அடுத்ததாக,நிற்கும் மேசை(Standing desk) பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இது ஒரு புதுமையான கண்டுபிடிப்பு! நாள் முழுவதும் அமர்ந்திருப்பதற்கும், எழுந்து நிற்பதற்கும் இடையே மாறி மாறி வேலைச் செய்ய இது உதவுகிறது. இவ்வாறு செய்வதால், உங்கள் முதுகெலும்பிற்கு ஓய்வு கிடைப்பதோடு, இரத்த ஓட்டமும் மேம்படுகிறது.
கணினியில் வேலைச் செய்யும்போது, உங்கள் கழுத்தை வளைக்காமல் இருக்க டாக்குமெண்ட் ஹோல்டர் (Document holder) மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது உங்கள் ஆவணங்களைக் கண் மட்டத்தில் வைத்திருக்க உதவுகிறது. இதனால், கழுத்து வலி மற்றும் கண் சோர்வு குறையும்.
இந்த உபகரணங்களைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் உங்கள் முதுகெலும்பின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முடியும். ஆரோக்கியமான முதுகெலும்பு, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!
மேலும் வாசிக்க : கார்ப்பரேட் ஆரோக்கிய திட்டத்தின் நன்மைகள்
உறக்கமும், முதுகெலும்பு ஆரோக்கியமும்!
இரவில் நாம் உறங்கும் உறக்கமானது, முதுகெலும்பு ஆரோக்கியத்திற்கு இன்றியமையாததாக உள்ளது. உறக்கம், உடலுக்குப் புத்துணர்ச்சியை அளிப்பதோடு மட்டுமல்லாது, முதுகெலும்பிற்கும், அதனைச் சுற்றியுள்ள திசுக்களும் சீரமைக்கப்பட உதவுகின்றன. போதுமான அளவிலான உறக்கம் இல்லாத நிலை, முதுகெலும்பு ஆரோக்கியத்தைக் கடுமையாகப் பாதிக்கின்றன.
உறக்கப் பழக்கத்தை மேம்படுத்த சில எளிய வழிமுறைகள்
- சீரான உறக்க அட்டவணையைப் பின்பற்றவும்.
- உறங்கச் செல்வதற்கு முன் மின்னணுச் சாதனங்களின் பயன்பாட்டைத் தவிர்க்கவும்.
- இலகுவான இரவு உணவு எடுக்கவும்.
- வசதியான படுக்கையும், தலையணையையும் தேர்ந்தெடுப்பது முக்கியம்.
சரியான உறக்கம் மற்றும் படுக்கை அமைப்பு, முதுகெலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
உங்கள் முதுகெலும்பு ஆரோக்கியம் உங்கள் கைகளில்தான் உள்ளது. சரியான பராமரிப்பும், தொடர்ச்சியான கவனிப்பும் இருந்தால், நீங்கள் நிமிர்ந்த நடையுடன், நெடுங்காலம் ஆரோக்கியமாக வாழலாம். பெங்களூரில் உள்ள Spine 360 போன்ற நிபுணத்துவ மையங்கள் உங்களுக்கு உதவக் காத்திருக்கின்றன. ஆனால், முதல் அடி உங்களிடமிருந்துதான் தொடங்க வேண்டும்.
இந்த எளிமையான மற்றும் பயனுள்ள பழக்கங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம், முதுகெலும்பு பிரச்சினைகளைத் தவிர்த்து, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நீங்கள் தன்வசப்படுத்த முடியும்.