Vector image of healthy food and junk food kept on a table for comparison.

இந்தியாவின் பாரம்பரிய vs நவீன உணவுமுறைகள்

இந்தியர்களின் உணவுமுறை பாரம்பரியம் மற்றும் நவீனம் என இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில்,
இந்தியப் பாரம்பரிய உணவுமுறைக்கு என்று நீண்ட மற்றும் நெடிய வரலாறு உள்ளது. இந்த வகை உணவுமுறையினை, மக்கள் நீண்டகாலமாகப் பின்பற்றி வருகின்றனர். நவீன உணவுமுறையில், மக்களின் பயன்பாட்டிற்காக உணவு வகைகள் உருவாக்கப்படுகின்றன அல்லது பல்வேறு செயல்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன.குளிரூட்டப்பட்ட உணவு வகைகள், மைக்ரோவேவ் ஓவனில் செய்யப்பட்ட பாப்கார்ன், பேக்கிங் செய்யப்பட்ட குக்கீஸ் வகைகள் உள்ளிட்டவை, நவீன உணவுமுறைக்குச் சில எடுத்துக்காட்டுகள் ஆகும். துரித உணவு வகைகள், நொறுக்குத் தீனிகள், சமோசா,உடல் கட்டமைப்பு உணவுகளும் நவீன உணவுமுறையையே சார்ந்தது ஆகும். உணவின் தயாரிப்பு முறையை வைத்தே, அது, பாரம்பரிய உணவுமுறையா அல்லது நவீன உணவுமுறையைச் சேர்ந்ததா என்று வேறுபடுத்தப்படுகிறது. அதிக இயற்கையான மூலப் பொருட்களையும், குறைந்த அளவிலான தொழில்நுட்ப வசதிகளையம் , பாரம்பரிய உணவுமுறைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இதற்குமாறாக, நவீன உணவுமுறையில்,உயர்தர இயந்திரங்களின் பயன்பாடு அதிகளவிலும்,அதேநேரம் செயற்கை மூலப்பொருட்களின் அளவும் அதிகளவில் இருக்கும்.

பாரம்பரிய உணவுமுறை

இந்தியப் பாரம்பரிய உணவுமுறை, ஆயிரம் ஆண்டுகள் பழமையானது ஆகும். இதுப் பல்வேறு தலைமுறைகளைக் கடந்தும் வெற்றிநடைப் போடுவதற்கு, அதன் இயற்கையான செயல்பாட்டு முறையே காரணம் ஆகும்.

பழங்காலங்களில், வேளாண் பெருமக்கள், அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறி, பழங்கள் போன்ற உணவு வகைகளை, விவசாய நடவடிக்கைகளின் மூலம் விளைவித்து வந்தனர். அவர்கள் கால்நடை வளர்ப்பு நடவடிக்கைகளையும் இயற்கையான முறைகளிலேயே மேற்கொண்டு வந்தனர். இவர்களின் நடவடிக்கைகள் பலன் அளிக்க அதிகக் காலங்கள் பிடித்தன.

இந்த வகையான உணவுமுறையில் இடம்பெற்றுள்ள உணவு வகைகள் பெரும்பாலும் அதிகச் சுவைக் கொண்டதாகவும் மற்றும் உடலுக்கு நன்மைப் பயக்கும் சத்துக்கள், அதிகளவில் கொண்டுள்ளன.நவீன உணவுமுறை உடன் ஒப்பிடும்போது, பாரம்பரிய உணவுமுறை, பலவழிகளில் சிறந்ததாகவே உள்ளது. நவீன உணவுமுறையில் இடம்பெற்றுள்ள உணவு வகைகள், சிலருக்கு ஒவ்வாமைப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சிலருக்கு இந்தப் பாதிப்பு, அதீத உடல்நலக்குறைவுக்கும் காரணமாக அமைந்து விடுகின்றன. நவீன உணவுமுறை, மக்களுக்கு நீரிழிவுப் பாதிப்பு உள்ளிட்ட அசவுகரியங்களை ஏற்படுத்தி விடுகின்றன. தங்களது உணவில் கார்போஹைட்ரேட் எனப்படும் சர்க்கரைச் சத்தைத் தவிர்த்துவிட்டால், உடல் எடையைக் குறைத்து விடலாம் என்ற கருத்து முற்றிலும் தவறானது. நாம் கார்போஹைட்ரேட் கொண்ட உணவு வகைகளைத் தொடர்ந்துத் தவிர்த்து வந்தால், நம்மை அது விரைவில் சோர்வாக்கி, மிகவும் பலவீனப்படுத்தி விடும் என்பதே நிதர்சனமான உண்மை.

நவீன உணவுமுறை உடன் ஒப்பிடும்போது, பாரம்பரிய உணவுமுறையானது முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது. பாரம்பரிய உணவுமுறையானது, மிகவும் எளிமையான உணவுமுறை ஆகும். இதற்கென்று தனியானதொரு சில அடிப்படைக் கொள்கைகள் உள்ளன. அதிகளவிலான காய்கறிகள் மற்றும் பழங்களின் பயன்பாடே, அதன் முதன்மையான கொள்கை ஆகும். இந்த உணவுமுறையில் இடம்பெற்றுள்ள உணவு வகைகளில் அதிகளவில் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளன. இந்தச் சத்துக்கள், நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. அதிக நார்ச்சத்து மற்றும் புரதச்சத்துக்களைக் கொண்ட முழுத்தானியங்கள், பருப்பு வகைகள், மீன் உள்ளிட்ட உணவு வகைகள், இதில் இடம்பெற்று உள்ளன.

நவீன உணவுமுறை

நவீன உணவுமுறை, 100 ஆண்டுகள் மட்டுமே பழமையானது ஆகும். 20ஆம் நூற்றாண்டிலேயே, இந்த உணவுமுறையானது, முதன்மைத் தொழிலாக மாறியது எனலாம். இந்த உணவுமுறை, சில ஆண்டுகளிலேயே, அபரிமிதமான வளர்ச்சிக் கண்டது.

நவீன உணவுமுறையிலான உணவு வகைகளை உட்கொள்வதன் மூலமும், உடலுக்குச் சில நன்மைகள் கிடைக்கவே செய்கின்றன. இந்த உணவுமுறையில் அமைந்த உணவு வகைகளை, நாம் பலசரக்குக் கடைகளில் இருந்து வாங்கி, மைக்ரோவேவ் ஓவன் உள்ளிட்ட தொழில்நுட்பச் சாதனங்களின் உதவிகொண்டு சமைக்க முடியும். இந்த உணவுமுறையில் உணவு வகைகள் சுத்திகரிக்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட மற்றும் தொகுக்கப்பட்ட மூலப்பொருட்களில் இருந்து செய்யப்படுவதன் காரணமாக, இந்த முறையிலான உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் என்று அழைக்கப்படுகின்றன. சிலர் இத்தகைய உணவுவகைகளைத் தொடர்ந்து உட்கொள்வதினால், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்று எச்சரிக்கின்றனர்.

நவீன உணவுமுறையிலான உணவு வகைகளின் மூலமும் நமது உடலுக்கு நன்மைகள் உள்ளன என்று முன்பே குறிப்பிட்டு இருந்தது போல, இந்த உணவு வகைகள், இதய நோய்கள் மற்றும் நீரிழிவுப் பாதிப்பைக் குறைக்க உதவுகிறது. இத்தகைய நோய்ப் பாதிப்புகள் தற்போது மிகவும் சாதாரணமானதாகி விட்ட நிலையில், இதற்குப் போதியச் சிகிச்சைகள் எடுக்காத போது, அது உயிரிழப்பை ஏற்படுத்தி விடுகிறது.

நவீன உணவுமுறையில், அதிக நார்ச்சத்துக்கள் கொண்ட உணவு வகைகள் பயன்படுத்தப்படுவதால், சீரண மண்டலம் சீராக இயங்குகின்றது. இதன்காரணமாக, உடலில் கொழுப்பு படிவது தவிர்க்கப்பட்டு, மலச்சிக்கல் பாதிப்பு தடுக்கப்படுகிறது.

முக்கிய பகுதிப் பொருட்கள்

இந்தியப் பாரம்பரிய உணவுமுறை

பல்வேறு மாநிலங்கள் இணைந்து உருவாகி உள்ள இந்தியத் திருநாட்டின் வெவ்வேறான இடங்களில் விளைந்த மசாலாப் பொருட்களைக் கொண்டு, இந்தியப் பாரம்பரிய உணவுமுறையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த உணவுமுறையானது இந்த உணவுமுறை பணக்காரர்களுக்கு உகந்ததாகக் கருதப்பட்டாலும், உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் இதில் உள்ளன.

முழுத் தானியங்கள்

புரதச் சத்து நிறைந்த பருப்பு வகைகள்

நோய் எதிர்ப்புச் சக்திக்குத் துணைபுரியும் வகையில், கால்சியம் நிறைந்த பால் பொருட்கள்

வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்கள்

நோய்களை எதிர்த்துப் போராடும் மூலிகைகள்

செரித்தலுக்குத் துணைபுரியும் உடலுக்கு நன்மைபயக்கும் கொழுப்புகள்

இனிப்பு பதார்த்தங்கள்

 

Food rich in omega 3 fatty acid and healthy fats arranged on a table.

நவீன உணவுமுறை

நவீன உணவுமுறையானது, சீரான மற்றும் முழுமையான உணவுமுறையாக உள்ளது. இது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை, முழுமையாக வழங்குகின்றது. உடலின் செயல்பாட்டிற்கு உதவும் வகையில் மல்டிவைட்டமின்கள், புரோபயாடிக்குகள், ஒமேகா – 3 மற்றும் புரதங்கள் இதில் உள்ளன.

கார்போஹைட்ரேட்

கொழுப்பு

புரதம்

வைட்டமின்கள்

நார்ச்சத்து

நீர் ஆகியவை, நவீன உணவுமுறையின் முக்கியப் பகுதிப் பொருட்கள் ஆகும்.

இளைய தலைமுறையினர் ஆரோக்கியமான உணவுகளிலிருந்து விலகிச் சென்றாலும், சரியான உணவுத் தேர்வுகளால் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ்கின்றனர்.

மேலும் வாசிக்க : ஊட்டச்சத்து இடைவெளி- அடையாளம் காண்பது எப்படி?

காலை உணவு

காலை உணவாக முட்டை மற்றும் முழுத் தானியங்களை எடுத்துக் கொள்வது நல்லது. இது அன்றைய நாள் முழுவதும் நம்மை, மிகுந்த உத்வேகத்துடன் திகழ வைக்கும்.

காலைச் சிற்றுண்டி

முற்பகல் வேளையில், ஒரு கோப்பை நிறைய பழங்கள் உண்ண வேண்டும்.வாரத்தின் ஏதாவது ஒரு நாளில் காய்கறி மற்றும் பழங்களைக் கொண்டு கூழ்ச் செய்து சாப்பிடலாம்.

மதிய உணவு

அரிசி சாதம், காய்கறிகள், தயிர் உள்ளிட்டவைகளை உள்ளடக்கியதாக, மதிய உணவு அமைய வேண்டும். அசைவ பிரியர்கள் எனில், மீன், மட்டன் அல்லது சிக்கன் உள்ளிட்டவைகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.

மாலைச் சிற்றுண்டி

உலர்ப் பழங்கள், வறுத்த முந்திரி, பாதாம் போன்றவை இனிய மாலைச் சிற்றுண்டியாகவும், உடல்நலத்திற்கு நன்மைபயக்கும் வகையிலும் அமையும்.

இரவு உணவு

வயிற்றிற்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படுத்தாத வகையில் இரவு உணவு அமைந்திட வேண்டும். பல்வேறு காய்கறி வகைகளைக் கொண்டு கிச்சடி செய்து சாப்பிடலாம். அதிக எண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவு வகைகளை, இரவு நேரத்தில் தவிர்ப்பது நலம்.

இந்தியப் பாரம்பரிய உணவுமுறை என்றாலும், நவீன உணவுமுறை என்றாலும், இரண்டிலும் நமது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகளவிலேயே உள்ளன. இவற்றில் எது நமது உடலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் உள்ளதோ, அதைச் சரியாகத் தேர்ந்தெடுத்துச் சாப்பிட்டு, ஆரோக்கியமான வாழ்வை வாழ்வீராக….

Leave A Comment

Copyright © 2024 Health Design | All Rights Reserved.