ஒவ்வாமைப் பாதிப்பைக் கண்டறிய எந்தச் சோதனைச் சிறந்தது?
தனிநபர்களில், ஒவ்வாமைப் பாதிப்பை ஏற்படுத்தவல்லக் குறிப்பிட்ட பொருட்களை அடையாளம் கண்டறிய மேற்கொள்ளப்படும் செயல்முறையே, ஒவ்வாமைப் பாதிப்புச் சோதனை ஆகும். கட்டுப்படுத்தப்பட்ட சூழல்களில், பொதுவான ஒவ்வாமைப் பாதிப்புகளுக்கு, நமது உடல் எங்ஙனம் ஒத்துழைக்கிறது என்பதை மதிப்பீடு செய்வதன் மூலம், ஒவ்வாமைப் பாதிப்பின் அறிகுறிகளின் அடிப்படைக் காரணங்களை அறிய இயலும்.
மலர்களின் மகரந்தத் துகள்களினால் ஏற்படும் ஒவ்வாமைப் பாதிப்பா அல்லது உணவு சகிப்பின்மையால் ஏற்படும் ஒவ்வாமைப் பாதிப்பா எனக் கண்டறிந்து, அதற்கேற்ற வகையிலான மேலாண்மை நடவடிக்கைகளைக் கடைப்பிடித்து, தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டால், ஒவ்வாமைப் பாதிப்பில் இருந்து விரைவில் நிவாரணம் பெற இயலும்.
ஒவ்வாமைப் பாதிப்பைக் கண்டறிய, தோல்ப் பகுதியில் ஊசி மூலம் குத்தும் வகையிலான சோதனை மற்றும் ரத்த பரிசோதனைகள் பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகின்றன. இவ்விரு சோதனைகளின் செயல்முறை, அவைகளின் ஒப்பீடுகள், எந்தச் சோதனை, யாருக்கு உகந்ததாக இருக்கும் உள்ளிட்ட தகவல்களை விரிவாக இந்தக் கட்டுரையில் காண்போம்.
தோல்ப்பகுதியில் ஊசி குத்தி மேற்கொள்ளப்படும் சோதனை
ஒவ்வாமைப் பாதிப்பை ஏற்படுத்தவல்ல அறிகுறிகளை அடையாளம் காண, சுகாதார நிபுணர்கள் பயன்படுத்தும் பொதுவான நடைமுறையே, இந்தச் சோதனை ஆகும்.
செயல்படும் விதம்
இந்தச் சோதனையின் ஒருபகுதியாக, கையின் முன்புறம் அல்லது பின்பக்கம் உள்ள தோலில், ஊசி மூலம் குத்தி, ஒவ்வாமைப் பாதிப்பை ஏற்படுத்தும் பொருளை உட்செலுத்துவார். தோலின் அந்தக் குறிப்பிட்ட பகுதியில், ஒவ்வாமைப் பாதிப்பிற்கான எதிர்வினைகளான வட்ட புள்ளிகள், புடைப்புகள், தோலின் மேற்பரப்பில் குறிப்பிட்ட பகுதியில் உயரம் அதிகரிக்கும் நிகழ்வு உள்ளிட்டவை விரைந்து தோன்றும்.
பயன்கள்
இந்தச் சோதனையின் மூலம், மகரந்தம், அழுக்கு மற்றும் தூசி, பூச்சிகள், நாய், பூனைப் போன்ற விலங்குகள் , வேர்க்கடலை, பால், முட்டை, மட்டி மீன் என உணவு வகைகள் போன்ற பரந்த அளவிலான ஒவ்வாமைப் பாதிப்புகளை மதிப்பீடு செய்ய இயலும்.
நன்மைகள்
இந்தச் சோதனையின் முடிவுகள், குறுகிய நேரத்திலேயே, நமது கைகளுக்குக் கிடைத்து விடும். பெரும்பாலான நேரங்களில், 15 முதல் 20 நிமிடங்களுக்கு உள்ளாகவே, சோதனை முடிவுகள் நமக்குக் கிடைத்துவிடும். ஒவ்வாமைப் பாதிப்புகளை அடையாளம் காணவும், சிகிச்சை முறையைத் தொடங்கவும் உதவுகிறது. இந்தச் சோதனையின் மற்றொரு நன்மை யாதெனில், அதிக உணர்திறன் கொண்டது ஆகும். இந்தச் சோதனைகள், ஒவ்வாமைப் பாதிப்பின் எதிர்வினைகளைக் கண்டறிவதில், அவற்றின் துல்லியத் தன்மைக்காக அறியப்படுகின்றன.
சோதனையின் எதிர்பார்ப்புகள்
சோதனை மேற்கொள்ளப்படுவதற்கு முன், உங்கள் சுகாதார வழங்குநர்ச் சோதனைப் பகுதியைச் சுத்தம் செய்து, ஒவ்வொரு ஒவ்வாமைப் பாதிப்பின் நிலையை ஆராய்வர். ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வாமைப் பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்கள் வைக்கப்படுகின்றன. சருமத்தில் ஒவ்வாமைப் பயன்படுத்தப்பட்டவுடன், லேசான கூச்ச உணர்வு அல்லது அரிப்பு உணர்வை நீங்கள் உணர முடியும். இது சாதாரணமான நிலையே ஆகும். சிறிது நேரத்திற்குப் பிறகு, அந்தச் சருமப்பகுதியில் சிவத்தல், வீக்கம், படை நோய் உள்ளிட்ட அறிகுறிகள் தோன்றும்போது, சுகாதார வழங்குநர், உங்கள் தோல்ப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, அதற்குரிய சிகிச்சைகளை வழங்குவார்.
மேலும் வாசிக்க : ஒவ்வாமை ரத்த பரிசோதனை என்றால் என்ன?
இரத்த பரிசோதனைகள் (குறிப்பிட்ட IgE சோதனைகள்)
இரத்த பரிசோதனைகள், குறிப்பிட்ட இம்யூனோகுளோபுலின் சோதனைகள் என்றும் அழைக்கப்படுகின்றன, இது ஒவ்வாமை எதிர்விளைவுகளைத் தூண்டும் ஒவ்வாமைகளை அடையாளம் காணப் பயன்படுத்தப்படும் ஒரு மாற்று முறையாகத் திகழ்கிறது.
செயல்படும் விதம்
இரத்தத்தில் இம்யூனோகுளோபுலின் ஈ (IgE) எனும் ஒவ்வாமைக்கான குறிப்பிட்ட ஆன்டிபாடிகளின் அளவைக் கண்டறிய, ரத்த பரிசோதனைகள் உதவுகின்றன. நீங்கள் ஒவ்வாமைப் பாதிப்பிற்கு உள்ளாகும் போது, நோய் எதிர்ப்பு அமைப்பானது, IgE ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. IgE ஆன்டிபாடிகளின் அளவை முறையாகப் பகுப்பாய்வு செய்வதன் மூலம், எந்தப் பொருட்கள், ஒவ்வாமை எதிர்வினைகளைத் தூண்டுகின்றன என்பதைத் தீர்மானிக்க இயலும்.
பயன்கள்
இரத்த பரிசோதனைகளின் மூலம் சோதிக்கப்பட்ட ஒவ்வாமைப் பாதிப்புகளில் மகரந்தம், தூசி, அழுக்கு, பூச்சிகள், செல்லப்பிராணி போன்ற வான்வழி ஒவ்வாமைப் பாதிப்புகளும், கொட்டைகள், மட்டி மீன்கள், பால் பொருட்கள் போன்ற குறிப்பிட்ட உணவு தொடர்பான ஒவ்வாமைப் பாதிப்புகளும் அடங்கும். இரத்த பரிசோதனை, பென்சிலின் போன்ற மருந்துகளுக்கு ஒவ்வாமையை மதிப்பீடு செய்ய இயலும். பல்வேறு ஒவ்வாமைப் பாதிப்புகளுக்கு, உங்கள் நோயெதிர்ப்பு மறுமொழியின் விரிவான மதிப்பீட்டை நீங்கள் வழங்க இயலும்.
நன்மைகள்
தோல்ப் பகுதியில் ஊசி மூலம் குத்தும் வகையிலான சோதனைக்கு உட்படுத்த இயலாத நபர்களுக்கு, ரத்த பரிசோதனைகள் பேருதவி புரிகின்றன. உதாரணமாக, அரிக்கும் வகையிலான தோல் அழற்சி அல்லது தடிப்புத் தோல் அழற்சி உள்ளிட்ட சில தோல் பாதிப்புகளைக் கொண்ட நபர்கள், இந்தச் சோதனையைத் தேர்வு செய்ய இயலும். தோல்ப் பகுதியில் ஊசி மூலம் குத்தும் வகையிலான சோதனைகள் மிகவும் சவாலானவை மற்றும் சங்கடமானவை ஆகும்.
தோல்ப் பகுதியில் ஊசி மூலம் குத்தும் வகையிலான சோதனைகளில் பயன்படுத்தப்படும் ஆன்டிஹிஸ்டமின்கள் வேதிப்பொருட்கள் உட்கொள்வதற்குப் பதிலாக, ரத்த பரிசோதனைகளைத் தேர்ந்தெடுக்க இயலும். இரத்த பரிசோதனைகள், வசதி மற்றும் நெகிழ்வுத்தன்மையை வழங்குவதாக உள்ளன.
சோதனையின் முடிவுகள் தெரிவிப்பது என்ன?
ஒவ்வாமைப் பாதிப்பைக் கண்டறிய உதவும் ரத்த பரிசோதனைக்கு, நோயாளியின் கைகளில் உள்ள நரம்பில் ஊசி மூலம் குத்தி, சிறிய அளவிலான ரத்தம் சேகரிக்கப்படுகிறது. சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரியில் உள்ள ஆன்டிபாடிகளைச் சரிபார்க்க, ஒரு ஆய்வகத்திற்கு அனுப்புகிறது. மாதிரி சேகரிப்பின் போது, சிலருக்குச் சிறிய அளவிலான ரத்த போக்கு அல்லது சிராய்ப்பை உணர்கின்றனர். இதற்குக் குறுகிய காலத்தில், நிவாரணமும் கிடைக்கிறது.
துல்லியம் மற்றும் நம்பகத்தன்மை
தோல்ப் பகுதியில் ஊசி மூலம் குத்தும் வகையிலான சோதனையின் துல்லியம் மற்றும் நம்பகத் தன்மையானது, தோலின் MAST செல்களில் உள்ள IgE ஆன்டிபாடிகளைக் கண்டறிவதைப் பொறுத்து அமைகிறது. இந்தச் சோதனையானது, 70 முதல் 97 சதவீதம் வரையிலான துல்லியத் தன்மையுடன், காற்றில் பரவும் ஒவ்வாமைப் பாதிப்பைக் கண்டறிவதில், அதிக உணர்திறனை வழங்குகிறது. உணவு வகைகளால் ஏற்படும் ஒவ்வாமைப் பாதிப்புகளுக்கும் நம்பகத்தன்மைக் கொண்டதாக உள்ளது.
முட்டை மற்றும் வேர்க்கடலைப் போன்ற பொதுவான உணவு ஒவ்வாமைகளுக்கு ரத்த பரிசோதனைகளானது, மிகவும் துல்லியத்தன்மையுடன் விளங்குகின்றன. இரண்டு வகையான சோதனைகளும், சில தருணங்களில் தவறான முடிவுகளை வெளிப்படுத்த வாய்ப்பு இருப்பதால், அதை எச்சரிக்கையோடு கையாள்வது அவசியம் ஆகும்.
வசதி மற்றும் ஆறுதல் உணர்வு
தோல்ப் பகுதியில் ஊசி மூலம் குத்தும் வகையிலான சோதனையை ஒப்பிடும்போது, ரத்த பரிசோதனையானது, குறுகிய நேரத்தில் சோதனை முடிவுகளையும், மிகவும் குறைந்த அளவிலான அசவுகரியத்தை மட்டுமே வழங்குகிறது. இதன்காரணமாக, நோயாளிகளுக்கு இது வசதி நிறைந்த அனுபவமாக விளங்குகிறது. தோல்ப் பகுதியில் ஊசி மூலம் குத்தும் வகையிலான சோதனை மேற்கொள்ள இயலாதவர்களுக்கு, ரத்த பரிசோதனையானது, ஆபாந்பாந்தவனாக விளங்குகிறது.
ஒவ்வாமைப் பாதிப்பைக் கண்டறிய, உங்களுக்கு ஏற்ற வகையிலான பரிசோதனையைச் சரியான முறையில் தேர்ந்தெடுத்து, அதை முறையாகப் பின்பற்றி, ஒவ்வாமைப் பாதிப்பில் இருந்து பூரண நலம் பெற்று, ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வோமாக…