இரத்த பரிசோதனைகளின் வகைகளை அறிவோமா?
உடலில் உள்ள ரத்தத்தின் ஆய்வகப் பகுப்பாய்வு நிகழ்வே, ரத்த பரிசோதனை என்று வரையறுக்கப்படுகிறது. நீங்கள் குறிப்பிட்ட நோய்ப்பாதிப்பிற்குச் சிகிச்சை மேற்கொள்கிறீர்கள் என்றால், சிகிச்சையின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க மருத்துவர் ரத்த பரிசோதனையைப் பரிந்துரைச் செய்வார். இது கொழுப்பின் அளவு மற்றும் நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளதா என்பதையும் கண்டறிய உதவும். இரத்த பரிசோதனை, மருத்துவர்கள் பொதுவாகப் பரிந்துரைப்பதால், இது பெரும்பாலானோரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெவ்வேறு ரத்த பரிசோதனைகளின் வகைகளைப் புரிந்துகொள்வது முக்கியம் ஆகும்.
இரத்த பரிசோதனைகளின் வகைகள்
இரத்த பரிசோதனைகளின் வகைகள் பலதரப்பட்டதாக இருந்தபோதிலும், நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சில பொதுவான ரத்த பரிசோதனைகளின் வகைகள் கீழே பட்டியலிடப்பட்டு உள்ளன.
முழுமையான ரத்த பரிசோதனை (CBC)
இது வழக்கமான ரத்த பரிசோதனை ஆகும். இந்தப் பரிசோதனையின் மூலம் ரத்த சிவப்பணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், ஹீமோகுளோபின், ரத்த நுண் தட்டுகள், பிளாஸ்மா உள்ளிட்ட ரத்தத்தின் வெவ்வேறு கூறுக்கள் அளவிடப்படுகின்றன.
- ஊட்டச்சத்துக் குறைபாடுகள்
- இரத்த சோகை
- இரத்த புற்றுநோய்
- நோய்த்தொற்றுப் பாதிப்புகள்
- நோய் எதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படும் பாதிப்புகள்
- இரத்தம் உறைதல் தொடர்பான பிரச்சினைகள்
உள்ளிட்டவை, இந்த முழுமையான ரத்த பரிசோதனையின் மூலம், கண்டறியப்படும் போதிலும், துல்லியமான முடிவுகளைப் பெற சில தொடர்ச் சோதனைகளையும் நீங்கள் மேற்கொள்வது அவசியமாகும்.
அடிப்படை வளர்சிதை மாற்ற குழு (BMP)
இந்த வகை ரத்த பரிசோதனையின் மூலம், உடலில் உள்ள
- சர்க்கரை
- கால்சியம்
- சோடியம்
- பொட்டாசியம்
- பைகார்பனேட்
- குளோரைடு
- இரத்தத்தில் யூரியா மற்றும் நைட்ரஜன்
- கிரியேட்டினின் உள்ளிட்டவற்றின் அளவீடுகளைக் கணக்கிட உதவுகிறது.
- நீரிழிவு நோய்ப்பாதிப்பு
- சிறுநீரக நோய்ப்பாதிப்பு
- ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள்
- வளர்சிதை மாற்றம்
உள்ளிட்ட நோய்ப்பாதிப்புகளைக் கண்டறிய ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்படுவதற்கு முன் குறைந்தது 8 மணி நேரம் உணவு உட்கொள்ளக் கூடாது. ஏனெனில், இதன்மூலம் சோதனை முடிவுகளில் அசாதாரண மாற்றம் ஏற்படும் என்பதால், உணவு சாப்பிடுவதைத் தவிர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
விரிவான வளர்சிதை மாற்ற குழு (CMP)
இந்த வகைச் சோதனையில், அடிப்படை வளர்சிதை மாற்ற குழு சோதனையில் கணக்கிடப்பட்ட அனைத்து அளவுகளும்
- மொத்த புரதங்கள்
- ஆல்புமின்
- ஆல்கலைன் பாஸ்படேஸ்
- அலனைன் அமினோடிரான்ஸ்ஃபரேஸ் உள்ளிட்டவற்றுடன் அளவிடப்படுகின்றன.
இந்த விரிவான வளர்சிதை மாற்ற குழுச் சோதனையில் கூறுகளின் அளவு இயல்பான அளவிலிருந்து மாறுபட்டால், அது உடல்நலப் பிரச்சினைகளைக் காட்டும்.
லிப்பிட் சுயவிவரச் சோதனை
நல்லக் கொழுப்பு என்றழைக்கப்படும் உயர் அடர்த்தி கொண்ட கொழுப்புப் புரதம் (HDL)
இது உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுகளை, கல்லீரல் உறுப்பானது கழிவுகளாக உடைத்து, உடலில் இருந்து வெளியேற்றுகிறது.
கெட்ட கொழுப்பு என்றழைக்கப்படும் குறைந்த அடர்த்தி கொண்ட கொழுப்புப் புரதம் (LDL)
இது ரத்த நாளங்களை அடைக்கும் வகையிலான அடைப்புகளை ஏற்படுத்துகிறது. இதன்மூலம், ரத்த ஓட்டமானது தடைபடுகிறது. இதன்காரணமாக, இதய நோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இந்த இவ்விரு கொழுப்புகளின் அளவைச் சரிபார்க்க, லிப்பிட் சுயவிவரச் சோதனை உதவுகிறது.
தைராய்டு செயல்பாடு சோதனை
- தைராக்ஸின்
- டிரையாடோதைரோனைன்
தைராய்டு தூண்டுதல் ஹார்மோன் உள்ளிட்ட ஹார்மோன்களுக்கு, தைராய்டு ஹார்மோன் எந்தளவிற்கு எதிர்வினையாற்றுகிறது, இதில் தைராய்டு ஹார்மோனின் செயல்பாடு உள்ளிட்டவைக் கண்டறிய தைராய்டு செயல்பாடு சோதனை அல்லது தைராய்டு பேனல் ரத்த பரிசோதனை உதவுகிறது.
இதய நோப்பாதிப்பைக் கண்டறியும் பயோமார்க்கர்கள்
என்சைம் என்பது புரதம் ஆகும். செரிமானத்திற்காக, உணவைச் சிறு சிறு துண்டுகளாக உடைத்தல், ரத்தம் உறைதல் உள்ளிட்ட நிகழ்வுகளில், என்சைம்களின் பங்கு அளப்பரியது ஆகும்.
- கிரியேட்டின் கைனேஸ்
- ட்ராபோனின்
- கிரியேட்டின் கைனேஸ் – MB
உள்ளிட்ட பரிசோதனைகள், என்சைம்களுக்கான ரத்த பரிசோதனைகளாக வரையறுக்கப்பட்டு உள்ளன.
மேலும் வாசிக்க : நரம்பியல் குறைபாடுகள் – அறிந்ததும், அறியாததும்!
பால்வினைத் தொற்று நோய்களை (STI) கண்டறிய உதவும் சோதனைகள்
பால்வினைத் தொற்று நோய்களில் பெரும்பாலானவை, ரத்த பரிசோதனை அல்லது ரத்தம் மற்றும் சிறுநீர்ப் பரிசோதனையின் உதவியால் கண்டறியப்படுகின்றன.
- கொனேரியா
- அக்கி (Herpes)
- எய்ட்ஸ்
- சிபிலிஸ்
- கிளாமீடியா
உள்ளிட்ட பால்வினை நோய்த் தொற்றுகளை அடையாளம் காண ரத்த பரிசோதனைகள் காணப்படுகின்றன.
உறைதல் செயல்பாட்டைக் கண்டறியும் சோதனை
இரத்தம் உறைவதற்கு எவ்வளவு நேரம் ஆகிறது, அது எவ்வளவு திறம்பட உறைகிறது என்பதைக் கண்டறிய உறைதல் சோதனை உதவுகிறது. காயங்கள் குணமாக, ரத்தம் உறைதல் நிகழ்வு மிக முக்கியமானதாக உள்ளது. நரம்பு அல்லது தமனியில் ரத்தம் உறைவு ஏற்பட்டால், அது முக்கிய உறுப்புகளுக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைத் தடைசெய்து, பாதிப்புகளை ஏற்படுத்திவிடுகின்றன.
- ஹீமோபிலியா (அதிகமாக ரத்தபோக்கு ஏற்படும் நிலை)
- வைட்டமின் K குறைபாடு
- லுகேமியா
திராம்போசிஸ் உள்ளிட்ட மருத்துவ நிலைகளை, ரத்த பரிசோதனைகளின் மூலம் கண்டறியலாம்.
எலக்ட்ரோலைட் செயல்பாடு சோதனை
இந்த வகைச் சோதனை, உடலில் உள்ள மினரல்கள் எனப்படும் தாதுக்களின் அளவைக் கண்டறிய உதவுகிறது. இந்த மினரல்களின் அளவில் ஏற்படும் ஏற்றத்தாழ்வு நிலையானது, நுரையீரல், இதயம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளில் ஏற்படும் சிக்கல்களை அடையாளம் கண்டறிய உதவுகிறது. BMP மற்றும் CMP சோதனைகள், மெக்னீசியம் மற்றும் அயனி இடைவெளி அளவைச் சரிபார்க்க உதவுகிறது.
ஒவ்வாமைச் சோதனை
இந்த வகைச் சோதனையின் மூலம், ஒவ்வாமைப் பாதிப்பிற்குக் காரணமான இம்யூனோகுளோபுலின் E (IgE) அளவைக் கணக்கிட இயலும். மகரந்தம், செல்லப்பிராணிகள், உணவுப் பொருட்கள், பிற பொருட்களினால் ஏற்படும் ஒவ்வாமைகளைக் கண்டறிய உதவுகிறது.
ஆன்டி – நியூக்ளியர் ஆன்டிபாடி சோதனைகள்
புற்றுநோய், இதய நோய் மற்றும் நாளமில்லா சுரப்பிகள் தொடர்பான பாதிப்புகள் உள்ளிட்ட சிறப்பு சிக்கல்களை அடையாளம் காணவும் இரத்த பரிசோதனைகள் பயன்படுத்தப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட ரத்த பரிசோதனைகளில், உங்களுக்கு உரிய சரியானதைத் தேர்ந்தெடுத்து, பாதிப்புகளைத் திறம்பட கண்டறிந்து, உரிய சிகிச்சை மேற்கொண்டு, ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வோமாக…